என்னுள் சங்கீதமாய் நீ 3

Advertisement

Nithi Kanna

Well-Known Member
என்னுள் சங்கீதமாய் நீ 3



பிற்பகல் வேலை என்பதால் ரோடு எல்லாம் கொஞ்சம் காலியாகவே இருந்தது. “ஜெய் ஆகாஷ் அவனுடைய பார்டுனர்” காரை மிதமான வேகத்துடன் செலுத்தி கொண்டிருந்தான்.


வீட்டில் எல்லோரும் அவனை பாத்து என்னோமோ ஏதோன்னு கவலைபடவும் வேலை இருக்குனு சொல்லி வெளியே கிளம்பிட்டான் . அதோடு அவனுக்கு கண்டிப்பாக தெரியும் “ஹர்ஷ் கால் பண்ணுவா” என்றும்….


கையில் இருக்கும் போன் நழுவவும் "ச்சே இந்த கை வேற இப்படி வேக்குது" என கை துடைத்து கொண்டாள் நம் தைரியசாலி ஹர்ஷினி . ரிங் போகவும் “இதய துடிப்பு தாறு மாறாக” எகிற ஆரம்பித்தது .


டான்ஸில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க” 21 வயதில் இருந்தே போராடியவன்” . அவனுடைய வாழ் நாள் லட்சியத்தை இன்று வேண்டாம் என்கிறான் என்றால் அவனுடைய கோவத்தின் அளவு நினைக்கவே பயமாக இருந்தது .


அவளின் பயத்திற்கு காரணம் ஜெயிற்கு கோவம் என்றால் ஒன்று “சுத்தமாகவே பேச மாட்டான் அல்லது வார்த்தைகளிலே விளாசி தள்ளிடுவான்" இரண்டுமே ஹர்ஷினிக்கு தாங்க முடியாதவை .


அங்கு காரில் ஜெயின் போன் ஒலிக்கவும் காரை ஓரங்கட்டியவன் இறுக்கமான முகத்துடன் “ஹர்ஷினியின் பேர்” ஒலிப்பதை பார்த்தான் . பின்பு அட்டென்ட் செய்தவன் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தான் .


"ஹ ஹா ஹலோ.." என ஹர்ஷினி பயத்துடனே பேசுவது புரிந்தது ஜெய்க்கு . "அய்யோ பேசமாட்டார் போலே.." என நொந்தவள் "ஜெய்.." என கூப்பிட்டாள், அமைதியே பதில்.


"தாரிணி வந்திருந்தா.." என சொல்லவும் அப்பொழுதும் “அமைதியாகவே” இருந்தான் . அவனுடைய அமைதி இங்கு ஹர்ஷினிக்கு கண்களில் கண்ணீர் துளிர்க்க வைத்தது. "ப்ளீஸ்.." என குரல் கொஞ்சம் கெஞ்சலாகவே வந்தது . மறுபடியும் அமைதியே பதில் ஜெய்யிடமிருந்து . ஹர்ஷினிக்கு புரிந்தது "அவன் என்ன எதிர்பாக்கிறான்..?" என



கண்டிப்பாக அவன் பேசமாட்டான் என உணர்ந்து இறுதியாக ஹர்ஷினியே “நான் வரேன்” எனவும் ஜெய் எதுவும் பேசாமல் வைத்து விட்டான் . இன்னும் சிறுது நேரத்தில் வந்துருவான் என புரிந்து வெளியே செல்ல கிளம்பி ரெடியாகி வந்தாள் .




அவள் ஹோட்டல் முகப்பிற்கு வரவும் “சுபத்ரா தன் காரிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்தார்” . "ஹர்ஷ் எங்க கிளம்பிட்ட..?" எனவும்,

"போச்சு.." என மானசீகமாக தலையில் கை வைத்தவள், "சும்மா ரௌண்ட்ஸ் முடிச்சுட்டு வீட்டுக்கு தான்.." எனவும் இது நடைமுறை தான் என்பதால் வேறு எதுவும் கேட்காமல் ஓகே ஹர்ஷ் “நான் சென்னை கிளம்பிட்டேன்” .


