உள்ளம் கொள்ளை போகுதடா - பகுதி 2:

Advertisement

உள்ளம் கொள்ளை போகுதடா
அடியே ஷக்தி எழுந்திரி டி எவ்வளவு நேரமா கத்தரன் எழுந்திரிகால பாரேன். இப்படி பொலம்பரது வேற யாரு நம்ம ஷக்தியோட அம்மா லக்ஷ்மிதாங்க

லக்ஷ்மி : ஷக்தி மணி 9 டி இன்னைக்கு யாரோ கிளைன்ட் எ பாக்கணும் னு சொன்ன நல்ல இழுத்து போத்திட்டு தூங்குற. இப்ப நீ எழுந்திரிகல தண்ணிய கோரி உன் தலைல உதித்திருவன்.

நம்ம ஷக்தி ஏழுந்திரிக்குறதுக்குள்ள அவளை பத்தி ஒரு இன்ட்ரோ
ஷக்தி வயது 25 நல்ல உயரம் தீர்க்கமான பார்வை Chartered Accountant படிச்சிட்டு சின்னதா ஒரு Firm வெச்சி தனியா நடத்திட்டு இருக்கா. அப்பா ஷண்முகம் Railway station Master அம்மா லக்ஷ்மி இல்லத்தரசி. நம்ம ஷக்தி வீட்டுக்கு ஒரே பொண்ணு செல்லம் கொஞ்சம் ஜாஸ்தி. ஷக்தியோட குடும்பம் இப்போ திருநெல்வேலி ல தான் இருக்காங்க. இன்னைக்கு தூத்துக்குடியில் ஒரு கிளைன்ட் கம்பனிக்கு auditing அதான் மேடம் ரொம்ப சிரத்தையா 9 மணிவரை தூங்கிட்டு இருக்காங்க.

ஷக்தி: ஏம்மா இப்படி காலங்காத்தால உயிர வாங்குற, கொஞ்சம் பாசமா எழுப்புனதான் என்னவாம்

லக்ஷ்மி : அப்படியா மேடம் உங்களுக்கு 11 மணிக்கு மீட்டிங் இருக்குனு சொன்னீங்க இப்போ மணி 9 தான் ஆகுது இன்னும் 1 மணி நேரம் நீங்க நல்லா தூங்குங்க , இப்படி சொல்லவா, அட ச்சீ கழுதை எந்திரி மணி 9 ஆகுது.
படுக்கையில இருந்து ஏழுந்த ஷக்தி அம்மாவை பாத்து மொறச்சிட்டே

ஷக்தி : ஏன் மா உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பு இல்ல நான் தான் 11 மணிக்கு மீட்டிங் போகணும் னு சொன்னான் ல இவ்வளவு லேட்டா வா ஏழுபுறது

லக்ஷ்மி : சொல்லுவ டீ சொல்லுவ காலையில 6 மணியில இருந்து கரடியா கத்தரன் எரும மாதிரி தூங்கிட்டு எனக்கு பொறுப்பு இல்லையாமே எல்லாம் ஏன் நேரம்

ஷக்தி : கத்துனது நீதானா மா நான் கூட கனவுல கரடி தான் கத்துதுன்னு நினைச்சன்

இந்த வாக்கியத்தை சொல்லிட்டு அங்க நிக்க நம்ம ஷக்தி என்ன பைத்தியமா விட்டா ஒரு ஓட்டத்தை குளியல் அறைய நோக்கி.

இப்படி அமளி துமளி பண்ணி குளிச்சி கிளம்பி தூத்துக்குடி போய் நல்ல படியா கிளிஎன்ட் பாத்துட்டு வீட்டுக்கு வர மாலை மணி 5 ஆச்சு . வீட்டுல ஷக்தியோட பெரியப்பா பொண்ணு ஆனந்தி அவ குட்டி பொண்ணு ஸ்ருதியோட இருந்தா.

ஆனந்தி: ஷக்தி மேட்ரிமோனி வெப்சைட் ல உனக்கு பதிஞ்சு வெச்சிருக்கு , உனக்கு புடிச்ச பையன் யாராவது இருந்தா சொல்லுடா

ஷக்தி: ஏன்கா நீயும் புரிஞ்சிக்காம பேசுற எனக்கு கல்யாணத்துல கொஞ்சம் கூட இஷ்டம் இல்ல , என்னால லாம் ஒரு தர சகிச்சிக்கிட்டு வாழ முடியாது கா

ஆனந்தி : நீ ஏன் ஷக்தி எதிர்மறையா யோசிக்கிற காலம் பூரா உனக்கு சேவகம் செய்ய ஒரு அடிமையா பாத்து கடவுள் உனக்கு குடுத்தார்னா அந்த வாய்ப்ப நீ ஏன் மிஸ் பண்ணற

லட்சுமி : (ஆனந்தி காதினுள்) ஏண்டி இப்படி அவள தப்பா யோசிக்க வெக்குற

ஆனந்தி : சித்தி அவ கல்யாணத்துக்கு சம்மதிக்கணுமா இல்ல வேணாம்மா

லட்சுமி : சம்மதிக்கணும்

ஆனந்தி : அப்போ நான் சொல்லற படி கேளுங்க

ஷக்தி : அக்கா நீ சொல்லற பாய்ன்ட் கூட கரெக்ட் தான் , அதனால நீயே நல்ல ஒரு அடிமையா பாத்து வை

ஆனந்தி : நான் பாக்குறது இருக்கட்டும் ஷக்தி உனக்கு புடிக்க வேணாமா.

ஷக்தி : புடிக்க என்ன கா இருக்கு கிணத்துல விழ கண்ணு தொறந்தா என்ன மூடினா என்ன

இப்படி சொல்லிட்டு ஷக்தி ஸ்ருதியோட விளையாட போய்ட்டா

லட்சுமி ஷண்முகம் வந்ததும் இங்க நடந்ததை அவர் கிட்ட சொல்லிட்டு எங்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு னு சொல்லராங்க

ஷண்முகம் : நீ ஏன் மா பயப்படுற

லக்ஷ்மி : இல்லங்க நம்ம ஷக்திக்கு கல்யாணத்துல விருப்பமே இல்லையே நாம கட்டாய படுத்தி கல்யாணம் பண்ணி வெச்சிட்டு நாளைக்கு கண்ண கசக்கிட்டு வந்தா என்னங்க பண்ண

ஷண்முகம்: நம்ம பொண்ணு தைரியமானவ மா அவ அப்படியெல்லாம் கண்ண கசக்கக்கூடிய ஆள் இல்லாமா

லக்ஷ்மி: அது எனக்கும் தெரியும் நான் கண்ண கசக்குவாங்க னு சொன்னது அவளை கட்டிக்கப்போறவங்கள , பாவம் நம்ம மாப்பிள்ளை கண்ண கசக்கினா அவங்க அப்பா அம்மாவுக்கு யாரு பதில் சொல்லறது

ஷண்முகம்: இது யோசிக்க வேண்டிய விஷயம்தான், முதல்ல கொஞ்சம் கஷ்டமா இருக்கும் அப்புறம் மாப்பிளைக்கு அது பழகிடும் மா.

இப்படி ஒரு ஏவுகணை தன்னை நோக்கி வருவது தெரியாமல் நம்ம ஷிவா ஷக்தியை நேனைச்ச்சு கனவு கண்டுட்டு இருக்கான் .

தொடரும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top