என்னில் நிறைந்தவளே - 21

Advertisement

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
என்னில் - 21

பிரகாஷ் தனது அடுத்த பிளானை செயல்படுத்தினான்

அன்று கல்லூரியில் அனைத்து துறை சார்பாகவும் சிம்போசியம் நடைபெற ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது

பிரகாஷ் தனது நண்பர்களில் ஒருவனை அழைத்து தேவியிடம் தான் அவளை chemistry லேபிற்கு அழைத்ததாக கூறும்படியும் இந்த ஒருமுறை மட்டும் வந்து சந்திக்குமாறு பிறகு எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டேன் என்று கூறி அழைத்து வர அனுப்பினான்

மற்ற நண்பர்களோ “என்ன செய்ய போற பிரகாஷ், இந்த ஒருமுறை மட்டும் வருமாறு கூறியுள்ளாய்”

பிரகாஷ் “ஒரு வித ரகசிய புன்னகையை தனது நண்பர்களை பார்த்து சிந்தினான்”

நண்பர்கள் “டேய் ஏதாவது ஏடாகூடமாக செய்து வைத்திடாதே டா அப்புறம் நமக்கு தான் பிரச்சனை”

பிரகாஷ் “இன்று கண்டிப்பாக அவள் எனது வழிக்கு வந்துவிடுவாள் சரி அதைவிடு அவள் வரும்போது நீங்கள் யாரும் இங்கு இருக்க வேண்டாம் அதே போல் அரைமணி நேரத்திற்கு உள்ளே யாரும் வராமல் பார்த்து கொள்ளுங்கள்”

உன்னை நம்பி வெளியே போறோம் எதுவும் பிரச்சனை ஆகாமல் பார்த்துகொள் என்று கூறி சென்றனர்

பிரகாஷ் அனுப்பியவனோ தேவியிடம் சென்று “தேவி உங்களை பிரகாஷ் chemistry லேபிற்கு வருமாறு கூறினான்”

அனிதா “எதுக்கு தேவி அங்க வரணும் அவள்தான் அன்றே சொல்லிவிட்டாள் தானே செட் ஆகாது என்று பின் எதற்கு வர வேண்டும்”

அவனோ மனதில் அவன் என்ன என்றால் இவளை அழைத்து வர சொல்கிறான் இவளோட தோழி இப்படி கேட்கிறாள்.அழைத்து செல்லவில்லை என்றால் அவனை நம்மால் சமாளிக்க முடியாது

அனிதா “என்ன கேட்டதற்கு பதிலை காணோம் எதோ யோசித்து கொண்டு நிற்கின்றிர்கள்”

அவனோ தேவியின் புறம் திரும்பி இந்த ஒருமுறை மட்டும் வந்து சந்தியுங்கள் பிறகு இவ்வாறு தொல்லை செய்யமாட்டான் ப்ளீஸ் தேவி இந்த ஒரே ஒருமுறை வாருங்கள்

பிரகாஷ் இப்பொழுதெல்லாம் ரொம்ப டல் ஆக இருக்கான் எதிலும் கவனம் செலுத்த மாட்டேன் என்கிறான் செமஸ்டர் வேற வருது அதுக்காகவாவது வந்து பார்த்து விட்டு போ தேவி

தேவி மனதில் பிரகாஷ் இதுவரை நம்மை தொந்தரவு செய்யவில்லை அன்று கடிதம் கொடுத்ததோடு சரி அதன் பின்பும் பின்னே வந்தாலும் தொல்லை கொடுக்கவில்லை என நினைத்து அவனுடன் சென்றாள் பிரகாசை சந்திக்க

அனிதா “அவள் செல்ல விளையும் பொது வேண்டாம் தேவி அதுதான் அன்றே தெளிவாக கூறிவிட்டாய் தானே எதற்கு போகவேண்டும்”

தேவி “பிரகாஷ் மற்ற பசங்கள் மாதிரி தொல்லை கொடுக்கவில்லை அனிதா நான் சென்று என்ன என்று கேட்டு வருகிறேன்”

அனிதா “அப்பொழுது சரி நானும் உன்னுடன் வருகிறேன்”

தேவியை அழைக்க வந்தவனோ போச்சு அவன் இவளை மட்டும் தனியாக அழைத்து வர சொன்னான் இப்பொழுது என்ன செய்ய என்று சிந்திக்கலானான்

தேவி “வேண்டாம் அனிதா நீ இந்த ரெக்கார்ட் நோட்டுகளை மேமிடம் சமிட் பண்ணிடு இன்று மதியத்திற்குள் மேமிடம் சேர்க்க வேண்டும் நீ அதை செய் நான் மட்டும் செல்கிறேன்”

