எனை (ஏ)மாற்றும் காதலே - 17

#1
IMG_20200115_111531.jpg

அத்தியாயம் 17:

இனி தன் திட்டத்தை சீக்கிரம் செயல்படுத்த வேண்டும் என்று முடிவு செய்த ஆதித் உடனடியாக திஷாவிற்கு தொடர்பு கொண்டான். அவள் அழைப்பை ஏற்றவுடன் "திஷா உடனே நீ சென்னையில் இருக்க நம்ம கெஸ்ட் ஹவுஸுக்கு வா" என்று கூற, அவளோ " நான் சூட்டிங் நடுவுல இருக்கேன். இப்போ என்னால வர முடியாது. நாளைக்கு நான் ஃப்ரீ. மத்தியானத்துக்கு மேல தான் எனக்கு ஷூட்டிங். நான் காலையில வரட்டுமா" என்று கேட்க அவனோ "முடியாது நீ இப்பவே வா" என்று கூறிவிட்டான்.

அவளும் வேறு வழியில்லாததால் தனது டைரக்டரை தொடர்பு கொண்டவள் "சார் எனக்கு உடம்பு சரியில்லை என்னால ஷூட்டிங் அட்டென்ட் பண்ண முடியாது. நம்ம ரெண்டு நாள் கழிச்சு என்னோட ஷாட்டை வச்சுக்கலாமா" என்று கேட்க அவள் இது மாதிரி இதுவரை கேட்டது இல்லை என்பதால் அவரும் சரி என்று கூறிவிட்டார்.


பின் அங்கிருந்து தனது உதவியாளர் மூலம் ஒரு கார் ஏற்பாடு செய்தவள் அவசர அவசரமாக ஐந்து மணி நேரத்தில் ஆதித்தின் கெஸ்ட் ஹவுஸ் வந்து சேர்ந்தாள். அவளுக்காக காத்திருந்தவன் "வாங்க மேடம் எப்படி இருக்கீங்க" என்று கேட்க, அவளோ "என்னாச்சு ஆதி ஏன் உடனே வர சொன்னீங்க" என்று கேட்க, " உன்னோட ரிஷி பையா என்ன பாக்க வந்திருந்தாங்க" என்று கூறினான்.

அவளுக்கு அதை கேட்டவுடன் அவர் எதற்காக வந்து இருப்பார் என்று புரிந்தது.

அவளுக்கு மனதிற்குள் ஒரு திடுக்கிடல் ஏற்பட்டாலும் தன்னுடைய ஆதி இதை எளிதாக எடுத்துக் கொள்வான் என்று நினைத்துக் கொண்டு அவள் அமைதியாக நின்றாள். அதுமட்டுமில்லாமல் என்றேனும் இது அவனுக்கு தெரிய வேண்டிய விஷயம் அல்லவா இப்பொழுதே தெரிவது நல்லது என்று அவளது மனம் கூறியது.

அவனோ "என்ன விஷயம் என்று கேட்க மாட்டியா" என்று கேட்க, அவள் "எனக்கு என்ன விஷயம்னு புரிஞ்சிடுச்சு. அதனால அதை நான் கேட்கவில்லை" என்று கூறினாள்.

ஆதித் "பரவாயில்லையே கரெக்டா கண்டுபிடித்து விட்டாயே" என்று கூறிவிட்டு அங்கிருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான். ஆதித் "இப்ப நான் அடுத்து என்ன பண்ணனும்னு நீ நினைக்கிற" என்று அவளைப் பார்த்து கேட்க அவளோ அவனை புரியாத பார்வை பார்த்தாள்.

அவளது குழம்பிய முகத்தை கண்டவன் "என்ன நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரியலையா. சரி நான் நேரடியாவே சொல்ற நம்ம பிரேக் அப் பண்ணிக்கலாம். நம்ம கல்யாணத்தை கூட நிறுத்திவிடலாம் என்ன ஓகே தான" என்றான் சர்வசாதாரணமாக. அவளுக்கு முதலில் அவன் என்ன சொன்னான் என்றே புரியவில்லை, பின் தன்னிலை வந்தவள் "விளையாடாதீர்கள் ஆதித். எதுல விலயடுறதுனு இல்ல" என்று கோபமாக கூறினாள்.

