என்னை தீண்டிவிட்டாய் 18

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
யாரென்று எண்ணி
என்னை
விலக்க உன் மனம்
காத்திருந்ததோ
அதை தவிடுபொடியாக்கியது
உன் காதல்....

காலையில் கண்விழித்த ஷாகருக்கு தலை விண் விண்ணென்று தெறித்தது.. தலையை பிடித்தபடி எழுந்து அமரந்தவனுக்கு தலை வலியை பொறுக்கமுடியவில்லை...
அப்போது அவன் முன் எலுமிச்சை சாறு கோப்பை நீட்டப்பட அதை கையில் வாங்கியவன் நிமிர்ந்து பார்க்க ஆதிரா அங்கிருந்து நகர்ந்தாள்..
அந்த எலுமிச்சம் சாற்றை குடித்ததும் சற்று தலைவலி மட்டுப்பட மாற்றுடையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தான் ஷாகர்....
குளித்து முடித்து தயாராகி வந்தவன் ஹாலிற்கு வர அங்கு ஆதிரா இல்லை.. அவள் எங்கே என்று தேடியவன் அவள் சமையலறையில் இருப்பது தெரிய உள்ளே செல்லமுயன்றவனை தடுத்தது ஆதிராவின் குரல்..
“என்னடி பேசுற?? நீ பேசுறதுல ஏதாவது நியாயம் இருக்கா??? எந்த பிரச்சினைனாலும் குடிச்சா சரியாகிடுமா??என்னை பொறுத்தவரை பிரச்சினையை தைரியமாக சமாளிக்கத்தெரியாத கோழைகளுக்கு இது ஒரு சாக்கு.. நாம ஒவ்வொரு நாளும் பப்ளிக் ட்ராண்ஸ்போட்டுல போகும் போது சில பொறுக்கிகளால படுற கஷ்டத்துக்கு ஒரு கடையையே வாங்கிக் குடிக்கலாம்.... சொல்லப்போனா ஆம்பிளைகளை விட பொண்ணுங்க நமக்கு தான் எல்லா இடத்துலயும் விதவிதமான பிரச்சினை... நாம தைரியமா சமாளிக்கலையா....??? நான் குடிக்கிறது தப்புனு சொல்லலை... ஆனா கவலையை மறக்க குடிக்கிறேனு சொல்லுறது தான் தப்பு.. எந்த பிரச்சினையையும் சம்பந்தப்பட்டவங்களோடு இருந்து பேசி நிதானமா முடிவெடுத்தாலே தீர்வு கிடைச்சிடும்.... அதைவிட்டு குடிக்கிறாங்களாம்..ஏதோ... சொல்லவேண்டியதை சொல்லிட்டேன்.. இனி நீ தான் பார்த்துக்கனும்... சரிடி.. கொஞ்சம் வேலை இருக்கு.. நான் பிறகு கூப்பிடுறேன்..” என்றவள் அழைப்பை அணைத்துவிட்டு தன் வேலையை தொடர சமையலறையின் வாசலில் இருந்த ஷாகர் சத்தமின்றி தங்களறைக்குள் புகுந்துகொண்டான்..
அவன் சென்றதை உறுதிப்படுத்திக்கொண்ட ஆதிரா எப்படியும் தன்னிடம் வந்து ஷாகர் அவனது பிரச்சினையை விலக்குவான் என்று உறுதியாக நம்பினாள்.. பின் ஆத்விக்கு அழைத்த ஆதிரா அவனை வீட்டிற்கு வருமாறு அழைத்தாள்..
ஷாகரோ தங்களறையில் சிந்தனையில் மூழ்கியிருந்தான்.... தன் செயல் தவறென்று புரிந்தபோதிலும் அந்த நேரத்தில் உணர்ச்சியின் பிடியில் சிக்கியிருந்தவன் நிலை தவறிவிட்டான்...
ஆதிரா வெளியே சென்றிருக்க தன் வேலையில் மும்மரமாயிருந்த ஷாகரை கலைத்தது அவனது அலைபேசி அழைப்பு.. ஏதோ புதிய நம்பரிலிருந்து அழைப்பு வந்திருக்க யோசனையோடு அழைப்பை எடுத்தான் ஷாகர்..
“ஹலோ.... பட்டணத்து தம்பி..”
“ஹலோ யாரு பேசுறீங்க??”
