எனது இதயம் கனிந்த நன்றிகள்! பாராட்டுக்கள்!!

Advertisement

Sasireka

Member
கலர்ஸ் :-
ஒரு மனிதன் எவ்வாறு அடையாளப்படுத்தப்படுகிறான் ? ஒவ்வொரு மனிதனும் ஒரு நிறம் கொண்டு அறியப்படுகிறான். மனிதனது பிறப்பும் அதன் மூலமாக வரும் இனம், மொழி, பண்பு, குடும்பம் மற்றும் உறவுகள் கொண்டு சமுதாயத்தின் பார்வைக்கு ஒரு வடிவமாகிறான். இதுவே ஒருவருடைய வாழ்க்கைக்கு அடிப்படையாகிறது. இதைக்கொண்டே ஒரு மனிதனது குணம் விமர்சிக்கப்படுகிறது. பிறக்கும் குடும்பம் , அதனால் வரும் பண்பும், பணமும் நல்லதும், கெட்டதும், பாவ புண்ணியங்களும் அந்த மனிதனையே சாரும். ஆக , பிறப்பால் ஒருவனை நல்லவன் என்றோ, கெட்டவன் என்றோ உருவகப்படுத்த்துவது எப்போதும் சரி ஆகாது என்பது என் கருத்து.. படைத்தவன் ஒரு விதையை உருவமாக்கி, உயிர் கொடுத்து இந்த மண்ணில் ஜனிக்கச் செய்கிறான், அவ்வளவே.
அடுத்ததாக அவன் வளரும் சூழல். ஆம், வளர்க்கப்பட்ட விதமும், வளர்ந்த சூழலும், தான் பார்த்து கடந்து வந்த விஷயங்களும், சுய அனுபவமும், சுய சிந்தனையும் மட்டுமே ஒரு மனிதனை உருவகப்படுத்த முடியும்.
வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவத்தை கொடுக்கிறது. அதன் கண் கொண்டே , ஒவ்வொரு விஷயங்களையும் சரி என்றும் தவறு என்றும் கணிக்கிறோம் , அதன்படி செயல்படுகிறோம். இந்த விதத்தில் தெரிந்தோ தெரியாமலோ மற்றவர்களை காயப்படுத்தி விடுகிறோம் அல்லது காயப்பட்டுவிடுகிறோம். இதன் பொருட்டே , நம் ஒவ்வொருவரது வாழ்வில் வரும் மனக்காயங்களும், பிரச்சனைகளும்.
அந்த வகையில் , மல்லிகா மணிவண்ணன் மற்றும் பிற தோழிகள் எழுதிய படைப்புக்களை வாசிக்கும்பொழுது, என் நினைவுகளை முழுதாக ஆட்கொண்டு விடுகிறது. பல நேரங்களில், எனது காயத்திற்கு மருந்தாகவும், தீர்வாகவும் இருக்குமென்றால் மிகையாகாது. எல்லா நேரமும், இதுபோன்ற விஷயங்களை பார்த்தோம் படித்தோம் என்று கடந்து சென்றுவிட முடிவதில்லை. அதன்பொருட்டே, என் கருத்துக்களைப் பகிர இந்த சிறு பதிவு.
மல்லிகா மணிவண்ணன் மற்றும் இந்த வலைதளத்தில் தங்கள் படைப்புகளை கொடுத்துக்கொண்டிருக்கும் அனைத்து தோழியர்க்கும் என் நன்றிகள் பாராட்டுக்கள்..!
 

mallika

Administrator
நன்றி சசி நன்றி
உங்களின் வார்த்தைகளுக்கு
என் சார்பாகவும் இங்கு எழுதும் அத்தனை தோழிகளின் சார்பாகவும் மிக்க நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top