என்னில் நிறைந்தவளே - 6

Advertisement

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
என்னில் – 6

தேவி அலுவலகத்தில் அன்றைக்கு இருக்கும் மீட்டிங்கிற்கு தயாராகி கொண்டிருந்தாள் அது மிகவும் முக்கியமான மீட்டிங் இதை சரியாக முடித்தால் அவளுடைய கம்பனி இன்னும் ஒரு அடி முன்னே சென்றுவிடும்


அனிதாவை அழைத்து இங்கு அனைத்தையும் பார்த்து கொள்ளுமாறு கூறிவிட்டு கிளம்பி சென்றாள்.

தருண் தனது அன்னையின் சொல்லுக்கு கட்டுபட்டு வானதிதேவியை மணந்து கொள்வதாக ஒத்துகொண்டான்.


பூங்கோதை தருணிடம் தான் சென்று பென்கேட்பது சரிவராது என்றும் அப்படி செய்தால் உனது அத்தைகள் சண்டைக்கு வருவார்கள் என்று கூறினார்

தருண் “அதுக்கு என்னை என்ன செய்ய சொல்றிங்க மா, நீங்க கேட்ட மாதிரி அந்த பெண்ணையே திருமணம் செய்ய ஒத்துக்கொண்டேன் வேற என்ன செய்ய வேண்டும் என்றான்” அவனின் குரலில் அவ்வளவு சளிப்பு இருந்தது

பூங்கோதை “நீ என்ன செய்வியோ எனக்கு தெரியாது தருண் எனக்கு அவள்தான் இந்த விட்டுக்கு மூத்த மருமகளாக வரவேண்டும்”
தனது அன்னை கூறியவற்றை நினைத்து கொண்டே தருண் தனது அறையில் அமர்ந்து வானதிதேவி பேட்டி அளித்த வீடியோவை பார்த்து கொண்டிருந்தான் அந்த பேட்டியில் அவள் தனது அடிப்படை வளர்ச்சி பற்றியும் அதற்கு தனது தோழி அனிதா செய்த உதவிகளையும் கூறிகொண்டிருந்தாள்

பெண்களுக்கு கன்ஸ்ட்ரக்ஷன் பீல்டில் உள்ள பிரச்சனைகளை பற்றி கூறினாள்

அப்போது பேட்டி எடுக்கும் பெண் மேடம் இந்த துறையை நீங்க தேர்ந்தெடுக்க காரணம் என்றால்

தேவி “எனக்கு விதவிதமான கட்டிடங்களை கட்ட பிடிக்கும் அதனால் சிவில் இன்ஜினியரிங் படித்தேன்”

பேட்டி எடுக்கும் பெண் “ பெண்கள் இந்த துறையில் ரொம்ப கம்மி அதை பற்றி என்ன நினைக்கிறிங்க”

தேவி “எல்லா துறையிலையும் பெண்கள் இப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமா மேல வராங்க அதே மாதிரி நானும் எனக்கு பிடித்த துறையை தேர்ந்தேடுத்து இருக்கேன் வரும் காலங்களில் இது அதிகமாகும் என்பது எனது எண்ணம்”

சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு என்ன சொல்ல நினைக்கின்றிங்க

பெண்கள் கண்டிப்பா மேல வரணும் நிறைய பெண்கள் சாதிக்கணும் நினைக்கறாங்க ஆனா அவங்களுக்கு குடும்பம் சப்போர்ட் பண்றது இல்லை அப்படி மட்டும் அவங்களுக்கு குடும்பம் துணை நின்னா இன்னும் நிறைய பெண்கள் தாங்கள் நினைத்த துறையில் வெற்றி பெறுவார்கள். இப்பவும் சில பெண்கள் சாதனை செய்துகொண்டுதான் இருக்காங்க அது ரொம்ப கம்மி

அப்ப பெண்கள் வெளியில் வரவில்லை வீட்டிலே முடங்கி இருக்காங்க என்று சொல்ல வரிங்களா

தேவி “ அப்படி இல்லை பெண்கள் வேலைக்கு செல்வதை அனுமதிக்கிற பெற்றோர்கள் அதுவே அவங்க தன்னோட சொந்த முயற்சியால ஒரு கடையோ இல்லை சொந்தமா தொழில் தொடங்கணும் விருப்பப்படும்போது நிறைய குடும்பங்களில் அதை ஏற்று கொள்வதில்லை அந்த மாதிரி நேரங்களில் துணை நிற்காட்டியும் பரவாயில்லை ஆனால் நீ அடுத்த வீட்டுக்கு போறபொண்ணு உனக்கு எதுக்கு இந்த மாதிரி எண்ணம் சொல்லியே அவர்களை எதுவும் செய்ய விடுகின்றது இல்லை இதை நீங்க ஏற்றுகொள்கின்றிங்களா என்று பேட்டி எடுக்கும் பெண்ணை பார்த்து கேட்டாள்.


