என்னில் நிறைந்தவளே - 28

Advertisement

laksh14

Well-Known Member
என்னில் - 28

தேவி தருண் தாலி கட்டுவான் என எதிர்பார்க்கவில்லை அவன் தாலியை கட்டும்போது அதிர்ச்சியாக தேவி அவனின் முகம் பார்க்க அவனின் கண்களில் நிரம்பி வழிந்த காதலில் கர்வம் கொண்டாள். மனது முழுக்க தனக்கு என ஒரு உறவு வந்துள்ளது என்னை இனி அவன் பார்த்து கொள்வான் என நினைத்து மகிழ்வுடனே அவன் கட்டிய தாலியை ஏற்று கொண்டாள்

தருண் தாலியை தேவியின் கழுத்தில் கட்டிவிட்டு தேவியின் அம்மாவை பார்த்து இனி ஒருவார்த்தை என மனைவியை பற்றி தர குறைவாக பேசினால் கேட்டுக்கொண்டு நான் சும்மா இருக்கமாட்டேன் என எச்சரித்தான்

இருந்தும் தேவியின் அம்மா அமைதியாக இல்லாமல் தேவியை பார்த்து இனிமேலாவது இவனுடன் ஒழுக்கமாக வாழு என்றார்

தருண் பேச வாய்யேடுக்க அவனின் கைகளை பிடித்த தேவி இருங்க விஜய் நான் எப்பொழுதும் இவங்க பேசுவதைகேட்டு அமைதியாக போய்விடுவேன் ஆனால் அது தப்பு என்று இப்ப நினைக்கிறேன் நானே அவருக்கு பதில் கொடுக்கிறேன்

தேவி அவ்வாறு கூறவும் தருண் அமைதியடைந்தான்

என்ன சொன்னீங்க நான் இனிமேலாவது ஒழுக்கமாக வாழனும் என்று தானே அதை முதலில் உங்க பொண்ணிற்கு பார்த்து கட்டி வைத்திருக்கீங்களே மாப்பிள்ளை அவனை பார்த்து சொல்லுங்க

நிலா “இப்ப எதுக்கு என்னுடைய புருஷனை இழுக்கற நீ ஒழுக்கமா இருந்தா அம்மா ஏன் இப்படி எல்லாம் சொல்ல போறாங்க”

பார்டா புருஷன் மேல அவ்ளோ நம்பிக்கை

நிலா அவளை முறைக்க கண்டுகொள்ளாது என்ன விஸ்வநாதன் சார் நீங்களும் உங்க பங்கிற்கு எதாவது சொல்ல வேண்டும் என்றால் சொல்லிவிடுங்க மொத்தமாக எல்லாத்திற்கும் பதில் கொடுக்கிறேன் ஒவ்வொருத்தருக்கும் தனியாக சொல்ல முடியாது பாருங்க என இகழ்ச்சியாக சொல்ல

விஸ்வநாதன் “தேவி நான் உன்னுடைய அப்பா மா என்னை சார் கூப்பிடுற”

தேவி “ஓ எனக்கும் அப்பா என்று இன்று தான் உங்களுக்கு நியாபகம் வந்ததோ அன்று கல்லூரிக்கு வந்து என்னை பார்த்து இப்பவரை நான் உனக்கு ஏதும் செய்தது இல்லை இனிமேலாவது செய்ய வேண்டும் என ஆசை படுகிறேன் என கூட்டி வந்து இரவில் உங்க மனைவி என்னை வீட்டை விட்டு அனுப்பும்போது தெரியவில்லையா”

இவர்கள் தேவியை பற்றி தவறாக பேசியதை கேட்டே கோவத்தின் உச்சியில் இருந்த தருணுக்கு இதை கேட்டவுடன் என்ன மாதிரியான மனிதர்கள் இவர்கள் என வெறுப்படைந்தான்

நிலா “என்னடி ராத்திரியில் வீட்டைவிட்டு வெளியே அனுப்பினோம் சொல்ற நீ நடந்துகிட்டதற்கு உன்னை அப்பவே கொன்றிருக்கணும்”

தேவி “என்னை கொல்லணுமா முதலில் என்ன நடந்தது உனக்கு தெரியுமா என்று கத்த”

