உள்ளம் கொள்ளை போகுதடா - பகுதி 5

#1
உள்ளம் கொள்ளை போகுதடா
ஷக்தியின் இல்லம்

லக்ஷ்மி : ஏண்டி எங்கள டென்ஷன் பண்ணவே இப்படி லேட்டா ஆ வருவியா , மரியாதையா உள்ள போய் புடவை மாத்து

இதற்க்கு மேல் இங்கு நின்றாள் அடி நிச்சயம் என்று உணர்ந்த ஷக்தி நல்ல பிள்ளையாக புடவை மாற்ற சென்றாள் .

மாப்பிள்ளை வீட்ல வந்தாச்சு அப்படினு யாரோ சொன்னது கேட்டு ஜன்னல் வழியாக பார்க்க ஆவலாக இருந்தாள் அஸ்வினி . நம்ம ஷக்தியோ நிதானமாக அவர்கள் வாங்கி வந்த Magnum ice cream மை ரசித்து ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.

மாப்பிள்ளை வீட்டாரை உபசரித்து அமர செய்து ஒரு அறிமுக படலம் அங்கே நடந்துகொண்டிருக்க. ஷக்தியை அழைத்து வருமாறு ஆனந்தியிடம் லக்ஷ்மி கூற ஷக்தியை அழைக்க வந்த ஆனந்தி அவள் இருந்த நிலை பார்த்து தலையில் அடித்துக்கொண்டு அவள் வாயை துடைத்து சபைக்கு அழைத்துவந்தாள். ஆனந்தி மற்றும் ஷக்தியுடன் வந்த அஸ்வினி மாப்பிள்ளை யை பார்த்து திகிலுடன் ஷக்தியை பார்க்க ஷக்தியின் முகத்தில் எந்த சலனமும் இல்லை ஏன்னா ஷக்தி தான் ஷிவாவின் முகத்தை பார்க்கவே இல்லையே.

பரமேஸ்வரி ஷக்தியை அருகில் அமரச்செய்து அவளை பற்றி கேட்டுக்கொண்டிருந்தார் சபையில் ஒவ்வொருவரும் அவர்களுக்குள் பேசிக்கொள்ள வயதில் மூத்தவரான காமாட்சி பாட்டி மாப்பிள்ளையும் பொண்ணும் கொஞ்சம் தனியா பேசிக்கட்டுமே . ஷிவா பாட்டிக்கு மானசீகமாக முத்த மழை பொழிந்து கொண்டுயிருந்தான் . அப்பொழுது விஷ்ணு அவன் காதருகே வந்து

விஷ்ணு : டேய் இவங்க தான் பொண்ணு ஏன் என் கிட்ட அப்பவே சொல்லல

ஷிவா : சும்மா ஒரு டைம் பாஸ் தான் , ஏன் ஆளு உன்ன காய்ச்சி எடுக்கும் போது அவ கண்ணு ரெண்டும் மின்னல் மாதிரி மின்னுச்சி பாக்கவே அவ்வளவு அழகா இருந்துது அதான் தடுக்க தோணல டா

விஷ்ணு : அப்படியா தம்பி எல்லாம் நல்ல படியா முடிஞ்சா உன்ன தினமும் வண்ண வண்ணமா காய்ச்சி எடுப்பாங்க அப்போ உக்காந்து கண்ணுல வர மின்னல் , இடி, மழை எல்லாத்தையும் ரசி இப்போ பேச சொல்லறாங்க , பாத்து பேசு இல்ல சேதாரம் ரொம்ப அதிகமா இருக்கும்

ஷக்தியின் வீட்டு மாடி

ஷக்தி கூறிய கண்களால் ஷிவாவை இடை போட்டு கொண்டிருந்தாள். ஷிவாவிற்கு தான் வெட்கம் வந்து தொலைத்தது .