நான் ஒத்து கொள்கிறேன் மேடம் அதோட எங்களுடைய வாழ்த்துகள் மேடம் உங்க கம்பனி best கம்பனி விருது பெற்றதற்கு என்று கூறி பேட்டியை நிறைவு செய்தனர்

தருண் பேட்டியை பார்த்து முடித்ததும் அவன் மனதில் ஒன்றே ஒன்றுதான் தோன்றியது தேவியை பற்றி அது என்ன என்றால் அவள் மிகவும் தைரியமானவள் எதற்கும் அசைந்து கொடுக்காதவள் என்று பின் தனது நண்பன் சரணை தொடர்பு கொண்டான் (அவன் ஒரு தனியார் டிடைக்டிவ் நிறுவனத்தில் வேலை செய்பவன்)

சரண் “என்ன தருண் அதிசயமா போன் பண்ணி இருக்க இப்ப யாரை பற்றி தெரியபடுத்தனும் என்றான்”

தருண் தனது நிறுவனத்தில் வேலைக்கு சேருபவர்களில் முக்கிய பொறுப்பு வகிப்பவர்களை பற்றி விசாரித்து தெரிந்து கொண்டபின் தான் வேலை கொடுப்பான் அதை சரண்தான் விசாரித்து தகவல் கொடுப்பான் எனவே அப்படி தருணிடம் கேட்டான்

தருண் “நீ சொன்னது சரிதான் டா எனக்கு ஒருவரை பற்றி முழு விவரம் வேண்டும்”

சரண் “யார் டா அவங்க”

தருண் “V.D கன்ஸ்ட்ரக்ஷன் M.D வானதிதேவி”

சரண் “எதுக்கு தருண் அவங்களை பற்றி கேக்கின்றாய்”

தருண் “முதலில் அவங்களை பற்றி முழு விவரமும் கொடு பிறகு சொல்கிறேன்”

சரண் “சரி டா எனக்கு ஒரு வாரம் டைம் கொடு எல்லா விவரமும் சேகரித்து கொடுக்கிறேன்”

தருண் “சரி பை டா”

அவனிடம் பேசி முடித்து விட்டு அலுவலகத்தில் இருந்து வீடு நோக்கி சென்றான்”

அவன் உள் நுழையும் போதே உணர்ந்தான் ஏதோ சரியில்லை என்று அவன் நினைத்த மாதிரியே பிரச்சனைதான் அவன் அத்தை பெண்களினால் அர்ச்சனா,சுமித்ரா,வான்மதி முவரும் ஒரு வாரம் டூர் முடித்து திரும்பி வந்திருந்தனர். அமித்தின் திருமண செய்தி கேள்விப்பட்டு தனது அத்தையிடம் வந்து கேட்டனர்

அத்தை நீங்க செய்தது சரியா நாங்க இருக்கும்பொது அமித் அத்தான் எப்படி இன்னொருத்தியை மணந்து கொண்டார் நீங்களும் தருண் அத்தானும் அதுக்கு சப்போர்ட்

பூங்கோதை “நான்தான் முதலிலே சொன்னனே மா தருணும்,அமித்தும் யாரை கட்டிக்கரான்களோ அவங்கதான் என்னோட மருமகள்கள் என்று”

அவர் அவ்வாறு சொன்னதும் முவரும் அவரிடம் மேலும் சண்டையிட்டு தனது அன்னைமார்களிடம் குறை வாசித்தனர் தருண் வந்ததும் அவன் எதிரில் முவரும் வந்து நின்றனர் அவர்கள் பின்னே அவன் அத்தைகளும் வந்தனர்

தருண் என்ன என்று பார்க்கும் போதே வான்மதி ஆரம்பித்தாள் என்ன அத்தான் இது அமித் அத்தான் இப்படி பண்ணி இருக்கார் நிங்களும் ஏதும் சொல்லாமல் இருக்குறிங்க

தருண் “அது அவனுடைய வாழ்க்கை யாரை திருமணம் செய்யணும் விருப்பம் இருக்கோ அவங்களை திருமணம் செய்து கொண்டான் இதில் நான் சொல்ல என்ன இருக்கு”

அர்ச்சனா “அப்போ நீங்க யாரை கல்யாணம் செய்துகொள்ள போறிங்க”

தருண் “கண்டிப்பா உங்க மூன்று பேரில் யாரையும் திருமணம் செய்ய மாட்டேன் பின் தனது அத்தைகளை நோக்கி நீங்க மாப்பிள்ளை பார்க்கிறிங்களா இல்லை என்னை பார்க்க சொன்னாலும் சரி பார்த்து தரேன் என்று விட்டு சென்றான்”

சுமித்ரா தனது அன்னையிடம் என்ன மா அத்தான் இப்படி சொல்லிட்டு போறாரு ஆமா டி உங்க அத்தானை கைக்குள்ள போட்டு காரியம் சாதிக்க முடியல என்கிட்டே வந்து புலம்பு என்று விட்டு சென்றார்.


நிறைவாள்..................

hai friends next update கொடுத்து விட்டேன் படித்து எப்படி இருக்கு என்று ஒரு ரெண்டு வரத்தை சொல்லுங்க paa அப்பொழுதுதான் நான் எப்படி எழுத்துகின்றேன் என எனக்கு தெரியும் so please don't miss to post a comment friends
 

Saroja

Well-Known Member
வசதி இல்லை என்றால்
இந்த முறை பையன் பற்றி
யோசிப்பாங்களா
தேவியின் தன்னம்பிக்கையும் தைரியம் அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top