என்னில் நிறைந்தவளே - 15

Advertisement

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
என்னில் – 15

நாட்கள் கடக்க நாளுக்கு நாள் தருணுக்கு தேவியின் மீது கொண்திருந்த காதல் அதிகரித்ததே தவிர குறையவில்லை

இப்பொழுதெல்லாம் தேவியும் தருண் தன்னை பார்ப்பதை விரும்ப ஆரம்பித்து இருந்தால் அதுவும் அவன் அன்று hospital சென்ற போது நடந்ததை பற்றி அவளிடம் கேக்கவும் இல்லை அவனது பார்வையில் எந்த மாறுபடும் இல்லை என்பதையும் நன்கு உணர்ந்திருந்தாள்
ஆனால் அதை தருணிடம் வெளிகாட்டி கொள்ளவில்லை

கன்ஸ்ட்ரக்ஷன் யூனியன் சார்பில் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தனர். அனிதா தனது குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்று தேவியை மட்டும் சென்று வருமாறு கூறினாள்

தேவிகோ அங்கு தனியாக செல்வதில் விருப்பம் இல்லை எனவே தருணிடம் “mr.விஜய் இன்று மாலை பார்ட்டி இருக்கிறது நீங்க என்னோட வரிங்க என்றாள்”

தருணும் அவளுடம் செல்ல விரும்பி வருவதாக கூறினான்

தருணும்,தேவியும் பார்ட்டிக்கு சென்றனர் தேவி அனைவரிடமும் நன்றாக பேசிக்கொண்டும்,உணவு உண்ட படியும் இருந்தாள். தருண் பிறரிடம் பேசி கொண்டிருந்தாலும் அவனின் பார்வை தேவியிடமே நிலைகொண்டிருந்தது

தேவியின் அருகில் அருணும், அவனுடைய தந்தையும் இன்னும் சிலரும் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் என்ன அருண் நீயும் தேவியின் தோற்கடிக்கணும் என்று முயற்சி செய்கிறாய் ஆனால் ஒன்னும் நடந்த மாதிரி தெரியவில்லையே என்றனர்

தேவியின் அருகில் இவர்கள் நின்று பேசுவதை கவனித்த தருண் விரைந்து தேவியின் உடன் சென்று நின்று கொண்டான்

மீண்டும் அவர்களில் ஒருவன் என்ன சொல்லு தருண் நம்ம தேவி மேடமை தொழிலில் வீழ்த்த முடியாது. மற்றொருவனோ அருணை பார்த்து நீ தேவி கிட்ட எப்படி பிஸ்னஸ் செய்கிறது என்று கற்றுக்கொள் என்றான்

இவர்கள் பேசியதை கேட்டு எரிச்சலடைந்த அருண் நான் எல்லாம் யார்கிட்டையும் போய் பிஸ்னஸ் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை முதலில் அவளுக்கே ஒன்றும் தெரியாது இவள் காண்ட்ராக்ட் எல்லாம் எப்படி வாங்குகிறாள் என்று எனக்குதானே தெரியும்

என்ன அருண் இப்படி சொல்கிறாய் அவங்க அப்படி என்ன செய்தார்கள்

அருண் “காண்ட்ராக்ட் விடுகிற கம்பனி MD யை மயக்கி வாங்குகிறவளுக்கு எப்படி பிஸ்னஸ் பற்றி தெரியும்”

இதை கேட்ட தேவியின் உள்ளம் கொதித்தது இன்னும் இது போன்று எவ்வளவு சந்திக்க வேண்டுமோ இன்னும் இந்த உலகில் ஒரு பெண் ஆண்களை விட ஒருபடி மேலே சென்றால் முதலில் அவர்களை காயபடுத்த உபயோகிப்பது அவர்களின் கற்பு நிலையைதான் எப்பொழுது இவை மாறுமோ என நினைத்து

ஒரு நொடி அமைதியாக நின்று தன்னை நிதானபடுத்தி கொண்டு ராஜாராமை(அருணின் அப்பா) நோக்கி சென்று என்ன சார் நீங்க உங்க வீட்டு பொண்ணுகளை வைத்துதான் உங்களுக்கு வருகின்ற அனைத்து காண்ட்ராக்ட் வாங்குகின்றீங்களா அதனால் தானோ என்னையும் அப்படி நினைத்துவிட்டார் போல உங்கள் மகன் என்று பதிலடி கொடுத்துவிட்டு நகர்ந்தாள்

தருண் அவள் பதில் கொடுத்ததை நினைத்து மனதிலே அவளை கொஞ்சி கொண்டான் என் ஸ்வீட்டி,டாலி அப்படியே உன்னை கட்டிபிடித்து கிஸ் பண்ணனும் போல இருக்கு எங்க பக்கத்தில் வந்தா அடித்துவிடுவாயோ என்று பயமாக இருக்கு நமக்கு மட்டும் கல்யாணம் ஆகட்டும் உன்னை எப்படி கொஞ்சுறேன் என்று மட்டும் பார்