அவனோ "நான் ஏன் விளையாடனும். ஐ ஆம் சீரியஸ் திஷா. விளையாடுற அளவுக்கு இனிமேல் உன்கிட்ட எனக்கு எந்த உறவும் இல்லை என்று நினைக்கிறேன். எனக்கு உன்ன பிடிக்கல. அதனால நம்ம பிரேக் அப் பண்ணிக்கலாம்" என்று கூறினான்.

மறுபடியும் "விளையாடாதீங்க இது விளையாடுற விஷயம் இல்ல. என்ன காரணத்துக்காக பிரேக்கப் என்று சொல்றீங்க" என்று கேட்க, அவனோ "எனக்கு உன்ன பிடிக்கல. அதனால நான் உன்கிட்ட பிரேக்கப் பண்ணிக்கிறேன்" என்று கூற அவளுக்குக் கண்களில் கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டியது.

" நீங்க என்ன பேசுறீங்க என்று தெரிஞ்சுதான் பேசுறீங்களா. எதுக்காக இப்படி பேசுறீங்க நான் என்ன தப்பு பண்ணேன். ஏன் இவ்வளவு நாள் என்ன புடிச்சு தானே காதலிச்சுட்டு இருந்தீங்க. இப்ப ஏன் என்னை பிடிக்கல" என்று கேட்க, அவனோ "நான் இவ்வளவு நாள் உன்ன காதலிச்சேன் என்று யார் சொன்னா. நான் உன்னை காதலிக்கல காதலிக்கிற மாதிரி நடிச்சேன்" என்று சொன்னான் விட்டேர்தியாக.

அவள் தலையில் இடி இறங்கியது போல் அவனை பார்த்தாள். பின் "இல்ல நீங்க பொய் சொல்றீங்க. நான் உங்க கண்ணுல உண்மையான காதலை பார்த்தேன். நீங்க நடிக்கலை" என்று அவன் இவையாவும் பொய் என்று சொல்லிவிட வேண்டும் என்ற நப்பாசையில் கூற, "என்னம்மா நீ சொன்னா நம்ப மாட்டேன்ற. நிஜமா நான் உன்னை காதலிப்பது போல் நடிக்கத் தான் செய்தேன். நீ என் கண்ணில் கண்டதெல்லம் காதல் இல்லை. ஒருவேளை நான் நடிகன் என்பதால் அப்படி நடித்து இருப்பேனோ என்னவோ." என்றான் அசட்டையாக.

அவள் மனமோ 'இல்லையே அவன் கண்களில் நான் உண்மையான காதலை கண்டேனே. அது பொய்யில்லை. நடிப்பு இல்லை. அவனுடைய அக்கரை எல்லாத்தையும் நான் அருகில் இருந்து பார்த்தேனே. இது எப்படி அவன் பொய் என்று சொல்றான். இல்ல இதுல வேற ஏதோ இருக்கு" என்று நினைத்தவளுக்கு, திருமணம் பற்றிய பேச்சுக்கள் ஞாபகத்திற்கு வர, அவனிடம் "பொய்யா இருந்தா நீங்க எப்படி வீட்டுல எல்லாம் சொல்லுவீங்க. கல்யாண சம்பந்தம் எல்லாம் பேசுவீங்க. பத்திரிகையில கூட நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் என்று சொல்லிட்டீங்களே. அப்ப அதெல்லாம் உண்மை என்றுதானே அர்த்தம்" என்று தேம்பியபடி கூற,