சுபத்ராவின் “தேவி டான்ஸ் அகாடமி சென்னை” தான் அதோடு அவரின் இருப்பிடமும் அங்கு தான் .


"ஓகே அத்தை.. நீங்க கிளம்புங்க" எனவும். "அடியே நான் இன்னும் சாப்பிடல வா.. இங்கே சாப்பிடலாம், இன்னிக்கு நீ வரமாட்டேன்னு அண்ணிகிட்ட சொல்லிட்டு வந்திட்டேன்.." என உள்ளே செல்ல திரும்பும் சமயம் ஜெய்யின் கார் வந்து நின்றது .


பக்கத்திலே இருந்ததால் ஜெய் உடனே வந்துவிட்டான். ஹர்ஷினியோடு சுபத்ராவும் நிற்பதை பார்க்கவும் "ஏன் இப்படி ச்சே.." என்றானது ஜெய்க்கு. லாபியில் இருக்கும் செக்யூரிட்டி சென்று கதவை திறந்து விடவும் வேறு வழி இல்லாமல் இறங்கினான் .

சுபத்ரா அவனை பார்த்து விட்டு ஹேய் “ஜெய் வாட் எ சர்பிரைஸ்”


"ஹாய் மேம்.." என சுபத்ராவிடம் சொன்னவன் கவனமாக ஹர்ஷினியின் பக்கம் திரும்பவே இல்ல.


“தி கிரேட் கோரியோ கிராபர் ஜெய் ஆகாஷ்” என சுபத்ரா சந்தோஷமாக சொல்லும் போது ஜெய் அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான் .


"நல்லா இரு ஜெய்.. இதே மாதிரி இன்னும் நிறைய சாதிக்கணும்" என வாழ்த்தவும்

thank you மேம்

"போ.. இப்பவும் அளந்து தான் பேசுவியா..? உன்ன.." என சலிப்பாக சொன்னவர் .


ஜெய்.. "ஹர்ஷினி தெரியும் இல்ல..? உன் ஜூனியர் உன் தங்கச்சி தாரிணி சீனியர்.. அதோடு ரெண்டு பேரும் நல்ல பெட்” என சிரிப்புடன் சொல்லவும்


"தெரியும் மேம்.." என்றவன் “ஹாய் ஹர்ஷினி” என்றான் சம்பிராதயமாக. அவளும் “ஹாய் சீனியர்” என முடித்து விட்டாள் தான் ஆனால் உள்ளுக்குள் மிகவும் தவிப்பாகவே உணர்ந்தாள் .


ஜெய்யின் முகத்தில் மருந்துக்கும்” சிரிப்பு இல்ல மிகவும் இறுக்கமாகவே” இருந்தான். "ஏன் இப்படி... என்ன நினைக்கிறார் அப்படின்னே கண்டு பிடிக்க முடியல…"



"என்ன இந்த பக்கம்.. உனக்கு இப்போ கேரளா தானே ஷூட்டிங்..?" என சுபத்ரா கேட்கவும்

"முக்கியமான ஒருத்தரை பாக்க வந்தேன்.. நைட் கிளம்பனும் மேம்.."


"ஓகே.. உள்ளே வா போலாம்" என சுபத்ரா அவனை அழைக்கும் போது அவனின் போன் ஒலிக்கவும் “தாரிணி “அழைத்தாள் . எடுத்து பேசியவன் "ஓகே நான் பாத்துக்கிறேன்" என பேசிவிட்டு

"நான் கிளம்புறேன்.. அவங்க வரல" என்று அங்கிருந்து கிளம்ப தயாரானான்.

