எந்தன் காதல் நீதானே P1

Advertisement

Ramya Rajan

Well-Known Member
Hi Friends :)

Thank you for all your support :love: Hope you all will enjoy this new story :)

Here comes the precap for first update.

அன்றைய விழாவுக்கான ஒப்பனையுடன் சக்தி திருமண மண்டபம் சீரியல் விளக்குகளால் ஜொலிக்க, உள்ளே உறவும், சுற்றமும், நட்பும் கலந்த கலவையாக மனிதத் தலைகள். விழாவுக்கான பிரத்யேக ஆடையில் அனவைரும் இருக்க... அனைவரின் கவனத்தையும் கவரும் வகையில் மேடையில் நிச்சயம் நடந்து கொண்டிருந்தது.
பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் வெற்றிலை பாக்கு மாற்றி முடிக்க, நிச்சய பட்டை எடுத்துக் கொண்டு மணமகள் அறைக்கு பெண்கள் சிலர் செல்ல, எல்லோரின் விழியும் மணமகளின் வரவை ஆவலாக எதிர்பார்த்து இருக்க.. அங்கிருந்தோரின் எதிர்பார்ப்பை பொய் ஆக்காமல், தங்க நிறத்தில் நீல வண்ண பார்டர் வைத்த பட்டுடுத்தி, வெண்ணிலா தேவதையாக நடந்து வந்தாள்.
மேடைக்கு எதிர்புறம் இருந்து வந்தவள், அவளைப் பார்த்ததும் மலர்ந்து புன்னகைத்த உறவுகளுக்கு பதிலுக்கு தானும் அவரக்ளைப் பார்த்து புன்னகைத்தவாறு சென்றவள், தனது தாய்மாமன் ஜெயராமை பார்த்ததும் ஆர்வம் தாங்காமல், மலர்ந்து முகத்துடன் "வாங்க மாமா." என்றாள்.
அவரும் பதிலுக்கு புன்னகைக்க, அதற்குள் மேடையில் இருந்து அவளை வேகமாக வர சொல்லி அழைப்பு வர.. தங்கை மகளின் தோளில் தட்டிக் கொடுத்த ஜெயராமன், "போ மா..." என்றார்.
வெண்ணிலா மேடையை நோக்கி சென்றாலும், முன்பு போல அவளால் நடக்க முடியவில்லை. யாரோ தன்னை உறுத்துப் பார்ப்பதைப் போல உணர்ந்தாள். அதன் பிறகு அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. மேடைக்கு சென்றதும் சபைக்கு நமஸ்காரம் செய்தவள், அவளுக்குகாக போடப்பட்டிருந்த இருக்கையில் உட்கார, முதலில் அவளின் வருங்கால மாமியார் நலங்கு வைக்க, அடுத்து அவள் அம்மா என வரிசையாக பெண்கள் நலங்கு வைக்க, வந்திருந்த பார்வையாளர்கள் பக்கம் பார்ப்பதை மட்டும் வெண்ணிலா கவனமாக தவிர்த்தாள்.

******************************************************************************************************************


அவளின் வருங்கால கணவன் கரன் தன் நண்பர்கள் புடைசூழ வந்தவன், அவளோடு நின்று சில புகைப்படங்கள் மட்டும் எடுத்து விட்டு கீழே சென்று விட்டான்.
அவளுக்கு அவனிடம் புதிதாக வெட்கமோ படபடப்போ இல்லை. சின்ன வயதில் இருந்தே அவனைத் தான் திருமணம் செய்யப்போவதாக இரு வீட்டிலும் பேசி வைத்திருந்தனர்.
கூட்டம் எல்லாம் குறைந்த பின்தான் வெண்ணிலாவின் தாய்மாமன் குடும்பம் மேடை ஏறி வந்தது. கூடவே வெண்ணிலாவின் தாய் மகேஸ்வரியும் வந்தார். தனது தாய் வீட்டு சொந்தம் என்பதில் தாயின் முகம் மலர்ந்திருப்பதைப் பார்த்தவள், மனம் கனிந்தது. அவர்களை வரவேற்கும் விதமாக புன்னகைத்தவளின் முகம், எதிர்பார்த்தவர் வராததால் சிறிது ஏமாற்றம் கொண்டது.
தனது அருகில் நின்ற தாய்மாமாவின் பிள்ளைகளை பார்த்து புன்னகைத்தவள், “ஜெய் அத்தான் எங்க?” என கேட்க, எல்லோரின் பார்வையும் திகைப்பை காட்ட... “அவன் வரலைன்னு சொல்லிட்டான்.” என்றார் அவளின் அத்தை அமுதா பட்டென்று.
எல்லோரும் வீட்டை போட்டுட்டு வர முடியாது இல்லையா... கல்யாணத்துக்கு வருவான் என ஜெயராமன் சொல்ல, வெண்ணிலா கேட்டுக் கொண்டாள்.
ச்ச.. வரவே இல்லாதவனை நினைச்சு தான் நாம இவ்வளவு நேரம் பயந்திட்டு இருந்தோமா என நினைத்தவளுக்கு, ஒரு பக்கம் விடுபட்ட உணர்வு இருந்தாலும், சிறிது ஏமாற்றமும் எட்டிப் பார்த்தது.

*******************************************************************************************************************

வீட்டிற்கு வந்து ஒப்பனையை கலைக்கும் போதும் வெண்ணிலாவுக்கு அவன் நினைவு தான். நகைகள் ஒவ்வொன்றாக கழட்டியபடி, வேறு எதோ நினைவுகளில் இருந்தாள்.
“ஏன் வரலை?”
“இன்னும் கோபமா?”
சின்ன வயதில் விடுமுறைக்கு தாயுடன் பாட்டி வீட்டிற்கு சென்றிருக்கிறாள். இரண்டு தாய் மாமாவும் அதே வீட்டில் தான் இருக்கிறார்கள். ஒரு சித்தி சற்று தள்ளி இருக்கிறார். வளர்ந்த பிறகு அவள் தந்தை வழி பாட்டி அவளை அங்கு செல்ல விட்டது இல்லை.
கடைசியாக அவனை அவர்கள் பாட்டி இறந்த அன்று பார்த்தது. இவள் காரில் சென்று இறங்க, ஹாலில் கைகளை கட்டிக் கொண்டு இவளையே பார்த்து இருந்தான். அவன் பார்வையில் இருந்து ஒன்றும் அறிய முடியவில்லை.
பாட்டியை கொண்டு செல்லும் வரைதான் அங்கே இருந்தாள். அதன்பிறகு அவள் அப்பா அவளை தனது தங்கை மாற்றம் தாயுடன் அனுப்பி வைத்து விட்டார்.
வெண்ணிலாவுக்கு இருக்க வேண்டும் என ஆசைதான். ஆனால் யார் அவளது விருப்பத்தைக் கேட்பது.

*******************************************************************************************************************

அவள் உடை மாற்றும் போது வெளியே அவளின் அத்தை அன்பரசி குரல் கேட்டு, உடைமாற்றி விட்டு அவள் வெளியே செல்ல, அங்கே அன்பரசியோடு கரனும் இருந்தான்.
“அவன் இன்னைக்கே சென்னைக்கு போறான். அதுதான் சொல்லிட்டு போக வந்தான்.” என அன்பரசி சொல்ல,
“வரேன் வெண்ணிலா...” என்றவன், மற்றவர்களிடமும் விடைபெற்று செல்ல,
“பிறகு உனக்கு போன் பண்ணி பேசுவான்.” என்றார் அன்பரசி. இவரே மகனுக்கும் சேர்த்து பேசுவார் என நினைத்தவள் அறைக்குள் சென்று விட.. மற்றவர்களும் களைந்து சென்றனர்.
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

ஜெய் அத்தான் தான் மாப்பிளையாவரோ???
பாட்டிக்கு பிடிக்கலை அம்மா வழி சொந்தம்......
மாமா ரொம்ப பாவமா இருக்கிறாரே......

கரண் பார்த்து நோ reaction.......
அன்பரசி அத்தை தான் ரொம்ப பேசுவாங்க போல.......
 
Last edited:

Ramya Rajan

Well-Known Member
:love::love::love:

ஜெய் அத்தான் தான் மாப்பிளையாவரோ???
பாட்டிக்கு பிடிக்கலை அம்மா வழி சொந்தம்......
மாமா ரொம்ப பாவமா இருக்கிறாரே......

கரண் பார்த்து நோ reaction.......
செல்வி அத்தை தான் ரொம்ப பேசுவாங்க போல.......

ஹாய் ஜோ :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top