என்னை தீண்டிவிட்டாய் 17

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
உன்னை
மட்டும் எண்ணி
என் நாட்கள் கடந்திட
உன் உயிர் என்னுள்
சங்கமிப்பது எப்போதடி...??

இப்போது ஆதிரா சற்று நடக்கத்தொடங்கியிருந்தாள்... தன் கணவனின் தரமான கவனிப்பாலும் சீக்கிரம் குணமாகிட வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்ததாலும் இப்போது நடக்கத்தொடங்கியிருந்தாள்....
ஒருநாள் தனது லாப்டொப்பில் மும்முரமாயிருந்த ஷாகரின் அருகே மெதுவாக நடந்து வந்த ஆதிராவை கண்டவன் அவளக்கு தன் கையை கொடுத்து அவள் அமர்வதற்கு உதவியவன் மீண்டும் தன் வேலையில் மூழ்கிவிட அதை பார்த்த ஆதிரா
“ஆபிஸ் வர்க்கா ஷாகர்??”
“ஆமா ஆது...”
“இப்போ ஆபிஸ் போகலாமே ஷாகர்.. இப்போ தான் எனக்கு சரியாகிடுச்சே...” என்று ஆதிரா கேட்டாள்..
ஏற்கனவே ஆபிஸ் போகவில்லையா என்று ஆதிரா கேட்டதுக்கு ஷாகர் அவளுக்கு முழுதாய் குணமாகும் வரை ஆபிஸ் வேலையை வீட்டிலிருந்தே பார்க்கபோவதாக கூறினான்.. அதனால் ஆதிரா அதை பற்றி மறுபடியும் விசாரிக்கவில்லை... இப்போது தனக்கு குணமாகியபின்னும் ஷாகர் வீட்டிலிருக்கவே அவள் அவ்வாறு கேட்டாள்..
“எந்த ஆபிஸிக்கு போகச்சொல்லுற ஆது??”
“என்ன விளையாட்டு இது ஷாகர்??”
“ஹேய்.. இதுல என்ன விளையாட்டு இருக்குமா??”
“ஷாகர் நான் சீரியஸாக தான் கேட்குறேன்.. நம்ம ஆபிஸிற்கு போகலையா??”
“இல்லை பேபி...நான் ரிசைன் பண்ணிட்டேன்...”
“என்னது ரிசைன் பண்ணிட்டீங்களா?? என்ன சொல்லுறீங்க ஷாகர்...??”
“ஆமா பேபி...நான் என்னோட எம்.டி போஸ்டை ரிசைன் பண்ணிட்டேன்..”
“ஏன் ஷாகர் அப்படி பண்ணீங்க?? மாமா எப்படி நீங்க இல்லாமல் தனியாக சமாளிப்பாங்க..??”
“ஹேய் அது எனக்கு முன்னாடி அப்பா கவனிச்சிக்கிட்ட கம்பனிமா... அவருக்கு தெரியாததா???”
“என்ன ஷாகர் இப்படி பொறுப்பில்லாமல் பேசுறீங்க??”
“ஹேய் என்னை வேறென்ன பண்ண சொல்லுற??? வீட்டை விட்டு வந்தபிறகு எந்த உரிமையில கம்பனிக்கு போகமுடியும்??? அதான் அப்பாவா சொல்றதுக்கு முதல்ல நானா என்னோட போஸ்டை ரிசைன் பண்ணிட்டேன். உன்னோட ரெசிக்னேஷன் லெட்டரையும் அப்பாவுக்கு மெயில் பண்ணிட்டேன்...”
“நீங்க பண்ணது ரொம்ப தப்பு ஷாகர்.. குடும்ப பிரச்சினையை ஆபிஸ் வரைக்கும் கொண்டு போறது தப்பு ஷாகர்.. இப்போ ஆபிஸ்ல அவ்வளவு பேருக்கும் நம்ம பிரச்சினை தெரிந்திருக்கும் ஷாகர்...” என்று வருத்தத்துடன் ஆதிரா கூற ஷாகரோ
“இங்க பாரு ஆதிரா.. அப்பாவோட பிசினஸ்ஸை நான் டேக் ஓவர் பண்ணது அவரோட சந்தோஷத்துக்காக தான்.. ஆனா எனக்கு அதுல எந்த இன்ட்ரஸ்டுமே இல்லை.... ஏன்னா எந்தவொரு வெற்றியிலும் மிஸ்டர் பிரகஸ்பதியோட சன் அப்படினு தான் என்னை ரெகக்னைஸ் பண்றாங்க... எனக்கு அப்படியொரு மரியாதை தேவையில்லை.. எனக்கான தனி அடையாளத்தை உருவாக்கனும்னு தான் எனக்கு ஆசை... அதுக்கான சரியான நேரம் இது தான்னு எனக்கு தோன்றுது..”