"அய்யோ கிளம்பிருவார் போலே.." என வேகமாக யோசித்த ஹர்ஷினி, "இன்னிக்கு உங்களுக்கு எங்க ட்ரீட்.. அவார்ட் விண் பன்னதுக்காக.... என்ன அத்தை.. ஓகே தானே..?" என்றாள் சுபத்ராவிடம் . "கரெக்ட் ஹர்ஷி.. வா ஜெய் எங்களோடு ட்ரீட்" என சுபத்ராவும் சொல்லவும்

"இல்ல மேம்.. இப்போ கிளம்புறேன், இன்னொரு நாள் கண்டிப்பா... thank you பை மேம்.. பை ஹர்ஷினி" என ஜெய் உறுதியாக மறுக்கவும், "ஓகே நீ மாற மாட்ட பை.." என சுபத்ரா சொல்லவும் ஜெய் கார் வரும் பகுதிக்கு சென்றான்.


ஹர்ஷினி கொஞ்சம் சத்தமாக “நான் கார்டன்க்கு போறேன் அத்தை.. நீ உள்ளே போ" என்றவள் அவர் மறுக்க வழியில்லாமல் அங்கிருந்து செல்லவும் சுபத்ரா உள்ளே சென்றார் .

ஹர்ஷினி ஜெய்யின் மொபைல்க்கு அழைத்தவள் அவன் எடுக்கவும் "ப்ளீஸ் ஜெய்.. கார்டன்க்கு வாங்க.." என கேட்கவும், ஓகே என்றவன் கார்டனுக்கு சென்றான் .


"சாரி ஜெய்.. அத்தை வருவாங்கன்னு எனக்கு தெரியாது” . ஜெய் எதுவும் பேசாமல் ஏன் அவள் முகம் கூட பார்க்காமல் கால் விரித்து கைகளை பாண்ட் பாக்கெட்ல் விட்டு படி நிற்கவும் .


"ஜெய் எதாவது பேசுங்க.. இப்படி பேசாம இருந்தா எப்படி..?" என சொல்லும் போதே அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வர பார்க்கவும்


அதை உணர்ந்தவன் “அழுத கொன்னுருவேன்” என கோவமாக அவளை பார்த்து சொல்லவும் அவனின் கோவம் புரிந்து அவனை நெருங்கி வந்தவள் அவனின் கைய பாக்கெட்ல இருந்து வெளியே எடுத்து தன் விரல்களை அவன் விரல்களோடு இறுக்கமாக கோர்த்தாள் .


அவளை முறைத்தவன் “என்னடி பண்றே “என அதட்டி தன் விரல்களை அவளிடமிருந்து பிரிக்க பார்க்கவும் ஹர்ஷினி இன்னும் இறுக்கமாக பிடித்தாள்

வேண்டாம் ஹர்ஷினி அப்புறம் நீ தாங்க மாட்ட விட்டுடு

ஹர்ஷினி மறுப்பாக தலையாட்டவும் "அப்போ அனுபவிடி.." என்றவன் அவளின் முகத்தை பார்த்தவாறே தன் விரல்களை இன்னும் இன்னும் நெறித்தான் . “எலும்புகள் எல்லாம் சில்லு சில்லாகி விடுமோ” என அஞ்சும் அளவு நெறித்தான் .

அப்படியும் ஹர்ஷினி தன் வலியை காட்டாமல் வைராக்கியமாக நின்றாள் . பக்கத்தில் யாரோ பேசும் சத்தம் கேட்கவும் இருவரும் வேகமாக கைகளை விலக்கி கொண்டனர் .


நான் “வீட்ல வெயிட் பண்றேன் நீ கண்டிப்பா வர “என்றவன் வேகமாக கிளம்பிவிட்டான் .


ஹோட்டலில் உள்ள பர்ஸ்ட் எயிட் பாக்ஸில் ஸ்பிரே எடுத்து கைக்கு அடித்து கொள்ளவும் வலி கொஞ்சம் குறைந்தது போல் இருந்தது .பின் சுபத்ரா இருக்குமிடம் சென்றாள்.


