என்னில் நிறைந்தவளே - 29

Advertisement

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
என்னில் – 29

தேவி சொல்லி முடிக்கவும் தருணின் கரம் சுரேசை பதம் பார்த்திருந்தது தருண் கொடுத்த அடியில் சுரேஷ் கீழே விழுந்தான் “உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என்னோட வானதியிடம் தவறா நடக்க முயற்சி செய்திருப்ப” என அவனை அடித்து கொண்டே கேட்டான்

தருணின் அடி தங்காமல் சுரேஷ் அவனிடம் கெஞ்ச நிலா “எதற்கு என்னுடைய புருஷனை அடிகிறிங்க அவ சொன்ன அதுவெல்லாம் உண்மை ஆகிடுமா என் புருஷனை பற்றி எனக்கு தெரியும் நீங்க ஒன்றும் சொல்ல வேண்டாம்

நிலா அவ்வாறு சொல்லவும் தேவி விஸ்வநாதனை பார்த்து “இப்பவும் உங்களுக்கு பெரியமகள் வாழ்க்கை பெரிதாக போய்விட்டது இல்ல இதற்கு நீங்க என்னை பெற்றுகொல்லாமலே இருந்திருக்கலாம்

தருண் “என்ன பேசற வானதி இவங்க சொல்லாட்டி போறாங்க மா நான் எப்பொழுதும் உன்னுடன் இருப்பேன் வா மா போலாம்”

தருணின் கரத்தை அவர்களின் முன்பே பற்றி கர்வத்துடன் அவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து வெளியே வந்தாள் அவர்களின் பின்னே அனிதாவும் வந்துவிட்டாள்

மூவரும் அருகில் உள்ள பார்க்கை அடைந்தனர் தருண் “அனிதா நான் வானதியை அழைத்து கொண்டு ஊருக்கு செல்கிறேன் இன்னும் ஒரு வாரத்திற்கு கம்பனியை நீங்க பார்த்துகொள்ளுங்கள் பின் என்ன செய்வது என முடிவெடுக்கலாம்”

அனிதா “அது பிரச்சனை இல்லை தருண் நான் பார்த்து கொள்கிறேன் எதில் செல்கிறிர்கள் டிக்கெட் அதாவது புக் செய்திருகின்றிற்களா”

இல்லை அனிதா வானதியோட காரிலே போறோம் என்னுடைய பைக்கை ரமேஷ்க்கு போன் செய்து எடுத்து போக சொல்ல வேண்டும் என்று ரமேசிற்கு போன் செய்து இருக்கும் இடத்தை கூறி வர சொன்னான்

அனிதா “எனக்கு ஒரு டவுட் தேவி கேக்கலாமா”

தேவி “என்ன”

அனிதா “அவர்களை வரசொல்லி அப்படி பேசி அனுப்பிட்ட பின் எதற்கு இந்த அலங்காரம்”

தேவி “மாமியார் வீடிற்கு செல்லும் போது நல்லா போகணும் தானே அதற்கு இந்த அலங்காரம்”

அனிதா “தருண் தாலி கட்டுவாருனு உனக்கு முன்னாடியே தெரியுமா”

தாலி கட்டுவாரு என எதிர்பார்க்கவில்லை ஆனா இன்றே அவங்க வீட்டிற்கு கூட்டி செல்வார் என்று எதிர்பார்த்தேன்

அப்ப நான் தான் எதுவும் தெரியாம இருந்திருக்கேனா. இவர்கள் இருவரும் பேசிகொண்டிருக்க தருண் தனது அன்னையை அழைத்து வானதியுடன் வருவதாக சொல்லி போனை வைக்க ரமேஷ் வந்து சேர்ந்தான். வந்தவன் தேவியை கண்டதும் அவளுக்கும் அனிதாவிற்கும் வணக்கத்தை தெரிவிக்க

அனிதா “இனி நீங்க இன்னொருத்தருக்கும் இதே மரியாதையை தர வேண்டி இருக்கும் ரமேஷ்”

ரமேஷ் “யாருக்கு மேம்”

தருணிற்கு தான், நம்ம தருணிற்கு அவருக்கும் தேவிக்கும் திருமணம் நடந்துவிட்டது

அதை கேட்ட ரமேஷ் அதிர்ச்சியடைந்து தருணை பார்க்க அவனோ “ஏன்டா இப்படி முழிக்கிற அனிதா சொல்வது உண்மை” என்றான்

உடனே சுதாரித்த ரமேஷ் “வாழ்த்துகள் மேம் அண்ட் சார்”

தருண் “டே என்னை எப்பொழுதும் போல தருண் என்றே கூப்பிடு நீ எனக்கு கிடைத்த உண்மையான தோழன் உன்னுடைய நட்பை இழக்க நான் தயாராக இல்லை”

ரமேஷ் “தேங்க்ஸ் டா” என கூறி தருணை கட்டிகொண்டன்

தருண் “சரி போதும் டா நீ பைக்கை எடுத்து கொண்டு போ நான் வானதியை அழைத்துக்கொண்டு ஊருக்கு செல்கிறேன் அப்புறம் அனிதா கூட உதவியா இருந்து கம்பனியை பார்த்துகொள்”

ரமேஷ் “நான் பார்த்து கொள்கிறேன் தருண் நீ இதை பற்றி நினைக்காமல் மேமை பார்த்துகோ”

தருணும்,தேவியும் அவளுடைய காரில் கோயம்புத்தூர் நோக்கி பயணத்தை தொடந்தனர்.இவர்கள் பயணத்தை தொடர அங்கே தருணின் வீட்டில் ஒரு மாதத்திற்கு முன்பு

