என்னில் நிறைந்தவளே - 17

Advertisement

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
என்னில் – 17

தருண் தேவியை எழுப்ப முயன்றான் ஆனால் அவள் அசையவே இல்லை பின் அவளை தனது தோள்மேல் சாய்த்து கொண்டு காரை அவளின் வீடு நோக்கி செலுத்த ஆரம்பித்தான்.

தேவியின் வீட்டை அடைந்ததும் அவன் அவளை தூக்கும் பொது அவள் don’t tuch me என்றாள். அவனோ இதுல மட்டும் தெளிவா இரு ஆனா எழுப்பனா மட்டும் எழுந்தராத என்று கூறி அவளை தூக்கி கொண்டு உள்ளே சென்றான்

அவன் தேவியை தூக்கிகொண்டு வரவும் பாட்டி என்னபா ஆச்சு எதுக்கு தேவியை தூக்கி கொண்டு வருகிறாய் அவளுக்கு எதுவும் இல்லையே என்று பதைபதைப்புடன் கேட்டார்

தருண் “ஒன்றும் இல்லை பாட்டி பார்டியில் தெரியாமல் ஏதோ குடித்துவிட்டாள்”
பாட்டி “வேற ஒன்றும் இல்லைதான நன்றாக தானே இருக்காள்”

தருண் “ஒன்றும் இல்லை பாட்டி காலையில் சரியாகிவிடுவாள்”
பாட்டி “சரி பா தருண் அவளோட ரூம் மேல இருக்கு அங்க அவளை படுக்க வைத்துவிடு”

அறையில் அவளை படுக்க வைத்துவிட்டு அந்த அறையை தனது பார்வையால் அளந்தான்

அறை மிகவும் தூய்மையாக பொருட்கள் குறைவாகவே கொண்டிருந்தது. ஒரு பெட், ஒருபுறம் மேசை அதன்மேல் fileகள் அழகாக அடுக்கிவைக்க பட்டிருந்தது, மற்றொருபுறம் இரண்டு கபோர்டுகள் இருந்தது அதில் ஒரு கபோர்டில் புத்தகங்கள் வரிசையாக அடுக்கபட்டு கண்ணாடி கதவுகள் கொண்டு மூடபட்டிருந்தது. மற்றொருபுறனம் பால்கனி செல்லும் கதவு இருந்தது.

புத்தகம் நிறைய படிப்பாள் போல ஆன நமக்கும் புத்தகங்களுக்கும் வெகு தூரம் ஆச்சே.சரி விடு தருண் பார்த்து கொள்ளலாம். அவன் மனமோ என்ன இருந்தாலும் நாளைக்கு உனக்கு மனைவியாக வரபோறவள் இவளுக்காக புத்தகம் படிக்க கற்று கொள்ளவேண்டியது தான் நீ என்று அவனிடம் கூறியது

இதை நினைத்து கொண்டே சென்று தருண் பால்கனி கதவை திறந்தான், திறந்ததும் பூக்களின் நறுமணம் அவன் நாசியை துளைத்தது அந்த நறுமணத்தை உள்வாங்கியவன் அப்படியே நின்றான் காரணம் அங்கிருந்து தோட்டத்தை பார்க்கும்போது போது இந்த இரவுவேளையும் விளக்குகளின் வெளிசத்தில் ரம்யமாக காட்சி கொடுத்தது. பால்கனியின் ஒருபுறம் ஊஞ்சல் இருந்தது அதன்வேலை பாடு அவனை கவர்ந்தது அந்த ஊஞ்சல் அதில் அமர்ந்து தோட்டத்தை பார்க்குமாறு அமைந்திருந்தது.

அவனுக்கு அங்கிருந்து நகரவே மனம் இல்லை அந்த பூக்களின் நறுமணமும் அதன் ரம்யமான அமைப்பும் அவனை இழுத்தது இருந்தும் பால்கனி கதவை சாத்திவிட்டு உள்ளே வந்தான். வந்தவனின் கண்களில் பட்டது மேசையின் மேல் இருந்த வானதியின் புகைப்படம். அதில் ஒரு பக்கம் அவளது சிறுவயது படமும் மறுபுறம் இப்போதைய படமும் இருந்தது அதை எடுத்து ஆசையாக வருடினான் பின் அதே இடத்தில் வைக்க சென்றவன் மனம் வராமல் அந்த புகைப்படத்தை எடுத்து தனது சர்டினுள் வைத்து கொண்டான்.

