உழவனின் எதிரியாகும் ஆப்பிரிக்க மண்புழு!' - எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

Advertisement

Eswari kasi

Well-Known Member
உழவனின் எதிரியாகும் ஆப்பிரிக்க மண்புழு!' - எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

இந்திய மண் புழுக்களைவிட அளவில் பெரியது, அதிகம் உண்ணும், அதிக அளவில் கழிவுகளை வெளியேற்றும். ஆனால், பயிர்களையும் அழிக்கும்.

'உழவர்களின் நண்பன் மண்புழு' என்று பள்ளியில் நாம் படித்திருப்போம். ஆனால், இன்றைக்கு இந்த மண்புழுக்களே உழவர்களின் எதிரியாக மாறியிருக்கிறது என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

நிலத்தில் மேல்மட்டம், இடைமட்டம் சற்று ஆழ்நிலை என மூன்று வித மண் மண்புழுக்கள் உள்ளன. நிலத்திலுள்ள பயோமாஸ் எனப்படும் தாவரக் கழிவுகளை உண்ணும் இவை, அதனோடு சேர்த்து நிலத்தில் உள்ள தேவையற்ற பாக்டீரியாக்களையும் நோய்க்கிருமிகளையும் உட்கிரகித்து கழிவுகளாக வெளியேற்றும். இந்தக் கழிவுகள் மண்ணை வளமிக்கதாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல் நிலத்தில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுகளைத் தவிர்க்க பேருதவியாகச் செயல்பட்டு வருகிறது.


மண்ணுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் ரசாயன உரங்களைத் தவிர்த்து வரும் விவசாயிகளில் பலர் மண்புழு உரங்களை உற்பத்தி செய்து பயன்படுத்தி வருகின்றனர். வெர்மி கம்போஸ்ட் எனப்படும் மண்புழு உரத்துக்கான சந்தையும் ஓர் அளவுக்கு வளர்ச்சியடைந்து வருகிறது. மண்புழு விற்பனையில் பெரிய கூட்டமே இயங்கிவருகிறது. ஆன்லைனில் மண்புழுக்களை விற்பனை செய்யும் அளவுக்கு மண்புழு சந்தை வளர்ந்துள்ளது.

வெளியிலிருந்து மண்புழுக்களை வாங்கி, உரம் தயாரிக்கும் விவசாயிகளை அச்சுறுத்துகிறது, இந்த ஆப்பிரிக்க மண்புழுக்கள். மண்புழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மண்புழு உரத்தை பயிர்களுக்கு இடுவதன் மூலம் பயிர்களையே இந்த மண்புழுக்கள் நாசம் செய்யும் என வேளாண் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இதுகுறித்து வேளாண் ஆய்வாளர் ஃபிரான்சிஸ் கூறுகையில், "பொதுவாக நிலத்தில் சாதகமான சூழல் இருந்தால் மண்புழுக்கள் தானாக வளரும். இல்லையென்றால் நிலத்தில் சாண உருண்டைகளை வைத்தால் போதும் சில நாள்களில் மண்புழுக்கள் வந்து சேர்ந்துவிடும். ஆனால், இன்றைக்கு மண்புழு உரம் தயாரிப்பில் ஈடுபடும் சிலர் ஆப்பிரிக்க மண்புழுக்களை வெளியிலிருந்து வாங்கி பயன்படுத்துகின்றனர்.

ஆப்பிரிக்க மண்புழுக்கள் இந்திய மண்புழுவைவிட அளவில் பெரியதாக இருக்கும்; அதிகம் உண்ணும்; அதிகம் கழிவுகளை வெளியேற்றும். ஆப்பிரிக்க மண்ணில் பயோமாஸின் அளவு 4, ஆனால், இந்திய மண்ணில் 2 தான். மண்புழு உர தயாரிப்பில் ஆப்பிரிக்க மண்புழுக்களைப் பயன்டுத்துகையில் அதன் முட்டைகளும் அதிக அளவில் இருக்கும். இந்த உரத்தைப் பயிர்களுக்கு இடும்போது பயிர்களையும் சேர்த்து மண் புழுக்கள் உண்ணும் அபாயம் உள்ளது. கூடுமானவரை இந்திய மண்புழுக்களைப் பயன்படுத்துவது சிறந்தது. ஒருவேளை ஆப்பிரிக்க மண்புழுக்களைப் பயன்படுத்த வேண்டிய சூழல் நேரிட்டால் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஒருவாரம் காயவைத்து பிறகு, விளை நிலத்துக்குப் பயன்படுத்தலாம்" என்றார்.

இது குறித்து தோட்டக்கலை அதிகாரிகளிடம் கேட்டபோது, "மண்புழு உரம் தயாரிக்க பெரும்பாலும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள மண்புழுக்களை மட்டுமே பரிந்துரை செய்கிறோம். ஆப்பிரிக்க வகை மண்புழுக்களைப் பரிந்துரை செய்வதில்லை" என்றனர்.

Padithai pagirnthen
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
உழவனுக்கு நண்பன் மண்புழுன்னு சொல்லுவாங்க.. ஆனா அவங்களுக்கு எதிரியா மாறுவது வேதனையான விசயம்தான் டியர்
 

Sugaa

Well-Known Member
நானும் வந்துட்டேன். ...ம்மா. ..
தகவலுக்கு நன்றி. ..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top