எட்டிப்பார்க்கும் எண்ணங்கள்

Advertisement

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
வேர் விட்டு கிளைப்பரப்பிய
பெரு மரம் கூட
வேரோடு வெட்டி எறிந்து
வேறிடம் நட்டால்
வாழாதே....!
காலம் காலமாய்...
உயிர்ப்பெற்று
உறவுற்று
உறைவிடமான பூமியைப்
பிரிகிறோம்....
இருக்க இடமின்றி
திரிகிறோம்....
புலம் பெயரும் எங்களுக்கு
புலர் இல்லையோ..?!
இடர் இல்லா
இருள் பொழுதில்லையோ...?!
அகல விரிந்த அகிலத்தில்
அடைக்கலம் தேடுகிறோம்....
பிறந்த மண்ணைப் பிரிகிறோம்
இடம் தேடி அலைகிறோம்....
இறுதியாய்...
அடையாளம் துறந்து
அனைத்தையும் இழந்து
அன்னிய நாடொன்றில்
அகதியாய் மாறுகிறோம்....
❣️

--------------------

வார்த்தைகள் மட்டும் கொண்டு
வடிப்பது கவிதைகள் அல்ல....
அது வறண்டு போன
மனதின் வலிகளாக இருக்கலாம்....
ஒரு இரவின் தனிமையையும்
பயத்தையும் உங்களிடம் கடத்துவதாகவும் இருக்கலாம்...
சொல்ல முடியாத சொற்களாகவும்
இருக்க கூடும்...
குளிர் இரவின்
வெம்மையைக் கூட உணர்த்துவதாகவும் இருக்கலாம்...
சில கவிதைகள்
மௌனங்களின் மொழிப்பெயர்ப்பாகவும்
கூட இருக்கலாம்....
அது என்னவாயினும்
என்னகத்தில் வருகையில்
கவிதை
என சொல்லி அரவணைத்துக் கொள்கிறேன்
கொஞ்சம் அன்போடு....
❣️

---------&


யாரை நினைத்து எழுதுகிறேன்
என கேட்கிறார்கள்...?
யாரையாவது நினைத்து தான்
எழுத வேண்டுமா என்ன???
கவிதை என்
மனவெளியின் மழைவாசம்...
மழைக்கால மண்வாசம்
என் சுதந்திர காற்றில்
பறக்கும் பட்டாம்பூச்சிகள்...
என் விடுதலை தோட்டத்தின்
பன்னீர்ப்பூக்கள்....
யாரையோ..??
எதையோ..??
எப்போதும் சாராமல்
விடுதலை வெளியில்
உலா வருவன
என் கவிதைகள்....
அவற்றிற்கு
இலக்கணமும் இல்லை....
இலக்குகளும் இல்லை....
❣️

-----&&&&&&
சிலர்
இப்படி எழுது என்கிறார்கள்
சிலர்
இப்படி தான் எழுத வேண்டும் என்கிறார்கள்
சிலர்
இப்போது எழுது எனவும்
சிலர்
எப்போதாவது எழுது எனவும்
எதையாதவது சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்
ஆனால்
நானோ...
எப்போதாவது
எதையாவது எழுதி
கவிதை
என சொல்லி நம்ப வைக்கிறேன்...
❣️

########

ஒரு மழைக்கால மாலையில்
தோட்டத்து மரத்தின் இலை ஒன்றில்
தேங்கி நிற்கும் மழைத்துளி
தானாக கீழே விழும்...
தள்ளி விடும் அவசியம் ஏதுமின்றி
அது சில சமயம்
சின்ன பறவையின் தாகத்தைத் தீர்க்கலாம்...
ஒரு‌ குயில் கீழே போட்டிருந்த
விதைக்கு நீர் விட்டிருக்கலாம்...
வழியில் போகும் சிறுமி மேல்
விழலாம்....
இல்லை வெறுமனே
மண்ணில் விழுந்து
நிலத்தடியில் சென்றிருக்கலாம்...
அந்த மழைத்துளியை போல்
எங்காவது ஓரிடத்தில் சென்று
சேருமென எண்ணித்தான்
எழுதிகிறேன்
என் கவிதைகளை.....
❣️