பின் பாட்டியிடம் பேசிவிட்டு கிளம்பும்முன் பாட்டி நான் உங்களிடம் ஒன்று கேட்கலாமா

பாட்டி “என்ன பா தருண்”
தருண் “தேவி யாரை காதலித்தாள்”

பாட்டி “உன்னிடம் அனைத்தும் கூறிவிட்டாளா”

தருண் “இல்லை பாட்டி என்னால் உன்னை ஏற்கவும் முடியாது விளக்கவும் முடியாது என்றும் என்னுடைய வாழ்க்கையில் நான் செய்த இரு தவறு அப்பா ௯ப்பிட்ட உடன் அவருடன் சென்றது மற்றொன்று அவன் காதலை ஏற்றுகொண்டது என்றாள்”

பாட்டி “அது என்னமோ உண்மைதான் இது இரண்டுமே அவள் வாழ்க்கையில் நிகழ்ந்திருக்க வேண்டாம்”
தருண் “அப்படி என்ன நடந்தது பாட்டி”

வேண்டாம் தருண் அதை பற்றி சொல்ல நான் விரும்பவில்லை சொல்ல என்ன அதை பற்றி நினைக்கவே விரும்பவில்லை உன்மேல் நம்பிக்கை வந்து உன்னை விரும்ப ஆரம்பித்தால் அவளே என்ன நடந்தது என்று ௯றுவாள்”

தருண் “நிச்சையமாக அவள் என்னை விரும்ப ஆரம்பித்துவிட்டால் பாட்டி”

அப்படி நடந்தால் முதலில் சந்தோஷம் அடைவது நானும் அவளில் தாத்தாவும் தான்

சரி பாட்டி நான் கிளம்புகிறேன் என்று அங்கிருந்து தனது அப்பார்ட்மெண்டை வந்தடைந்தான் ரமேஸ் அவனது வேளைகளில் முல்கியிருந்ததால் இவன் வந்ததை பார்க்கவில்லை. ரமேஷ் பார்க்கவில்லை என்று தெரிந்ததும் நிம்மதியடைந்தான் பின் அவனிடம் மாட்டினால் அவ்வளவுதான் கிண்டல் செய்தே ஒருவழி ஆக்கிவிடுவான். மெதுவாக நடந்து தனது அறையை அடைந்து தான் கண்விழித்தவுடன் பார்க்கும் படி வானதியின் புகைப்படத்தை வைத்தான் பின் குளித்துவிட்டு வந்து படுத்தான்.

படுத்தவனுக்கு உறக்கம் வந்தபாடில்லை தேவி ௯றியதே மனதில் ஓடிகொண்டிருந்தது. அவள் ௯ரியதை நினைக்கும்போதே அவளின் பெற்றோர்களின் மீது அளவிட முடியாத கோவம் வந்தது.அதை ஒதுக்கி அப்படி என்ன நடந்திருக்கும் அவளின் தந்தையுடன் சென்றதில் என்றும் பின் ஏன் அவளை காதலிக்கிறேன் என்று ௯றி பின் விட்டுசென்றான் என்றும் அவனில் சிந்தனை தோன்றியது

அவனின் மனமோ அவன் விட்டு சென்றதால்தான் உனக்கு வானதி கிடைத்தால் என்றது அவனிடம் ௯றியது

அதன்பின் வானதியின் புகைப்படத்தை எடுக்கு கைகளில் வைத்து கொண்டு அதனுடம் பேச ஆரம்பித்தான். உன்னோட வாழ்க்கையில் இவ்வளவு நடந்திருக்கா வானதி இன்னும் மீதம் உன் வாழ்வில் நடந்ததையும் என்னிடம் சொல்லிவிடு வானதி அப்பொழுதாவது உன்னுடைய இறுக்கமும் மனதின் பாரமும் குறையட்டும். இதுவரை உன்னுடைய வாழ்வில் எது நடந்திருந்தாலும் சரி இனி உன்னிடம் எந்த கஷ்டமும் நெருங்காது பார்த்துகொள்வேன் என அவளின் புகைப்படத்தை பார்த்து உறுதியளித்தான்.

அதன் பிறகே உறக்கம் அவனை தழுவியது


நிறைவாள்...............

Hai friends next update போட்டுவிட்டேன் படித்து எப்படி இருக்கு என சொல்லுங்க friends
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top