என்னில் நிறைந்தவளே - 1

Advertisement

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
என்னில் – 1

மிக பெரிய வளாகத்தில் கன்ஸ்ட்ரக்ஷன் துறை சார்பாக விருது வழங்கும் விழா ஆரம்பிக்க ஏதுவாக பரபரப்பாக காணப்பட்டது. நிறைய வி.ஐ.பிகள் அதில் கலந்து கொள்ள வந்திருந்தனர்.

அதி வேகத்தில் ஒரு கார் அந்த வளாகத்தில் நுழைந்தது. அதிலிருந்து ஒரு யுவதி இறங்கினாள். அவள் யார் என்று பார்ப்போம். அவள்தான் வானதிதேவி பார்பதற்கு சாதாரண பெண்களை போல் தோன்றினாலும் தன்னம்பிக்கையும்,தைரியமும் மிக்கவள் அதோடு மித மிஞ்சிய பிடிவாத குணமும் உடையவள் அவளின் அந்த பிடிவாத குணத்தால் உருவானவை V.D கன்ஸ்ட்ரக்ஷன் அதனின் MD வானதிதேவி,அதன் JMD அனிதா தேவியின் ஆருயிர் தோழி

அவள் வளாகத்தில் நுழையும் போது அனைத்து கேமராக்களும் இவளை படம் பிடித்தது. செய்தியாளர்கள் பேட்டி எடுக்க இவளை நோக்கி வந்தனர் அனைவரையும் தவிர்த்துவிட்டு உள்ளே சென்றாள்.

உள்ளே நுழைந்து அவளுடைய தோழி அனிதா அவளுக்காகவே காத்திருந்தாள் அவளின் சென்று அருகில் அமர்ந்தாள்.

அனிதா “தேவி பாட்டி வரவில்லையா”
தேவி “இல்லை”

விருது வழங்கும் விழா ஆரம்பம் ஆக இருவர் கவனமும் மேடை நோக்கி சென்றது.

மேடையில் பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

விருதுகள் அறிவிக்கப்பட்டது. சிறந்த தொழில் நுட்பத்திற்கான விருது பெறுவது அருண் கன்ஸ்ட்ரக்ஷன் என அறிவிக்க அதை அதன் JMD அருண் பெற்றுகொண்டான். தொடர்ந்து பல விருதுகள் வழங்கப்பட்டது. பின் சிறந்த கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனிக்கான விருதை பெறுவது V.D கன்ஸ்ட்ரக்ஷன் என அறிவிக்க வானதிதேவி மற்றும் அனிதா இருவரும் சேர்ந்து பெற்றுகொண்டனர். அதை தொடர்ந்து சிறந்த இன்ஜினியர்கான விருதை வானதிதேவி பெற்றுகொண்டாள்.

விருது வழங்கும் விழா முடிந்ததும் விருந்து ஆரம்பம்மானது. நிறைய பேர் வந்து தேவி மற்றும் அனிதாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர். அதில் ராஜாராம் ( அருண் கன்ஸ்ட்ரக்ஷன் MD) “தேவி வாழ்த்துகள் மா” என்றார்.

தேவி “ நன்றி சார் “

ராஜாராம் “ஏ மா கல்யாணம் எப்ப பண்ணிக்க போறதா இருக்க, அருணுக்கு பொண்ணு பார்த்துக்கிட்டு இருக்கேன் , உனக்கு சம்மதம்னா சொல்லு இரண்டு பேருக்கும் கல்யாணத்தை முடிச்சிடலாம்”

தேவி “எனக்கு இப்போதைக்கு idea இல்லை சார்” என்று கூறி அந்த இடத்தை விட்டு நகர்ந்து அனிதா அமர்ந்துள்ள இடத்தில் வந்து அமர்த்தாள்.

அனிதா “என்ன தேவி, ராஜாராம் சார் உன்னிடம் வந்து பேசின மாதிரி இருந்தது”

தேவி “அதை ஏன் கேக்கின்றாய் அந்த அருணை நான் கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டார்”

அனிதா “எதுக்கு, அவனை கல்யாணம் பண்ணி வைத்து இரண்டு கம்பனியையும் ஒன்னாக்கவா,சரியான கேடியா இருக்காரு. நீ என்ன சொன்ன”

தேவி “எனக்கு விருப்பம் இல்லைனு சொல்லிட்டேன்”

அனிதா “ஏண்டி இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்க போற. இந்த அருண் இல்லைனா வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கலாம் இல்ல”.

தேவி “எல்லாம் தெரிந்தே நீ இப்படி கேக்கலாமா”

அனிதா “அதுக்கு இப்படியே வாழ்க்கை முழுவதும் இருக்க போறியா”

தேவி “வேற எதை பத்தி வேண்டும் என்றாலும் பேசு இந்த ஒரு விசியத்தை பற்றி மட்டும் பேசாதே”
அனிதா மனதில் இதை பற்றி பாட்டிகிட்ட முதலில் பேச வேண்டும் என்று நினைத்து கொண்டாள்.

(நிறைவாள்)............

படித்து விட்டு எப்படி இருக்கு என்று சொல்லிவிட்டு போங்க friends. this my first try........
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "என்னில்
நிறைந்தவளே"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
நளினி ஸ்ரீ. p டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top