என்னுள் சங்கீதமாய் நீ 25 1

Nithi Kanna

Well-Known Member
#1
என்னுள் சங்கீதமாய் நீ 25 1

ஹர்ஷி.. “பர்ஸ்ட் செமஸ்டர் எக்ஸாம் சர்குலர் போன வாரமே வந்துருச்சி.. நான் மெசேஜ் அனுப்பி இருந்தனே பாக்கலியா நீ..” என்று ஜோதி கேட்க..
பாத்தேன் ஜோதி.. அதை பாத்துட்டு தான் அத்தை என்னை உடனே அனுப்பிட்டாங்க..

ஓஹ்.. உங்க அத்தைக்கு உடம்பு முடியல சொன்ன இல்ல.. இப்போ எப்படி இருக்காங்க..?

ஓகே.. பரவாயில்ல.. என்று முடித்துவிட்ட ஹர்ஷினி, இப்போ நான் “எக்ஸாம்க்கு படிக்க நோட்ஸ் தான் பாக்கணும்..” என்று சலிப்பாக சொன்னாள்.

அதெல்லாம் எல்லா சப்ஜெக்டும் சேர்ந்து போதும்.. போதும்ன்ற அளவுக்கு நிறைய இருக்கு.. என்று செல்வி புலம்ப,

ம்ம்.. அப்போ இனி எழுதறது எல்லாம் கஷ்டம்.. பெட்டெர் உங்க நோட்ஸை எல்லாம் ஜெராக்ஸ் எடுத்துற வேண்டியதுதான்..
அதுவும் கரெக்ட் தான் ஹர்ஷி.. என்று செல்வி சொல்ல, அப்போ ஓகே.. உங்க நோட்ஸை எல்லாம் கொடுங்க.. இப்போ ப்ரீ பீரியட் தானே.. போய் ஜெராக்ஸ் எடுத்துட்டு வந்துரலாம்.. என்று நோட்ஸை வாங்கிக்கொண்டு செல்வி, ஜோதி உடன் வர சென்று கொண்டிருந்தவள்,

“ஆஃபீஸ் அட்டெண்டர்..” வந்து உன்னை பார்க்க விசிட்டர் வந்திருக்காங்க எனவும், என்னை பாக்க இங்க யாரு வரப்போறாங்க.. என்று யோசித்தவாறே, நீங்க போயிட்டே இருங்க.. நான் யாருன்னு பாத்துட்டு வந்துடுறேன் என்று தோழிகளிடம் சொல்லிவிட்டு, அட்டெண்டர் உடன் சென்றவள்,

அங்கு “காளிதாசை” காணவும், வெறுப்புடன் திரும்பி நடக்கவே ஆரம்பித்துவிட்டாள்.

ஹர்ஷினி.. நான் சொல்றதை கொஞ்சமா கேளுமா.. என்று வேகமாக அவரும் பேசிக்கொண்டே உடன் வர.. காதில் விழாதவள் போல் வேக நடையுடன் சென்று கொண்டிருந்தவளின் வழியை மறைத்த காளிதாஸ்,

ப்ளீஸ்.. ப்ளீஸ் “ஹர்ஷினி ஒரு 2 மினிட்ஸ்..” என்று இறைஞ்சுதலாக கேட்டவண்ணம் வழி மறைத்து நிற்கவும், அவரின் பின்னால் வந்த காலேஜ் சேர்மேன்.

“ஹர்ஷினி.. அவருக்கு பேச ஒரு வாய்ப்பு கொடு..” என்று அதிகாரமாக இல்லாமல் பொறுமையாகவே கேட்டார். அளவுகடந்த கோவத்தில் கொதித்து கொண்டிருந்த ஹர்ஷினி, தன் கையை கட்டி கொண்டு காளிதாசை வெறித்து வெறுப்புடன் பார்த்தாள்.

