என்னில் நிறைந்தவளே - 20

Advertisement

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
என்னில் – 20

தேவி அவனை அடித்ததோடு விடாமல் வாடா போய் பிரின்சிபல் பார்க்கலாம் அப்போது நீ யார் பின்னே செல்வது என முடிவெடுக்கலாம்

அவனோ பொண்ணு தானே என்ன செய்ய போகிறாள் என்று அப்படி பேசினான் பிரின்சிபல் என்றதும் அவனுக்கு தானாகவே பயம் வந்துவிட்டது

தேவிதான் அந்த கல்லூரியில் மதிப்பெண்களில் முதலிடம் அதுவும் இல்லாமல் பெரும்பான்மையான ஆசிரியர்களுக்கு தெரிந்தவள் அவள் சென்று புகார் கொடுத்தாள் என்றால் தனது நிலைமை என்று யோசித்தவன் விரைந்து அங்கிருந்து சென்றுவிட்டான்

அவர்களை சுற்றி வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மாணவர்களும் களைந்து சென்றனர். பிரகாஷ் தனது நண்பர்களை நோக்கி யாருடா இந்த பொண்ணு இவ்வளவு தைரியமாக ஒரு பையனை கை நீட்டி அடிக்கிறாள்

அவன் நண்பர்களில் ஒருவன் அந்த பொண்ணு பேரு வானதிதேவி டா B.E சிவில் மூன்றாம் வருடன் படிக்கிறாள் யார்கிட்டையும் அதிகமாக பேசவும் மாட்டாளம். எந்த பசங்களையும் கண்டுகொள்ளவும் மாட்டாளாம்

யாராவது வந்து லவ் லட்டர் கொடுத்தல் அவங்க கண்ணு முன்னாடியே கிழித்து போட்டுவிட்டு போய் கொண்டே இருப்பாளாம், இங்கு இருக்கின்ற நிறைய ப்ரோபெசர்களுக்கு இவள்தான் பெட். இது எல்லாம் எனக்கு இந்த கல்லூரியில் சேர்ந்தவுடன் பஸ்சில் உள்ள பசங்க சொன்னாங்க

பிரகாஷ் “என்ன டா அவளை பற்றி ஓவரா புகல்ர இதுவரை ஒருத்தன் கூடவா அவளை திரும்பி பார்க்க வைக்கவில்லை நம்புகின்ற மாதிரி இல்லையே”

அந்த குழுவில் இருந்த மற்றொருவனோ இப்பொழுது நடந்ததை நீயே பார்த்ததானே அவளுடைய தோழி பின்னாடி சுத்தினதற்கே இந்த அடி என்றால் அவள் பின்னாடி சுத்தினா என்ன செய்வாள் என கொஞ்சம் யோசித்து பாரு

பிரகாஷ் “ரொம்பதான் சீன் போடுறிங்க அவளை பற்றி”

நாங்க ஒன்றும் சும்மா சொல்லவில்லை இந்த காலேஜ் வந்தவுடன் இங்கே இருக்கின்ற students பற்றி விசாரித்தோம் அப்பொழுதுதான் சொன்னாங்க இவளை பற்றி. ஒருத்தர் இரண்டு பேர் சொன்னால் கூட நாங்க ஓவரா சொல்கின்றதா சொல்லலாம் இங்கு இருக்க முக்கால்வாசி பேர் சொல்றாங்க அவள் இப்படிதான் என்று

இன்னொருவனோ “சரி டா நாங்க சொல்வது ஓவர் என்றே வைத்துகொள் நீ மட்டும் அவளை உன்னை பார்த்து சின்னதாக ஒரு புன்னகை செய்ய வைத்து விடு நாங்கள் சொன்னது சரியில்லை என ஒத்து கொள்கிறோம்”

என்னடா நான் சொல்வது சரிதானே என மற்ற நண்பர்களிடம் கேட்டான்

பிரகாஷ் “அவளை என்னை பார்த்து சிரிக்க வைப்பது என்ன அவளிடம் லவ் ப்ரோபோஸ் செய்து அவளை ஏற்று கொள்ள வைக்கிறேன். அதுவும் இல்லாமல் என்ன சொன்னிங்க அவள் பின்னாடி சென்றால் அடிப்பாள் என்றுதானே நான் அவளையே என் பின்னாடி நாய்குட்டி மாதிரி அலையவிடுகிறேன்”

