என்னில் நிறைந்தவளே - 27

Advertisement

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
என்னில் – 27

தேவி “நான் யாரையும் வர சொல்லவில்லை” என கூறியதும் பிரகாசின் அம்மாவும், அப்பாவும் என்னடா இது என்பது போல் மகனை முறைத்தனர்

தருணை தவிர அனைவரும் இங்கு என்ன நடக்கிறது என புரியாமல் குழம்பி இருந்தனர்

தருண் அனிதாவை பார்த்து நான் அப்பொழுதே சொன்னேனே என்ற பார்வை பார்க்க அனிதாவும் அதை புரிந்து கொண்டு sorry என முனுமுனுத்தாள்

பிரகாஷ் “என்ன தேவி விளையாடுகிறாயா நீ தானே இன்று பெண் பார்க்க வர சொன்னாய்”

தேவி “நான் எப்பொழுது சொன்னேன் பிரகாஷ்”

பிரகாஷ் “அன்று உணவகத்தில் பெண்கேட்டு வரட்டுமா என கேட்டதற்கு வா என்றாயே”

தேவி “நீ பெண் கேட்டு வரவா என்றாய் வா என்றேன் நானாகவே உன்னை பெண் கேட்டு வரசொல்லவில்லையே”

பிரகாசின் அப்பா “இதுவெல்லாம் என்ன பிரகாஷ் நீயும் இந்த பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாகவும் அவள் நீயில்லாமல் இருக்கமாட்டாள். அவள்தான் பெண்கேட்டு வர சொன்னதாக கூறினாய்.இப்பொழுது இந்த பொண்ணு நான் வர சொல்லவில்லை என்று சொல்லுது”

பிரகாஷ் என்ன பதில் சொல்லவது என தெரியாமல் விழித்தான் பின்னே வீட்டில் அவள் நான் இல்லாமல் இருக்கமாட்டாள் நானும் அவள் இல்லையென்றால் உயிரோடு இருக்கமாட்டேன் என பயமுறுத்தி அல்ல சம்மதம் வாங்கியிருந்தான் இப்பொழுது இவள் இவ்வாறு கூறுவாள் என அவன் எதிர்பார்க்கவில்லை

பிரகாசின் அம்மா “தனது மகனுக்கு ஆதரவாக சரிமா நீ என் பையனை வர சொல்லவில்லை என்றே வைத்துகொள்வோம் நீயும் அவனும் காதலிப்பது உண்மை தானே அதனால் என் பையனுக்கு உன்னை கேட்டு வந்திருக்கோம்”

தேவி “நான் உங்கள் பையனை காதலிப்பதாக எப்போது கூறினேன்”

பிரகாஷ் “இப்பொழுது சொல்லவில்லை ஆனால் கல்லூரியில் படிக்கும் போது சொன்னாய்”

தேவி “அப்பொழுதும் நான் உன்னை காதலிப்பதாக கூறவில்லை நீ தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினாய் என்னால் ஒரு உயிர் போய்விட கூடாதே என்று உன்னுடைய காதலை ஏற்றுகொள்வதாக மட்டுமே கூறினேன் நான் உன்னை காதலிப்பதாக சொல்லவில்லை”

தேவி இவ்வாறு பேச பிரகாசிற்கு கோவம் வந்து “என்ன தேவி என்னுடைய குடும்பத்தை வரவழைத்து அசிங்க படுத்துகிறாயா”

தேவி “ஓ நான் உன்னுடைய குடும்பத்தை வரவழைத்து அவுமான படுத்துகிறேன் அப்படி என்றால் ஒரு பெண்ணை நண்பர்களிடம் சவால் விட்டு அவளை காதலிப்பதாக ஏமாற்றுவது உன்னுடைய குடும்பத்தில் நல்ல செயல் அப்படி தானே”

பிரகாசின் அம்மா “என்னமா என்னுடைய பையன் ஆசை பட்டதற்காக வந்தால் இப்படி பெசிகொண்டிருக்கிறாய் யார் செய்ததையோ என மகனிடம் கேட்கிறாய்”

தேவி “அப்படியா பிரகாஷ் நீ இதையெல்லாம் செய்யவில்லையா நான் பொய் சொல்கிறேனா சரிவிடு உனது நண்பர்களையே கேட்டுவிடுவோம் அப்பொழுது தெரிந்துவிடும் உண்மையா பொய்யா என்று”

பிரகாஷ் “அவள் சொல்லவதை கேட்டு அதிர்ந்து பின் இவளுக்கு இதுவெல்லாம் எப்படி இவளுக்கு தெரியும்” என யோசிக்க

தேவி “என்ன பிரகாஷ் இவளுக்கு இதுவெல்லாம் எப்படி தெரிந்தது எப்பொழுது தெரிந்தது என யோசிக்கிறாயா நீ யோசிக்காதே நானே சொல்கிறேன் இந்த உண்மை அனைத்தும் கல்லூரியின் கடைசி நாள் அன்று நீயே உன்னுடைய வாயால் உன்னுடைய நண்பர்களிடம் நான் அங்கு இருப்பதை கூட பார்க்காது கூறினாய்”

பிரகாசின் அம்மாவிடம் திரும்பி “என்ன மேடம் நீங்களும் உங்களுடைய பெண்ணை இப்படி ஒருவன் ஏமாற்றினால் அவனையே உங்களுடைய பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்து விடுவிர்களா”