பூங்கோதை “அமித்,அமித் கூப்பிட்டு கொண்டே அவனுடைய அறையில் நுழைந்தார் அவரின் இரண்டாவது மருமகள் சரண்யா அங்கு இருக்கவும் அமித் எங்க மா”

சரண்யா “அவர் குளிக்கிறார் அத்தை”

சரி மா அவன் வந்ததும் என்னை வந்து பார்க்க சொல்லு

சரி அத்தை

அமர் அம்மாவின் அறையில் நுழைந்து அம்மா கூப்பிடிங்களா

பூங்கோதை “ஆமா அமர் நான் சொன்னது என்னவானது உங்க அத்தைகளிடம் அப்புறம் அவங்க பெண்களிடமும் போட்டவை கட்டுனியா பிடித்திருக்காமா”

அமர் “மாம் நான் ஒரு வாரம் முன்பே காட்டிவிட்டேன் நீங்க கடைசி வான்மதி மட்டும் அப்புறம் பார்க்கலாம் என சொல்லிவிட்டிங்க அதனால் மற்ற இரண்டு அத்தைக்க கிட்ட கொடுத்திருக்கேன் அவங்கள் எந்த வித பதிலும் சொல்லவில்லை”

எல்லாரையும் ஹால்லிற்கு வரசொல்லு அமர் நான் அவர்களிடம் கேட்கிறேன்

அனைவரும் வந்திருக்க பூங்கோதை “அண்ணி நீங்க இரண்டு பேரும் என்ன முடிவு எடுத்திருகிங்க அர்ச்சனா,சுமித்ரா கல்யாணத்தை பற்றி அமித் கொடுத்த போட்டோவை பார்த்திங்களா உங்களுக்கு ஓகே வா மாப்பிள்ளை வீட்டாரை வரசொல்லலாமா”

இருவரும் எந்த வித பதிலையும் அளிக்காமல் இருக்க “அண்ணி உங்க கோவம் எனக்கு புரியுது என்ன செய்ய நமது பிள்ளைகளின் சந்தோசம் தானே முக்கியம் அவர்கள் வேண்டாம் என சொல்லும் போது நான் என்ன செய்ய”

அர்ச்சனா “நீங்க சொன்ன தருண் அத்தான் கேட்பார் அத்தை அவரிடம் சொல்லாம் தானே எங்களில் ஒருவரை மணக்க சொல்லி”

பூங்கோதை “நீ கேட்கிறது புரியுது மா இனி நான் சொன்னாலும் தருண் கேட்க மாட்டன் அவன் ஒரு பெண்ணை விரும்பறானாம் அவளை திருமணம் செய்து வைக்க சொல்லி கேட்கிறேன் வரும் போது அவளையும் அழைத்து வருகிறானாம்”

என்ன அண்ணி அமித் யாரையும் கேட்காமல் திருமணம் செய்து கொண்டான் என்றால் இப்பொழுது தருணும் அவ்வாறே செய்கிறான்

பூங்கோதை “என்ன செய்ய அவர்களுக்கு பிடித்தவர்களை மணந்து கொண்டால் அவர்களின் வாழ்வும் மகிழ்வாக இருக்கும் அவர்களின் மகிழ்வான வாழ்க்கை தானே நமக்கு முக்கியம். இப்பொழுது பார்த்திருக்கும் மாப்பிளைகளும் நமக்கு அனைத்து விதத்திலும் ஏத்தவர்கள் அண்ணி சொத்து பத்தும் நமக்கு நிகராகவே உள்ளது”

அவர் சொத்து நிறைய உள்ளது என சொன்னவுடனே அத்தைகள் ஒத்து கொண்டனர் பின் தனது மகள்களிடம் எப்படியும் இந்த வீட்டில் நீங்க வாக்க பட முடியாது என தெரிந்துவிட்டது இந்த மாப்பிளைகளுக்கும் சொத்தும் நிறைய உள்ளது அதோடு பார்க்கவும் நல்ல இருக்காங்க ஒத்துகோங்க சமாதான படுத்தி ஒத்துகொள்ள வைத்தனர்

அதன் பிறகு அனைத்து வேலைகளும் வேகமாக நடந்து முடிய இன்னும் திருமணத்திற்கு மூன்று நாட்கள் உள்ள நிலையில் தருண்,தேவியுடன் தனது இல்லம் நோக்கி வந்து கொண்டிருந்தான்

காரில் வந்து கொண்டிருக்க தேவி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க தருண் அவளை உரிமையுடன் தனது தோலில் சாய்த்து கொண்டு தனது முதல் முத்திரையை அவளின் நெற்றியில் பத்திதான்

நிறைவாள்...................

Hai friends next updateவுடன் வந்து விட்டேன் எல்லாரும் படித்து எப்படி உள்ளது என அதன் நிறை,குறை பற்றி சொல்லுங்க friends
 

Chitrasaraswathi

Well-Known Member
அருமையாக கொண்டு சென்றுள்ளீர்கள்மா. நிறைவு பதிவு ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
 

banumathi jayaraman

Well-Known Member
விஸ்வநாதன் இன்னுமா கல்லுப்
போல உட்காந்திருக்காரு?
இவரெல்லாம் ஒரு அப்பாவா?

ஆனாலும் அக்கா நிலா, பெற்றோர்
இவர்களுக்கு எந்த தண்டனையும்
இல்லை-ங்கும் பொழுது ரொம்பவே
வருத்தமாக இருக்கு, நளினி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top