அவனோ வாய்விட்டு சிரித்தவன் "நான் பிடிச்சிருக்குன்னு சொன்ன ஒரே காரணத்திற்காக தான் என்னோட அம்மா அப்பா எந்த மறுபேச்சும் இல்லாமல் உன்னை திருமணம் செய்துக்க ஒத்துக்கிட்டாங்க. அதே மாதிரிதான் நான் உன்ன புடிக்கலைன்னு சொன்னா அவங்களும் மறுபேச்சு பேசாம ஒத்துக்குவாங்க. அவங்களுக்கு உன்னை விட பெற்ற பையனா நான் தான் முக்கியம். இது எல்லாம் ஒரு பெரிய விஷயமே கிடையாது. பத்திரிக்கையில் வந்தது எல்லாம் பிரச்சினை இல்ல எனக்கு. எத்தனையோ பேர் லவ் பண்ணிட்டு வேற ஒருத்தர கல்…" என்று ஆரம்பித்தவன், தான் கூறவந்ததை உணர்ந்து, அப்படியே நிறுத்தி “ ப்ரேக் அப் பண்றது இல்லையா” என்று சொல்ல அவளால் அதை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. அவனுக்கோ வாய் வார்த்தையாக கூட இன்னொருவரை திருமணம் செய்துகொள்வேன் என்று அவளிடம் கூறமுடிவில்லை.

அவன் கால் அருகே மண்டியிட்டு அமர்ந்தவள் "என்ன பிரச்சனை தயவு செஞ்சு சொல்லுங்க ஆதி. நாம சேர்ந்து சமாளிக்கலாம். ஆனால் இப்படி வார்த்தைகளை விட்டு என்னை உயிரோடு கொன்று விடாதிங்க. நீங்க தான் என் வாழ்க்கை என்று நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன். இந்த மாதிரி எல்லாம் பேசாதீங்க" என்று கதறினாள்.


அவள் அழுவதை பார்த்தவன் சீக்கிரம் அவளை தன்னிடம் இருந்து. ஒதுக்கி வைக்க வேண்டும் என்று. நினைத்து முக்கியமான ஆயுதத்தை கையில் எடுத்தான்.

“ ஆமா நீ பைத்தியமாமே.. அப்படியா ?? “ என்று அவளை கேட்டவன் “ நல்லவேளை உன்னோட ரிஷி பையா இப்போ சொல்லிவிட்டார். இல்லைனா என் நிலமை என்ன ஆகிருக்கும். என் அம்மா அப்பா கிட்ட உன்கூட ப்ரேக் அப் பண்ண என்ன காரணம் சொல்லலாம் என்று யோசிச்சுகிட்டு இருந்தேன். இந்த காரணம் எனக்கு ஓகே. “ என்றான் குரோதத்துடன் வழியும் பார்வையோடு.

அவளுக்கோ தன்னவனா தன்னை பைத்தியம் என்று கூறினான்u, அவனுக்காக என்னுடைய அனைத்தயும் இழக்க துணிந்தேனே. அவன் சொல்வது அனைத்தையும் கேட்டு ஒரு அடிமை போல் அல்லவா இருந்தேன். இப்படி என்னை ஏமாத்தி விட்டேனே என்று மனதினுள் கதறினாள்.

“ எனக்கு ஒரு சந்தேகம். நீ மனநிலை பாதிக்கப்பட்ட பெண் என்று வெளியே சொன்னால் எப்படி உனக்கு அடுத்த பட வாய்ப்பு வரும். உன்னோட கேரியர் பாதிக்காது” என்றான் சந்தேகம் போல். “ ஹிந்தி சினிமாவின் முன்னணி நாயகி திஷா மனநிலை பாதிக்கப்பட்டவரா?? “ என்று பத்திரிக்கைகளில் வந்தா எப்படி இருக்கும் “ என்று கூறி அவளை உயிருடன் கொன்று கொண்டு இருந்தான் அவன் வார்த்தைகளால்.