அவனோ அப்பொழுதுதான் அவன் நிம்மதியாக மூச்சை வெளிவிட்டான். லேபின் அருகே வந்ததும் பிரகாஷ் உள்ளே இருக்கான் தேவி நீ சென்று பாரு என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்

தேவி “நாம அன்று அப்படி முகத்தில் அடித்த மாதிரி உன்னை நான் காதலிக்கவில்லை என்று சொல்லிருக்க கூடாது கொஞ்சம் தன்மையா சொல்லிருக்கணும் ஒருவேளை அதனால் டல் ஆக இருக்கானோ என்னவோ

இவன் மற்ற பசங்க போல இல்லை இன்று அவனிடம் பேசும்போது பொறுமையாக பேச வேண்டும் என்று எண்ணிய படியே உள்ளே சென்றாள்”

உள்ளே சென்று பிரகாஷ் எங்கே என்று தேடவும் அவன் ஒரு குடுவையுடன் நிற்கவும் அவன் அருகில் சென்று இங்கு எதற்கு வர சொன்னாய் பிரகாஷ்

அன்றே உன்னிடம் நான் தெளிவாக சொன்னேனே பிறகு எதற்கு இன்னும் என்னை தொல்லை செய்கிறாய்

பிரகாஷ் “நானும் உன்னை மறக்க முறச்சி செய்தேன் தேவி ஆனால் என்னால் முடியவில்லை ஒரு நொடி கூட உன்னுடைய நினைவு இல்லாமல் இருக்க முடியவில்லை

எந்த வேலையிலையும் கவனம் செலுத்த முடியவில்லை உன்னை மறக்க நினைந்தால்தான் உன் நினைவு அதிகமாக வருகிறது எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை

தேவி “உங்களுக்கு மிகவும் விருப்பமான ஒன்றின் மீது உன்னுடைய கவனத்தை செலுத்துங்கள் என் நினைவு வராது”

பிரகாஷ் “எனக்கு மிகவும் பிடித்தமானவள் நீ தான் தேவி நீயே என்னை வேண்டாம் என்று கூறியவுடன் நான் எதற்கு உயிரோடு இருக்க வேண்டும் இதோ இந்த குடுவையில் ஆசிட் இருக்கிறது இதை என்மீது நானே ஊற்றி கொண்டு செத்துவிடுகிறேன் அப்பொழுது மட்டுமே உன் நினைவு இல்லாமல் இருப்பேன்” என்று மிகவும் உருக்கமாக பேசினான்

தேவி “உனக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கு இப்படி உளறிகிட்டு இருக்க நான் வேண்டான் என்று சொன்னால் தற்கொலைக்கு முயல்கிறாய்”

பிரகாஷ் “ஆமாம் தேவி எனக்கு பைத்தியம்தான் பிடித்திருக்கு அதுவும் உன்மீது”

தேவி “இப்படி பேசுவதை முதலில் நிறுத்து பிரகாஷ் என முடிந்த அளவு கத்தினாள் உள்ளே வரும்போது பொறுமையாக பேச வேண்டும் என நினைத்து அவளின் நினைவிலே இல்லை”

பிரகாஷ் “நீ தான் என்னை காதலிக்க வில்லையே நான் என்ன செய்தால் உனக்கு என்ன கடைசியாக ஒருமுறை உன்னை காணவே அழைத்தேன் நான் இறுதியாக பார்க்கும் முகம் உன்னுடையதாக இருக்க வேண்டும் என எண்ணினேன் இப்பொழுது நீ போலாம் தேவி” என தனது திட்டத்தை செயல்படுத்தி கொண்டிருந்தான்

இவனது செயல்கள் ஏதும் அறியாத தேவி தான் காதலிக்கவில்லை என்று கூறியவுடன் தன்னையே அழித்து கொள்ளும் அளவுக்கு இவன் என்மீது இவ்வளவு காதலும்,அன்பும் கொண்டுள்ளானா என பிரமித்து நின்றாள்

பிரகாஷ் “என்ன தேவி இப்பொழுதும் என்னுடைய காதல் உனக்கு புரியவில்லையா,இதோ உன் கண் முன்னே நிருபித்து காட்டுகிறேன் என அந்த ஆசிட் அவன் மீதே கவிழ்க்க கையை உயர்த்தினான்”

