என்னை தீண்டிவிட்டாய் 20

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
தேவதையின்
வரம் அனைவரையும்
வளமாக்க
அந்த தேவதைக்கே சாபம்
விடுத்தது விதி....

கதவை திறந்துக்கொண்டு உள்ளே சென்ற ஷாகர் கண்மூடி படுத்திருந்த ஆதிராவை கண்டான்...
மனதின் துக்கத்தை அவன் நடையின் வேகம் வெளிக்காட்டிட மெதுவாக ஆதிரா படுத்திருந்த கட்டிலருகே வந்தான் ஷாகர்....
அவளருகே இருந்த ஸ்டூலை எடுத்துப்போட்டு அமர்ந்தவன் அவள் கரத்தின் மீது கைவைத்தவனுக்கு அவளின் நிலையை எண்ணி மனம் வெதும்பியது...
ஷாகரின் ஸ்பரிசத்தில் மெதுவாக கண்விழித்த ஆதிரா ஷாகரை பார்க்க அவனோ கண்கலங்கி முகம் கசங்கியிருந்தான்....
அவன் முகமே அவன் கலக்கத்தை சொல்ல, ஆதிராவோ தனக்கு அடிபட்டதால் பயந்துவிட்டான் என்றெண்ணி
“நீங்க பயப்படுற அளவுக்கு எனக்கொன்றுமில்லை ஷாகர்...ஐயம் ஆல்ரைட்... ப்ளீஸ் பீல் பண்ணாதீங்க ஷாகர்....” என்று ஆதிரா கூற ஷாகரோ உள்ளுக்குள் நொருங்கிப்போனான்...
அவள் உண்மை நிலையை அறிந்து நான் வருந்த அவளோ நான் அவளுக்காக வருந்துவதை விரும்பாது என்னை தேற்ற முயல்கிறாள்.... கடவுளே... எதற்காக இவளை இப்படி வதைக்கிறாய்... இல்லை நான் இனி இவளை வருந்தவிடப்போவதில்லை...... இந்த குழந்தை விடயம் எப்போதும் அவளுக்கு தெரியக்கூடாது..... போதும் இதுவரை அவள் அனுபவித்த இன்னல்கள் அனைத்தும் இதோடு முடியட்டும் என்று முடிவெடுத்த ஷாகர் கலங்கியிருந்த கண்களை அழுந்தி துடைத்தவன் முகத்தை சிரித்தபடி வைத்துக்கொண்டு
“இனி ஷாகர் அழமாட்டான்.... இப்போ என்னோட ஆது பேபி ஹேப்பியா??” என்று ஷாகர் சிரித்தபடி கேட்க ஆதிராவும் அவனோடு சேர்ந்து சிரித்தவள்
“ம்ம்.. தட்ஸ் மை ஹபி...”
“ம்ம்... நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு... நான் டாக்டரை பார்த்துட்டு வர்றேன்...”
“ஷாகர்... எதுக்கு என்னை ஆஸ்பிடல்ல அட்மிட் பண்ணாங்க... உடம்புக்கு ஏதோ மாதிரி இருக்கு..வயிறும் ஏதோ எம்டியா இருக்கமாதிரி இருக்கு... என்னாச்சு ஷாகர்..??”என்று கேட்க ஒரு நிமிடம் நிதானித்தவன்
“பீரியட்ஸ் ப்ராப்ளம்னு சொன்னாங்க... மேடம் வர்க் பிசியில உடம்பை சரியாக கவனிக்காமல் இப்படி அட்மிட் பண்ணுற நிலைமைக்கு வந்திடுச்சு... வேற எதுவும் இல்லை.. மெடிசின் கொடுத்திருக்காங்க.. அதான் வயிறு ஒரு மாதிரி இருக்குனு நினைக்கிறேன்.. நீ ரெஸ்ட் எடு.. எல்லாம் சரியாகிடும்...”
“ஓ .. வேற எந்த ப்ராப்ளமும் இல்லையே... ஏன்னா பிறகு ப்ரெக்னென்சியில ஏதாவது ப்ராளப்ளம் வந்திடக்கூடாதுல... அதான் கேட்குறேன்...” என்று ஆதிரா கேட்க ஷாகருக்கோ அவன் வேதனையை கட்டுப்படுத்தமுடியவில்லை..
சிரமப்பட்டு தன்னை கட்டுப்படுத்தியவன் எதுவும் கூறாது டாக்டரை பார்த்துவிட்டு வருவதாக கூறி அறையிலிருந்து வெளியேறினான்..