ஆனால் அப்பொழுது கூட அவள் அவளது காதலை விட்டு கொடுக்க முனையவில்லை. அவள் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு "ப்ளீஸ் இப்படியெல்லாம் பேசாதிங்க. எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. நீங்க இல்லனா என்னால உயிரோடவே இருக்க முடியாது. நான் என்னோட ஒரே ஒரு உறவா உங்கள நினைச்சுகிட்டு இருக்கேன். நீங்க ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க. இதுக்கு நீங்க என்ன உயிரோட கொன்றிருக்கலாமே" என்று கூற, அவன் அவளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மனதிலும் தன்னவளை இந்த நினைவு நிலையில் பார்க்க மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால் அதற்காக அவளை பழி வாங்காமல் விடவும் மனதில்லை. தன் மனதை திடப்படுத்திக் கொண்டு மேலும் அவளை வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தான். தன் உணர்வுகளை அவள் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதில் கவனத்தோடு. .l

அவளோ சற்று நிதானித்து " என்னை முதல்ல இருந்து காதலிக்கவே இல்ல வெறும் நடிப்பு அப்படின்னு சொல்றீங்க அப்ப நீங்க நடிக்கிறதுக்கு ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும். அப்படி அது என்ன காரணம் என்ன பழி வாங்குற அளவுக்கு அதையாவது சொல்லுங்க. நான் என் மேல தப்பு இருந்தா கண்டிப்பா அதை ஒத்துகிட்டு உங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்" என்று நேரடியாகக் கேட்க, அவனும் அவளை ஒரு மெச்சும் பார்வை பார்த்து "பரவாயில்லை கண்டுபிடிச்சிட்ட" என்றான்.


"உனக்கு ஞாபகம் இருக்கா. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி மும்பை ஹோட்டல்ல ஒருத்தன் உன் கையை பிடித்து இழுத்தான் என்று சொன்னியே. அது யார் தெரியுமா என்னுடைய நண்பன் பிரகாஷ். உன்னால அவன் இப்போ உயிரோட இல்ல. அது உனக்குத் தெரியுமா. அவன் உயிரை விட்டதற்கு காரணம் நீ மட்டும் தான். " என்று அவன் கோபமாக கத்த, அவளோ அவன் கர்ஜனை குரலில் சர்வமும் நடுங்க பின்னல் நகர, அவள் கையை பிடித்து தன் முன்னே இழுத்தவன், “இப்போ உனக்கு புரியுதா” என்று கேட்க, அவள் அவனை புரியாத பார்வை பார்த்தாள். " இதுல நான் என்ன தப்பு பண்ணினேன்" என்று புரியாமல் திக்கிதிணறி கேட்க, “ உன்னால தான் அவன் உயிரை விட்டான்” என்று கூற,. அவளோ “ சத்தியமா அது நான் அறிந்து செய்த விஷயம் இல்லை. பிளீஸ் நீங்க நினைக்கிற மாதிரி நான் எதுவும் பண்ணல” என்று கூறினாள்.

அவனோ “என்ன உண்மைய மறைக்க பார்க்கிறாயா” என்று கூற, “ அய்யோ நிஜமா இல்லை. நீங்க ஏதோ தப்பா நினைத்து கொண்டு இருக்கிறீர்கள்” என்று எதுவோ சொல்ல வர, அவன் “எனக்கு தெரியும்” என்று அன்று நடந்ததை நினைவுகூர்ந்தான்.

ஆதித் மற்றும் பிரகாஷ் சிறு வயது முதலே நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். பள்ளி கல்லூரி தொடங்கி அவர்களது நட்பு நெருங்கி வளர்ந்து கொண்டே இருந்தது. ஆதித் மிகவும் தைரியசாலி. ஆனால் பிரகாஷ் மிகவும் பயந்தவன். எந்த விஷயத்திற்கும் அவனுக்கு பயம் அதிகம். ஆதித் ஒரு ஆண்மகன் இவ்வளவு பயப்படுவது தவறு என்று அவனுக்கு எவ்வளவு கூறியும் அவன் தன் பயத்தில் இருந்து வெளிவரவே இல்லை.

கல்லூரி காலத்திற்கு பின் மேல் படிப்பு படித்த ஆதித் நடிப்பு தொழிலுக்கு வந்துவிட, பிரகாஷ் தனக்கு தெரிந்தவர்கள் சிலருடன் கூட்டாக தொழிலை தொடங்கி நடத்த ஆரம்பித்தான்.