“உன்னோட வெறுப்பு, கோவம் எல்லாம் எனக்கு புரியுது.. நான் இந்த வெறுப்புக்கு தகுதியானவன் தான்..” என்று வேதனையுடன் காளிதாஸ் சொல்ல,

“இது என்ன புது நாடகம்..” என்பது போலே பார்த்தாள் ஹர்ஷினி. அவளின் பார்வையிலே அவளின் எண்ணத்தை உணர்ந்து கொண்ட காளிதாஸ், விரக்தியாக சிரித்தவாறே,
“நான் உங்க அத்தைக்கு ரொம்ப பெரிய துரோகம், அநியாயத்தை பண்ணிட்டேன்., அது எனக்கு அப்போ புரியல, சபலம்.. ஆனா அதை காலம் கடந்து உணர்ந்து ரொம்ப.. ரொம்ப வேதனை பட்டிருக்கேன்..

அதனாலே உங்க தாத்தா என் தொழிலை முடக்கனப்போ, அதை மறுபடியும் செய்யணும்ன்னு எனக்கு தோணல..”
ஆனா இப்போ “என்னோட தப்புக்கெல்லாம் பரிகாரமா, பிராய்ச்சித்தமா.. உன்னை பெரிய டான்சரா ஆக்கணும்ன்னு நினக்கிறேன்..” இதை தான் அன்னிக்கும் உங்க தாத்தாகிட்டேயும் கேட்டேன். ஆனா.. அவர்.. ம்ம்ம் என்று பெருமூச்சு விட்டவர், இப்போ உன்கிட்ட இதை வேண்டுகோளாவே கேட்கிறேன்..” என்று உண்மையாகவே கேட்டார்.

அவன் சொல்றது எல்லாம் உண்மை தான்... அவன் இத்தனை வருஷம் ரொம்பவே வருத்தப்பட்டுட்டான் .. “என்னோட ப்ரண்ட் தான் காளிதாஸ்,” சோ எனக்கு நடந்தது எல்லாமே தெரியும்..

நான் அப்பவே இதெல்லாம் ரொம்ப பெரிய பாவம்.. வேண்டாம்டான்னு நிறைய சொன்னேன்.. இவன் கேட்கல.. “ஓகே பாஸ்ட் இஸ் பாஸ்ட்..” அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடு ஹர்ஷினி.. என்று காலேஜ் சேர்மேனும் சொன்னார்.

இருவரையும் வெறித்தது பார்த்தவண்ணம் நின்றுஇருந்த ஹர்ஷினி, “எல்லா பாவத்துக்கும் பிராய்ச்சித்தம் கிடையாது..” இனி இதைப்பத்தி எப்பவுமே என்கிட்ட பேசாதீங்க.. என்று உறுதியாக சொல்லிவிட்டு வந்தவளின் எண்ணம் முழுவதும் சுபத்ராவே..

இப்போ வந்து இவர் பரிகாரம் செஞ்சா எங்க அத்தை இழந்தது எல்லாம் கிடைச்சிடுமா.. இல்லை எங்க பாட்டிதான் திரும்பி வருவாங்களா..? இப்பவும்.. இவராலா தானே “என்னோட கனவும்.. கனவாவே போயிடுச்சே..” என்று மனதுக்குள் கொதித்தவாறே நேரே ஜெராக்ஸ் எடுக்குமிடம் சென்றாள்.

என்ன ஆச்சு ஹர்ஷி..? ஏன் இவ்ளோ கோவமா இருக்க..? என்று இவளின் கோவமான முகத்தை பார்த்து ஜோதி கேட்கவும், ச்சு.. ஒண்ணுமில்லை விடு.. ஜெராக்ஸ் எடுக்கலாமா..? அதெல்லாம் எடுக்க கொடுத்துட்டோம்.. இப்போ கொடுத்துருவாங்க.. என்று செல்வி சொல்லி கொண்டிருக்கும் போதே, அங்கு வந்தனர் “ஜெய் அண்ட் கோ..”