அவர்களால் எந்த பதிலையும் சொல்ல முடியவில்லை

பிரகாஷ் “தன்னுடைய உண்மை முகம் தெரிந்து விட்டது என்பதை புரிந்து தேவியை பார்த்து உனக்கு நான் உன்னை ஏமாற்றியது தெரிந்து விட்டதே பின் எதற்கு என்னுடைய குடும்பத்தை வரவழைத்து அவுமனபடுத்தினாய்”

தேவி “உன்னுடையா குடும்பத்தை அவமதிப்பது என்னுடைய நோக்கம் அல்ல உன்னை பற்றி உன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் தெரிந்து கொள்ளட்டும் என செய்தேன்”

பிரகாஷ் “என்னால் எதுவும் செய்ய முடியாது என நினைத்து என்னை அவமதிக்கிறாயா”

தேவி “அதில் உனக்கு சந்தேகம் வேறா உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது”என கர்வமாக கூறினாள்

பிரகாஷ் “இன்னியும் உன்னை எவன் திருமணம் செய்கிறான் என பார்க்கிறேன் அப்படியே எவனாவது உன்னை மணக்க வந்தாலும் அதை எப்படி தடுக்கிறேன் என்று மட்டும் பார்” என தன்னுடைய வீட்டினர் முன்பு தன்னுடைய தரம் குறைந்ததை நினைத்து அவ்வாறு கூறினான்

தேவியோ “நான்றாக பார் என்னை யார் திருமணம் செய்கிறார் என்று நான் திருமணம் செய்பவர் உன்னை மாதிரி இருப்பார் என எண்ணினாயா அவர் எண்ணத்தில் செயல்களில் உயர்ந்தவராக இருப்பார் என்னுடைய அனைத்து முயற்சிகளுக்கும் எனக்கு துணையாக நிர்ப்பார்” என தருணை பார்த்து கொண்ட பதிலளித்தாள்

தருணும் அவளையே தான் பார்த்து கொண்டிருந்தான் என்மீது உனக்கு அவ்வளவு நம்பிக்கையா என கண்களினாலே அவளிடம் கேட்க அதை உணர்ந்த தேவி ஆம் என கண் மூடி திறந்தாள்

மீண்டும் பிரகாசின் புறம் திரும்பி “நீ செய்த செயல் உன்னை உறுத்தவில்லை இத்தனை வருடம் கழித்தும் என்னை பார்க்கும் போது கூட மனம் வருந்தவில்லை பழைய படி என்னிடம் உள்ள சொத்தை அடைவதற்காக நாடகம் ஆடுகிறாய் இதில் நீ என்னுடைய திருமணத்தை நிறுத்த போகிறாயா”

பிரகாஷ் “யார் சொன்னது உன்னுடைய சொத்திற்காக வந்தேன் என”

தேவி “யாரும் சொல்லவில்லை பிரகாஷ் மீண்டும் நீயேதான் கூறினாய் போனில் பேசும்போது”

இதுவரை பட்டதே போதும் என்று பிரகாசின் அப்பா அங்கே நிற்க பிரியபடாமல் தனது குடும்பத்தை அழைத்து கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்

அவர்கள் சென்றதும் தேவியின் அம்மா இப்பொழுது தேவி பேசியதை எதையும் காதில் வாங்காமல் தேவியை காயப்படுத்தும் நோக்கத்துடன் “ஏண்டி உனக்கு வேற பொழப்பே இல்லையா அன்று இவன் என தருணை காட்டி உன்னை அவன் திருமணம் செய்து கொள்ள போவதாக கூறினான் இன்று இன்னொருவன் வந்து பெண் கேட்கிறான் உனக்கு வெக்கமாக இல்லை இப்படி நடந்துகொள்ள” என தேவியை பார்த்து கேட்க

தேவி கொஞ்சம் நிறுத்துகின்றிங்களா என கத்தினாள் அவள் கத்திய கத்தில் அனைவரும் அவளையே பார்க்க தேவி “விஸ்வநாதனை பார்த்து என்ன உங்க மனைவியை பேசவிட்டு வேடிக்கை பார்கின்றிங்களா. பாவம் நீங்க என்ன செய்வீங்க எப்பொழுதும் அவங்கள் செய்வதை வேடிக்கை பார்ப்பதே உங்களுக்கு பழகிவிட்டது” என ஏளனமாக கூறினாள்

விசுவநாதனோ அமைதியாக இருக்க இனியும் தான் அமைதியாக இருப்பது நல்லது அல்ல என எண்ணிய தருண் யாரும் எதிர் பாரா வண்ணம் தேவியின் கைகளை பிடித்து இழுத்து சென்று அங்கிருந்த பூஜை அறையில் நிறுத்தி தனது பக்கெட்டில் இருந்து சிறிய டப்பாவை எடுத்து அதிலிருந்த தாலியை தேவியின் கழுத்தில் கட்டினான்

நிறைவாள்................

Hai friends I come with next update read it and how was the update given comments friends
 

Arya

Well-Known Member
wow
Marriage mudijuthe....
Vandhi oda appa amma and akka va summa vida koodadhu....
Olunga valaka avangala la mudila pechu matum nalla vaai kiliya pesaranga..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top