என்னில் நிறைந்தவளே - 4

Advertisement

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
என்னில் – 4

V.D கன்ஸ்ட்ரக்ஷன் என்னும் பெயரை தாக்கிய அந்த நான்கு மாடி கட்டிடத்தில் வேலை செய்பவர்கள் மிகவும் சுறுசுறுப்புடன் தங்களது வேலையை செய்துகொண்டிருந்தனர்

அந்த கட்டிடத்தின் முன்பு ஒரு BMW கார் வந்து நின்றது அதிலிருந்து வானதிதேவி இறங்கி வேக நடையுடன் தனது அலுவலக அறைக்குள் நுழைந்தாள்.

அவள் உள்ளே வரும்போது அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர் அதற்கு ஒற்றை தலை அசைப்பை கொடுத்துவிட்டு சென்றாள்.

அவள் வருவதற்காகவே காத்துகொண்டிருத்த அனிதா அவள் வந்தவுடன் தேவி அந்த கவர்மென்ட் டென்டருக்கு கொட்டேஷன் தயாராகிவிட்டது நீ பார்த்துவிட்டாய் என்றால் அனுப்பிடலாம் என்றாள்.

தேவி “அது இருக்கட்டும் அந்த ஹாஸ்பிட்டல் கட்டுகின்ற சைட்டில் என்ன பிரச்சனை”

அனிதா “அங்க பிரச்சனைன என்று ஒரு மணி நேரம் முன்புதான் செய்தி வந்தது அதுக்குள் உனக்கு எப்படி தெரியும்”

சின்ன புன்னகையை பதிலாக தேவி கொடுத்தாள்

அனிதா “கேட்டா சிரி சொல்லிவிடாதே”

தேவி “பிரச்சனை என்ன ஆச்சு எல்லாம் சுமுகமா முடித்ததா இல்லையா”

அனிதா “அது எல்லாம் இன்ஜினியர் ராம் முடித்து விட்டார்”

தேவி “என்னோட PA ராகவி ஒரு மாதத்தில் ரிலீவ் ஆன்றதாக நோட்டிஸ் குடுத்திருக்காங்க அதனால் அடுத்து யாரு அந்த போஸ்ட்க்கு சரியா இருப்பாங்க பாரு அனிதா”

இண்டர்வியூ வைத்து எடுத்துகொள்ளலாம் தேவி என்றால் அனிதா

தேவி “சரி”

அனிதா “இன்னைக்கு xxx டிவிலிருந்து உன்னை பேட்டி எடுக்க வராங்க நினைவிருக்கா”

தேவி “இருக்கு மாலை 6 மணிக்கு வரதா சொன்னாங்க நீயும் கூட இரேன்”

அனிதா “இன்னிக்கு மாலை ஏதோ சொந்தகாரங்க வீட்டு விழாக்கு போகணும் என் மாமியார் சொன்னாங்க. நான் மட்டும் போகாம உன்னுடன் இருத்தேன் அவ்வளவுதான் சாமி ஆடிடும்”

தேவி “சரி விடு, அந்த மாலதி அட்வடைசிங் பில்டிங் பிளான் தயாராகி விட்டதா”

அனிதா “அது என்னோட டேபிள்ள இருக்கு பார்த்துவிட்டு ராகவி கிட்ட கொடுத்து அனுப்புகிறேன்”

தேவி “நீ போகும்போது ராகவிய வர சொல்லு”


ராகவி வந்தவுடன் அந்த கவர்மென்ட் புராஜக்ட் கொட்டேஷன் காப்பி எடுத்து என்னோட டேபிள்ள ஒன்னும் அனிதாக்கு ஒன்னும் கொடுத்திடுங்க. அதன்பின் இஞ்சினியர் ராம் வந்தவுடன் என்னை வந்து பார்க்க சொல்லு ராகவி வரும்போது பிரச்சனை பற்றிய முழுவிவரமும் ரிப்போர்ட் ஆகா கொண்டுவரசொல் என்று அவளுக்கு உத்தரவுகளை பிறபித்துவிட்டு தனது வேளைகளில் ஆழ்தாள்

:):):):)

அமித் மனதில் போச்சு ரொம்ப கோவமாக இருக்கான் எப்படி பேசுவது என யோசித்து கொண்டிருந்தான். பேச வாய் திறக்கும் போதே முறைக்கிறான் அதற்குள் பூங்கோதை வருவதை பார்த்து அப்பாடா அம்மா வரங்க எப்படியும் நம்மை காப்பத்திடுவாங்க.