அப்பொழுது அவர்களுடன் கல்லூரியில் இளநிலை படித்த ஒரு நண்பனின் திருமணம் மும்பையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் அதற்கு ஆதித் பிரகாஷ் இருவறும் மும்பை வந்திருந்தனர். அப்பொழுது ஆதித் பிரகாஷிடம், அவனது தொழிலை பற்றி கேட்க அவன் தன் கனவுகளை அவனுக்கு விவரித்துக் கூறினான். "எனக்கு ரொம்ப பெரிய ஆசை இல்லடா. எனக்கு இந்த தொழிலை நல்லா உயர்த்தி என்னோட அம்மா அப்பாவிற்கு அவங்களுக்கு புடிச்ச மாதிரி ஒரு வீடு எங்க சொந்த ஊர்ல ஒரு தோட்டம் இதெல்லாம் அமைத்து தரனும். என்னோட தொழிலில் மென்மேலும் உயர்ந்த ஒரு பெரிய தொழிலதிபராக போன தடவை உங்க அப்பா வாங்க சிறந்த தொழிலதிபர் விருதை ஒருமுறையாவது எனக்கு வாங்கணும்னு ஆசை இருக்கு" என்று தன் கனவைப் பற்றி கூற, அவனும் " சீக்கிரம் எல்லாம் நல்லபடியாக நடந்திடும் நீ கவலைப்படாத. ஆனா அப்ப ராகுல் உனக்கு போட்டியாக வருவான்" என்று விளையாட்டுக்குக் கூற அவனும் "ராகுல் தான அவன் எனக்காக விட்டுக்கொடுத்த விடுவான். எனக்கு அவனைப்பற்றி தெரியும்" என்று கூற “டேய் நான் வங் வங்குவேன்னு தைரியமா சொல்லுடா” என்று கூற, அவனோ “என்னை பத்தி உனக்கு தெரியாதா” என்று கூற இருவரும் சிரித்துக் கொண்டனர்.

ஆதித் அவனுடைய கனவுகள் சீக்கிரம் நிறைவேற வேண்டும் என்று எண்ணினான், ஏனென்றால் அவன் இவர்களைப் போல வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவன் கிடையாது. ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன். அவனது கனவுகளை ஆதித் அவர்களது பள்ளி கல்லூரி நாட்களில் இருந்தே கேட்டுக் கொண்டு இருக்கிறான். ஆதலால் சீக்கிரம் அது நிறைவேற வேண்டுமென்று நண்பனுக்காக வேண்டிக்கொண்டான்.

அவர்களது நண்பனின் திருமணம் ரிஷியின் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் இருவரும் அவரது திருமணத்திற்காக அந்த ஹோட்டலுக்கு வந்தனர். அப்பொழுது ஆதித் திஷாவின் மிகப்பெரிய ரசிகன் ஆக இருந்தான். அவனது அறை முழுவதும் திஷாவின் படங்களை ஒட்டி இருக்கும். அவன் என்னதான் நடிக்க வந்திருந்தாலும் ஒரு ஃபேன் ஆக அவளை மிகவும் ரசிப்பான்.

ரிசப்ஷனில் கலந்துகொண்டு விட்டு இருவரும் வெளியே வர, அப்பொழுது திஷா வேகமாக அவர்களை கடந்து சென்றதை பிரகாஷ் பார்த்து விட்டான். அவனுக்கு தெரியும் அல்லவா ஆதித்க்கு மிகவும் பிடித்த நடிகை என்று. உடனே "அங்க பாரு உனக்கு புடிச்ச திஷா போறாங்க" என்று கூற அவனும் அப்பொழுதுதான் திரும்பிப் பார்த்தான்.

பின் " அட ஆமா" என்று அவன் நினைக்க, " நீயும் ஒரு ஹீரோதான. நீ பேசு" என்றான் அவன். ஆதித் " இல்லடா நான் இப்பதான் புதுசா வந்திருக்கேன். என்ன அவங்களுக்கெல்லாம் தெரியாது. அது மட்டும் இல்லாமல் இப்போது போய் பேசினால் என்ன சொல்லுவாங்களோ தெரியலை" என்று தயங்க பிரகாஷ் "இரு நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்" என்று வேகமாக திஷா பின்னால் சென்றான்.