ஷிவா : என்னங்க என்ன நல்ல சைட் அடிச்சிடீங்களா , நான் தேறுவானா

ஷக்தி : Not bad

ஷிவா புன்சிரிப்பை உதிர்த்து

ஷிவா : என்ன பத்தி நான் முதல்ல சொல்லிடறேன் , நான் ரொம்ப சாதாரணமான ஆள் தாங்க அப்பா அம்மா தம்பி தங்கை அப்புறம் கொஞ்சம் நண்பர்கள் இதுதான் என் உலகம் , நான் சிகரெட்டு , தண்ணி இதெல்லாம் தொட மாட்டேன் ஏன்னா ஒரு வாட்டி ட்ரை பண்ணினனா அப்போ ரொம்ப படுத்திடுச்ச்சு . ரொம்ப புத்திசாலியெல்லாம் இல்லங்க ரொம்ப சுமாரான ரகம் தான் . எந்த ஒரு முடிவும் உடனே எடுக்க தெரியாது ஏன்னா என் முடிவால யாரும் கஷ்டப்பட கூடாதுனு ரொம்ப யோசிப்பன் . நான் என் வாழ்க்கையில உடனே ஒரு முடிவெடுத்தேன் நா அது நீங்க வாழ்க்கை துணையா வந்தா நல்லருக்கும்கறது தான். இப்போ நான் வேலைக்கு தான் போயிட்டு இருக்கன் சீக்கிரமே சொந்தமா ஒரு தொழில் தொடங்கணும் அப்படிங்கறது ஏன் ஆசை. உங்கள ஏன் புடிச்சிதுன்னு கேட்டா சத்தியமா ஏன் கிட்ட பதில் இல்ல ஆனா உங்கள ரொம்ப புடிசிடுசிச்சு உங்களுக்கு என் கிட்ட ஏதாவது கேக்கனும்னா நீங்க தரலாமா கேக்கலாம்.

ஷக்தி : உங்க பேர் என்ன ?

ஷிவா பே வென முழித்து கொண்டிருந்தான்

ஷக்தி : ஹலோ சார் என்ன உரஞ்சி போயிட்டீங்க பேர் கேட்டது ஒரு குத்தமா

ஷிவா : என் பேரு ஷிவா

ஷக்தி : ஏன் பேரு தெரியுமா ?

ஷிவா : ஷக்தி

ஷக்தி : குட் இப்போ நான் என்ன பத்தி சொல்லனுமா ஓகே , நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு அப்பா அம்மா ரொம்ப செல்லம் , நானும் சிகரெட்டு , தண்ணி இதெல்லாம் தொட மாட்டேன் ஏன்னா எனக்கு அந்த வாடை புடிக்காது நானும் ரொம்ப புத்திசாலியெல்லாம் இல்லங்க ரொம்ப சுமார் தான் , எந்த ஒரு முடிவையும் ஒடனே எடுத்திடுவன் சுருக்கமா சொல்லனும்னா ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா ஏன் பேச்ச நானே கேக்க மாட்டேன் ஆனா நான் வாழ்க்கையில ஒரு முடிவ எடுக்க தடுமாறுவது இதுவே முதல் தடவை . உங்கள புடிச்சிருக்கா அப்படினு கேட்டீங்க நா எனக்கு சொல்ல தெரியல. இப்போ ஏன் மண்டைக்குள்ள ஓடுற ஒரே விஷயம் கிழ போய் என்ன பதில் சொல்லறதுனு தான்.

ஷிவா : நான் கீழ போய் என்ன சொல்லணும் னு முடிவு பண்ணிட்டேன்

ஷக்தி : என்ன சொல்லப்போறீங்க னு நான் தெரிஞ்சிக்கலாமா ஏன்னா அதுக்கு ஏத்த மாதிரி நானும் பதில் சொல்லுவன்

ஷிவா : (ஷக்தியின் கண்களை கூர்மையா பார்த்து) என்ன கடைசி வரைக்கும் கண்கலங்காம பாத்துப்பீங்களா ஷக்தி.

ஷக்தி : (கண்களில் நீர் வழிய சிரித்த ஷக்தி) நல்லா யோசிச்சிக்கோங்க சார்

ஷிவா : என் வாழ்க்கையை ரொம்ப அழகா கொண்டு போக உங்களால மட்டும் தான் முடியும் னு தோணுது உங்களுக்கும் அப்படி தோணிக்ச்சுனா கீழ வந்து உங்க முடிவ சொல்லுங்க. அப்புறம் ஷக்தி Magnum ice cream சாப்டீங்களே நல்லா இருந்துச்சா.