“ஷாகர் நீங்க புரியாமல் பேசுறீங்க...இதை நீங்க நம்ம பிரச்சினைக்கு முதல்லயே செய்திருந்தீங்கனா அது உங்களோட வெற்றி.. ஆனா இப்போ நீங்க இப்படி பண்ணுறதை உங்க குடும்பத்தவர்கள் வேற மாதிரி தான் பார்ப்பாங்க.. நான் உங்களை அவங்ககிட்ட இருந்து பிரிக்கத்தான் இப்படி செய்ய சொல்றதா நினைப்பாங்க.. ப்ளீஸ் ஷாகர்.. மறுபடியும் ஆபிஸ் போங்க... நம்ம பிரச்சினை எல்லாம் முடிந்ததும் இதை பத்தி யோசிக்கலாம்....”
“நோ ஆது...மறுபடியும் ஆபிஸ் போனா என்னால என்னோட ட்ரீமை அசீவ் பண்ணமுடியாது... சோ இது தான் என்னோ மிஸனை எக்சிகியூட் பண்ண சரியான நேரம்.. சோ ப்ளீஸ் என்னை தடுக்காத... நிச்சயம் அம்மாவும் அப்பாவும் என்னை புரிஞ்சிப்பாங்க....”
“ஷாகர்.. சொன்னா...”
“இல்லை ஆதிரா.. இது தான் என்னோட முடிவு... எதுக்காகவும் நான் என்னோட முடிவை மாத்திக்கிறதா இல்லை.. அப்பாவோட உதவி இல்லாமல் இதை நான் செய்யபோறேன்.. நீ எனக்கு உதவியாக இருந்தா நிச்சயம் என்னால ஜெயிக்க முடியும்...சோ நோ மோர் ஆர்கியூமென்ட்ஸ்..” என்று ஷாகர் அறுதியும் இறுதியுமாய் கூற ஆதிராவிற்கு அதற்கு மேல் எதுவும் சொல்லமுடியவில்லை...
வசுமதியை நாடியவளுக்கும் எந்த உதவியும் கிட்டாமல் போக ஷாகர் விருப்பப்படி அவனுக்கு உதவுவதற்கு முன் வந்தாள்...
ஒரு நாள் ஷாகர் ஆதிராவிடம்
“ஆது.... ஒரு சூப்பர் மார்கெட் விலைக்கு வருது. அதை வாங்கலாம்னு நினைக்கிறேன்..நீ என்ன நினைக்கிற??”
“எந்த இடத்துல ஷாகர்...?”
“xxxxxxxxx இந்த இடத்துல for sale னு போர்ட் போட்டு இருந்தாங்க.... போய் விசாரிச்சு பார்த்தப்போ கம்மி ரேட்டுல கொடுக்குறதா சொல்றாங்க... அதான் கொஞ்சம் குழப்பமா இருக்கு...”
“அந்த ஏரியால எல்லாம இடத்துக்கும் நல்ல டிமாண்ட்.... ஆனா ஏன் கம்மி விலைக்கு விற்கிறாங்க..?”
“அதே டவுட்டு தான் எனக்கும்.. அதான் ஆத்விகிட்ட சொல்லி விசாரிக்க சொல்லியிருக்கேன்...பார்ப்போம்...”
“ஷாகர்... அந்த கடையோட அட்ரஸை எனக்கு வாட்சப் பண்ணுங்க... நானும் யார்கிட்டயாவது விசாரிக்கிறேன்...” என்று ஆதிரா ஷாகரிடமிருந்து அந்த கடையின் அட்ரஸை வாங்கியவள் நேரே சென்று அந்த கடையை பார்வையிட்டாள்......
பெரிய இடம் என்றபோதிலும் அந்த சூப்பர் மார்க்கட் சரியான முறையில் பராமரிக்கப்படாமல் நஷ்டத்தில் இருந்ததது.....
அந்த சூப்பர் மார்க்கட் அமைந்திருந்த இடம் அதிக மக்கள் நடமாட்டமுள்ள இடம்...அதோடு அங்கு உரிய பார்க்கிங் வசதியும் இருந்தது.... அனைத்து வசதிகளும் இருந்தபோதிலும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்தமைக்கான காரணத்தை கண்டறிய வேண்டுமென மனதில் குறித்துக்கொண்டவள் அந்த ஏரியாவில் இருந்த மற்ற கடைகளையும் பொருள் வாங்குவதை போல் பார்வையிட்டாள்...