வெளியே வந்த ஷாகர் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து முகத்தை மூடிக்கொண்டவனுக்கு கண்ணீரை அடக்குவது கடினமாகியது.. கண்களிலிருந்து நீர் வடியும் முன்னே அதை துடைத்தவனுக்கு ஆதிராவின் வார்த்தைகள் மேலும் வதைத்தது...
அவன் வெளியே வருவதை கண்ட பிரகஸ்பதியும் வசுமதியும் அவனருகே வந்து
“கண்ணா...ஆதிரா..”
“அம்மா.. முடியலமா... என்னால அவளை நேரா பார்க்கவே முடியலை....”
“ஷாகர்..”
“ஆமாபா... அவகிட்ட இந்த விஷயத்தை சொல்லுற தைரியம் எனக்கு இல்லை. வேணாம்பா.. இந்த விஷயம் அவளுக்கு தெரிய வேணாம்... இது நமக்குள்ளேயே இருக்கட்டும்... ப்ளீஸ்பா... அவ தாங்கமாட்டாபா...”
“ஆனா ஷாகர்..”
“இல்லைங்க.. ஷாகர் சொல்றது சரி தான்... இந்த விஷயம் ஆதிராவுக்கு தெரியவேணாம்... ஆதிராக்கு மட்டும் இல்லை.. நம்ம மூன்று பேர் தவிர்ந்து வேறு யாருக்கும் தெரிய வேணாம்... அவ ஏற்கனவே மனசளவுல சந்தோஷமா இல்லை... இந்த விஷயமும் தெரிஞ்சா அவ வாழ்க்கையை வெறுத்திடுவா.. அதனால அவளுக்கு தெரிய வேணாங்க..ஷாகர் நீ டாக்டர்கிட்டயும் சொல்லிடு.... நீங்க இரண்டு பேரும் இனி தனியா இருக்க வேண்டாம்... நம்ம வீட்டுக்கு வந்திடுங்க...டிஸ்சார்ஜ் ஆனதும் ஆதிராவை நேரா நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போவோம்... இனிமே நான் அவளை கவனிச்சிக்கிறேன்...... இப்போ அவளுக்கு நல்ல சாப்பாடும் ஓய்வும் தேவை... அதனால நான் சொல்றதை கேளுபா..”
“சரிமா... நாங்க அங்க வர்றோம்.. நான் டாக்டரை பார்த்துட்டு வர்றேன்...ஆதிராவை எப்போ டிஸ்சார்ஜ் பண்ணலாம்னு கேட்டுட்டு வர்றேன்..” என்று ஷாகர் டாக்டரிடம் சென்று ஆதிரா பற்றியும் அவளை எப்போது டிஸ்சார்ஜ் செய்யலாமென்றும் விசாரித்தவன் அவளுக்கு கரு கலைந்த விடயம் தெரியவேண்டாமென்றும் வேண்டிக்கொண்டான்...
மாலை ஐந்து மணியளவில் ஆதிராவை டிஸ்சார்ஜ் செய்து வசுமதி ஷாகர் மற்றும் பிரகஸ்பதியின் துணையோடு தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்றார்..
அவளை கைத்தாங்கலாக அழைத்து வந்த ஷாகர் அவள் மாடியேறக்கூடாது என்று டாக்டர் கூறியிருந்தபடியால் கீழ் தரையிலிருந்த விருந்தினர் அறையில் அவள் தங்குவதற்கு ஒழுங்கு செய்தான்...
ஓய்வாய் கட்டிலில் அமர்ந்தவளுக்கு வசுமதி ஜூஸ் கொண்டு வந்து கொடுக்க அதை வாங்கிக்கொடுத்த ஆதிரா
“அத்தை உடம்புக்கு ரொம்ப சோர்வா இருக்கு...நான் கொஞ்சம் படுத்துக்கவா..??”
“படுத்து நல்லா ரெஸ்ட் எடு.. சீக்கிரம் எல்லாம் சரியா போயிடும்..”
“அத்தை எனக்கு உங்க மடியில தலை வச்சி படுக்கனும் போல இருக்கு... படுக்கலாமா??”
