என்னில் நிறைந்தவளே - 18

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
என்னில் – 18

காலையில் கண்விழித்த தேவிக்கு தலைபாரமாக இருப்பதை போல் உணர்ந்தாள் முதலில் தான் எங்கிருக்கிறோம் என பார்க்க பார்வையை

பின் தனது அறையில் உள்ள பால்கனி ஊஞ்சலில் அமர்ந்து நேற்று நடந்ததை பற்றி யோசிக்க எதும் நினைவில் வரவில்லை தருணை பற்றிய நினைவுகள் அவளின் மனம் மூலை இரண்டையும் ஆக்கரமித்தது

எப்பொழுதும் ஊஞ்சலில் அமர்ந்து தோட்டத்தை ரசிக்கும் அவளின் கண்கள் தோட்டத்தை பார்த்ததே தவிர கருத்தில் பதியவில்லை. தருண் தனது எதிரில் இருப்பது போல பேச தூடங்கினாள்

எதுக்கு தருண் உனக்கு என்மீது எவ்வளவு அக்கறை, அதுவும் என்னை காணும்போது உன்கண்களில் தெரியும் நேசம் என்னை செயலிழக்க செய்கிறது.என்னுடைய வாழ்வே எனது கம்பனிதான் என நினைத்து கொண்டிருந்தேன்

நீ என் வாழ்வில் வந்து அதை கொஞ்சம் கொஞ்சமாக உடைத்தாய் உன்னுடன் நான் இருக்கும் பொழுதுகளில் என்னுடைய கவலைகளை மறந்துவிடுகிறேன். நீ மட்டுமே போதும் என என்ன துவங்கிவிட்டேன்

நீ என்னை வானதி என்று அழைக்கும் பொழுது என்னுள் ஒருவித உணர்வு உண்டாகின்றது. அன்று அந்த அருண் என்னை கேவலமாக பேசும்போது அவனின்மீது கோவம் கொண்டாயே அப்பொழுதே என் மனம் உன்னிடம் சயதொடங்கிவிட்டது.

அதன்பின் என்னிடம் அவன் பேசினால் கேட்டுகொண்டு நிற்பாயா திருப்பி பதில் கொடுக்க மாட்டாயா என என்னிடம் கோவப்படும் போது ஒரு தந்தை தனது குழந்தையை இப்படித்தான் கண்டிப்பார என எண்ணியிருக்கிறேன்.

ஹோச்பிடல் அழைத்து சென்றபோது உன்னிடம் ஒரு தாயின் அரவணைப்பை உணர்ந்தேன். நேற்று என்னை காத்தபோது உன்னில் முழுவதும் தொலைந்துவிட்டேன்

ஆனால் ஏன் விஜய் என்மீது உனக்கு இந்த அளவு பாசம்,நேசம் அதை என்னால் ஏறக்க முடியாமல் தடுமாறுகிறேன்.இவ்வளவு நேசத்தையும் என்மீது கண்பித்து ஏதேனும் ஒரு சூழ்நிலையில் என்னை நீ பிரிந்து சென்றால் அதை தங்கும் திறன் எனக்கு உள்ளதா என எனக்கே தெரியவில்லை

நீ ஏன் எனது வாழ்வில் முன்பே வரவில்லை அப்படி வந்திருந்தாள் நான் அவனின் நாடகத்திற்கும்,சுயநலத்திற்கும் பலியாகி இருக்க மாட்டேன். இப்பொழுது மட்டும் என்னை காக்கும் நீ ஏன் அன்று என்னுடன் இல்லாமால் போனாய்.

நான் முழுதாக ஆண்களை ஒதுக்கும் நிலையில் இருந்தேன் ஏன் என்றால் எனது வாழ்வில் சந்தித்த ஆண்கள் அதுவும் முக்கியமாக மூன்று பேர் நான் ஆண்களை ஒதுக்க காரணம். ஒன்று எனது அப்பா, அடுத்து என் அக்காவின் கணவர், இன்னொன்று அவன். அவனை பற்றி நினைக்கும் போதே அவ்வளவு ஆத்திரம் வருகிறது

எப்படியெல்லாம் நடித்து என்னை ஏமாற்றினான் இது எதுவும் தெரியமால் கண்முடி தனமாக அவனை நம்பியிருக்கிறேன். இப்போது அதை நினைத்தால் கூட என்மீதே எனக்கு கோவம் வருகிறது. நான் யாரையும் அவ்வளவு எளிதில் நம்பியது இல்லை ஆனால் அவனை நம்பினேன் அதற்கு தக்க பரிசை தந்துவிட்டான்

என்னுடைய வாழ்வில் நிகழ்ந்ததை அறிந்தால் என்னை ஏற்று கொள்வாயா விஜய் என்று அவளின் மனம் சிந்தனையில் உழன்று கொண்டிருந்தது

என்னை நீ ஏற்று கொள்வாய் என நம்பிக்கை வந்த பின் எனது நேசத்தை உன்னிடம் வெளிபடுத்துகிறேன் விஜய்.

உன்னிடம் நான் என் காதலை வெளிபடுத்தி நீ அதை ஏறக்க மறுத்தலோ அல்லது சிறிது காலம் பழகிவிட்டு பிரிந்து சென்றாலோ நான் என்ன நிலையில் இருப்பேன் என தெரியவில்லை. அதுவரை நான் கொண்டுள்ள உன்மீதான காதல் எனுள்ளே இருக்கட்டும்.