நண்பர்கள் “அப்படி மட்டும் செய்து காட்டு நீ என்ன சொன்னாலும் நாங்கள் அதை செய்கிறோம்”

பிரகாஷ் “இந்த பிரகாஷ்கிட்டியே சவாலா அவளை என் பின்னே அலையவிடவில்லை நான் பிரகாஷ் இல்லை”

அவர்களில் ஒருவன் வேண்டாம் பிரகாஷ் என்ன இருந்தாலும் அவள் ஒரு பொண்ணுடா விட்டு விடு நாம் இங்கு படிக்கத்தானே வந்தோம் அதை மட்டும் பார்க்கலாம்”

பிரகாஷ் “நீ வாயை மூடுடா, நான் சவால் விட்டால் விட்டதுதான் அவளை மடக்கி காட்டுகிறேன்”

இங்கே பிரகாஷ் தேவியை மடக்கி காட்டுகிறேன் என சவால் விட இது எதை பற்றியும் அறியாமல் வகுப்பில் அமர்ந்து பாடங்களை கவனித்து கொண்டிருந்தாள் தேவி

பிரகாஷ் நம்பர்களில் ஒருவன் “என்ன டா நீயும் அந்த தேவியை வளைத்து காட்டுகிறேன் என்று சொல்லி ஒரு மாதம் ஆகிறது ஒன்றும் நடந்தது போல் தெரியவில்லையே”

மற்றொருவனோ “நான் தான் அன்றே சொன்னேனே அவளை யாராலும் மடக்க முடியாது என்று”

பிரகாஷ் “கொஞ்சம் நிறுத்துகின்றிங்களா இவளை மாதிரி அடங்காத குதிரைகளை நம் வழிக்கு கொண்டு வருவது ஒன்றும் அவ்வளவு எளிது இல்லை அதற்கு நிறைய பிளான் போடணும். இன்னும் ஒரு மாதத்தில் அவளை எனது வழிக்கு கொண்டு வந்திடுவேன்

நண்பர்கள் “என்ன செய்ய போற பிரகாஷ்”

பிரகாஷ் “சொல்லி செய்தால் உங்களுக்கு சுவாரசியம் போய்விடும் என்ன நடக்கின்றது என்று பொறுத்து பாருங்கள்”

அன்று மதிய உணவிற்காக தேவியும்,அனிதாவும் கேண்டீனில் அமர்ந்திருந்தனர் அவர்களின் அருகே வந்த பிரகாஷ் “தேவி உன்னிடம் நான் கொஞ்சம் பேசவேண்டும்”

தேவி அவனை பார்வையால் அளந்துவிட்டு தனது எதிரில் உள்ள இருக்கையை காட்டினாள்

அதில் அமர்ந்த பிரகாஷ் “கொஞ்சம் தனியாக பேசணும் என்று கூறி தேவியின் அருகில் அமர்ந்திருந்த அனிதாவிடம் பார்வையை செலுத்தினான்”

அனிதா “உங்களை யார் என்றே தெரியாது நீங்களா வந்திங்க பேசணும் சொன்னிங்க சரி என்று சொன்னால் தனியாக பேசவேண்டும் என்று சொல்றிங்க முதலில் நீங்க யார் உங்க பெயர் என்ன”

பிரகாஷ் “என்னுடைய பெயர் பிரகாஷ் நான் இங்கு M.E படிக்கிறேன். இப்பொழுது நான் தேவியிடம் தனியாக பேசலாமா என்றான் சிரித்த முகத்தினுடனே, ஆனால் மனதில் இவளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டி இருக்கு என பண்ண நான் வேறு சவால் விட்டுவிட்டேன் கண்டிப்பாக அதில் நான்தான் வெற்றி பெறனும் அது வரை சகித்துதான் ஆக வேண்டும் என எண்ணினான்”