அவள் பதில் கொடுத்துவிட்டு நகர்ந்ததும் அருணை சுற்றி நின்றவர்கள் அவனை பார்த்து சிரித்தனர் அதில் ஒருவன் என்ன அருண் அவங்களை கேவள படுத்தறேன் சொல்லி நீதான் இப்ப கேவளபட்டு நீற்கிறாய்

ராஜாராமோ ஏன்டா அருண் இது நமக்கு தேவையா எப்படி பேசிட்டு போறபாரு இனிமே அவளை எப்படி அவமானபடுத்தனும் நினைக்காமல் நம்ம கம்பனிய எப்படி முன்னுக்கு கொண்டுவருவது என்று பாரு

தனது தந்தை பேசியதை கேட்டு அதிக கோவமடைந்த அருண் பக்கத்தில் இருந்த பேரரை அழைத்து அவனிடம் ஜூசில் போதை மாத்திரை கலந்து தேவிக்கு கொடுக்குமாறு கூறி பணத்தை கொடுத்தான்

அருண் “இப்ப எப்படி அவமானபட போகிறாள் என்று பாரு”

அந்த பேரரும் அருண் சொன்னது போலவே ஜூசை தயார்செயிது தேவிக்கு கொடுத்தான். அவன் கூறியது போலவே அந்த பேரரும் தேவியிடம் ஜூஸ்சை கொடுத்தான். அதை அவள் பருகியதும் சிறிது சிறிதாக போதை ஏற தொடங்கவும் நடை தள்ளாடியது

தேவியை தேடி வந்த தருணோ தெரிந்த ஒருவரிடம் மாட்டி கொண்டான் அவரிடம் பேசியபடியே பார்வையை சுழற்றினான் தேவி கண்டதும் அவள் நடை தள்ளாடுவதை கண்டு அவரிடம் விடைபெற்று வந்து தேவியை தாங்கி வானதி,வானதி என்று ௯ப்பிட்டான் அவனை பார்த்து விஜய் என்று கூறி அவனை கட்டிகொண்டாள்

அவளின் நிலையை கண்டு யாரின் கவனத்தையும் கவராவண்ணம் கார் பார்க்கிற்கு அழைத்து சென்று அவளின் கன்னத்தை தட்டி என்னை பாரு வானதி என்னத்த குடித்த. அவளோ தருணின் மீதே சரிந்தாள்.

இனி ஒன்றும் செய்ய இயலாது என உணர்ந்த தருண் வானதியை காரில் அமர்த்தி காரை எடுத்தான். அவர்கள் சென்றதை பார்த்த அருண் கோவம் அதிகரிக்க அவர்களையே பார்த்து கொண்டிருந்தான்

வானதி தருணின் மீதே சரியவும் அவளின் நிலையை கண்டு தருணின் மனம் அலைபாய தொடங்கியது இது சரி வராது என்று அவளை நேராக அமர்த்தி சீட் பெல்டை போட்டுவிட்டான்

அவளோ போதையில் டேய் விஜய் என்றாள்

அவள் ௯ப்பிட்டதை கேட்டு காரை சடன்பிரேக் போட்டான் (என்ன ஒரு மரியாதையை என்று நினைத்து கொண்டான்)

அவள் மீண்டும் விஜய் என்னை பாருடா, நீ எதுக்கு என்னை அடிகடி ஆபீஸில் வைத்து பார்த்து கொண்டே இருக்க அந்த பார்வை என்னை ஏதோ பண்ணுதுடா நான் யாரிடமும் அப்படி உணர்ந்தது இல்லை

இதை கேட்டு தருண் இனிமையாக அதிர்ந்தான். இத்தனை நாள் அவளிடம் எந்த மாற்றமும் இல்லையே என்று நினைத்திருக்க அவளை தனுடைய செயல் பாதிப்பதை நினைத்து மகிழ்ச்சி கொண்டான்


நிறைவாள்..............
 

banumathi jayaraman

Well-Known Member
நெனைச்சது ஒண்ணு
நடந்தது ஒண்ணு
அதனாலே முழிக்குது
அருணோட டோங்கிரிக்கண்ணு
உன்னோட அந்த
நொள்ளைக்கண்ணை
ஒரு நாள் இல்லை ஒரு நாள்
தருண் விஜய், தோண்டப்
போறாண்டா, அருண் டாக்
அன்னிக்கு உனக்கு
தருணிடம் செமத்தியா
பூஜை இருக்குடி,
அருண் மாப்பி
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top