நிலாவின் கணவனுக்கோ எங்கே தன்னுடைய குட்டு உடைந்துவிடுமோ என நினைத்து விடு நிலா நடந்ததை பேசி இனி என்ன ஆகபோகிறது அதோடு தேவிக்கும் இப்பொழுது திருமணம் ஆகிவிட்டது என சமாதான படுத்த அதை கேட்காத நிலாவே “என்னடி நடந்தது சொல்லுடி பார்க்கலாம்” உன்னுடைய லட்சனம் இவனுக்கும் தெரியட்டும் என தருணை சுட்டி காட்டினாள்

தேவி “இவரை பார்த்து அவன்,இவன் என்று சொல்கிற வேலை வேண்டாம் அப்புறம் நான் சும்மா இருக்கமாட்டேன் பேசுகிற வாயை உடைத்து விடுவேன் என கூறிவிட்டு பின் விஸ்வநாதன் சார் உங்களுக்கு அன்று என்ன நடந்தது என தெரியுமே இப்பொழுதாவது பேசுவீங்களா இல்லை நானே சொல்லட்டுமா”

நிலா “நான் கேட்கிறேன் இல்ல சொல்லுடி அங்க அப்பாவிடம் என்ன பேச்சு”

தருண் “வா தேவி போலாம் இவங்களுக்கு எல்லாம் நீ பதில் சொல்லவேண்டும் என அவசியம் இல்லை எனக்கு தெரியும் உன்னை பற்றி”

தேவி “பொறுங்க விஜய் என்று விட்டு நீ தானே கேட்டாய் சொல்கிறேன் கேட்டுக்கோ” என அன்றைய நினைவுகளை நோக்கி சென்றாள்

பிரகாஷ் செய்த செயல்களால் தன்னை நினைத்தே வெறுப்படைந்து மனதளவில் சோர்வுற்றிருந்த தேவியை காண அவளுடைய தந்தை வந்துள்ளதாக கூறி சென்றவுடன் அனிதா, தேவியை வற்புறுத்தி அழைத்து சென்றால் விஸ்வநாதனை சந்திக்க

அவரோ தேவியிடம் பேசி அவளை வீட்டிற்கு வருமாறு அழைத்தார் முதலில் யோசித்த தேவி தனக்கும் ஒரு மாறுதல் தேவை என்பதை உணர்ந்து அவருடன் செல்ல சம்மதித்தாள்

வீட்டிற்கு வந்த தேவியை அவளின் அம்மாவும், அக்காவும் கண்டுகொள்ளவில்லை முதலில் தயக்கமாக உணர்ந்த தேவியும் தனக்கு கிடைத்த வேலையில் சேர்ந்தவுடன் வீட்டில் இருக்கும் நேரங்களை குறைத்து கொண்டு தன்னுடைய பணிகளில் முழ்கினாள்

இப்படி நாட்கள் சென்று கொண்டிருக்க தேவி அந்த வீட்டிற்கு வந்து ஆறு மாதங்கள் கழித்து பெங்களூரில் இருந்து மாற்றுதல் வாங்கிகொண்டு சென்னை வந்தான் நிலாவின் கணவன் சுரேஷ்

அன்று வேலை முடித்து வீட்டிற்கு வந்த தேவியை அவன் கண் இமைக்காது பார்க்கவும் நாம் புதிதாக இங்கே வந்துள்ளதால் இப்படி பார்ப்பாரா இருக்கும் என முதலில் நினைத்த தேவி நாட்கள் செல்ல அவனின் பார்வை எல்லை மீறி தன் மேல் படிவத்தை உணர்ந்து அவனிடமிருந்து ஒதுங்கி சென்றாள்