ஷக்தி: பே வென முழித்து கொண்டு, உங்களுக்கு எப்படி தெரியும்

ஷிவா : அப்படி சொல்லித்தானே ஏன் கிட்ட காசு வாங்கினீங்க ,

ஷக்தி : ஓஒ நீங்கதான் அந்த நீல சட்டையா பாத்திங்களா இவ்வளவு நேரம் உங்க சட்டையை கூட நான் கவனிக்கல. உங்க நண்பர் உங்கள பாத்திரமா கூட்டிட்டு வந்துட்டாரா

ஷிவா : என்ன தெரியல ஏன் சட்டையை தெரியுது, ஷக்தி என்ன ஓகே பண்ணினீங்க நா நான் உங்களுக்கு வாரா வாரம் ice cream வாங்கித்தரன்

ஷக்தி : கிழ வந்து ஏன் முடிவ சொல்ல சொன்னீங்க இப்போ பேரம் பேசுறீங்க

ஷிவா : ரொம்ப தெளிவுதாங்க நீங்க , சரி வாங்க போகலாம்

அனைவரும் ஷிவா மற்றும் ஷக்தியின் முகம் பார்த்து இருக்க காமாட்சி பாட்டி ஷிவாவிடம் அவன் விருப்பத்தை கேட்க

ஷிவா : எனக்கு பிடிச்சிருக்கு பாட்டி அவங்களுக்கு புடிச்சிருக்கா னு கேட்டுருங்க

காமாட்சி : அம்மாடி ஷக்தி உனக்கு ஏன் பேரன் ஷிவாவ புடிச்சிருக்கா

அனைவரின் கவனமும் இப்பொழுது ஷக்தியின் பக்கம்

ஷக்தி தன் தாய் தந்தையை பார்த்துக்கொண்டிருந்தாள்

ஷண்முகம் : உன் முடிவ சொல்லுடா பெரியவங்க கேக்குறாங்க ல

ஷக்தி : எனக்கும் புடிச்சிருக்கு

ஷிவா விற்கு பறக்கும் நிலை தான்

காமாட்சி : ரொம்ப சந்தோஷம் சரி அப்போ ரெண்டு கல்யாணத்தையும் ஒண்ணா வெச்சிடலாமா

ஷிவாவும் ஷக்தியும் ஒரே நேரத்தில் ரெண்டா ? அப்படின்னு கேட்டுட்டு அனைவரின் முகத்தையும் பார்த்துக்கொண்டிருந்தனர்

காமாட்சி : ஆமாடா நீங்க இந்த பக்கம் போகவும் நாந்தான் ஷக்தி தங்கை அஸ்வினியை நம்ம வசந்துக்கு பாக்கலாமா னு கேட்டேன் அவங்களுக்கு ஷக்தியம் அஸ்வினியம் ஒரே வீட்ல வாழ போறது ரொம்ப சந்தோஷம் . பசங்க ரெண்டு பெருகிட்டயும் தனியா பேச சொன்னா ரெண்டும் வேண்ணம் னு சொல்லுதுங்க

ஷக்தி : அஸ்வினி காதினுள் அச்சு மேல வா உன்கிட்ட பேசணும்

ஷக்தியின் வீட்டு மாடி

ஷக்தி : அச்சு என்னடி இது இதுக்கு எப்படி நீ சம்மதிச்ச நம்ம வீட்ல யாராவது உன்ன நிர்பந்திக்குறாங்களா

அஸ்வினி : அடியே நம்ம வீட்ல எல்லாம் டம்மி பீஸு டி யாரும் என்ன நிர்பந்திக்கல .

ஷக்தி : அப்பறம் எப்படி நீ ஓகே சொன்ன

அஸ்வினி : முதல் காரணம் நீ தான், காலம் முழுக்க உன் கூட இருக்கலாம் , ஏதாவது பிரச்சனை வந்தாலும் நீ என்ன நல்லா பாத்துப்ப ரெண்டாவது அந்த மஞ்ச சட்ட கொஞ்சம் பரவாலயா தான் இருக்கான்.

ஷக்தி : உனக்கு தான் மஞ்சள் கலர் பிடிக்காதே டீ , அதுவும் இல்லாம அந்த மஞ்ச சட்ட உராங்குட்டான் மாதிரி முழிக்குது , எனக்கு பாத்த நீல சட்டயாவது கொஞ்சம் சிரிக்கும் போல இந்த மஞ்ச சட்டைக்கு சிரிக்க அவங்க அம்மா சொல்லித்தரல போல டீ .

அப்பொழுது அஸ்வினி ஷக்திக்கு பின்னல் நின்று தங்களை முறைத்து பார்த்து கொண்டிருந்த ஷிவா மற்றும் வசந்தை பார்த்து உறைந்து போய் இருந்தாள்.

தொடரும்
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement