என்னுள் சங்கீதமாய் நீ 12

Advertisement

Nithi Kanna

Well-Known Member
என்னுள் சங்கீதமாய் நீ 12



“KSK காலேஜ் ஆப் இன்ஜினியரிங்”. கோயம்பத்தூரில் இருக்கும் மிகவும் பிரபலமான இன்ஜினியரிங் கல்லூரிகளில் இதுவும் ஒன்று,

ஸ்கூல் லைப் முடிஞ்சுதுடா சாமி, இனி லைப் புல்லா ஜாலிதான் என்ற கலர் கலர் கனவுடன் { உண்மையாவே கனவு தான்பா., நானும் இப்படித்தான் ஏமாந்தேன்....!} கல்லூரி வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கும் இளஞ்சிட்டுகள் நிறைந்த வண்ண மயமான உலகத்திற்குள்.,

மிகுந்த எதிர்பார்ப்புடன்.., முதல் நாள் காலேஜ்க்கு, ஆச்சார்யாவுடன் வந்து இறங்கிய ஹர்ஷினி.. “தாத்தா., காலேஜ் முடிஞ்சு நானே வீட்டுக்கு போயிடுறேன்., நீங்க வரவேண்டாம்,

இல்லை ஹர்ஷி., உன்னை பிக் அப் பண்ணிக்க, நான் வரேன்,

வேண்டாம் தாத்தா.., “பர்ஸ்ட் டே காலேஜ்..,” அதனால எப்போ முடியும்ன்னு தெரியல., சோ நானே போய்க்கிறேன்., நடக்குற தூரம் தானே.,

அது சரிப்பட்டு வராது, நான் வேணும்னா காரை மதியமே அனுப்பிடுறேன்., டிரைவர் இங்கேயே வெய்ட் பண்ணட்டும்.,

உனக்கு எப்போ காலேஜ் முடியுதோ..? அப்போ நீ அதுலே வந்துரு என்று முடிவுடன் ஆச்சார்யா சொல்லவும்

இதற்கு மேல் ஆச்சார்யாவிடம் பேச முடியாது., என்பதால் ஓகே.. தாத்தா என்றுவிட்டாள்.

ஓகே பை ஹர்ஷினி, ஆல் தி பெஸ்ட்.,

தேங்க்ஸ் தாத்தா., ஈவினிங் மீட் பண்ணலாம் பை., என்று விட்டு காலேஜ் உள்ளே நுழைந்த ஹர்ஷினி ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்தவாறே வந்து கொண்டிருக்கும் போது,

ஏனுங்க வெள்ளை சுடி அம்மணி.., என்று கூப்பிடும் சத்தம் கேட்கவும்.., நான் வைட் சுடி தானே போட்டுருக்கேன்., ஒருவேளை நம்மள தான் கூப்புடுறாங்களோ..? என்று சந்தேகத்துடன், திரும்பி அந்த மரத்தடி மேடையை பார்த்த ஹர்ஷினியின் கண்ணுக்கு முதலில் பளிச்சென்று தெரிந்தது அங்கு “தலைவனாக அமர்ந்து இருந்த ஜெய் ஆகாஷ் தான்”.

“முறுக்கு மீசையுடன், முன்னுச்சி முடி காற்றில் பறக்க, வாயில் சுவிங்கத்தை மென்று கொண்டே, ஒற்றை விரலால் தன் நோட்டை சுழற்றியவாறே அலட்சியமாக தன்னை பார்த்து கொண்டிருந்த ஜெய் ஆகாஷிடம்,

என்னயா கூப்பிட்டிங்க,,? என்று தன் “கண்களாலே…!” அவனை பார்த்து கேட்கவும், “அவள் கண்கள் பேசும்..!” வித்தையில் நோட்டை சுற்றி கொண்டிருந்த ஜெயின் கை விரல் தானாகவே நின்று விட்டது..,

தனது “ஆச்சி தேவியை..” போல் ஹர்ஷினியும் பரதத்தின் மீது ஈடுபாடும் , அர்ப்பணிப்பு கொண்டவள்..,

தனது “ஐந்தாவது வயதில்” இருந்தே தனது ஆச்சியிடம் பரதத்தை மிகுந்த ஆசையோடு கற்று கொள்ள ஆரம்பித்தவள், அவர் மறைந்த பிறகும் விடாது மேலும்., மேலும்.., கற்று கொண்டு இன்று வரை ஆடிக்கொண்டிருப்பவள்.,

அதனாலோ.. என்னவோ.. எப்பொழுதும் “அவளின் வாய் பேசுமுன்பே.., கண்கள் பேசிவிடும்”.

டான்ஸின் மீது ஈடுபாடு கொண்ட ஜெய்க்கு.. அவளின் “மை தீட்டிய கண்களில் தெரிந்த நாட்டிய பாவத்திலே..!” அவள் முறையாக பரதம் கற்றவள், என்று புரிந்து கொள்ள முடிந்தது.

அதுவரை அவளை யாரோ போல் அலட்சியத்துடன்..! பார்த்து கொண்டிருந்தவன், இப்பொழுது ஆச்சர்யத்துடன்..! பார்த்தான்.,

வெள்ளை நிறத்தில் அனார்கலி சுடி அணிந்து, மயக்கும் புன்னகையுடன் , வெள்ளை பூ தேவதையென அவர்களை பார்த்து கொண்டிருந்தவளை,

உங்களை தான்.., அம்மிணி கூப்புடுறோம்., இங்க வாங்க என்று ஜெய் ஆகாஷின் பக்கத்தில் அமர்ந்து இருந்த செல்வத்திடமிருந்து சத்தம் வரவும்..,

ஆச்சார்யா.. அவளுக்கு எப்போதும் போதிக்கும் “பாரதியின்…” நிமிர்ந்த நன்னடை..! நேர் கொண்ட பார்வையென.., எந்த விதமான பயமும் இல்லாமல் அவர்களை நோக்கி வந்தாள்,

என்னடா.., இந்த பொண்ணு “ராகிங்..,” பண்ண போறோம்ன்னு தெரிஞ்சும், இப்படி தைரியமா வரா.., என்று குமார் சொல்லவும், அங்கிருந்த இன்னொருவன் ஆமாடா., அதுவும் நாம அவளுக்கு ஏதோ “அவார்ட்.,” கொடுக்கறது போலே வரா பாரேன் என்றனர்.,

உங்க பேர் என்னங்க மேடம்..? என்று அருகில் வந்த அவளிடம் குமார் கெத்தாக கேட்கவும்

மலர்ந்த முகத்துடனே அவர்களை தைரியமாக எதிர்கொண்டவள் “ஹர்ஷினி...” என்றாள்.

அவளின் தைரியத்தில் காண்டான செல்வம்.., நாங்க எதுக்கு உங்களை கூப்பிட்டுருக்கோம் தெரியுமில்ல., என்று மிரட்டவும்

ஓஹ்.., தெரியுமே “ராகிங்..,” பண்ணதானே., என்று சாதாரணமாக சொல்லவும்,

தெரிஞ்சும் இவ்ளோ தைரியமா உங்களுக்கு., அங்க பாருங்க அந்த அம்மணி கிட்ட நாங்க பேர் மட்டும் தான் கேட்டோம்..? அதுக்கே பதில் சொல்லாம பயத்துல அழுதுட்டே நிக்கிறாங்க.., என்று பக்கத்திலிருந்த பெண்ணை கை காட்டவும்,

அழுது கொண்டிருந்த அந்த பெண்ணிடம் திரும்பிய ஹர்ஷினி.., சினேக பாவத்துடன்.. ஹாய்., நான் ஹர்ஷினி..! என்று தன் கையை நீட்டவும்

தன் அழுகையை கொஞ்சம் நிறுத்தி விட்டு ஆச்சரியமாக அவளை பார்த்த அந்த பெண், மிகுந்த தயக்கத்துடனும், பயத்துடனும் ஹர்ஷினியின் கையை பற்றியபடி “நான் ஜோதி..,” என்றாள்.,

நான் “IT பர்ஸ்ட் இயர்..” நீங்க..? எனவும் ஜோதி கொஞ்சம் சந்தோஷத்துடன் நானும் IT பர்ஸ்ட் இயர்.., தான் என்றாள்.,

என்னடா நடக்குது இங்க..? என்று அதிர்ச்சியுடன் ஒருவன் கேட்கவும், குமார் கோவமாக ஹலோ அம்மணி அங்க என்ன பேச்சு..? என்று அதட்டவும்

நீங்க தானே சொன்னீங்க… அவங்க பேரை கூட சொல்லாம அழுறாங்கன்னு., அதான் நான் “உங்களுக்கு ஹெல்ப்” பண்ணலாம்ன்னு, அவங்க பேர் மட்டுமில்ல., அவங்க எந்த டிபார்ட்மென்ட்ன்னு கூட சொல்ல வச்சிட்டேன் என்று குறும்பு சிரிப்புடன் சொல்லவும்,

IT தானே நீங்க.., நாங்களும் அதே டிபார்ட்மென்ட் பைனல் இயர் ஸ்டூடெண்ட்ஸ் தான்.., நாங்க தான் உங்க சீனியர்ஸ்..,

எங்ககிட்ட இந்த சேட்டை எல்லாம் வேண்டாம் அம்மிணி.., பாத்து நடந்துக்கோங்க.., என்று மிரட்டலாக மற்றொருவன் சொல்லவும்

ஹேய் சூப்பர்… அப்போ நீங்க தான் எங்க சீனியர்ஸா.., எங்களுக்கு எதாவது ஹெல்ப் தேவைப்பட்டா உங்ககிட்டே கேட்டுக்கலாம்.. என்ன ஜோதி..? என்று அவளையும் கூட்டு சேர்த்தாள்.,

ஐயோ நம்மள வேற இழுக்குறாளே.., இவங்க எல்லாம் ஏற்கனவே கோவமா பாக்குறாங்க.., இதுல இவ வேற இன்னும் டென்ஷன் பன்றாளே என்று மனதுக்குள் அலறலுடன் ஹர்ஷினியை கெஞ்சலாக பார்த்தாள் ஜோதி.,

டேய் இந்த அம்மிணி “நம்மள கலாய்க்குதுடா..” என்று இன்னொருவன் ஆத்திரமாக சொல்லவும்

நோ.. சீனியர்., அப்படி எல்லாம் இல்ல.., ஐ அம் சீரியஸ்.., என்ற ஹர்ஷினியின் முகம் சீரியசாக இருந்தாலும் கண்கள் குறும்பைத்தான் காட்டியது,

அவள் “கண்கள் பேசும் மொழியையே..” ஆச்சர்யத்துடன் படித்து கொண்டிருந்த ஜெய் ஆகாஷ்.., அவளின் கண்கள் வெளிப்படுத்திய நக்கல், தைரியம், குறும்பு என அனைத்தையும் கண்டுகொண்டவன்.,

சீனியர்ஸ்ன்னு கொஞ்சம் கூட பயமில்லாம.., வந்த முத நாளே எவ்ளோ தைரியமா வாயடிக்கிறா பாரு.., என்று கொஞ்சம் சுவாரசியமாகவே அவளை பார்த்தான்.

எல்லா பெண்களுக்கும் “கடவுள் கொடுத்த வரமான..! உள்ளுணர்வால்..” ஹர்ஷினியும்.., ஆகாஷின் பார்வையை உணர்ந்தே இருந்தாள்.,

அவனின் விடாத பார்வையில்.., மனதுக்குள் கொஞ்சம் படபடப்பாக இருந்தாலும் வெளியே தைரியமாகவே நின்றாள்.,

குமார் மெதுவாக ஜெயிடம்.. டேய்.., அந்த பொண்ணு நம்மளையே கலாய்க்குது, நீ அமைதியாவே பாத்துட்டு இருக்க.., என்று பல்லை கடித்து கொண்டு கேட்கவும், ஜெய் கொஞ்சம் சத்தமாகவே சிரித்து விட்டான்..

டேய்.., ஏன்டா நீயே சிரிச்சு இன்னும் நம்மள கேவலப்படுத்துற.., என்று குமார் கடுப்பாக கேட்டான் என்றால் ஹர்ஷினி, அவனின் சிரிப்பை ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.

என்னடா இது,,? நாம பண்றதுக்கு எல்லாரும் கோவமா இருந்தா.., இவர் மட்டும் சிரிக்கிறாரே என்ற ஆச்சரியத்துடன் கேள்வியாக அவனை பார்த்தாள்.

அப்போது பெல் அடிக்கும் சத்தம் கேட்கவும்.., “சீனியர்ஸ்.., நாங்க போகலாமா..? என்று ஹர்ஷினி கேட்கவும்., ஆகாஷ் சிரிப்புடனே “போ..” என்பது போல் கை ஆட்டினான.

அவனை குழப்பத்துடன் பார்த்தவாறே., ஜோதியும் இழுத்து கொண்டு சென்றாள் ஹர்ஷினி.

டேய்.., என்னடா ஆச்சு உனக்கு..? என்று குமாரும், மற்றவர்களும் கடுப்பாக கேட்கவும், ஆகாஷ் கிண்டலாக ஏன் உங்களுக்கு இன்னும் அசிங்கப்படணுமா..? அவ கண்டிப்பா அசரமாட்டா..,

அதுமட்டுமில்லாம ரூல்ஸ் தெரியுமில்ல நாம ராக் பண்ணதே தப்பு.., அவ மட்டும் கம்பிளைன் பண்ணா.., நமக்கு சஸ்பென்ஷன் தான்.,

அப்படி பாத்தா அந்த அம்மிணி தான் நம்மளை ராக் பண்ணிச்சு.., நாம தான் கம்பிளைன் பண்ணனும்.., கடுப்பாக மற்றொருவன் சொல்லவும்

டேய்., மெதுவா பேசுடா.., வெளிய தெரிஞ்சா நாம கஷ்ப்பட்டு மைண்டைன் பண்ற கெத்து எல்லாம் காலி..! என்று குமார் புலம்பவே செய்தான்.

சரி வாங்கடா போலாம்.., நாம தான் பர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட்ஸை வெல்கம் பண்ணனும் தெரியுமில்ல.., பெல் அடிச்சு ரொம்ப நேரம் ஆச்சு.., கிளம்புங்க என்று உத்தரவாக ஆகாஷ் சொல்லவும்,

என்னது..! அந்த வாயாடி அம்மிணிக்கு நாம வெல்கம் பண்ணனுமா., அதெல்லாம் முடியாது., என்று குமார் எரிச்சலாக சொல்லவும், மற்றவர்களும் ஆமா, நீ அந்த பொண்ணு எங்களை கலாய்ச்சதை ரசிச்சு தானே பாத்துட்டு இருந்த, வர முடியாது போடா.., என்று விட்டனர்.

இப்போ என்ன..? உங்களுக்கு அந்த பொண்ணை ராக் பண்ணனும்.., அவ்வளுதானே.., சரி வாங்க.., நானே இப்போ எல்லார் முன்னாடியும் அவளை ராக் பண்றேன்.., என்று ஜெய் ஆகாஷ் சொல்லவும்

ஹேய்.. சூப்பர் மச்சி, இப்போதான் “நீ எங்க தல..!” வா போலாம்.. இன்னிக்கு அந்த பொண்ணை அலற விட்றோம்.., என்ற கொண்டாட்டத்துடன் அனைவரும் ஆகாஷுடன் சென்றனர்., {போங்க.. போங்க.. ஹர்ஷினியை பத்தி இன்னும் சரியா தெரில உங்களுக்கு}

“ஹாய் ஜூனியர்ஸ்…” என்று அழைத்து கொண்டே செமினார் ஹாலுக்குள் நுழைந்த ஆகாஷின் கேங்கை பார்த்த ஹர்ஷினி.., முகத்தில் எந்தவிதமான பாவத்தையும் காட்டாமல் எல்லாரையும் போல் மரியாதையுடன் எழுந்து நின்றாள்.

பக்கத்தில் இருந்த ஜோதி “அய்யோ., இங்கேயும் வந்துட்டாங்க” என்று மெதுவாக பயத்துடன் புலம்பவும்,

ஷ் ஷ்.., சும்மா இரு பாத்துக்கலாம், என்று ஹர்ஷினி அசால்ட்டாக சொன்னதை அவளையே பார்த்து கொண்டிருந்த ஆகாஷின் கேங் உணர்ந்து பல்லை கடித்து கொண்டனர்,

நான்.., தான் நம்ம “டிபார்ட்மென்ட் ரெப்ரெசென்ட் ஜெய் ஆகாஷ்” என்று ஆரம்பித்தவன்., காலேஜ் பற்றி, ரூல்ஸ் பற்றி பொதுவாக இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்து விட்டு..,

எதாவது “ஹெல்ப் வேண்டுமென்றால்..” தன்னை கேட்கலாம் என்று முடித்து கொண்டவன்., எல்லோரையும் முன்னாள் வந்து “செல்ப் இன்ட்ரோ” கொடுக்க சொன்னான்.,

ஒவ்வொருவராக சென்று தன்னை அறிமுக படுத்தும் போது அமைதியாக இருந்த ஆகாஷ்., ஹர்ஷினியின் முறை வரவும் குறுஞ்சிரிப்புடன் அவளை பார்த்தான்,

அவனின் சிரிப்பை பார்த்தாலும் கண்டுகொள்ளாமல் “நான் இப்படித்தான்..” என்று தைரியமாக முன்னாள் வந்து தன்னை பற்றி சொல்லி முடிக்கவும்,

ஹர்ஷினி.., நீங்க சூப்பரா “டான்ஸ் ஆடுவீங்கன்னு” கேள்விப்பட்டோம், எங்களுக்காக இப்போ ரெண்டு ஸ்டெப், நக்கல் குரலில் ஆகாஷ் கேட்கவும்,

அவனை கேள்வியாக..? ஆச்சர்யத்துடன் பார்த்த ஹர்ஷினிக்கு, அவன் குரலில் நக்கல் இருந்தாலும், கண்களில் அவளின் டான்ஸை பார்க்கும் ஆர்வம் தான் தெரிந்தது.,

அதனை புரிந்து கொண்ட ஹர்ஷினி ஏன் இப்படி..? என்று ஒரு நொடி அவனை யோசனையாக பார்த்து விட்டு,

எந்தவிதமான பந்தாவும் இல்லாமல் why not..? என்றவள்., மியூஸிக் என்று கேட்கவும்,

அச்சச்சோ.., “ மியூஸிக் இல்லையே” என்று கவலை படுவது போல், அவளை பார்த்து கிண்டலாக கையை விரித்தான் குமார்..,

அவர்களின் எண்ணத்தை நொடியில் புரிந்து கொண்டவள்.. என்கிட்டேயேவா…! என்று “சவால்..” பார்வை பார்த்து விட்டு,

நீங்க கவலை படாதீங்க சீனியர்.., நானே பாடிக்கிறேன், என்றவள் ஒரு நொடியில் தன்னை தயார்படுத்தி கொண்டு குரலை சீராக்கி பாடி கொன்டே ஆட ஆரம்பித்துவிட்டாள்.

உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே…

விதை இல்லாமல் வேர் இல்லையே….

கிருஷ்ணா…

நிதம் காண்கின்ற வாள்கூட நிஜமில்லை…

இதம் சேர்கின்றும் கானா கூட சுகம் இல்ல…

நீ இல்லாமல் நான் இல்லையே..

என்று பாடிக்கொண்டே அபிநயம் படித்தவளின் அழகில் ஆகாஷின் கேங் உட்பட.. அனைவருமே மெய்மறந்து விட்டனர்..,

அதுவும் ஜெய் அவள் கண்கள் வெளிப்படுத்திய பாவத்தில்.., ஆடும் நளினத்தில், டான்ஸை ரசித்து ஆடிய பாங்கில் உறைந்தே நின்றுவிட்டான்!



.............................................................

ஹாய் ப்ரண்ட்ஸ்,

என்னுள் சங்கீதமாய் நீ 12 போஸ்ட் பண்ணிட்டேன். படிச்சுட்டு உங்க கருத்துக்களை ஷேர் பண்ணுங்க பிரென்ட்ஸ்.. thank you
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top