“என்னமா இதெல்லாம் கேட்டுக்கிட்டு.. நீ என் மக மாதிரி படுத்துக்கோ...” என்று கூறிய வசுமதி அவள் தலையை தன் மடி மீது வைத்தவர் அவள் தலையை வருடிக்கொடுக்க கண்மூடியவள்
“அத்தை எனக்கு நிஜமாவே எதுவும் இல்லை தானே...?? நான் கஷ்டப்படுவேனு ஷாகர் எதையாவது மறைக்கிறாரா??” என்று ஆதிரா கேட்க சற்றா துணுக்குற்ற வசுமதி ஆதிராவிற்கு ஏதேனும் தெரிந்துவிட்டதோ என்று பயந்தவர் நாவை அடைத்த எச்சிலை விழுங்கியபடி
“ஏன்மா அப்படி கேட்குற?? டாக்டர் உனக்கு எதுவும் இல்லைனு சொல்லிட்டாரே... பீரியட்ஸ் ப்ராப்ளம் தான்.. அதுவும் டேப்ளட் எடுத்தா சரியா போயிடும்..”
“அத்தை நீங்க ஏதாவது என்கிட்ட மறைக்கிறீங்களா??
“ஆதிரா என்னாச்சு உனக்கு..எதுக்கு இப்படி கேட்குற??”
“ஏதோ தோனுச்சு அத்தை....அதான் கேட்டேன்... “
“கண்டதையும் நினைத்து மனசை குழப்பிக்காமல் நல்லா ரெஸ்ட் எடு....கொஞ்ச நாளைக்கு எல்லாத்தையும் ஷாகர் பார்த்துப்பான்... நீ வீட்டுல இரு... உடம்பு நல்லா தேறுனதும் நீயும் ஷாகர் கூட போ.. சரியா??”
“சரி அத்தை...”
“சரி... இப்போ தூங்குமா...” என்று வசுமதி தலையை வருட அது தந்த சுகத்தில் கண்ணயர்ந்தாள் ஆதிரா...
அவள் உறங்கிவியதும் அவளை படுக்கையில் கிடத்திய வசுமதி அவள் தலைக்கு தலையணையை கொடுத்துவிட்டு அறை கதவை சாற்றிக்கொண்டு வெளியேறிய வசுமதி ஹாலிற்கு வந்தார்..
ஹாலில் பிரகஸ்பதியும் ஷாகரும் அமர்ந்திருக்க அவர்களுடன் வந்தமர்ந்த வசுமதியிடம்
“அம்மா ஆதிரா தூங்கிட்டாளா??”
“ஆமாபா.... ஆனா..”
“என்னம்மா..”
“ஆதிரா நாம ஏதோ அவகிட்ட மறைக்கிறோமோனு சந்தேகப்படுறா??”
“என்னம்மா சொல்லுறீங்க??”
“ஆமா கண்ணா.. என்கிட்ட கேட்டா.... நான் எதுவும் இல்லைனு சமாளிச்சிட்டேன்.. நாம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும்பா..”
“ம்.. நான் பார்த்துக்கிறேன்மா... அப்பா நான் வீட்டுக்கு போயிட்டு அங்கயிருக்க எங்களோட திங்க்ஸ் எல்லாத்தையும் எடுத்துட்டு வந்திடுறேன்.. நீங்க டிரைவர் அண்ணாவ அங்க வீட்டுல வெயிட் பண்ண சொல்லுங்க.. நான் அப்படியே போயிட்டு சூப்பர் மார்கெட்டையும் பார்த்துட்டு வர்றேன்....”
“நான் சொல்றேன்.. நீ கிளம்பு... லேட் பண்ணிடாத ஷாகர்... இந்த நேரத்துல தான் நீ ஆதிராக்கு துணையா இருக்கனும்..”
“சரிபா... நான் சீக்கிரம் வந்திடுறேன்...” என்று ஷாகர் கிளம்பிட வசுமதியிடம் பிரகஸ்பதி
“தப்பு பண்ணிட்டேன்.. வசு... நீ சொன்னதை கேட்டிருந்தா இப்படியொரு நிலைமை வந்திருக்காது..” என்று கவலையுடன் கூற வசுமதியோ
“இல்லைங்க.. இதுல உங்க தப்பு எதுவும் இல்லை... நம்ம பிள்ளை வாழ்க்கை சரிப்படனும்னு தான் நீங்க அப்படி நடந்துக்கிட்டீங்க.. இப்படியொரு விஷயம் மட்டும் நடந்திருக்காட்டி நிச்சயமா அவங்க இரண்டு பேரோட வாழ்க்கையும் சரியாகியிருக்கும்... என்ன பண்ணுறது.. அது தான் விதிபோல...”
“இல்லை வசு.. ஷாகரும் ஆதிராவும் நம்ம கூடவே இருந்திருந்தா ஆதிராவுக்கு இந்த நிலைமை வந்திருக்காது.. நிச்சயம் உனக்கு அவ கர்ப்பமா இருக்கிறது தெரிஞ்சிருக்கும்... நம்ம வாரிசை நாம காப்பாத்தியிருக்கலாம்.... நான் அவங்களுக்குள்ள இணக்கம் வரணும்னு தனிக்குடித்தனம் வைக்க ஏதோ செய்யப்போய் அது இப்போ இப்படி முடிஞ்சிடுச்சே..”