“ஹாஹா என்ன தம்பி அதுக்குள்ள மறந்துட்டியளா??? நான் தான்பா உன் மாஜி பொண்டாட்டிய கட்டிக்க இருந்த சுப்பிரமணி...”
“டேய்...”
“என்ன தம்பி கோபப்படுறீங்க??? நான் உண்மையை தானே சொன்னேன்.. அவ உனக்கு மாஜி பொண்டாட்டி தானே... அவளும் நீயும் புருஷன் பொண்டாட்டினு உங்க ஊருல யாருக்கும் தெரியாதாமே...??”
“யூ ப்ளடி ராஸ்கல் எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்டயே இப்படி பேசுவ??”
“உண்மையை சொல்ல இந்த சுப்பிரமணி என்னைக்குமே பயந்ததில்லபா... ஆமா உன் மாஜி பொண்டாட்டி வீட்டுல இருக்காளா??”
“இப்போ நீ போனைவைக்க போறியா இல்லை போலீசுக்கு கால் பண்ணவா??”
“என்ன தம்பி நான் எவ்வளவு தன்மையா பேசுறேன்... நீங்க ஏன் எறிஞ்சி விழுறீங்க?? உங்க மாஜி பொண்டாட்டி வீட்டுல இல்லைனு சொல்லாமல் எதுக்கு இப்படி கோபப்படுறீங்க??”
“டேய்....”
“இருங்க தம்பி. . .. பொறுமை ரொம்ப அவசியம்... உங்க மாஜி பொண்டாட்டி என் முன்னுக்கு தான் இருக்கா..”
“டேய்..”
“அட இருங்க தம்பி... சொல்லுறதை முழுசா கேளுங்க... உங்களுக்கு அவ மாஜி பொண்டாட்டி தான்... ஆனா பாருங்க இந்த சுப்பிரமணிக்கு அந்த சிறுக்கி மேல ஒரு கிறுக்கு... இத்தனை நாளாகியும் அந்த கிறுக்கு தெரியலை.. அதான் அவளை தூக்கிட்டு போய் என்னோட பொண்டாட்டி ஆக்கிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்....”
“டேய்....”
“ஆனாலும் பாருங்க தம்பி.. இந்த சுப்ரமணிக்கு எச்சிக்காயை ருசிக்கிறதுல ஒரு சொட்டு கூட விருப்பம் இல்லை.. அந்த சிறுக்கியை கூட இத்தனை நாள் மறந்து தான் இருந்தேன்... ஆனா அவ மாமன்காரன் வந்து சொன்னப்போ கூட உங்க உறவு உங்க வீட்டுக்கு தெரியாதுனு தான் நினைச்சேன்.. ஆனா அந்த சிறுக்கி அவ கூட்டாளி புள்ளகிட்ட பேசுனதை கேட்ட என்னோட ஆளு சொன்னதும் தான் தெரிஞ்சது அந்த சிறுக்கி இன்னும் எச்சில படாமல் இந்த சுப்பிரமணிக்காக காத்திருக்குனு... இதை தவறவிட்டா நான் ஆம்பிளைனு சொல்லிக்கிறதுல அர்த்தமே இல்லை.. அதான்...”
“டேய்.. அவளை எதுவும் பண்ணிடாதடா... அவளை விட்டுரு..”
“அவளை விடுறதா??? ஹாஹா யாராவது கைக்கு கிடைச்ச அமிர்தத்தை தவறவிடுவாங்களா??? அவளை....” என்றதும் அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட பதறிய ஷாகர் மீண்டும் அந்த எண்ணிற்கு முயற்சிக்க அதுவோ ஸ்விச் ஆப் என்று வர ஆதிராவிற்கு முயற்சித்தான்...
ரிங் போனதே ஒழிய அவள் எடுத்தபாடில்லை... ஷாகருக்கோ அடுத்து என்ன செய்வதென்று புரியாமலிருக்க மீண்டும் மீண்டும் ஷாகர் ஆதிராவிற்கு அழைக்க அழைப்பு எடுக்கவில்லை.. என்ன செய்வதென்று புரியாது நடைபயிலத்தொடங்கிய கணம் வெளியே சென்றிருந்த ஆதிரா உள்ளே வர இத்தனை நேரம் பயத்தில் உயிரை பிடித்துக்கொண்டிருந்தவன் அவளை கண்டதும் உணர்ச்சிவசப்பட்டு அவளை கட்டியணைத்தான்.... அதோடு சுப்ரமணியத்தின் வார்த்தைகளும் ஆதிராவின் ஒதுக்கமும் அவனுள் ஆதிராவை இழந்துவிடுமோ என்று பயத்தை ஏற்படுத்தியிருக்க, அனைத்தும் சேர்ந்து அவனை சிந்திக்கவிடாமல் செய்து அந்த நொடியே அவளை தன்னவளாக்கிட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்க தான் என்ன.செய்கிறோமென்ற உணர்வே இல்லாமல் ஆதிராவை தன்னவளாக்கிக்கொண்டாள்....
