உறவும் பிரிவும் உன்னாலே! teaser-1

Advertisement

Mathykarthy

Well-Known Member
Nice teaser.. pidikama kalyanam pannikitta sakthi ippo sernthu vazha mudivu pannitan.. Ana kowsi vera kalyanathuku ok sollitalae..First intha story podunga sis...
 

Jovi

Well-Known Member
ஹாய் க்யூட்டிபைஸ் இன்னக்கி என் பையனோடு பர்த்டே சோ டீசரோட வந்துட்டேன்.:love::love:

View attachment 8336

"இங்க பாரு ஷக்தி அம்மா சொல்லுறத கேளு. நமக்கு அந்த குடும்பத்து சங்காத்தமே! வேணாம். நான் உனக்கு வேற நல்ல பொண்ணா பாக்குறேன். கல்யாணத்த கூட சிறப்பா பெரிய மண்டபத்துல பண்ணலாம். என்ன சொல்லுற?"



"அம்மா எனக்கு ஏற்கனவே! கல்யாணம் ஆகிருச்சு. அதுவும் ஆறு வருஷத்துக்கு முன்னாலையே! ஆகிருச்சு. அன்னைக்கு உங்க பேச்ச கேட்டுத்தான் கௌஷி கழுத்துல தாலி காட்டினேன். என்ன நடந்தது என்று தெரியாதவரைக்கும் உங்க கண்ணுக்கு அவ நம்ம குடும்ப மானத்த காக்க வந்த தேவதையா தெரிஞ்சா. உண்மை தெரிஞ்சதும் அந்த குடும்பத்தையே ஒதுக்கி வச்சிடீங்க,





விருப்பமே இல்லாம நடந்த கல்யாணம் எங்குறதால நானும் நீங்க சொல்லுறதுக்கெல்லாம் தலையை ஆட்டினேன். ஆனா நான் இப்போ என் பொண்டாட்டி கூட வாழனும் என்று ஆச படுறேன்" தனது முடிவை தெளிவாக சொன்னான் சக்திவேல்.



"பாத்தீங்களா? பாத்தீங்களா? மூத்தவன்தான் அவன் இஷ்டத்துக்கு பண்ணுறான்னா இவனும் நம்ம பேச்ச கேக்க மாட்டேங்குறான்" சாம்பவி கணவனிடம் பொரும,



"அவன் எங்க அவன் இஷ்டத்துக்கு பண்ணுறான்? எல்லாம் உன் இஷ்டம் தானே! மூத்தவனுக்கு உன் இஷ்டப்படி பொண்ணு பார்த்த அவன் அவன் இஷ்டப்படி கல்யாணம் பண்ணிகிட்டான். குடும்ப மானம் போகும் என்று உன் அண்ணன் கிட்ட பேசி அண்ணிய சமாதானப் படுத்தி அவங்க தங்கச்சி பொண்ண சக்திக்கு கல்யாணம் பண்ணி வச்ச, வச்ச கையோட மருமகளை துரத்திட்ட, எல்லாம் உன் விருப்பப்படிதான் பண்ண. இப்போவாச்சும் அவன் விருப்பப்படி பண்ண விடு" என்றார் சக்திக்கு தந்தையாக கபிலர்.

View attachment 8337

இவர்கள் யாரை பற்றி பேசுகிறார்களோ அந்த கௌஷி அன்னையிடம் விடை பெற்று ஆபீஸ் செல்ல கிளம்ப மகளது வாழ்க்கையை நினைத்து கண்ணீர் வடிக்கலானாள் இந்திரா.



ஸ்கூட்டி சாவியை கைப்பையில் துளாவியவள் கிடைக்காமல் மீண்டும் வீட்டுக்குள் வர அன்னை அழுது கொடிருப்பதைக் கண்டு "என்னம்மா பிளாஸ்பேக்கா? இப்போ என்ன உனக்கு நான் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டா சந்தோஷப்படுவியா?" கையை கட்டிக்கொண்டு கேட்க



கண்களை துடைத்துக்கொண்டு இந்திரா மகளை "நிஜமாவா சொல்லுற?" என்ற பார்வையோடு ஏறிட கௌஷியும் விடாது அன்னையை பார்த்திருந்தாள்.



"உன் சந்தோஷத்துக்காக கல்யாணம் பண்ணிக்கிறேன். இப்போவாச்சும் சிரி" என்றவள் கன்னத்தில் முத்தமிட்டு செல்ல இந்திரா உடனே! தனது ஒரே அக்காவான சந்திராவை அழைத்தாள்.



அடுத்த கதையான கண்ணீரில் கரையாது காதல் ஓட டீஸர் இரவு தரேன்.
Super
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top