அவனிடம் பேசுவதையும் அவன் இருக்கும் இடத்தில் இருப்பதையும் தவிர்த்து வந்தாள்

அன்று வேலை முடிந்து கலைப்புடன் வந்த தேவியை நிறுத்தி பக்கத்து வீட்டில் இருப்பவர் சாவியை கொடுத்து சென்றார். மிகவும் சோர்வாக உணர்ந்த தேவி ஒரு காபியாவது குடிக்கலாம் என சமையலறை செல்ல அப்பொழுது வேலை முடித்து வந்த சுரேசும் தேவி தனியாக இருப்பதை கண்டு என்ன செய்கிறாய் தேவி என அவளின் பின்புறம் நெருங்கி நின்று கேட்க அவனுடைய குரல் தனக்கு மிக அருகில் கேட்பதை உணர்ந்து அதிர்ந்து திரும்ப

அவனோ தேவியின் மிக அருகில் நிற்க அவனிடம் இருந்து விலகிய தேவி உங்களுக்கு என்ன வேண்டும் எதுவாக இருந்தாலும் தள்ளி நின்று சொல்லுங்கள் என்றாள்

எனக்கு நீதான் வேண்டும் என்றான். தேவி “என்ன உலருறீங்க நான் நிலா இல்லை தேவி”

சுரேஷ் “நீ தேவி என்பது தெரிந்து தான் கேட்கிறேன் எனக்கு நீ தான் வேண்டும்”

தேவி அங்கிருந்து செல்ல எத்தனித்த பொது அவளின் கைகளை பிடித்து அவளிடம் தகாத முறையில் நடக்க முயற்சிக்க அவளோ அவனிடம் இருந்து விடுபட முயன்றால் அவனின் பிடி வலுவாக இருக்க மிகவும் போராடி அவனை பிடித்து தள்ளிவிட்டு வேகமாக வெளியே வர சுரேசும் அவளின் பின்னே அவளை பிடிக்க வர அப்பொழுது விஸ்வநாதன் உள்ளே வந்தார்

உள்ளே வந்தவர் தேவியின் நிலையை பார்த்து பதறி அவளை தன்புறம் இழுக்க அவளின் பின்னே வந்த சுரேசையும் பார்த்து நடந்தது என்ன என யூகித்து கொண்டார் அவர் என்ன என கேட்டும் முன்னே ஷாப்பிங் செய்த பைகளை எடுத்து கொண்டு உள்ளே நுழைந்தனர் நிலாவும் அவளுடைய அம்மாவும்

தேவி என்ன நடந்தது என சொல்லும் முன்பே முந்தி கொண்ட சுரேஷ் நிலாவிடம் “பாரு நிலா உன்னுடைய தங்கை செய்வதை அவள் சில பசங்களுடன் சுற்றுவதை பார்த்தேன் இப்படி எல்லாம் செய்யாதே மா நம்முடைய குடும்ப மனம் போகும் என சொன்னதற்கு என்னை கேட்க நீ யார் என்றால் நான் இந்த குடுப்பத்தில் ஒருவன் என்ற முறையில் கேக்கிறேன் நீ கேக்கவிட்டால் உன்னுடைய அக்காவிடம் சொல்வேன்” என்றேன்

அதற்கு அவர்கள் உன்னை நம்ப வேண்டும் இப்பொழுது நான் செய்வதை பார்த்தல் அனைவரும் நீதான் என்னை எதோ செய்து விட்டதாக நினைப்பார்கள் என்னை எதுவும் கேட்க மாட்டார்கள் என கூறி அவள் தன்னுடைய உடைகளை கலைத்து கொண்டு முடியை விரிந்து விட்டு நான் அவளிடம் தகாதமுறையில் நடந்து கொள்வதாக சொல்ல போவதாக என்னிடம் சொல்கிறாள் என நடித்தான்

அவன் சொன்னதை உன்னை என எண்ணி தேவியின் அம்மா மாப்பிள்ளை உங்களை பற்றி எங்களுக்கு தெரியாதா என கூறி அந்த இரவு நேரத்தில் தேவியை விட்டைவிட்டு வெளியே செல்லுமாறு கூறி அவளை அங்கிருந்து கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக வெளியே அனுப்பினார்

நிறைவாள்..................

Hai friends இன்னும் இரண்டு அல்லது மூன்று update களே உள்ளது நிறைவடைய so எல்லாரும் படித்து எப்படி இருக்கு என்று சொல்லுங்க பா படித்துவிட்டு அப்படியே போய்டாதிங்க friends
nyc epi siss...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top