ஊடல்

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer


“உற்றத்துணை

என்

உயிர்த்தோழியுடன்

ஊடல்”



“செல்லக்கோபம்

சிலநேரம்

சின்னசண்டை

பலநேரம்

வாக்குவாதம்

வண்டிக்கணக்காய்

இருந்தும்

வருத்தம் தராது

எங்களுக்கு

எதுவும்”



பேசாமல்

அவளை பார்க்காமல்

சிறிய பொழுதுதான்

சென்றிருக்கும்

சிறு சிரிப்போடு

சேர்த்து வைப்பேன்

அவள்

தட்டில்

என் உணவை

சிரித்த முகத்தோடு

என் தோள்

சாய்ந்திடுவாள்

இமையோரம் இருக்கும்

ஈரத்தோடு”



“ஊடல்

அது

காலாவதி ஆகிவிடும்

கள்ளமற்ற

அன்பின் காரணத்தால்”



“கலையாத

ஓவியம்

எங்கள் நட்பு

அதில்

அலங்காரமாய்

அமையும் ஊடல்

ஒவ்வொரு

ஊடலின் பின்னும்

பெருகியது

எங்கள் பாசம்”



“நட்பில்

ஒரு ஊடல்

நாளும் தேவை

நாளொரு வண்ணம்

நெஞ்சில் நிலைத்திடும்

அது நினைவுகளாய்”



“நரை முடியை

தலை தாங்கி

தள்ளாடி

நடந்திடும்

கால்கள்

தடி தாங்கிடும்

போதிலும்

நட்பின் ஊடல்

அதை

நினைத்திடும் வேளையில்

இனிய நிறைவு

உள்ளத்தில்

உண்மை நட்பின்

ஊடலினால்”



 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ஊடல்... காதலர்களுக்கும் கல்யாணம் ஆனவர்களுக்கும் தான் சொந்தமா..!! நட்பிற்குள் வரும் செல்ல சண்டைகள் சீண்டல்கள் பிராண்டல்கள் எல்லாமே அழகு அழகோ அழகு :love::love:
remembering my girls squad :love::love: we are four in number but ovvonnum ovvoru design :LOL: we use to fight for no reason :p but our love is boundless..
அருமை கனி (y)(y)
 

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
ஊடல்... காதலர்களுக்கும் கல்யாணம் ஆனவர்களுக்கும் தான் சொந்தமா..!! நட்பிற்குள் வரும் செல்ல சண்டைகள் சீண்டல்கள் பிராண்டல்கள் எல்லாமே அழகு அழகோ அழகு :love::love:
remembering my girls squad :love::love: we are four in number but ovvonnum ovvoru design :LOL: we use to fight for no reason :p but our love is boundless..
அருமை கனி (y)(y)
நன்றி அக்கா
 

Sasikala srinivasan

Well-Known Member
நெஞ்சில் பொக்கிஷங்களாய்

சேர்த்து வைத்த நேசங்களும்

பாசங்களும் செல்ல சண்டைகளும்

சமாதான கெஞ்சல்களும் கொஞ்சல்களும்

முதுமையின் தனிமையை தின்னும்

என் நினைவடுக்குகளில் தேங்கியுள்ள

பசுமரத்தாணி நட்பு
 

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
நெஞ்சில் பொக்கிஷங்களாய்

சேர்த்து வைத்த நேசங்களும்

பாசங்களும் செல்ல சண்டைகளும்

சமாதான கெஞ்சல்களும் கொஞ்சல்களும்

முதுமையின் தனிமையை தின்னும்

என் நினைவடுக்குகளில் தேங்கியுள்ள

பசுமரத்தாணி நட்பு
நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top