முத்தண்ணே.. என்று ஜெராக்ஸ் எடுப்பவரை ராகம் இழுத்து கொண்டே வந்தவர்கள், இவர்களை பார்க்கவும், “இங்க என்ன பண்றீங்க..?” என்று குமார் சீனியர் கெத்துடன் அறிவுபூர்வமான கேள்வி கேட்கவும்,

இந்த “கொரில்லா..” கேட்கிற கேள்வியை பாருடி.. ஜெராக்ஸ் எடுக்கிற இடத்துல வந்து என்ன பண்றீ ங்கன்னு கேட்குது.. என்று ஜோதி முணுமுணுக்கவும்,
ஆமாடி.. இந்த “ஜோக்கருக்கு மனசுல பெரிய ரவுடின்னு நினைப்பு..” என்று செல்வியும் சொன்னதை கேட்ட ஹர்ஷினி அதுவரை இருந்த இறுக்கம் மறைத்து மெலிதாக சிரிக்கவும்,

என்னடா.. இந்த தில்லானா எதுக்கு சிரிக்குது..? என்று குமார் சந்தேகமாக கேட்க, அவளையே பார்க்காமல் பார்த்து கொண்டிருந்த ஜெய், குமார் கேட்டதில் ஹர்ஷினியிடம் பேச வாய்ப்பு கிடைக்க,

“ஒய் எதுக்கு சிரிக்கிற..? குமார் கேட்டதுல என்ன தப்பு.. அவன் இந்த மாதிரி அறிவுபூர்வாமான கேள்வி எல்லாம் கேட்டா உடனே நீங்க சிரிச்சிருதா..?” என்று கேட்க,

“மச்சி நீ எனக்காக பேசுறியா..? இல்லை என்னை கலாய்க்கிறாயா..?” என்று குமார் சந்தேகமாக கேட்கவும், “என்னா குமாரு.. இப்படி கேட்டுட்ட.. அவன் உன்னை கலாய்க்கவே இல்லை” என்று செல்வம் சிரிப்புடன் சொல்ல, மற்றவர்களும், ஆமாடா குமாரு.. என்று கோரஸாக இழுக்கவும்..

“என்னை அசிங்கப்படுத்த யாருமே தேவையில்லடா.. நீங்கலே போதும்.. நீங்க எல்லாம் ப்ரண்ட்ஸாடா.. துரோகிங்க..” என்று புலம்பவும், எல்லோரும் சிரிக்கவும், “நான் போறேன்.. போங்கடா..” என்று முறுக்கியவாறே செல்ல பார்க்க,

“மச்சி எங்க கிளம்பிட்ட..? எக்ஸாம்க்கு நோட்ஸ் வேணாமா..?” என்று செல்வம் நக்கலாக கேட்க, “இருக்கேன்.. இருந்து தொலைக்கிறேன்..” என்று கடுப்பாக சொன்ன குமார்,

“முத்தண்ணே இந்தாங்க.. இதை எல்லாம் பத்து பத்து காபி போடுங்க” என்று சொல்லவும்,
அவர்களையே புரியாமல் பார்த்து கொண்டிருந்த செல்வியும், ஜோதியும், “இந்தாங்கம்மா.. உங்க ஜெராக்ஸ்..” என்று முத்தண்ணே கொடுக்கவும், காசு கொடுத்த ஹர்ஷினி, ஜெயயை ஓரக்கண்ணால் பார்த்தவண்ணம் கிளம்பவும்,

“நாங்க ஜெராக்ஸ் எடுக்கறதுக்கு நீங்க எதுக்கு அப்படி பாத்தீங்க..?” என்று ஜெய் அவர்களை செல்லவிடாமல் தடுக்க கேட்க,

அது.. அது.. வந்து சீனியர்.. நோட்ஸ் ஜெராக்ஸ்.. என்று செல்வி பயத்துடன் இழுக்கவும்,

ஆமா.. நோட்ஸ் ஜெராக்ஸ் தான்.. அதுல என்ன இருக்கு..?

