என்னில் நிறைந்தவளே - 19

Advertisement

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
என்னில் – 19

அன்று காலையில் அலுவலகம் வந்த அனிதா மிகவும் படபடப்புடன் காணப்பட்டாள். தருணும்,ரமேஷும் அப்பொழுது அலுவலகத்தின் உள்ளே பிரவேசித்தனர் அவர்கள் வந்தது கூட அனிதாவிற்கு தெரியவில்லை. அலுவலகத்தின் வாயிலிலே நடை பயின்றுகொண்டிருந்தாள்

ரமேஷ் “என்ன தருண் அனிதா மேம் நம்மை கண்டுகொள்ளவே இல்லை எப்பொழுதும் இப்படி இருக்க மாட்டார்களே. என்னை காட்டிலும் உன்னை கண்டால் பேசாமல் செல்ல மாட்டார்களே இன்று என்ன வந்தது. அதுவும் ரொம்ப tension ஆக இருக்கின்ற மாதிரி தெரியுது”

தருணும் அதையேதான் சிந்தித்து கொண்டிருந்தான் அனிதாவிற்கு என்ன ஆனது இன்று என. பின் தனது சிந்தனையில் இருந்து வெளிவந்து ரமேசை நோக்கி நீ போ ரமேஷ் நான் என்ன என்று கேட்டு வருகிறேன் என ரமேசை அந்த இடத்தைவிட்டு அகற்றினான்


இன்று எழுந்தது முதலே தருணின் மனம் ஏனோ சரியில்லை சஞ்சலமாகவே இருந்தது.இப்பொழுது அனிதா வேறு பதட்டமாக காணப்படவும் இன்னும் அவனின் மனம் காரணமே இல்லாமல் அமைதியை இழந்தது போல் உணர்ந்தான்

வானதிக்கு ஏதோ பிரச்சனை என அவனின் மனதினோரம் தொன்றிகொண்டிருந்தது எனவே ரமேசை உள்ளே அனுப்பினான்.ஒரு வேளை அவன் நினைப்பது போல் வானதி சம்பந்தப்பட்டதாக இருந்தால் அதை எவரும் அறிய அவன் விரும்பவில்லை.

தருண் அனிதா அருகில் சென்று நின்றான் அப்பொழுதும் கூட அனிதாவின் கவனம் தருணின் மீது பதியவே இல்லை. அலுவலக வாயிலை நோக்கியே அவளின் பார்வை இருந்தது

அனிதா என்று தருண் அழைத்தும் அதற்கு எந்த வித பிரதிபலிப்பும் இல்லை பின் அவளின் முன் சென்று தனது கையை அவளின் முகத்திற்கு நேராக ஆட்டி அனிதா என்றான்

இப்பொழுதுதான் அனிதாவின் கவனம் தருணின் புறம் திரும்பியது.தருணை பார்த்ததும் ஒரு நிம்மதி பெருமமூச்சு அனிதாவிடம் இருந்து வந்தது.

தருண் “என்ன ஆனது அனிதா, நீ ரொம்ப tension ஆக இருக்கின்ற மாதிரி தெரியுது ஏதாவது பிரச்சனையா, வானதி இன்னும் வரவில்லையா அவளை எதிர் பார்த்து காத்துகொண்டிருக்கின்றாயா என்ன ஆனது”

அனிதா தருணை பார்த்துவிட்டு மெதுவாக அந்த பிரகாஷ் வந்திருக்கான் என்றாள்

தருண் “யாரு அந்த பிரகாஷ், அவன் வந்ததற்கு நீ ஏன் இவ்வளவு பதட்டமாக இருக்கிறாய், அவனால் என்ன பிரச்சனை”

அனிதா சில நிமிடங்கள் அமைதிகாத்து பின் ஒரு முடிவுடன் தருணை பார்த்து அவன்தான் தேவியை அவனிடைய சுயநலத்திற்காக காதலிப்பதாக கூறி அவளின் மனதை இறுக செய்தது

தருண் “அவன் எதற்கு இங்கே வந்திருக்கான் என அடக்க பட்ட கோவத்துடன்”

பிரகாஷ்தான் தேவியின் மனதை கொன்றது என சொன்னதும் தருணிற்கு கோவம் சுறுசுறு என ஏறியது.என்னதான் அவன் விட்டு சென்றதால் தேவி தருணுக்கு கிடைத்தாலும் தன்னுடைய வானதியின் இப்போதிருக்கும் நிலைமைக்கு காரணமானவன் அவன்தானே என நினைத்தான், அதுவும் வானதி மாதிரி ஒரு பெண் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் அல்லவா என்பதே அவனின் எண்ணம்.

தருணின் குரலில் இருந்தே அவனின் கோவத்தை கண்ட அனிதா அவனை நோக்க அவன் முகமோ கல்லை போல இறுகி இருந்தது

அனிதா “தெரியவில்லை தருண் அவன் வந்திருப்பதை பார்த்தே நான் dension ஆகி விட்டேன் எனது முளை வேலை செய்யவே இல்லை”

தருண் “இப்பொழுதாவது சொல்லுங்க அனிதா, வானதி வாழ்க்கையில் என்ன நடந்தது. அது தெரிந்தால் இவனை எப்படி கையாள்வது என நான் முடிவு செய்வேன்”

அனிதா “இங்கே அதை பற்றி பேச வேண்டாம் தருண் யாராவது நாம் பேசுவதை கேட்டுவிட்டால் என்ன செய்ய, தேவியின் வாழ்கையில் நடந்ததை விமர்சிக்க படுவதை நானும் விரும்பமாட்டேன் நீங்களும் அப்படிதான் என தெரியும். நாம் எனது கேபினுக்கு சென்று விடலாம் அங்கே நான் அழைக்காமல் யாரும் வரமாட்டார்கள்”

அனிதா சொல்வதும் தருணிற்கு சரி எனவே பட்டது தனது வானதியை பற்றி யார் பேசுவதையும் அவன் விரும்பவில்லை. அதுவும் அலுவலகத்தில் அவளின் கீல் வேலை செய்து அவள் கைகளினாலே சம்பளம் வாங்குபவர்கள் பேசுவதை விரும்பவில்லை என்றே கூறலாம். அவனை பொறுத்த வரை வானதி அவனுக்கு கிடைத்த தேவதை.