"முடிஞ்சுதா ரௌண்ட்ஸ்.. வா சாப்பிடலாம், எல்லாம் ரெடியா இருக்கு" என இருவருக்கும் சுபத்ரா எடுத்து வைத்தார் . ஹர்ஷினி பொதுப்படையாக பேசியபடி வேகமாக சாப்பிட்டவள் "நான் கிளம்புறேன் அத்தை".



ஒரு ப்ரண்ட இன்னிக்கு மீட் பன்றேன்னு சொல்லிருந்தேன். நீ சென்னை ரீச் ஆயிட்டு எனக்கு கால் பண்ணு .

நான் கால் பண்றேன் நீ பாத்து போ பை .

"thank you அத்தை.. பை" என அவரை கட்டிப்பிடித்து விடை கொடுத்தவள் வேகமாக கிளம்பிவிட்டாள் .

அவள் சுபத்ராவிடம் செல்லும் போதே உணவு சொல்லிவிட்டு சென்றதால் அவள் கிளம்பவும் உணவு தயாராக இருந்தது . உணவு கூடையை எடுத்து கொண்டவள் வேகமாக காருக்கு சென்றாள் .

............................................................................................................................

கோயம்புத்தூரில் இருந்து கொஞ்சம் அவுட்டரில் தான் இருவரும் சேர்ந்து "பார்ம் அவுஸ்." வாங்கினார்கள். இவர்கள் எப்போதும் மீட் செய்யும் இடமும் அதுதான்.


முன்னதாக சென்ற ஜெய் அங்கு பொறுப்பில் இருக்கும் கந்தனை நைட் வந்தால் போதும் என அனுப்பி விட்டான் .


சிறிது நேரம் சென்று கார் வரும் ஓசை கேட்டு வெளியே வந்தவன் ஹர்ஷினி அவளின் காரிலிருந்து இறங்கி காரின் பின்புறம் இருக்கும் உணவு கூடையை எடுத்து கொண்டு காரின் கதவை மூடி லாக் செய்யும் போது தனக்கு மிக அருகில் ஜெய் ஆகாஷ உணர்ந்தாள் ஹர்ஷினி.


அவனின் வெப்ப மூச்சு காற்று ஹர்ஷினியின் கழுத்தை தீண்டி சென்று அவளை தகிக்க வைத்தது . அவள் கரத்தின் மீது அழுத்தமாக தன் கரத்தை வைத்து அவளிடமிருந்து உணவு கூடையை வாங்கியவன் மற்றொரு கையால் அவளை பற்றி உள்ளே அழைத்து சென்றான் .


நேராக டைனிங் டேபிள் மேல் சென்று கூடையை வைத்தவன் அவள் பிடியை விடவும் ஹர்ஷினி வேகமாக கிட்சனுக்குள் சென்றுவிட்டாள்.


ஜெய் சென்று கதவை அடைத்தவன் சோபாவில் கண் மூடி அமர்ந்து விட்டான் . ஹர்ஷினி சாப்பிட ஏற்பாடு செய்தவள் ஆகாஷ் வராமல் சோபாவில் அமர்ந்து இருப்பதை பார்த்து விட்டு



ஜெய் “சாப்புடுங்க ரொம்ப சோர்வா இருக்கீங்க” எனவும்



இருக்கலாம் காலையில் இருந்து காரிலே தானே சுற்றி கொண்டிருந்தேன் என நினைத்தவன் எதுவும் பேசாமல் எழுந்து ஜன்னலருகில் சென்று நின்று கொண்டான்.