“அதெல்லாம் இல்லைங்க... ஷாகருக்கும் ஆதிராவுக்கும் நடந்த கல்யாணத்தை பத்தி ஏற்கனவே தெரிஞ்சும் கூட அவங்க விருப்பத்துக்கு தானே அவங்களை விட்டிருந்தீங்க.... பிரச்சனை கைமீறப்போன நேரத்துல யாரா இருந்தாலும் இப்படி தான் நடந்திருப்பாங்க... நீங்க செய்ததுல எந்த தப்புமே இல்லைங்க... தனியா இருக்கும் போது ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிறதுக்கான வாய்ப்புக்கள் அதிகம்.. வரும் போது கூட பார்த்தேன்.. ஷாகர் ஆதிர்வை குழந்தை மாதிரி பார்த்துக்கிட்டான்..... ஆதிராவும் அவனோட கவனிப்பையும் அன்பையும் விரும்புறது அவள் கண்ணுலயே விளங்கிச்சு.... நிச்சயம் நீங்க அந்த நேரத்துல அப்படி கோபமாக நடந்துக்காட்டி இவங்க இரண்டு பேருக்குள்ளயும் இப்போ இருக்கிற அன்னியோன்யம் இருந்திருக்காது...... நீங்க பண்ணது தப்பில்லைங்க.....” என்று வசுமதி தன் கணவரை தேற்றிக்கொண்டிருந்தார்....
ஆம் பிரகஸ்பதிக்கு ஷாகரும் ஆதிராவும் திருமணம் செய்துகொண்ட சம்பவம் ஏற்கனவே தெரியும்... ஷாகர் பிசினஸ் பொறுப்பை ஏற்கும் வரை அவன் சம்பந்தப்பட்ட அனைத்திலும் கவனமாக இருந்தார் பிரகஸ்பதி... அவனை அவனுக்கு தெரியாமல் கண்காணிபதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தவர் அது ஷாகருக்கு தெரியாதவாறு பார்த்துக்கொண்டார்..
ஆதிரா கழுத்தில் ஷாகர் தாலி கட்டியதை கேள்விபட்டவருக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தபோதிலும் அவர்கள் இருவரும் இருந்த சூழ்நிலை அவரை சற்று யோசிக்கவைத்தது... அந்த நிகழ்வுக்கு இருவருமே பொறுப்பு என்றெண்ணியவர் அவர்களது விருப்பப்படியே நடக்கட்டும் என்று விட்டுவிட்டார்.... ஆனால் நடந்த பிரச்சினையில் ஷாகர் ஆதிரா இருவருக்குமே காதல் உண்டு என்று உணர்ந்தவர் ஷாகரிடம் கோபமாக பேசி அவர்களிருவரும் சேர்ந்து வாழ வழி செய்தார்.... அதோடு ஆதிராவும் ஷாகரும் தொடங்கிய சூப்பர் மார்க்கெட்டிற்கு தேவையான சில உதவிகளை மறைமுகமாக செய்தார்... இவ்வாறு தன் மகன் நன்றாத வாழவேண்டுமென அவர் அனைத்தையும் செய்ய எதிர்பாரா விதமாக ஆதிராவிற்கு இப்படி நடந்தது அவருக்கு வேதனையை அளித்தது.... அதனையே வசுமதியிடம் பகிர்ந்துகொண்டிருந்தார்...
வசுமதியின் ஒருவார கவனிப்பில் ஆதிரா தேறிவிட ஷாகரோ ஆதிரா இல்லாததால் வேலையில் பிசியாகிப்போனான்.... காலையில் ஆதிரா எழும் முன் கிளம்புபவன் இரவு அவள் உறங்கிய பின் தான் வருவான்.. பகல் முழுவதும் வசுமதியோடும் சில நேரங்களில் ஷாகரின் அத்தை பெண்களோடும் நேரத்தை செலவளிப்பவள் இரவு மருந்தின் வீரியத்தால் உறங்குபவளுக்கு காலையில் தான் விழிப்பு தட்டும்...... இராத்திரி ஷாகர் வருவதோ அவளை அணைத்தபடி அவன் உறங்குவதோ எதுவும் அவளுக்கு தெரியாது...
இவ்வாறு நாட்கள் நகர்ந்தது....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top