இல்லை.. நீங்களும் ரொம்ப நாளா கிளாசுக்கு போகலையா..? அதான் உங்ககிட்ட நோட்ஸ் இல்லையா..? என்று ஜோதி கேட்டவுடன்,

“ஹாஹா.. ஹாஹா” என்று அனைவரும் சிரிக்க, “ஏண்டி நாம இப்போ என்ன கேட்டுட்டோம்ன்னு இப்படி சிரிக்கிறாங்க..” என்று புரியாமல் செல்வி, ஜோதியிடம் கேட்டாள். “அதான்.. எனக்கும் தெரியல..”

இவர்களின் பேச்சை கவனித்தும், கவனிக்காமலும் “சிரிக்கும் ஜெயயையே மனதுள் தீவிரமாக சைட் அடித்து கொண்டிருந்தாள் ஹர்ஷினி,” அவளை புரிந்து கொண்ட ஜெய், சிரித்தவாறே அவளை பார்த்து “கண்ணடித்து, முத்தம் கொடுப்பது போல் உதட்டை குவிக்கவும், பதறி போன ஹர்ஷினி, சிவந்த முகத்துடன் வேகமாக வேறு புறம் திரும்பவும்,
அவளின் வெட்கத்தை ரசனையாக பார்த்தான் ஜெய்.”

“நாங்க எல்லாம் கிளாசுக்கு தினமும் போனோம் தான்.,” என்று சிறிதுமுடித்து அசோக் சொல்ல, “அப்புறம் நோட்ஸ் ஏன் ஜெராக்ஸ் எடுக்கணும்.. கிளாஸ்ல எழுதி..” என்று ஜோதி இழுக்கவும்,

“என்னது.. கிளாஸ்ல நோட்ஸ் எழுதணுமா..?” என்று எதோ செய்ய கூடாததை கேட்டது போல் முறைத்து பார்க்கவும், நொந்து போன ஜோதி, பாவமாக பார்க்க,

“டேய்.. போதும் விடுங்கடா.. நீங்க கிளம்புங்க..” என்று ஜெய் சொல்லவும், விட்டால் போதுமென பறந்து விட்டனர் செல்வியும், ஜோதியும். பின்னால் சென்ற ஹர்ஷினி, ஜெயயை கடக்கும் போது. அவன் வேண்டுமென்றே, “இச்சு தா.. இச்சு தா..” என்று மெலிதாக பாட, வெட்கம் கலந்த கோவத்தில் அவனை முறைத்துவிட்டு சென்றாள் ஹர்ஷினி,

“ஏனுங்க மாமா.. எங்களுக்கு இந்த வீட்ல நடக்கிற எதையும் தெரிஞ்சிக்கிற உரிமை இல்லன்னு நீங்க எல்லாம் நினைக்கிறீங்களா..?” என்று இரவு உணவுண்ணும் போது மாலதி உடன் நிற்க ரேணுகா ஆழ்ந்த துயரத்தோடு கேட்க,

எல்லோரின் கையும் உணவுண்பதை நிறுத்திவிட்டு ஆச்சார்யாவிடம் கேள்வி கேட்கும் அவரை ஆச்சரியத்தோடு பார்த்தனர். ஆனால் ஆச்சார்யாவோ அவரின் வருத்தத்தை முன்னமே புரிந்து தான் இருந்தார் என்பதால்,

“இல்ல மருமகளே.. இந்தவீட்டில உங்களுக்கு இல்லாத உரிமை எங்க யாருக்கும் இல்ல..” என்று பொறுமையாகவே சொன்னார்.

“ஆனா நடக்கிறதை பார்த்தா அப்படி தெரியலையே மாமா.. நாங்க ஏதோ சமையல்கட்டோடு நின்ருற மாதிரிதான் தெரியுது..”