ஹர்ஷினி அவன் அருகில் சென்று நின்றவள் "சாப்பிட வாங்க.. ரொம்ப டைம் ஆயிடுச்சி" என மறுபடியும் அழைக்கவும்



ஹர்ஷினி.. "நான் இங்க விருந்தாட வரல.. அதோடு இனிமேல் என்னை பத்தி அக்கறை பட உனக்கு எந்த உரிமையும் இல்லை.." என கோவமாக சொல்லவும்


"ஜெய்.." என ஹர்ஷினி ஆரம்பிக்கும் போதே அவளை மிக நெருங்கி நின்றவன், “ஷ் ஷ்.. நீ ஒருவார்த்தை கூட பேச கூடாது.. உனக்கு பேச கொடுத்த சான்ஸ் முடிஞ்சு போச்சு . நான் மட்டும் தான் பேசுவேன்" எனவும்


அவனின் கோவத்தை புரிந்து கொண்டவள் அமைதியாகிவிட்டாள் இல்லாவிடில் அவனின் கோவம் இன்னும் தான் அதிகரிக்கும் .


நூல் அளவு இடைவெளி தான் இருந்தது இருவருக்கும் இடையில் அதே நெருக்கத்தோடே பேசினான்.


"உன்ன கல்யாணம் பண்ணிக்கலான்னு கேட்டது ரொம்ப பெரிய தப்பு.. அத நான் உணர்ந்துட்டேன் . அதுக்கான தண்டனையும் நான் அனுபவிச்சுட்டேன்",



"என்ன சுத்தி எல்லோரும் என் வெற்றியை கொண்டாடுறாங்க.. ஆனா.. என்னால அதை உணர கூட முடிய.. ஏன் தெரியுமா..? என் மனசு மருத்து போன மாதிரி இருக்கு”.


"நான் எப்போலிருந்து உன்ன இந்த அளவுக்கு லவ் பன்றேன்னு சத்தியமா எனக்கே தெரியல ஹர்ஷினி".



அவன் சொன்னதை கேட்டவுடன் ஹர்ஷினியின் முகம் மிகவும் தவிப்பை காட்டியது



அவளின் தவிப்பான முகத்தை பார்த்தவன்” 18 வயசுல உங்க தாத்தா டான்ஸ் ஆட கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டாரு” . உன்னால டான்ஸ்ல எதுவும் சாதிக்க முடியல , உன்னோட “லட்சியம் முடிஞ்சு போச்சுன்னு” நீ பட்ட வேதனையை பாத்து அவளால் சாதிக்க முடியாம போன என்ன நான் சாதிக்குறேன் “நானும் அவளும் வேற இல்ல”.



எனக்கும் டான்ஸ்ல சாதிக்கணும் வெறி இருக்கு . இனிமே இது “ஹர்ஷினி ஆகாஷ் லட்சியம்” கண்டிப்பா ஜெயிக்கணும் . ஜெயிச்சி அந்த “சந்தோஷத்தை உனக்கு கொடுக்கணும்” அப்படின்னு வைராக்கியமா அன்னிக்கு நம்ம லட்சியத்துக்கு பின்னாடி ஓட ஆரம்பிச்சேன் .



“9 வருஷத்துக்கு அப்புறம் நிறைய போராட்டத்துக்கு பின்னாடி அதை சாதிச்சும் காட்டிட்டேன்”. ஆனா என்றவன் விரக்தியாக தோளை குலுக்கினான்


அவன் பேச பேச “ஹர்ஷினியின் முகம் அதிர்ச்சியை” காட்டியது . அவளின் அதிர்ச்சியை கண்டு கொள்ளாமல் “ஏன் என்னால உனர முடியல " உனக்கு தெரியுமா ஹர்ஷினி



“நான் இந்த உலகத்தில் உள்ள எல்லாத்தையும் விட அதிகமா உன்ன லவ் பன்றேனே.. அதனால இருக்குமோ..?" இல்ல


"எனக்கு உன்ன தவிர வேற எதுவும் பெருசா தெரியல.. அதனால இருக்குமோ..?" என்றான் ஒரு மாதிரி குரலுடன் .


இருவருக்கும் இடையில் இருந்த நூல் அளவு இடைவெளியும் குறைத்தவன் தன் முழு உடலும் அவளின் உடலோடு முழுவதுமாக படற நின்றவன்


அவளின் முகத்தில் தெரியும் தவிப்பை பார்த்தவாரே மிக அருகில் இருந்த அவளின் முகத்தை மிக தீவிரமாக பார்த்து கொன்டே தன் விரலால் அவளின் நெற்றியில் இருந்து கோடிழுத்தவாரே "இந்த முகத்தை 3 மாசம் பாக்க முடியாம போச்சே.."