@@@@@@
பிடிச்சிருக்கா சொல்லுங்கள்....:love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
வேர் விட்டு கிளைப்பரப்பிய
பெரு மரம் கூட
வேரோடு வெட்டி எறிந்து
வேறிடம் நட்டால்
வாழாதே....!
காலம் காலமாய்...
உயிர்ப்பெற்று
உறவுற்று
உறைவிடமான பூமியைப்
பிரிகிறோம்....
இருக்க இடமின்றி
திரிகிறோம்....
புலம் பெயரும் எங்களுக்கு
புலர் இல்லையோ..?!
இடர் இல்லா
இருள் பொழுதில்லையோ...?!
அகல விரிந்த அகிலத்தில்
அடைக்கலம் தேடுகிறோம்....
பிறந்த மண்ணைப் பிரிகிறோம்
இடம் தேடி அலைகிறோம்....
இறுதியாய்...
அடையாளம் துறந்து
அனைத்தையும் இழந்து
அன்னிய நாடொன்றில்
அகதியாய் மாறுகிறோம்....
❣️

--------------------

வார்த்தைகள் மட்டும் கொண்டு
வடிப்பது கவிதைகள் அல்ல....
அது வறண்டு போன
மனதின் வலிகளாக இருக்கலாம்....
ஒரு இரவின் தனிமையையும்
பயத்தையும் உங்களிடம் கடத்துவதாகவும் இருக்கலாம்...
சொல்ல முடியாத சொற்களாகவும்
இருக்க கூடும்...
குளிர் இரவின்
வெம்மையைக் கூட உணர்த்துவதாகவும் இருக்கலாம்...
சில கவிதைகள்
மௌனங்களின் மொழிப்பெயர்ப்பாகவும்
கூட இருக்கலாம்....
அது என்னவாயினும்
என்னகத்தில் வருகையில்
கவிதை
என சொல்லி அரவணைத்துக் கொள்கிறேன்
கொஞ்சம் அன்போடு....
❣️

---------&


யாரை நினைத்து எழுதுகிறேன்
என கேட்கிறார்கள்...?
யாரையாவது நினைத்து தான்
எழுத வேண்டுமா என்ன???
கவிதை என்
மனவெளியின் மழைவாசம்...
மழைக்கால மண்வாசம்
என் சுதந்திர காற்றில்
பறக்கும் பட்டாம்பூச்சிகள்...
என் விடுதலை தோட்டத்தின்
பன்னீர்ப்பூக்கள்....
யாரையோ..??
எதையோ..??
எப்போதும் சாராமல்
விடுதலை வெளியில்
உலா வருவன
என் கவிதைகள்....
அவற்றிற்கு
இலக்கணமும் இல்லை....
இலக்குகளும் இல்லை....
❣️

-----&&&&&&
சிலர்
இப்படி எழுது என்கிறார்கள்
சிலர்
இப்படி தான் எழுத வேண்டும் என்கிறார்கள்
சிலர்
இப்போது எழுது எனவும்
சிலர்
எப்போதாவது எழுது எனவும்
எதையாதவது சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்
ஆனால்
நானோ...
எப்போதாவது
எதையாவது எழுதி
கவிதை
என சொல்லி நம்ப வைக்கிறேன்...
❣️

########

ஒரு மழைக்கால மாலையில்
தோட்டத்து மரத்தின் இலை ஒன்றில்
தேங்கி நிற்கும் மழைத்துளி
தானாக கீழே விழும்...
தள்ளி விடும் அவசியம் ஏதுமின்றி
அது சில சமயம்
சின்ன பறவையின் தாகத்தைத் தீர்க்கலாம்...
ஒரு‌ குயில் கீழே போட்டிருந்த
விதைக்கு நீர் விட்டிருக்கலாம்...
வழியில் போகும் சிறுமி மேல்
விழலாம்....
இல்லை வெறுமனே
மண்ணில் விழுந்து
நிலத்தடியில் சென்றிருக்கலாம்...
அந்த மழைத்துளியை போல்
எங்காவது ஓரிடத்தில் சென்று
சேருமென எண்ணித்தான்
எழுதிகிறேன்
என் கவிதைகளை.....
❣️


@@@@@@
பிடிச்சிருக்கா சொல்லுங்கள்....:love::love:
சூப்பர்ப், பவித்ரா நாராயணன் டியர்
 

Joher

Well-Known Member
எட்டி பார்த்துட்டேன்......
தண்ணியே காணோம்......
;):p:ROFLMAO:
(y)
 

