என்னுள் சங்கீதமாய் நீ 13

Advertisement

Nithi Kanna

Well-Known Member
என்னுள் சங்கீதமாய் நீ 13





என்னங்கடா இப்படி ஆயிருச்சி..? நாம அந்த அம்மிணியை ராக் பண்ண நினைச்சா..! அந்த அம்மிணி என்னடான்னா.. அதை வச்சே எல்லார்கிட்டயும் கிளாப் வாங்கிடுச்சு..!

நாம என்ன பண்ணாலும் அசுரமாட்டா போலே.. செல்வம் எரிச்சலாக சொல்லவும்

ஆமாடா.. ரொம்ப தைரியம் தான் அந்த அம்மிணிக்கு.., வந்த முத நாளே என்ன போடு போடுது.. கொஞ்சம் ஆச்சரியத்துடன் குமார் சொன்னான்.

என்னமா டான்ஸ் ஆடுச்சு அந்த அம்மிணி.., சான்சே இல்லை, நம்ம ஜெய் எப்படி சூப்பரா டான்ஸ் ஆடுவானோ அதே மாதிரி தான்டா அந்த அம்மிணியும் ஆடுது.. இன்னொரு நண்பனான அசோக் பிரம்மிப்பாக சொல்லவும்,

டேய் நீ எப்படி..? நம்ம ஜெய்ய அவகூட கம்பேர் பண்ணலாம்.., டான்ஸ்ன்னா நம்ம ஜெய் தான் என்று கோவத்தில் எகிறினான் செல்வம்.

ஆமாடா நீ சொன்னது தப்பு, நம்ம காலேஜ்லே டான்ஸ் அப்படின்னாலே எப்பவும் ஜெய் தான், இன்னொரு டைம் இப்படி சொல்லாதே.. என்று இன்னொரு நண்பனான மூர்த்தி சத்தமிட்டான்.

ஆனால் இவர்கள் யாருக்காக சண்டை போடுகிறார்களா..? அவன் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல என்பது போல்… எதுவும் பேசாமல் அமர்ந்து இருக்கவும், அவனின் தோளில் தட்டிய குமார், என்ன மச்சி நீ அமைதியாவே உட்காந்திருக்க..?, அவன் என்ன சொல்றான் பாத்தியா..? என்று கேட்கவும்

அசோக் சொன்னதுல கண்டிப்பா தப்பு இருக்கு, ஆனா நீங்க சொல்ற மாதிரியான தப்பு இல்ல.. என்று ஜெய் அமைதியாக சொல்லவும்,

அவன் என்ன சொல்ல வருகிறான்..? என்று புரியாமல்.. அனைவரும் அவனை கேள்வியாக பார்க்கவும்,

ஆமாடா.. அவ என்ன மாதிரி எல்லாம் டான்ஸ் ஆடலை.. என்னைவிட நல்லாவே ஆடுறா.. வெரி வெல் ட்ரைன்ட் டான்ஸர்டா அவ,

நான் எல்லாம் சும்மா அப்படியே ஆடுவேனே தவிர அவளை மாதிரி பெர்பெக்டா எல்லாம் ஆடமாட்டேன்..,

டேய் அசோக் சொன்னதே பரவாயில்ல போல.., நீ அவனுக்கு மேலே சொல்ற, எங்களுக்கு எப்பவும் நீ தான் பெஸ்ட் அவ்வளவுதான் என்று குமார் முடிவாக சொல்லவும் மற்றவர்களும் ஆமா என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது

டேய் எல்லாம் அமைதியா இருங்கடா.., நம்ம பஞ்சாயத்தை அப்பறம் வச்சுக்கலாம்.. அந்த அம்மிணி வருது என்று எச்சரிக்கையாக மூர்த்தி சொல்லவும்,

ஜெய் கொஞ்சம் “ஆர்வமாகவே..” பார்த்தான் என்றால், மற்ற எல்லாரும் முகத்தை கெத்தாக வைத்து கொண்டு திமிராக அவளை பார்த்தனர்.

படை சூழ சந்தோஷமாக பேசி கொன்டே வந்த ஹர்ஷினி.. இவர்கள் கேங்கை பார்க்கவும் குறும்பாக சிரித்தவள், அவர்களிடம் விடை பெற்று கொண்டு இவர்களை நோக்கி வந்தாள்.