இந்த அலுவலகத்தை பொறுத்தவரை அனைவருக்கும் முதலாளி அவளின் சம்பந்தபட்டவை எதுவும் இவர்களின் காதுகளுக்கு சென்றுவிட கூடாது என நினைத்து அனிதா உடன் சென்றான்

உள்ளே வந்ததில் இருந்து அனிதா எதையுமே சொல்லாமல் அமைதியா அவளின் விரல்களையே பார்த்து கொண்டிருந்தாள்

தருணுக்கோ இருக்கும் கொஞ்ச நஞ்ச பொறுமையும் இருக்கவா போகவா என்றிருந்தது

அனிதா “இதை நானே உங்களிடம் சொல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும் என நான் நினைக்கவில்லை தருண். என்னதான் நானும் தேவியும் தோழிகள் என்றாலும் அவளை பற்றிய விசியங்களை அவளே சொல்ல வேண்டும் என்றுதான் நீங்க அன்று கேட்ட பொது தேவியிடம் தெரிந்து கொள்ளுங்கள் என கூறினேன் ஆனால் இப்பொழுது என்று பேச்சை நிறுத்தி பின் கூறலானால்”

அனிதா தேவியின் வாழ்க்கையில் நடந்தவற்றை சொல்ல தொடங்கினாள்

சில வருடங்களுக்கு முன்பு தேவியும்,அனிதாவும் B.E சிவில் மூன்றாம் வருடம் படித்து கொண்டிருந்த சமயம்தான் அவளின் வாழ்வில் பிரகாஷ் என்பவன் நுழைந்தான்

தேவியும்,அனிதாவும் மூன்றாம் படித்து கொண்டிருக்கும் பொது பிரகாஷ் M.E முதலாம் ஆண்டு வந்து சேர்ந்தான்

கல்லூரி ஆரம்பித்து ஒரு மாதம் முடிவடைந்திருந்தது அன்று மதிய பாடவேளை இல்லாததால் பிரகாஷும் அவனது நண்பர்களும் ஒரு மரத்தினடியில் அமர்ந்து பேசிகொண்டிருந்தனர். அவர்களின் அருகில் திடிரென ஒரு அறைவிழுந்த ஒலி கேட்கவும் அவர்களின் கவனம் அங்கே திரும்பியது

தேவிதான் ஒருவனை அறைந்திருந்தாள். அவன் வெகுநாட்களாக அனிதாவின் பின்னே சுற்றி தொல்லை செய்துகொண்டிருந்தான் அதை அறிந்த தேவி அனிதாவிடம் என் சொல்லவில்லை என திட்டியதோடு அவளையும் உடன் அழைத்து சென்று அவனிடம் இனி இவளை தொல்லைசெய்யாதே என கூறினாள்

அவனோ உனக்கு என்ன வந்தது நான் அனிதாவின் பின்தானே சுற்றினேன் உன் பின்னா வந்தேன், ஒருவேளை உன்பின் வராததுதான் உனது பிரச்சனையா அதுதான் உனக்கு வேண்டும் என்றால் எனக்கு ஓகேதான். பெண் தானே என்ன செய்து விட போகிறாள் என திமிருடன் சொல்லிகொண்டிருந்தான்

அவன் அந்த வார்த்தைகளை சொல்லி முடிக்கும் முன்பே தேவியின் கரம் அவனின் கன்னத்தை பதம் பார்த்திருந்தது.


நிறைவாள்................

Hai friends எல்லாரும் புத்தாண்டு நல்லா celebrate செய்றிங்களா அப்படியே இந்த epi படித்துவிட்டு இரண்டு வார்த்தை சொல்லிவிட்டு போங்க friends
Image-of-Happy-New-Year-2018.jpg
 

banumathi jayaraman

Well-Known Member
இதுவரைக்கும்தான் நான்
படிச்சிருக்கேன், நளினி டியர்
இதுக்கப்புறம் அப்டேட்
தந்து விட்டீர்களாப்பா?
வானதி செல்லத்தை ஏமாற்றிய
அந்த பிரகாஷ் டாக்கின்
சீட்டிங்கை தெரிந்து கொள்ள
ரொம்பவே ஆவலாய் இருக்கு,
நளினி டியர்

அடப்பாவி, பிரகாஷ்?
ப்ரெண்ட்ஸ்க்கிட்ட போட்ட
சபதத்தில ஜெயிக்க வேண்டி
வானதியை லவ் பண்ணுற
மாதிரி நடிக்கிறானா?

இது தெரியாமல் ஒரு மாதம்
தேவியின் பின்னாலேயே
டாக் மாதிரி வந்ததைப்
பார்த்து, வானதி பாவம்
இவன் மீது சாப்ட் கார்னர்
வந்து ஏமாந்துட்டாளே,
நளினி டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top