ஏனெனில் இவன் செய்யும் சேட்டைகளில் தருணிடம் இருந்து அவனை காக்கும் ஒரே ஆள் அவனின் அம்மா

பூங்கோதை மகனின் அறைக்கு வந்தவுடன் அமித்தை பார்த்து எதுக்கு டா இப்படி பண்ணின உனக்கு முன்னாடி தருண் இருக்கான் தான அதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்

அமித் “போச்சு அம்மா சப்போர்ட் செய்வாங்க என்று பார்த்தால் இப்படி கவுத்திட்டாங்களே என நினைத்து மா (அம்மா) நான் சொல்ல வருவதை முதலில் கேளுங்கள் அதுக்கு அப்பறம் திட்டுங்கள்”

பூங்கோதை “என்ன டா சொல்ல போற சொல்லு கேக்கிறேன்”

அமித் “மா நான் முதலிலே உனக்கும் அண்ணாகிட்டையும் சொல்லி பொண்ணு கேட்டு போகலாம் என்று இருந்தேன் இந்த வீட்டில் மூன்று ராச்சசிங்க பெத்த மூனு பேய்க இருக்கில்ல அதுங்க தொல்லை தாங்க முடியலை. எங்க போனாலும் பின்னாடியே வருதுங்க அதுவும் இல்லாமல் சரண்யா வீட்டில் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.

என்ன செய்வது என்றே தெரிய வில்லை அதனால் ரிஜிஸ்டர் ஆபீஸ்ல கல்யாணம் பண்ணி கூட்டிகிட்டு வந்துவிட்டேன்.

பூக்கோதை “டே நீ சொல்வதை பார்த்தால் அந்த பொண்ணு வீட்டுக்கும் தெரியாது போல”

அமித் “ஆமா மா இவளுடைய தோழி கல்யாணத்திற்கு சென்று வருவதாக சொல்லிட்டு வந்துவிட்டாள்”

பூக்கோதை “தருண் இவன் என்ன சொல்கின்றான் என கேட்டாயா, ஏன்டா இப்படி செய்து வைத்திருக்க”

தருண் “அம்மா நடந்ததை பத்தி பேசி ஒன்னும் ஆகபோறது இல்லை முதலில் அந்த பொண்ணு வீட்டில் பேசுங்க அப்புறம் ரிசப்ஷன் வைத்து எல்லாருக்கும் தெரிய படுத்திடலாம்”

பூக்கோதை “முதலில் உங்க அத்தைகளை சமாதான படுத்தனும்”

தருண் “மா நாம அவங்ககிட்ட சொல்லி இருக்கிறோமா அவங்க பெண்ணை கல்யாணம் செய்துகொள்வதாக, இல்லைதானே அப்புறம் எதுக்கு அவங்களை சமாதான படுத்தவேண்டும்”

அமித் “விடு மா கோவபட்டு வீட்டை விட்டு கிளம்பினா கூட நாம நிம்மதியா இருக்கலாம்.. அதுவும் இல்லாமல் அது எல்லாம் பொண்ணுங்களா பேய்க எப்ப பாரு மேல வந்து விழறது எங்க போனாலும் கூடவே ஒட்டிகிறது.

இந்த அத்தை பொண்ண கல்யாணம் பண்ணினா அந்த இரண்டு அத்தைகள் சண்டைக்கு வரும் இது எல்லாம் ஆகின்ற காரியமா சொல்லுமா பேசாம அண்ணனுக்கு முதலில் நல்ல பொண்ணா பாருங்க மா இரண்டு பேருக்கும் ஒன்றாக வரவேற்பு வைத்து கொள்ளலாம்.”

பூக்கோதை “நீ சொல்லறதும் சரிதான் அமித். தருண் நீ சொல்லுபா உனக்கு பொண்ணு எப்படி இருக்கணும் நான் அதே மாதிரியே பார்த்து உனக்கு கல்யாணம் செய்து வைக்கிறேன்”

அமித் “ஆமா னா(அண்ணா) சொல்லு அண்ணி எப்படி இருக்கணும்”

தருண் “வாயை மூடு டா எப்ப பாரு ஏதாவது செய்து பிரச்சினை கொண்டுவருவது அதன்பின் அம்மாவை சப்போட்டிற்கு இழுப்பது. போ போய் முதலில் அந்த பொண்ணை பாரு அத்தைங்க அந்த பொண்ணுகிட்ட எதாவது பேசிட போறாங்க.

மா முதலில் இந்த பிரச்சனைய முடிப்போம் மற்றவை எல்லாம் அதன் பிறகு பார்த்துகொள்ளலாம்”


நிறைவாள்...................

hai friends படித்துவிட்டு எப்படி இருக்கு என்று சொல்லிவிட்டு போங்க and நிறைய friends பெரிய update ஆ கொடுக்க சொல்லி கேட்டு இருந்திங்க எனக்கு தமிழ் டைப் செய்வது முதல் முறை so time நிறைய எடுக்கிறது friends முடிந்த அளவுக்கு பெரியதாக கொடுக்க முயற்சிகிறேன் friends.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top