அவளின் குறும்பு சிரிப்பிலே கண்டிப்பாக எதோ வம்பிழுக்கவே வருகிறாள், என்று அனைவருமே நினைத்தனர், அவர்கள் நினைத்தது சரியே என்பது போல் அருகில் வந்தவுடன்,

ரொம்ப.. ரொம்ப.. தேங்க்ஸ் உங்க எல்லாருக்கும்.. என்று சிரிப்புடன் சொல்லவும், என்னடா இது..? நமக்கு எதுக்கு தேங்க்ஸ் சொல்லுது இந்த அம்மிணி.. கண்டிப்பா இதுல ஏதோ வில்லங்கம் தான் என்று புரிந்ததால் உஷாராக,

எதுக்கு தேங்க்ஸ்..? என்று கெத்து குறையாமல் கேட்டான் குமார்.

உங்களுடய “மேலான ராகிங்கால் தான்” {சொல்லும் போதே வேண்டுமென்றே இழுத்து நக்கலாக சொன்னாள்} எனக்கு ஒரே நாள்ல இத்தனை ப்ரண்ட்ஸ் கிடைச்சிருக்காங்க..

அந்த “உங்க மகத்தான சேவைக்கு தான்..” இந்த தேங்க்ஸ் என்று குறும்பாக சொல்லவும்,

டேய் மச்சி.. இந்த அம்மிணிக்கு இருக்குற லொள்ளை பாரேன், நம்மளை ரொம்ப டேமேஜ் பண்ணுது, இதுக்கு கண்டிப்பா நீ எதாவது பண்ணனும் பாத்துக்கோ… என்று செல்வம் வேண்டுகோளாக ஆகாஷிடம் முணுமுணுத்தான்.

அவளின் அடாவடியான குறும்பில் ஆகாஷிற்கு கோவம் வரவில்லையென்றாலும்.., தன் நண்பர்களுக்காக வேண்டி முகத்தை கோவமாக வைத்து கொண்டவன்,

உனக்கு இவ்வளவு ப்ரண்ட்ஸ் கிடைக்க.. நாங்க தானே ஹெல்ப் பண்ணிருக்கோம், அதனால “இன்னிக்கு எங்க எல்லாருக்கும் மதியம் லன்ச் நீ தான் வாங்கி கொடுக்கணும்” என்று சொல்லவும்,

அதிர்ச்சியான ஹர்ஷினி.., என்ன நான் எதுக்கு வாங்கி கொடுக்கணும்..?, அதெல்லாம் முடியாது,

நீ எதுக்கு வாங்கி கொடுக்கணுமா..? எங்க மேலான ராகிங்கால் தானே {அவளை போலவே இழுத்து சொன்னவன்} உனக்கு இவ்வளவு ப்ரண்ட்ஸ் கிடைச்சிருக்காங்க,

எங்களுடைய அந்த “மகத்தான சேவைக்கு.. பீஸ் தான் இந்த லன்ச்” என்று அதிகாரமாக சொல்லவும்,

அவனின் அதிகாரத்தில் கண்ணை சுருக்கி கோவமாக முறைத்தவளை, மனதுக்குள் கொஞ்சம் ரசிக்கவே செய்தான் ஜெய்.

ஆமா.. நீ தான் எங்களுக்கு வாங்கி கொடுக்கணும், நம்ம கான்டீன்ல இன்னிக்கு பிரியாணி வேற போட்டிருக்காங்க.. கிளம்பு அம்மிணி போலாம் என்று அனைவரும் உற்சாகமாக சொல்லவும்,

ஹர்ஷினி இந்த “ட்விஸ்ட்டை..” எதிர்பார்க்கவில்லை என்பதால் முதலில் கொஞ்சம் அதிர்ச்சியானவள்.., பின்பு உஷாராகிவிட்டாள்.

சீனியர்ஸ்.. உங்களுக்கு வாங்கி கொடுக்கணும்ன்னு தான் எனக்கும் ஆசை, ஆனால் என்கிட்டே அவ்வளவு காசு இல்ல பாருங்க.. என்று முகத்தை பாவமாக வைத்து கொண்டு சொன்னாள்.

அவளின் அப்பட்டமான நடிப்பில் கண்டான செல்வம், அதெல்லாம் “அக்கவுண்ட் வச்சுக்கலாம்”, நீ ரொம்ப வருத்தப்படாத அம்மிணி,

ஆமாம்.. அக்கவுண்ட் வச்சுக்கலாம், கிளம்பு அம்மிணி, பிரியாணி காலியாகிற போகுது.., கிளம்பு என்று அனைவரும் கிடைத்த சான்சை விடுவோமா என்று வம்படியாக அவளை அழைத்து செல்லவும் “என்ன செய்யலாம்..? என்று யோசித்து கொண்டே தான் சென்றாள்.

வா அம்மிணி.. முதல்ல போய் அக்கவுண்ட் ஓபன் பண்ணலாம்.., என்று ஹர்ஷினியை “கேன்டீன் ஹெட்டிடம்” அழைத்து சென்ற குமார் இவர்கிட்ட தான் ஓபன் பண்ணனும் எனவும்,

ஓகே சீனியர்.. நீங்க போங்க நான் பண்ணிக்கிறேன்..,

சரி பண்ணிட்டு சீக்கிரம் வா அம்மிணி என்றுவிட்டு குமார் சென்றிடவும், ஹெட்டிடம் பேசிய ஹர்ஷினி, அவர் மறுக்கவும் அவரையும் கையோடு அழைத்து கொண்டு குமாரிடம் வந்தவள்,

சீனியர்.. நீங்க ஒரு வார்த்தை சொல்லிடுங்க.. நான் பர்ஸ்ட் இயர் தானே என்ன நம்ப மாட்டேங்குறார் எனவும்,

குமார் பெரிய மனித தோரணையுடன் அக்கவுண்ட் போட்டுருங்க ஹெட்.. “நம்ம ஜூனியர் தான்” என்று ஹர்ஷினியை கெத்தாக பார்த்து கொண்டு சொன்னான்.

அப்பொழுது “நொடி நேரம் ஹர்ஷினியின் கண்களில் தோன்றிய குறும்பை” கண்டு கொண்ட ஆகாஷ், இவ அடங்கமாட்டா போலே.., ஏதோ பண்ணிருக்கா என்று யோசனையாக அவளை பார்த்தான்.

சாப்பிட்டு முடித்து எல்லாரும் ஹர்ஷினியை நக்கலாக பார்த்தவாறே வெளிய வரவும், முகத்தை சோகமாக வைத்து இருந்த ஹர்ஷினி சீனியர்ஸ் இனி மேல் நான் எந்த குறும்பும் பண்ணமாட்டேன், சோ நோ சண்டை..! ஓகே என்று பணிவுடன் கேட்கவும்,

ஓகே போ.. போ.. இனியாவது பெரியவங்ககிட்ட பாத்து நடந்துக்கோ என்று கெத்தாக செல்வம் சொல்லவும்,

மற்றவர்களும் ஆமா.. இனிமேல் எங்க கிட்ட எந்த சேட்டையும் வச்சுக்க கூடாது.., சீனியர்ஸ்ன்னா சும்மாவா..? என்று பெருமை வேற பேச செய்தனர்.

ஓகே.. சீனியர்.. நான் வரேன்.. என்று பணிவுடன் சொன்னவள் திரும்பி நடக்கும் போது சிரித்து கொன்டே சென்றாள். அவளின் முதுகு மெலிதாக குலுங்குவதிலே அவள் சிரிப்பதை புரிந்து கொண்ட ஜெய்,

என்ன பண்ணி வச்சிருக்காண்ணு தெரியலேயே..? என்று யோசித்தவாறே பார்க்கிங்கை நோக்கி சென்றவன், அங்கு ஹர்ஷினி பென்ஸ் காரில் ஏறி கொண்டிருப்பதை பார்த்து விட்டு,

ஓஹ் மேடம்.. ரொம்ப “பெரிய இடம்தான்” போல, ஆனா அவகிட்ட அந்த திமிர் தெரியலேயே.., பரவாயில்லயே.. ரொம்ப வித்தியாசமான பொண்ணு தான்..,

என்ன ஓவர் சேட்டை, குறும்பு தான், நல்லா தைரியமாவும் இருக்கா.., என்னமா டான்ஸை ரசிச்சு ஆடுறா..? டான்ஸ்ன்னா ரொம்ப பிடிக்கும் போல,

அவகிட்ட எந்த அசட்டுத்தனமும் தெரியல, ஆளும் நல்ல அழகு தான், ஆனா அவ டான்ஸ் தான் அதை விட அழகு..

ஜெய்.. டேய் ஜெய்.. என்ன யோசனை உனக்கு..? என்று ஆகாஷின் அம்மா விஜயா அவனுடைய தோளை தட்டவும் தான், தன் எண்ணத்திலிருந்து வெளியே வந்தவன் பார்த்தால்.., இது நம்ம வீடாச்சே.., எப்படி வந்தேன்..?

பார்கிங்க்ல.. பைக் கிட்ட போன வரைக்கும் தான் ஞாபகம் இருக்கு.. அப்பறம் ஹர்ஷினியை பாத்தேன்.. அப்பறமா..! அப்படின்னா அவளை பத்தி யோசிச்சிட்டே வீடு வரைக்கும் வந்திட்டோனா..?

என்ன செய்றேன்னே மறந்த அளவு அவளை பத்தி யோசிச்சிருக்கேன்.. அதுவும் பார்த்த அரை நாள்லேவா.. நானா இது..?

ஜெய்.. வாசல்ல நின்னுட்டு அப்படி என்ன தீவிரமா யோசிக்கிறே..? வீட்டுக்குள்ள வா முதல்ல.. என்று விஜயா அதட்டவும்,

பாத்த கொஞ்ச நேரத்திலே நம்மள சுத்தல்ல விட்டுட்டா, இனி அவளை பத்தி நினைக்கவே கூடாது, என்று முடிவெடுத்தவன் தலையை குலுக்கி கொண்டு உள்ளே சென்றான்.

ஜெய்.. சாப்பாடு எடுத்து வைக்கவா..? உனக்கு பிடிச்ச பிரியாணி தான் என்று விஜயா கேட்கும் நொடியே ஹர்ஷினியின் குறும்பு முகம் மனக்கண்ணுக்குள் மின்னி மறைந்தது...

இப்போ தானே அவளை நினைக்க கூடாதுன்னு முடிவெடுத்தேன்.., ரெண்டு நிமிஷம் கூட தாண்டலையே..! என்று தலையை பிடித்து கொண்டே அமர்ந்து விட்டான்.

அங்கு ஹர்ஷினியோ.. அவளின் குறும்புகளை வீட்டில் உள்ளவர்களிடமும். “சந்திரன்” சென்னையில் இருப்பதால் அவரிடமும்,சுபத்ராவிடமும் “போனில் தன் பர்ஸ்ட் டே காலேஜ் அனுபவத்தை” சொல்லி சிரித்து கொண்டிருந்தாள்,

மாலை ஆச்சார்யா.. வரவும், அவரிடம் “எப்பொழுதும் போல் தன் நாள் எப்படி சென்றது” என்பதை சொன்னாள்..,

ஹர்ஷி இன்னிக்கு செஞ்சதே போதும்.., இனிமேல் சீனியர்ஸ்கிட்ட எந்த குறும்பும் பண்ண கூடாது..?

அப்பறம் அதுவே உனக்கு பின்னாடி பிரச்சனை ஆகிற கூடாது.. சரியா..? என்று கொஞ்சம் கண்டிப்புடன் சொல்லவும், ஓகே தாத்தா.. இனி எந்த குறும்பும் பண்ணமாட்டேன்.. என்று விட்டாள்.

மறுநாள் காலேஜ்க்கு.. கொஞ்சம் ஆர்வத்துடனே சென்றான் ஜெய். “அவள் தன்னை ஏதோ ஒரு விதத்தில் டிஸ்டர்ப் செய்கிறாள்..!” என்று புரிந்தது,

அது அவளின் “குறும்பா, டான்ஸா இல்ல அவளிடம் இருக்கும் தைரியமா எது” என்று தெரியவில்லை. ஆனாலும் அந்த உணர்வு மிகவும் பிடித்து தான் இருந்தது.

போகிற வரை போகட்டும்.. பார்த்துக்கலாம்.. என்ற முடிவுக்கே வந்துவிட்டான். முதலில் நேராக கேன்டீன் சென்றவன், நேற்று ஹர்ஷினி என்ன செய்தாள்..? என்று கண்டுபிடித்து அதை சரி செய்தும் விட்டான்.

ஹர்ஷினி.. சொன்னது ஞாபகம் இருக்குல்ல, முதல்ல கேன்டீன் போ என்று ஆச்சார்யா சொல்லியே அனுப்பவும்..

காலேஜ் வந்தவுடன் கேன்டீன் சென்றவள், தான் செய்ய நினைத்தை.., ஜெய் செய்துவிட்டான்.. என்று தெரிந்து கொண்டு அவனின் கிளாஸிற்கே வந்து விட்டாள்.

என்னடா.. “தில்லானா.. அம்மிணி” நம்ம கிளாஸ்க்கு வருது.. என்று குமார் சொல்லவும், ஜெய் அவன் யாரை சொல்கிறான்..? என்று புரிந்தும் புரியாமலும் பார்த்தவன், அது ஹர்ஷினி தான் எனவும்,

மறுபடியும் “எதோ வம்பிழுக்கவே வந்திருக்கா..” என்று நினைத்தவன் வேகமாக வெளியே வந்து,

எதுக்கு இங்க வந்த..? என்று கொஞ்சம் அதட்டலாகவே கேட்டான்

என்ன இவரு..? நானும் நேத்திலுருந்து பாக்குறேன், ரொம்பத்தான் அதிகாரம் பன்றாரு.. என்று தன் விருப்பமின்மையை கண்களால் வெளிப்படுத்தவும்,

அதை சரியாக புரிந்து கொண்ட ஜெய்.. “நான் எப்பவும், எல்லார்கிட்டேயுமே இப்படித்தான் பேசுவேன், என்று சொல்லவும், {ஆனா உன்கிட்ட மட்டும் தான் ஏதோ "உரிமையும் தோணுது எனக்கு" என்று மனதுக்குள் நினைத்து கொண்டான்}”

என்னடா இது..? நாம நினைச்சதை எப்படி கரெக்டா கெஸ் பண்ணாரு..? என்று ஆச்சர்யமாக பார்க்கவும்,

எதுக்கு வந்தேன்னு கேட்டேன்..? அதுக்கு பதில் சொல்லாம.., என்னைய ஆராய்ச்சி பண்ணிட்டிருக்க.. என்று கொஞ்சம் குறும்பாக கேட்கவும், சிலிப்பிக்கொண்ட ஹர்ஷினி.. நான் உங்கள பாக்க தான் வந்தேன்..

என்ன பாக்கவா..? ஏன்...?

நீங்க தான கேன்டீன்ல காசு குடுத்தது..?

ஆமா.. நான் தான் கொடுத்தேன்,

எதுக்கு கொடுத்தீங்க..? என்று முறைப்பாக கேட்கவும்

எதுக்கு கொடுத்தேனா..? என்ன செஞ்சு வச்சிருக்க நீ..? “குமார் அக்கவுண்ட்ல..” எல்லாருக்கும் லன்ச் வாங்கி கொடுத்திருக்க..

நீ பண்ணது மட்டும் பசங்களுக்கு தெரிஞ்சது.. அவ்வளவுதான்..

எங்க தாத்தாவுமே தப்புதான் சொன்னாரு.. என்று கொஞ்சம் மெலிந்த குரலில் சொல்லவும்,

உனக்கு புரிஞ்சா சரி, இதோட உன் குறும்பு, சேட்டை எல்லாம் நிப்பாட்டிக்கோ...?
தேவையில்லாம அப்பறம் அதுவே உனக்கு பின்னாடி பிரச்சனை ஆகிரும்.. புரிஞ்சுதா..? என்று கொஞ்சம் உரிமை கலந்த குரலில் அதட்டினான்.


நேற்று “ஆச்சார்யா அவளின் மீது அக்கறை கொண்டு சொன்னதையே… இன்று ஆகாஷும் சொல்லவும்..” ஆச்சரியத்துடன் அவனை பார்த்தாள்.

சரி கிளம்பு, பசங்க எல்லாம் இங்க தான் பாக்குறாங்க,

காசு.. எவ்வளவு நான் கொடுத்துடுறேன், தாத்தா கண்டிப்பா கொடுக்க சொல்லிருக்கார்,

அவள் காசு தரேன்.., எனவும் ஏன்..? என்று தெரியாமல் கோவம் வந்தது ஆகாஷிற்கு. என்னது காசு தரியா எனக்கு..?

அவனின் கோவத்தை புரியாமல் பார்த்த ஹர்ஷினி, இல்ல “சீனியர்..” நீங்க எதுக்கு காசு..?

ஹர்ஷினி.. இனி அந்த காசை பத்தி என்கிட்டே எப்பவும் நீ பேசக்கூடாது..? இப்போ கிளம்பு.. என்று இறுக்கமான முகத்துடன் அழுத்தமாக சொல்லவும்,

ஏனோ அவனின் பேச்சை மீற தோன்றாமல், அவனை திரும்பி.. திரும்பி.. பார்த்து கொண்டே சென்றாள் ஹர்ஷினி.

......................................................

ஹாய் ப்ரண்ட்ஸ்,

என்னுள் சங்கீதமாய் நீ 13 போஸ்ட் பண்ணிட்டேன். உங்க கம்மெண்ட்ஸ்க்காக ஆவலாக வெய்டிங் சிஸ்டர்ஸ், thank you
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top