அண்ணி என்ன ஆச்சு..? ஏன் இப்படியெல்லாம் தப்பு தப்பா யோசிச்சி பேசுறீங்க..? என்று இந்திரன் புரியாமல் கேட்க,

அக்கா கேட்கிறதில எந்த தப்பும் இல்ல.. அவங்க சொல்றது சரிதான்.. என்று மாலதியும் சொன்னார், இதை எதையுமே கண்டு கொள்ளாமல் சாப்பிட்டு கொண்டிருந்த ஹர்ஷினியை கண்ட ரேணுகா மனதில் அவளின் மாறுபட்ட நடவடிக்கையில் குழப்பத்தோடு வருத்தமே மிஞ்சியது.

அவரின் பார்வையை புரிந்து கொண்ட ஆச்சார்யா, “என்ன கேட்குமோ கேளு மருமகளே..?” என்று சொல்லவும்,

“உங்களை ஹாஸ்பிடல இருந்து நாங்க கூட்டிட்டு வந்த அன்னிக்கு நம்ம வீட்ல என்ன நடந்துச்சு மாமா..?” என்று நிதானமாக சந்திரனை கூர்மையாக பார்த்தபடியே கேட்டார்,
அவருக்கு நன்றாக புரிந்தது “சந்திரன் எதோ செய்ய கூடாததை செய்திருக்கிறார் என்று..” ஆனால் இதுவரை யாருமே அவர்களிடம் சொல்லவில்லை என்பதாலே இதுவரை பொறுத்து பார்த்துவிட்டு இன்று நேரடியாகவே கேட்டுவிட்டார்,

சந்திரனுக்கு மனைவியிடம் நடந்ததை சொல்ல முகமே இல்ல.. எங்கு “அவரும் தங்கை, மகளை.. போல் தன்னை வெறுத்துவிடுவாரோ என்ற பயமே பிரதானமாக நின்றது”. அவரின் பயத்தை தெரிந்து வைத்திருந்த ஆச்சார்யா, மகனை வெறுமையாக பார்த்து விட்டு,

“சுபத்ராவுக்கு ஒரு நல்ல இடத்துல சம்மந்தம் கூடி வந்துச்சி, ஆனா பெரியவனுக்கு அந்த சம்மந்தம் பிடிக்கல, அதனால.. அதனால கொஞ்சம் கோவப்பட்டு பேசி அவங்களை வெளியே அனுப்பிட்டான்..” என்று மறைத்து மேம்போக்காக சொல்லவும்,

அவரை நிமிர்ந்து ஹர்ஷினியின் விழிகளில் தெரிந்த குற்ற சாட்டில் மருகி போனார் ஆச்சார்யா.

“சுபத்ராவுக்கு இந்த வரன் பிடிச்சி இருந்ததா மாமா..?” என்று “சுபத்ரா, ஹர்ஷினியின்.. சந்திரன் மீதான வெளிப்படையான கோவத்தில்” ஓரளவுக்கு புரிந்து வைத்திருந்த ரேணுகா கேட்கவும், “ஆமா..” என்றுவிட்டார் ஆச்சார்யா,

அதற்கு பிறகு சிறிது நேரம் எதுவும் பேசாமல் நின்றவர், “நான் நாளைக்கு சென்னை போறேன் மாமா..” என்று முடிவுடன் சொன்னவர், சந்திரனை திரும்பியும் பார்க்காமல் சென்றுவிட்டார்.

சொன்னது போல் மறுநாள் சென்று சுபத்ராவை பார்த்தவர், அவரின் கையை பிடித்து கொண்டு கண்ணீர் விடவும், “என்ன அண்ணி நீங்க, அம்மாக்கு அப்புறம் நீங்க தானே எனக்கு அம்மாவா இருக்கீங்க, உங்க புருஷன் செஞ்சதுக்கு நீங்க என்ன செய்வீங்க..” என்றவர், மனபாரம் தாங்காமல் அவரை கட்டிப்பிடித்து ஒரு மூச்சு அழுது தீர்த்தார்.

.................................................................................................