ஆம் காதல்தான் அவளே அவளை உணர்ந்து கொண்டாள் ஆனால் அதை நினைத்து அவளால் சந்தோஷ பட முடியவில்லை. தன் வாழ்வில் அவனால் வசந்தத்தை கொண்டு வர முடியுமா தன் காயங்களை ஆற்றுவான என அவளால் கூறமுடியவில்லை

இதை அனைத்தும் நினைத்து கொண்டே வெகுநேரம் அதே இடத்தில் அமர்ந்திருந்தாள் அவளுடைய பாட்டி கூப்பிடும் வரை


நிறைவாள்..................

Hai friends, next update போட்டுவிட்டேன் படித்து எப்படி இருக்கு என சொல்லுங்க வானதியோட மனநிலையை கூறுவது போல் இந்த update இருக்கும் படித்து விட்டு மறக்காம எப்படி இருக்கு என்று ஒரு இரண்டு வார்த்தை சொல்லிவிட்டு போங்க and 16 updateல் தேவியின் அம்மா அவளை ஏற்காத வாரு அமைந்துள்ளது அந்த update நிறைய பேர் அவங்களுடைய கருத்துகளை கூறி இருந்திர்கள் அது மிகவும் என்னை கவர்ந்தது. அதில் வரும் நிகழ்வு போல் நானும் நானும் இரண்டு நிகழ்வுகளை சந்தித்து உள்ளேன் ஒன்று செவிவழி கேட்டது மட்டொன்று நேரில் பார்த்தது. எனக்கு தெரிந்த ஒருவர் கூற கேட்ட நிகழ்வு

ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக எட்டு முறை அவர்கள் கரு தரித்து உள்ளார் ஆனால் அதில் அவருக்கு ஆண் குழந்தை பிறக்க வில்லை அதோடு பிறந்த குழந்தைகள் 6 இறந்துவிட்டதாம் போதிய ஊட்ட சத்து கொடுக்காத காரணங்களால் பிறக்கும் போதே இறந்துவிட்டது அதை கேக்கும் பொது நிஜமாகவே நிறைய கோவம் வந்தது

மட்டொன்று நான் எனது அக்கா விட்டில் சில நாட்கள் தங்கிருந்த பொது அந்த தெருவில் நடந்தது தனது மருமகளுக்கு பெண்குழந்தை பிறந்து விட்டது என அந்த மாமியார் அந்த குழந்தையை தொட கூடவில்லை அந்த மருமகளையும் பார்த்து கொள்ள வில்லை அதற்கும் அவர்களுக்கு அது முதல் குழந்தை friends இந்த இரண்டு நிகழ்வுகளும்தான் என்னை இந்த மாதிரி எழுத தூண்டியது. இப்படியும் மனிதர்கள் இன்னும் இருக்கின்றனர் என அப்பொழுது தெரிந்து கொண்டேன்.
அன்பு, ஈவு இரக்கம், கருணை
பாசம், நேசம் இவைகளின்
பிறப்பிடமாக, இருப்பிடமாக
பெண்களை பெருமையாக
நினைத்து நாம் எல்லோரும்
போற்றுகின்றோம்

ஆனால் வானதிதேவியின்
தாய் மற்றும் நீங்கள் மேலே
சொன்னது போல நிறைய
பெண்கள், தாய்மைக்கே
களங்கம் சேர்க்கூடிய
அளவில்தான் வாழ்கிறார்கள்

எனக்குத் தெரிந்த ஒரு
பெண்மணிக்கு நான்கு
ஆண் மற்றும் மூன்று பெண்
குழந்தைகள்
இவர்களில் கடைசி ஆண் and
கடைசி பெண் குழந்தை
இருவரையும் அந்தத் தாய்க்கு
பிடிக்காது
இது என்ன அநியாயம்?
அது ஏனென்று கணவர்
கேட்டாலும் அவரிடம் சரியான
காரணம் இல்லை
இப்படியும் சில தாய்க்குலங்கள்
இருக்கத்தான் செய்கிறார்கள்

எல்லோருமே ராணி காந்தாரி
தேவியாகி விட முடியுமா என்ன?
தான் பெற்ற நூறு குழந்தைகளில்
ஒருவரைக் கூட காந்தாரி
தேவியார் வெறுக்கவில்லை
தன்னுடைய நூறு மகவுகளையும்
ஒரே மாதிரியாகத்தான் பேணிப்
பாதுகாத்தார்
ஒரு குழந்தையின் பெயரைக்
கூட மறக்காமல் அவரவரின்
பெயரை சொல்லித்தான்
அழைத்து தன்னுடைய
குழந்தைகளை கொஞ்சுவார்
அவரல்லவோ தாய்?
என்னைப் பொறுத்தவரை
மற்றவர்கள் எல்லோருமே
பேய்கள்=தான்ப்பா, நளினி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
யாரு அந்த பிரகாஷ்-ன்னு
ரொம்பவே குழம்பினேன்,
நளினி டியர்
ஒருவேளை வானதியின்
அக்காள் கணவனோ-ன்னு
நினைத்தேன்
அப்படியில்லை, பிரகாஷ்
வானதி, அனிதா இருவரின்
சீனியர்-ன்னு சொல்லிட்டீங்க

அடப்பாவி, அக்கா புருஷனும்
வானதிக்கு இடைஞ்சல்
செஞ்சானா?
அடுத்த லவ்லி அப்டேட்டுக்கு
ரொம்ப ஆவலுடன் வெயிட்டிங்,
நளினி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top