Preetz

Writers Team
Tamil Novel Writer
வேர் விட்டு கிளைப்பரப்பிய
பெரு மரம் கூட
வேரோடு வெட்டி எறிந்து
வேறிடம் நட்டால்
வாழாதே....!
காலம் காலமாய்...
உயிர்ப்பெற்று
உறவுற்று
உறைவிடமான பூமியைப்
பிரிகிறோம்....
இருக்க இடமின்றி
திரிகிறோம்....
புலம் பெயரும் எங்களுக்கு
புலர் இல்லையோ..?!
இடர் இல்லா
இருள் பொழுதில்லையோ...?!
அகல விரிந்த அகிலத்தில்
அடைக்கலம் தேடுகிறோம்....
பிறந்த மண்ணைப் பிரிகிறோம்
இடம் தேடி அலைகிறோம்....
இறுதியாய்...
அடையாளம் துறந்து
அனைத்தையும் இழந்து
அன்னிய நாடொன்றில்
அகதியாய் மாறுகிறோம்....
❣️

--------------------

வார்த்தைகள் மட்டும் கொண்டு
வடிப்பது கவிதைகள் அல்ல....
அது வறண்டு போன
மனதின் வலிகளாக இருக்கலாம்....
ஒரு இரவின் தனிமையையும்
பயத்தையும் உங்களிடம் கடத்துவதாகவும் இருக்கலாம்...
சொல்ல முடியாத சொற்களாகவும்
இருக்க கூடும்...
குளிர் இரவின்
வெம்மையைக் கூட உணர்த்துவதாகவும் இருக்கலாம்...
சில கவிதைகள்
மௌனங்களின் மொழிப்பெயர்ப்பாகவும்
கூட இருக்கலாம்....
அது என்னவாயினும்
என்னகத்தில் வருகையில்
கவிதை
என சொல்லி அரவணைத்துக் கொள்கிறேன்
கொஞ்சம் அன்போடு....
❣️

---------&


யாரை நினைத்து எழுதுகிறேன்
என கேட்கிறார்கள்...?
யாரையாவது நினைத்து தான்
எழுத வேண்டுமா என்ன???
கவிதை என்
மனவெளியின் மழைவாசம்...
மழைக்கால மண்வாசம்
என் சுதந்திர காற்றில்
பறக்கும் பட்டாம்பூச்சிகள்...
என் விடுதலை தோட்டத்தின்
பன்னீர்ப்பூக்கள்....
யாரையோ..??
எதையோ..??
எப்போதும் சாராமல்
விடுதலை வெளியில்
உலா வருவன
என் கவிதைகள்....
அவற்றிற்கு
இலக்கணமும் இல்லை....
இலக்குகளும் இல்லை....
❣️

-----&&&&&&
சிலர்
இப்படி எழுது என்கிறார்கள்
சிலர்
இப்படி தான் எழுத வேண்டும் என்கிறார்கள்
சிலர்
இப்போது எழுது எனவும்
சிலர்
எப்போதாவது எழுது எனவும்
எதையாதவது சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்
ஆனால்
நானோ...
எப்போதாவது
எதையாவது எழுதி
கவிதை
என சொல்லி நம்ப வைக்கிறேன்...
❣️

########

ஒரு மழைக்கால மாலையில்
தோட்டத்து மரத்தின் இலை ஒன்றில்
தேங்கி நிற்கும் மழைத்துளி
தானாக கீழே விழும்...
தள்ளி விடும் அவசியம் ஏதுமின்றி
அது சில சமயம்
சின்ன பறவையின் தாகத்தைத் தீர்க்கலாம்...
ஒரு‌ குயில் கீழே போட்டிருந்த
விதைக்கு நீர் விட்டிருக்கலாம்...
வழியில் போகும் சிறுமி மேல்
விழலாம்....
இல்லை வெறுமனே
மண்ணில் விழுந்து
நிலத்தடியில் சென்றிருக்கலாம்...
அந்த மழைத்துளியை போல்
எங்காவது ஓரிடத்தில் சென்று
சேருமென எண்ணித்தான்
எழுதிகிறேன்
என் கவிதைகளை.....
❣️


@@@@@@
பிடிச்சிருக்கா சொல்லுங்கள்....:love::love:
Super sis:)(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top