தனக்கு வேண்டிய குறிப்புக்களை எடுத்துக்கொண்டவள் ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்தாள்.... அப்போது ஷாகர் வீட்டில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துகொண்டிருக்க அவன் செயலில் குழம்பிய ஆதிரா மெதுவாய் அவனை அழைத்தாள்..
ஆதிராவை பார்த்த ஷாகர் நொடிக்கூட தாமதிக்காது அவளிடம் வந்து அவளை இறுக்கி அணைத்துக்கொண்டவள் அவளு முகமெங்கும் முத்தம் வைத்திட ஆதிராவோ அவனது செயலில் திகைத்து நின்றாள்...
அவனது அணைப்பு அவளுள் இருந்த பெண்மையை தட்டியெழுப்பிக்கொண்டிருந்தது.. அதுவும் அவன் இதழ் அவள் முகமெங்கும் தன் முத்திரைகளை பதித்தபடியிருக்க அவளுக்கோ அடிவயிற்றில் ஏதோவொரு இனம்புரியாத உணர்வு... இவ்வாறு உணர்வுகள் அவளை தாறுமாறாய் பாடாய் படுத்தியபடியிருக்க கடைசியில் அவன் இதழ்கள் இவள் அதரங்களை மொத்தமாய் கவ்விக்கொண்டது...
உணர்வுகளின் பிடியில் சிக்கியிருந்தவளை மொத்தமாய் அவன் தன்னவளாக்கிக்கொண்டிருந்தான்....அவளும் அமைதியாய் அவனுக்கு ஒத்துழைப்பு தந்திட அவன் அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றான்.... அவளை தங்களறைக்கு தூக்கி சென்றவன் அவளை மெத்தையில் கிடத்தி தங்கள் இல்லற வாழ்வை தொடங்கியிருந்தான்.....
அந்த கூடல் முழுவதும் ஒரு பரிதவிப்பும் பயமும் இருந்ததை ஆதிரா கண்டுகொண்டபோதிலும் உணர்ச்சியின் பிடியில் சிக்கியிருந்தவளுக்கு அப்போது அது பெரிதாய் தெரியவில்லை.... அதோடு அவள் காதல் மனமும் அதற்கு இடம்கொடுக்காமல் பிற்போட முழு விருப்போட அந்த சங்கமத்தில் இணைந்தாள்...
சங்கமும் முடிந்ததும் ஷாகர் அவளிடமிருந்து பிரிந்து ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றான்... அவனது இந்த செயலில் குழம்பிய ஆதிராவை மேலும் யோசிக்கவிடாது அவள் உடல் சோர்வு தடுக்க அவளும் ஷாகரை அணைத்தபடியே உறங்கிப்போனாள்....
இரவு எட்டு மணியளவில் கண்விழித்த ஆதிரா ஷாகரை தேட அவனோ அங்கு இல்லை...குளியலறைக்கு சென்று தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வந்தவள் ஷாகரை தேட அவனோ வீட்டில் இல்லை... அவனது போனிற்கு முயற்சிக்க அது வீட்டிலிருந்தது... ஏதேனும் வேலையாக வெளியே சென்றிருப்பான் என்று எண்ணியவள் தன் வேலைகளை கவனிக்க தொடங்கினாள்..
மணி பத்தை தாண்டியும் ஷாகர் வராமல் இருக்க ஆதிராவிற்கோ பயம் தொற்றிக்கொண்டது... வாசலையே பார்த்திக்கொண்டிருந்தவளுக்கு நொடிக்கு நொடி பயம் அதிகரிக்க என்ன செய்வதென்று பரிதவித்து நின்றவளை அழைத்தது அழைபேசி...
எடுத்து பார்க்க ஆத்வி என்று திரையில் விழ தன் பயத்தை தன்னுள் புதைத்துக்கொண்டவள் அழைப்பை ஏற்றாள்...
“சொல்லு ஆத்வி....”
“அக்கா அத்தான்...
“ ஷாகருக்கு என்னாச்சு ஆத்வி....??”
“அத்தான் பப்ல நல்லா ட்ரிங் பண்ணிட்டு போதையில மயங்கிட்டாரு.....”
“என்ன சொல்ற ஆத்வி??? ஷாகருக்கு தான் ட்ரிங்க்ஸ் ஒத்துக்காதே..”
“ஆமா அக்கா.. ரொம்ப ட்ரிங்க பண்ணிட்டாரு போல.. எல்லாத்தையும் பப்லயே வாமிட் பண்ணிட்டாரு.. நான் இப்போ தான் அவரை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வந்து காமிச்சேன்... டாக்டர் எதுவும் இல்லைனு சொல்லிட்டாங்க... நாங்க இப்போ வீட்டுக்கு தான் கிளம்பிட்டோம்.. இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்திடுவோம்...”