ஆதித் அவனை தடுக்க முயல, அதற்குள் அவர்கள் உடன் படித்த மற்றொரு மாணவன் அவன் கையை பிடித்து இழுக்க, அவனிடம் வேறு விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தான்.

ஆதித் எப்படியும் பிரகாஷால் திஷாவிடம் பேச முடியாது என்ற நம்பிக்கையில் தன்னுடைய பழைய நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தான்.

எதேச்சையாக திரும்பியவன் பிரகாஷ் திஷாவின் கையை பிடிப்பதை பின்னால் இருந்து பார்த்தவன், ஏன் இப்படி செய்கிறான் என்று யோசிக்க அடுத்த நிமிடம் திஷாவின் பாதுகாவலர்களால் அவன் அடித்து நொறுக்கப்பட்டன்.


பிரகாஷ் திஷாவை அழைத்துக் கொண்டே அவளது பின்னால் சென்றவன் அவள் அவனது அழைப்பை கவனிக்காமல் வேகமாக செல்ல அவளது கையைப் பிடிக்க, அவள் கைகளில் நெட்டட் துணியாக இருந்ததால், அது அப்படியே அவன் கையை பிடித்து இழுக்க கையோடு வந்தது. அதை கண்டு அங்கிருந்த பாதுகாவலர்கள் அவனை அடித்து விட்டனர். ஒரு நிமிடம் அதிர்ச்சியாக இருந்தாலும் பின் சுதாரித்த திஷா வேகமாக அங்கிருந்து நகர்ந்து விட்டாள். சரியாக அப்பொழுதுதான் பிரகாஷை அவளுடைய பாதுகாவலர்கள் அடிப்பதை கவனித்தான் ஆதித். வேகமாக அவன் அருகில் செல்ல முயல அதற்குள் அவர்கள் அவனை அடித்து தள்ளிவிட்டனர். அவனை வேகமாக வந்த தாங்கிக் கொண்டவன், பின் தாங்கள் தங்கியிருந்த அறைக்கு அவனை கைத்தாங்கலாக அழைத்துச் சென்றான்.


ஆதித் "தெரியாம கைய புடிச்சதுக்கா இவ்வளவு பண்றாங்க. என்ன மனுஷங்களோ. எல்லாம் திமிரு பெரிய ஆளா ஆயிட்டாங்க என்கிற திமிரு" என்று அவளைத திட்ட பிரகாஷ், ஏதோ ஒன்று அவளை பற்றி சொல்ல வர அதற்குள் ஆதித்தின் கைபேசி சிணுங்கியது. அதை எடுத்தவன் அடுத்த நாள் அவனுக்கு ஷூட்டிங் இருப்பதாக அவனது உதவியாளர் கூற சரி என்று வைத்தவன், "நீ ரெஸ்ட் எடு" என்று கூறி படுக்க வைத்தான்.

அடுத்த நாள் காலை எழுந்து ஆதித் தன் மொபைலை எடுத்து பார்த்தவுடன் கண்டது திஷாவின் பாதுகாவலர்களிடம் பிரகாஷ் அடி வாங்கும் காட்சி தான். அது நெட்டில் முழுவதும் பரவி இருந்தது. அவனுக்கு அதை கண்டு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. கூடவே சில ஊடகங்களிலும் நடிகையை மானபங்கப்படுத்த முயன்ற நபர் என்று அவனது படத்தைப் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தனர். இதை கண்டு அதிர்ச்சியாகி திரும்பிப் பார்க்க பிரகாஷ் தனது கைப்பேசியை வெறித்துக் கொண்டிருந்தான்.