தேவி “இவன் இந்த அளவு காதலை தன்மீது வைக்க நான் என்ன செய்தேன் நான் கிடைக்கமாட்டேன் என எண்ணி தன்னையே மாய்த்துகொள்ள முடிவெடுத்துவிட்டான் எனக்கு அம்மா அப்பாவிடம் கிடைக்காத அன்பு இனி இவனிடம் இருந்து கிடைக்கும் என நினைத்து பிரகாஷ் செய்ய சென்றதை நிறுத்தி அவனுடைய காதலை ஏற்று கொள்வதாக கூறினாள்”

பிரகாஷ் “தனது திட்டம் வெற்றி அடைந்ததை நினைத்து மகிழ்ச்சி கொண்டான்”

தேவியோ பிரகாஷ் மகிழ்வதை கண்டு அவனுடைய காதலை நான் ஏற்று கொண்டதால் வந்த மகிழ்ச்சி இது என எண்ணினான்

இருவரும் வெளியே வரும்போது அனிதா தேவிக்காக காத்திருந்தாள். பிரகாஷ் தனது நண்பர்களிடம் அவள் தன்னுடைய காதலை ஏற்று கொண்டதாக கூறி வெற்றி புன்னகை செய்தான், தேவியும் அவனுடைய காதலை தான் ஏற்று கொண்டதாக அனிதாவிடம் கூறினாள்

பின் தேவி தனக்கு வேலை இருப்பதாக கூறி பிரகாசிடம் தலை அசைத்து விடை பெற்றாள்

அவள் சென்றவுடன் அவனது நண்பர்கள் என்னடா செய்தாய் அந்த பொண்ணு உன்னை காதலிப்பதாக சொல்கிறது

பிரகாஷ் நடந்ததை கூறினான்,அவனது நண்பர்கள் “ஒருவேளை நீ இப்படி செய்யும் போதும் அவள் ஒத்துகொள்ளாமல் இருந்திருந்தால் உன்மீது நீயே ஆசிடை ஊற்றி கொண்டிருப்பாயா

பிரகாஷ் “அது முதலில் ஆசிடே இல்லை அவளை பயமுறுத்தி என் வழிக்கு கொண்டுவர அவ்வாறு சொன்னேன் அதுவும் அவளுக்காக நான்போய் ஆசிடை என்மீதே ஊற்றி கொள்வேனா

நான் சொன்னபடி சவாலில் வென்றுவிட்டேன் பார்திற்களா எப்படி என் திறமை என்றான்”

நாட்கள் அதன் போக்கில் செல்ல பிரகாஷ் தனது ஆதிக்கத்தை முழுவதும் தேவியின் மீது செலுத்தினான். தினமும் மாலையில் தன்னுடன் பேசவேண்டும் நான் போன் செய்யும்போது முதல் இரண்டு ரிங்கிளே எடுக்க வேண்டும் தான் என்ன உடை சொல்கின்றேனோ அதைதான் தினமும் அணிந்து வர வேண்டும் என்று ஒவ்வொரு சின்ன விசியத்திலும் தனது ஆதிக்கத்தை செலுத்தினான்

அப்படி செய்யும் பொழுது யாருக்கும் அடிபணியாமல் இருந்தவள் தனது சொல்படி நடக்கிறாள் என்ற கர்வம் பிரகாசிடம் உண்டானது, தேவி அவன் சொல்லி செய்யவில்லை எனில் உனக்கு என்மீது காதலே இல்லை நான் சாகபோகிறேன் என்று அவளை அச்சம் கொள்ளவைத்தான்

தேவியை பொறுத்தவரை அவளுக்கு நெருங்கிய உறவு யாரும் அவளிடம் பாசம் கொள்ளவில்லை பாட்டி,தாத்தா பாசம் அவளுக்கு கிடைத்தது ஆனால் அதையும் அவளால் முழுமையாக அனுபவிக்க முடியாமல் அவளின் அம்மா சொன்ன வார்த்தைகள் தான் தனியே நின்று வெல்ல வேண்டும் என வைராக்கியத்தை உண்டாக்கியது

அதனால் பிரகாஷ் அவளிடம் காட்டும் ஆதிக்கம் அவன் தன்மீது உள்ள அளவுகடந்த காதலினால் அவ்வாறு செய்கிறான் என்று எண்ணி தேவி அவன் சொன்ன அனைத்தையும் செய்தாள், அவனும் தேவியை ஒரு நாய்குட்டி போல அவனின் பின்னே சுற்றவைத்தான்


நிறைவாள்..............

Hai friends next epiயோட வந்துட்டேன் படித்து எப்படி இருக்கு என்று சொல்லுங்க I am eagerly waiting for your comments friends
 

mila

Writers Team
Tamil Novel Writer
adappavi Deviya enna padu paduththi iruka Darun unna vachi seiya poranda
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top