ஆனால் கூடல் முடிந்து கண்ணயர்ந்தவன் கண்விழித்தபோது அருகிலே தன்னை அணைத்தபடி கலைந்த ஓவியமாய் உறங்கியபடியிருந்த ஆதிராவை கண்டான்....
அவளை கண்டவனது மனம் குற்றவுணர்ச்சியால் தத்தளித்தது... எவனோ ஒருவனின் வார்த்தைக்கு பயந்து இப்படி அவள் அனுமதி கூட கேட்காது மிருகத்தை விட கேவலமாக நடந்துகொண்டோமே... இதற்காக தான் இத்தனை நாட்கள் நல்லவன் வேடமிட்டாயா என்று அவன் மனசாட்சி சாட்டையாய் கேள்விகளை அள்ளி வீச ஷாகரோ குற்றவுணர்ச்சியில் தவித்துப்போனான்... அவனது செயலை அவனாலே ஏற்கமுடியவில்லை... மனைவியே என்றாலும் அவள் முழுச்சம்மதமின்றி அவளோடு இணைவதென்பது ஆண்மைக்கு இழுக்கே...
அதுவும் தாம்பத்தியத்தின் தொடக்கமே அவள் சம்மதத்தை பெறாமல் தன் பயத்தை போக்குவதற்காக அவன் செய்த செயலை அவனது மனசாட்சி காறி உமிழ்ந்தது... அதற்கு மேல் அங்கிருக்க பிடிக்காதவன் வெளியேறினான்.. எப்போதும் அவன் குழப்பங்களுக்கு தீர்வாய் அமையும் பீச்சிற்கு செல்ல கடற்கரையும் கூட கடல் அலைகளால் அவன் செயலை தூற்றிவது போன்றொரு பிரம்மையை உருவகித்தது.. மேலும் அங்கிருக்க பொறுக்காதவன் அங்கிருந்து நடக்கத்தொடங்க அங்கிருந்த பப் கண்ணில் பட அங்கு நுழைந்துவிட்டான்...
மனதின் கோள்விகளுக்கு பதில் கூறமுடியாது தத்தளித்தவனது கண்களுக்கு மதுப்போத்தல்கள் பட தற்காலிக வலி நிவாரணியாக அவளை உட்கொள்ளத்தொடங்க அது அவனுக்கு சேராமல் வாந்தியெடுத்து அந்த இடத்தை அசுத்தப்படுத்த எதிர்பாரா விதமாய் அங்கு வந்த ஆத்வி அவனை அங்கிருந்து அழைத்து சென்றான்...
இவற்றை எண்ணிபார்த்தவனுக்கு தன் செயல்கள் அனைத்திலுமே தவறிருப்பது அப்பட்டமாய் தெரிந்தது.. ஆனால் இதை எவ்வாறு ஆதிராவின் முகம் பார்த்து ஷாகர் விளக்குவான்?? ஏற்கனவே அவளை பிரிந்து செல்ல முயன்றவள் இதை எவ்வாறு எடுத்துக்கொள்வாள்??? ஒருவேளை தன்னை வெறுத்துவிட்டால்...?? அதன் பின் உயிர்வாழ்வதில் அர்த்தமில்லை... ஆனால் நான் செய்த காரியம் அவள் முகம் பார்த்து நேரிடையாய் கதைக்கும் தைரியத்தை சிதைத்துவிட்டதே..எப்படி அவளை எதிர்கொள்வேன்.....
இவ்வாறு சிந்தனையில் உழன்றவனை கலைத்தது ஆதிராவின் குரல்..
“ஆத்வி வந்திருக்கான்..”
“ம்.. வரேன்..” என்று கூறிய ஷாகர் வெளிய வர ஹாலில் ஆத்வி அமர்ந்திருந்தான்..
“வாடா.. என்ன திடீர்னு இந்த பக்கம்??”