அவனும் அதை பார்த்து தான் இப்படி இருக்கிறான் என்று எண்ணியவன் "நான் இதைப் பார்த்துக்கொள்கிறேன் . என்ன என்று கேட்கிறேன்" என்று கோபப்பட அவனோ "இல்லடா நீ விடு" என்று கூறிவிட்டான். அவனது வாடிய முகம் அவனை பாதித்தாலும் உடனடியாக அவர் ஹைதராபாத் செல்ல வேண்டி இருந்ததால் "நீ தனியா இருந்துகொள்வாயா" என்று கேட்க "ஆமாண்டா நான் கொல்கத்தா போகவேண்டிய வேலை இருக்கு. நான் இங்கிருந்து போய்க்கிறேன். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை" என்று கூறிவிட்டான். ஊடகத்தில் ஒன்று பரவினால் அதன் உண்மை நிலை தெரியாமல் பலரும் அதை பகிர்ந்து விடுவார்களே அப்படி தான் பிரகாஷ் அடிவாங்கியதும் பரவியது. செய்திகளிலும் ஃபேஸ்புக் முதலியவற்றில் பிரகாஷ் அடி வாங்கிய வீடியோ அதிகம் பகிறப்பட்டது.

மனமே இல்லாமல் அங்கிருந்து கிளம்பிய ஆதித் ஹைதராபாத் ஷூட்டிங்கை முடித்து சென்னை வந்த பின்தான் பிரகாஷ் கொல்கத்தாவிற்கு சென்றபோது அங்கேயே தன்னைத்தானே தீயிட்டுக் கொண்டு இறந்துவிட்டான் என்ற செய்தி கிடைத்தது. மிகவும் அதிர்ச்சி அடைந்தவன் அவனது தாய் தந்தையரை தொடர்புக்கொள்ள அவர்களோ 'எங்ககிட்ட எதுவும் கேட்காத தம்பி. நாங்களே எங்க பையன் போன மன வருத்தத்தில் இருக்கிறோம். கொஞ்ச நஞ்ச அவமானமா" என்று சொல்லி கைபேசியை அணைத்து விட அவனுக்கு மிகவும் அதிர்ச்சியாய் இருந்தது.

சாதாரணமாக கையை பிடித்ததை மானபங்கம் என்று கூறி இப்படி மாற்றி விட்டார்கள் என்று அவனுக்கு தோன்றியது ஆனால் அவனுக்கு தான் நடந்த உண்மை முழுவதும் தெரியாதே.

தன் நண்பனின் சாவிற்கு காரணம் திஷா தான் என்று அவன் உறுதியாக நம்பினான். அவள் மட்டும் தன் பாதுகாவலர்களை கொண்டு அவனை அடிக்காமல் இருந்திருந்தால் அவனது நண்பனுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டு இருக்காதே. தன்னை தானே நெருப்பு வைத்துக்கொள்ளும் அளவுக்கு சென்றிருக்கிறான் என்றால் அவன் மனதில் எவ்வளவு வலி இருக்க வேண்டும் என்று நினைத்து மருகினான்.

அதனாலேயே அவளை பழிவாங்க எண்ணினான். தனக்காக சென்று தானே தனது நண்பனுக்கு இத்தகைய அவமானம் என்று அவன் மனம் அவனது நண்பனுக்காக வாதிட்டது. அவளை எப்படி அணுகுவது என்று தெரியாமல் இருக்க திஷா தானாக வந்து அவன் வலையில் சிக்க அதை வாய்ப்பாக நினைத்துக் கொண்டவன் அவளை நெருங்க அனைத்து திகுடுதத்தங்களையும் செய்தான். இப்பொழுது அவளை தன் காலடியில் விழுகவும் வைத்துவிட்டான்.பின் குறிப்பு: இது வேலன்டின்ஸ் டேய் ஸ்பெஷல் UD என்பதை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
 
#9
உண்மையான காதல் எத்தனை விட்டுக் கொடுக்கும் என்பதை திஷா நடத்தையில் தெரிகிறது. ஆனால் இத்தனை கொடூர மனம் படைத்தவனைத்தான் மீண்டும் பெண்கள் அந்த ஆண் மன்னிப்பு கேட்டதும் மன்னிக்கிறார்கள்
 
Advertisement

Sponsored