அதனால.. இல்ல.. அப்படி இல்ல.. "நான் வரேன் தெரிஞ்சாலே உன்ன பாக்க விடாம பண்ணியே.. அதனால இருக்குமோ..?" என கூறியவாரே அவளின் துடிக்கும் இதழை வருடி கொண்டிருந்தவனின் பார்வையில் உள்ள தாகத்தினை உணர்ந்தவள்



கண்ணை மூடி கொள்ளவும் "ஹர்ஷினி கண்ணை திற “ என கொஞ்சம் கட்டளையாகவே சொன்னான் . அவனின் கட்டளையை உணர்ந்து மெதுவாக கண்ணை திறந்தாள் .

"நீ கண்ண மூட கூடாது..? என் லவ்வ என் கண்ண பார்த்து நீ உணரணும்” என்றான் .

"என்னால முடியல.. ப்ளீஸ் ஜெய்…."

"நோ.." என உறுதியாக மறுத்தவன் நிதானமாக தன் “இதழை அவளின் துடிக்கும் இதழோடு பொருத்தினான்” . முதலில் மென்மையாக ஆரம்பித்த முத்தம் நேரம் செல்ல செல்ல மிகவும் வன்மையாக மாறியது .


ஜெயின் ஒரு கை அவளின் பின்னந்தலையை இறுக பற்றியது, என்றால் மற்றொரு கை அவளுள் இருக்கும் புதையலை தேடி அலைந்தது .


ஹர்ஷினியால் தன்னுள் எழும் “ஆழி பேரலைய தாங்க முடியாமல்” அதை உருவாக்கியவனிடமே சரணைடைந்தாள் .

அவளுடய ஒத்துழைப்பு இன்னும் இன்னும் போதை ஏற்றியது ஜெய் ஆகாஷிற்கு . இருவரின் ரத்த சுவையை இருவருமே உணர்ந்தனர் . ஆனால் அந்த "வலி ஜெய்க்கு போதவில்லை" .


இன்றோடு உலகம் முடியவே போகிறது என்பது போல் மீண்டும் மீண்டும் விடாமல் அவளையும் விலக விடாமல் முத்தமிட்டான் ஜெய்.


அவனின் பார்வை “உயிரை உறைய வைக்கும் பார்வையாக” இருந்தது. அந்த பார்வையை தொடர்ந்து சந்திக்க முடியாமல் ஹர்ஷினி கண்ணை மூடவும் நன்றாகவே அவளின் இதழை கடித்து விட்டான், "ஸ்ஸ்.." என வலிதாங்க முடியாமல் தன் உதட்டை அவனிடம் இருந்து பிடுங்கவே செய்தாள் .


தன் காதல் தாகம் அடங்காமல் மறுபடியும் அவளை இழுக்கவும் அவனை இறுக கட்டி கொண்டவள் “ப்ளீஸ் ஜெய்” என கெஞ்சவும் தான் கொஞ்சம் நிதானித்திற்கு வந்தான் .


சிறிது நேரம் அப்படியே நின்றவன் பின் நிதானமாக அவளை விலக்கி அவளின் முகத்தை பார்த்தவாறே..

"என் உயிரை கொல்ற இந்த காதல் எனக்கு வேண்டாம் ஹர்ஷினி . உன் ஆசை படியே நாம பிரிஞ்சிறலாம்” என மிக அழுத்தமாக சொன்னான் ஜெய் ஆகாஷ் ........


ஹாய் ப்ரண்ட்ஸ்

என்னுள் சங்கீதமாய் நீ 3 போஸ்ட் பண்ணிட்டேன் . படிச்சுட்டு உங்க கருத்துகளை சொல்லுங்க ப்ரண்ட்ஸ் thank you
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top