தேவி “நான் இவளுக்கு தெரியாமல் எதுவும் செய்வது இல்லை நீங்கள் சென்ற பிறகு எப்படியும் அதை பற்றி இவளிடம் கூறுவேன் so ஒன்றும் பிரச்சனை இல்லை என்ன பேச வேண்டும்”

பிரகாஷ் “இந்த திமிர முதலில் அடக்கணும் என்று கருவிக்கொண்டே தனது பாக்கெட்டில் இருந்து ஒரு கடிதத்தை எடுத்து தேவியிடம் நீட்டினான்”

அதை வாங்கி என்ன இது என்றாள்

பிரகாஷ் “உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, உன்னை என் மனதார காதலிக்கிறேன்”

அனிதா மனதில் இதுக்குதான் இவ்வளவு சீன் போட்டானா நம்ம தேவி இன்னேரம் அதை கிழித்து இருக்கணுமே என்று என்ன

தேவி “அந்த கடிதத்தை இரண்டாக கிழித்து அவனிடமே கொடுத்துவிட்டு எனக்கு விருப்பம் இல்லை என்றாள்”

அனிதா அதுதானே பார்த்தேன் பரவாயில்லை இன்று இரண்டாக மட்டும் கிழிந்துள்ளது என எண்ணினாள்

இதை அறிந்த அவனின் நண்பர்களோ “என்ன டா உன்னுடைய பிளான் அவ்வளவு தானா நாங்கள் கூட நீ எதோ செய்து அவளை உன் வழிக்கு கொண்டுவந்து விடுவாய் என்று நினைத்தோம், நீ அவளிடம் கடிதம் கொடுத்து அவள் அதை கிழித்து உன்னிடமே கொடுத்துவிட்டாள் என்றான் கேலியாக”

பிரகாஷ் “பொறுங்கடா அவள் அப்படி செய்வாள் என்று தெரியும் தெரிந்து தான் கடிதம் கொடுத்தேன் அவள் எல்லாம் ஒரு கடிதத்தில் வழிக்கு வருபவாளா”

அந்த கேண்டீன் நிகழ்வுக்கு பின் பிரகாஷ் தினமும் தேவியை தொடர ஆரம்பித்தான் ஆனால் அவளிடம் பேசவோ கடிதம் கொடுக்கவோ இல்லை இப்படியே ஒருமாதம் சென்ற நிலையில் அவன் பின்தொடர்வது ஆனால் பேசவோ, கடிதம் கொடுக்க முயலாதது தேவியின் மனதில் அவனின் மீது ஒரு soft cornerரை உண்டாக்கியது அவனை அழைத்து இங்கு பாருங்கள் நான் உங்களை விருப்பவில்லை என்னை பின்தொடராதிர்கள் அது உங்களுக்கும் மன வருத்தம் உண்டாக்கும் எனக்கும் கஷ்டம்

பிரகாஷ் “எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் தேவி, நான் உன்னை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவில்லையே நான் பாட்டுக்கு உன் பின்தானே வருகிறேன் அதுவும் இல்லாமல் உன்னை பார்க்கமால் என்னால் இருக்க முடியவில்லை”

தேவி தனது பொறுமையை கைவிட்டு நான் என்ன கூறுகிறேன் நீங்கள் என்ன சொல்கின்றிர்கள் இது போல் என் பின்னே நீங்கள் வந்திர்கள் என்றால் நான் இனி சும்மா இருக்க மாட்டேன் என கோவமான குரலில் எச்சரித்து சென்றாள்

பிரகாசோ போடி போ உன்னை எப்படி என்பின் அலைய வைப்பது என்று எனக்கு தெரியும் என்று தனது அடுத்த திட்டத்தை நடிமுறை படுத்த ஆரம்பித்தான்


நிறைவாள்.................

Hai friends next updateவுடன் வந்துட்டேன் படித்து எப்படி உள்ளது என்று சொல்லிவிட்டு போங்க பா இந்த updateல் தேவியின் character உங்களுக்கு பிடித்திருக்கா சொல்லுங்க I am waiting for your response friends
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top