“சரி ஆத்வி... நீங்க பத்தரமா அவரை கூட்டிட்டு வாங்க..” என்று அழைப்பை துண்டித்தவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது...
தனக்கு ஒத்துக்கொள்ளாது என்ற காரணத்திற்காக மதுவை எடுக்காதவன் இன்று தேடிப்போய் குடிப்பதற்கான காரணம் என்ன?? இன்று தமக்குள் நடந்த சம்பவத்தை எண்ணி வருந்தி தான் அவன் இவ்வாறு நடந்து கொண்டானா??? ஆனால் அவன் தானே தொடங்கினான்..?? அவனது இந்த செயலுக்கான காரணம் என்ன??? என்னால் தான் இவ்வாறு நடந்துகொண்டானா??? இத்தனை நாள் வேண்டுமென்று விரும்பியவனுக்கு இன்று கசந்துவிட்டதோ??? நான் இதை விரும்பவில்லை என்று எண்ணிவிட்டானோ???? அவன் ஆசைப்பட்ட போதிலும் நான் அதை மறுக்காதது தான் தவறா????
இவ்வாறு அவளது தனிமை அவளை அவசியமற்ற கோணத்தில் யோசிக்கத்தூண்டிட தன்னுள் உழன்றபடியிருந்தாள் ஆதிரா...
அப்போது வெளியே கார் சத்தம் கேட்க வெளியே சென்று பார்த்தவள் ஆத்வியின் காரினை கண்டாள்..
விரைந்து காரின் அருகே சென்றவள் ஆத்வியின் உதவியுடன் ஷாகரை கைத்தாங்கலாய் அழைத்து வந்தவள் கட்டிலில் படுக்க வைத்தாள்...
ஆத்வி ஷாகரின் உடைகளை தளர்த்தி அவன் உறங்குவதற்கு அனைத்தையும் ஒழுங்கு செய்துவிட்டு ஆதிராவோடு வெளியே வந்தான்...
“ரொம்ப தேங்க்ஸ் ஆத்வி.. நல்லவேளை நீ இருந்ததால எந்த ப்ராப்ளமும் வரலை...”
“என்ன அக்கா நீங்க... நன்றி அது இதுனு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிக்கிட்டு... அக்கா பஸ்ட் டைம் அத்தான் ட்ரிங்க் பண்ணப்போ அவருக்கு அது ஒத்துக்காம உடம்பு முடியாமல் போயிருச்சு.. அதான் ஒரு சேப்டிக்கு டாக்டர்ட காமிச்சேன்.. அவரு எந்த ப்ராப்ளமும் இல்லைனு சொல்லிட்டு... அவரை பார்த்துக்கோங்க அக்கா..நான் வர்றேன்..”
“ஆத்வி ஒரு விஷயம்..”
“சொல்லுங்க அக்கா..”
“இந்த விஷயம் வேற யாருக்கும் தெரியக்கூடாது.. முக்கியமா அத்தைக்கு..”
“நான் சொல்லமாட்டேன் கா...நீங்க பயப்படாதீங்க.. நான் வர்றேன்..” என்று ஆத்வி விடைபெற்றான்...
அவன் சென்றதும் கதவை அடைத்துவிட்டு தங்கள் அறைக்கு வந்த ஆதிரா ஷாகரை பார்க்க அவனோ நல்ல தூக்கத்தில் இருந்தான்..
அவனருகே சென்று அமர்ந்தவள் அவன் கையை பிடிக்க ஷாகர் போதையில் உளறத்தொடங்கினான்..
“ஆது உன்னை யாருக்கிட்டயும் விட்டுக்கொடுக்கமாட்டேன்.. நீ எனக்கு மட்டும் தான்... என்னோட ஆது பேபி எனக்கு மட்டும் தான்... அந்த சுப்ரமணியோ தங்கமணியோ எவன் வந்தாலும் என்னோட ஆதுபேபியை கொடுக்க மாட்டேன்...” என்று போதையில் கூட காதலை உளறியவனை கண்டு ஆதிராவின் மனம் கர்வம் கொண்டது.. ஆனால் அவளின் மனதை உறுத்திய விடயம் அவன் குடித்ததற்கான காரணம் என்ன என்பதே...
வேறு ஏதாவது விடயம் அவன் மனதை காயப்படுத்திவிட்டதா என்று கேள்வி மனதில் எழுந்த போதிலும் அதற்கு பதில் சொல்ல வேண்டியவன் நிதானத்தில் இல்லை..
ஷாகரின் முன்னுச்சியில் மென்மையாய் அவள் இதழ் பதித்தவள் அவனை அணைத்துக்கொண்டு உறங்கிவிட்டாள்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top