“ஏன் அத்தான்.. நான் எங்க அக்கா வீட்டுக்கு வரக்கூடாதா?”
“பார்டா.. இப்போலாம் உனக்கு இந்த அத்தான் கண்ணுக்கு தெரியலை.. அக்கா தான் கண்ணுக்கு தெரியிறாங்க..”
“என்ன அத்தான் நீங்க??”
“சும்மா டா.. சொல்லு என்ன விஷயம்??”
“நான் தான் அவனை வர சொன்னேன்.. ஆத்வி ஷாகர் சொன்ன இடத்தை பத்தி விசாரிச்சியா??”
“ஆமா அக்கா... லீகல் இசியூஸ் எதுவும் இல்லை... அவங்க இன்வெஸ்மண்டை ரிக்கவர் பண்ணா போதும்னு தான் லோ ரேட்ல விற்கிறாங்க... மத்தபடி அந்த இடத்தை வாங்கி கொஞ்சம் மொடரேட் பண்ணா நல்ல ப்ராபிட் பார்க்கலாம்.... வேறு எந்த இஷ்யூசும் இல்லை... இப்போவே வாங்குறது நல்லது... அவங்க பெரிசா அட்வடைஸ் பண்ணாததால இன்னும் நிறைய பேருக்கு இந்த ப்ராபர்ட்டி சேலுக்கு இருக்குனு தெரியாது... வேற யாராவது வந்து வாங்குறதுக்கு முதல்ல நாம வாங்கிட்டா நல்லது..”
“நானும் அந்த இடத்தை பார்த்தேன்.... எனக்கும் அந்த இடம் சூப்பர் மார்க்கெட்டுக்கு ஓகேனு தான் தோனுது.... நான் சுத்தி பார்த்த வரைக்கும் அங்கு எல்லா ரிசோசும் இருக்கு... அவங்க அதை சரியாக யூஸ் பண்ணாததால தான் நஷ்டப்பட்டிருப்பாங்க.. நாம அதை சரியாக யூஸ் பண்ணோம்னா நம்ம கோலை அசிவ் பண்ணமுடியும்...”
“அப்போ இந்த இடத்தை ஓகே பண்ணிரலாமா??” என்று ஷாகர் கேட்க ஆதிராவும் ஆத்வியும் ஆம் என்று கூறிட
“ஓகே.. நான் நாளைக்கே போயிட்டு அந்த சுப்பர்மார்க்கட்டோட ஓனரை பார்த்து பேசுறேன்..” என்று ஷாகர் கூற அதை ஆதிராவும் ஆத்வியும் ஆமோதித்தனர்..
இவ்வாறு நாட்கள் நகர தன்னிடமிருந்த இருப்பினையும் ஆதிராவின் பர்சனல் லோனின் மூலமும் பணம் திரட்டிய ஷாகர் அந்த இடத்தை வாங்கி அதை ஆஷா சுப்பர் மார்க்கட்ஸ் என்ற பெயரில் ஆரம்பித்தான்..
சுப்பர் மார்க்கட் திறப்பு விழாவிற்கு ஆதிராவோடு சென்று தன் பெற்றோரையும் அத்தைமார் குடும்பத்தையும் உரிய முறையில் அழைத்தான்..
அவர்களும் அவனது முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்தவர்கள் திறப்பு விழாவில் கலந்துகொண்டு அவனை மகிழ்வித்தனர்...
வசுமதி தன் மகனுக்கும் மருமகனுக்கும் வாழ்த்து கூற பிரகஸ்பதியோ ஆதிராவிற்கு மட்டும் வாழ்த்து கூறிவிட்டு ஆபிஸிற்கு கிளம்பிவிட்டார்..
ஷாகரின் அத்தைகள் குடும்பமும் ஷாகரை மட்டும் வாழ்த்தியவர்கள் ஆதிராவை கண்டுகொள்ளவில்லை... ஆனால் ஷாகரின் அத்தைமார் பெத்த ஐந்து ரத்தினங்களும் ஆதிராவை தூக்கிக்கொண்டாடிக்கொண்டிருந்தனர்..
இவ்வாறு ஷாகரின் விருப்பப்படி அவனது முயற்சியில் புதிய தொழிலை ஆரம்பித்துவிட்டான்.. ஆனால் அவன் விரும்பிய வாழ்க்கை அவன் விரும்பியபடி மாறுமா???
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அனு சந்திரன் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top