உறவால் உயிரானவள் special EPILOGUE {with தீரன்ஸ்}

mila

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் கியூட்டிபாய்ஸ்

உறவால் உயிரானவள் epilogue உயிரே உன் உயிரென நான் இருப்பேன் என்ற கதையோடு எழுத வேண்டும் என்று ஆசை கொண்டேன். ஆனா கதையோடு பொருந்தாதுனு விட்டுட்டேன். ஆனாலும். குட்டீஸ் வச்சி ஒரு குட்டி epilogue சைட் ரீடேர்ஸ்காக எழுதி இருக்கேன். என்ஜோய்.

கதையை பத்தி special epi இல் பார்க்கலாம்.

vijay.png

f60099488c78c0f49436f3fa0939667e.jpg

"உள்ள வாடா, வாங்க சிஸ்டர், வாம்மா கவி" தீரமுகுந்தன் மூவரையும் உள்ளே அழைத்து வரபிங்கி "இதுல யாரு உங்க பிரெண்டோட வைப்" கணவனின் காதில் கிசுகிசுப்பாக கேக்கஅவள் கேட்டது கேட்கவில்லையானாலும் வந்த உடனே அறிமுக படலத்தை ஆரம்பித்தான் கார்த்திக் "இவ என்னோட வைப். இது...""இரு இரு நான் சொல்லுறேன். நான் இவனோட ஜி.எப்" கவி கையை நீட்டகார்த்திக்கும் "ஆமா ஆமா நான் இவளோட பி.எப்" என்று சிரிக்க, ஆருத்ராவும் சிரித்துக் கொண்டிருந்தாள்."என்னங்க இது? பொண்டாட்டி கூடவே கார்ல் பிரெண்டையும் கூட்டிக்கிட்டு வந்திருக்கிறாரு" பிங்கி முழிக்க அவள் முக பாவத்தைக் கண்டு தீரனுக்கு சிரிப்பு எட்டிப்பார்க்க ஆதி உள்ளே நுழையவும்"வாங்க சார். வணக்கம்" என்று அவனை வரவேற்கஅவன் கையை பிடித்துக் கொண்டு ஆரு "இது என் அத்தான்" என்று பிங்கிக்கு அறிமுகப் படுத்த"ஒரே பேஜாரான குடும்பமா இருக்கே" முணுமுணுப்பதாக நினைத்து சத்தமாகவே சொல்ல கவியும், ஆருத்ராவும் விழுந்து, விழுந்து சிரிக்க தீரன் கார்த்திக்கு ஹை பை கொடுத்தான்."ஜி.எப் நா கேர்ள் பிரென்ட் மட்டுமில்ல குட் ப்ரெண்டும் கூட" கவி சொல்ல"பி.எப் பெஸ்ட்டு பிரென்ட் சரிதானே" என்றாள் பிங்கி."ஆமா அண்ட் அவர் என் கணவர்" என்று ஆதியை காட்ட"என்னப்பா வந்த உடனே டென்ஷன் பண்ணிட்டீங்க" பிங்கி கவி, ஆருவை முறைக்க"எல்லாம் உன் புருஷன் வேண்டிக்கிட்டது தான் மா..." என்று கார்த்திக் தீரனை மாட்டி விடகண்களை சுருக்கி "என்ன?" என்று கேட்க"நீதான் எல்லாரையும் டென்ஷன் பண்ணுவியாம் உன்ன கொஞ்சம் நேரம் டென்ஷன் பண்ண சொன்னான்" கார்த்திக் மாட்டிவிட்டதில்தீரமுகுந்தன் அவனை முறைத்தாலும் "இப்டியாடா மாட்டி விடுவ இன்னைக்கி நான் செத்தேன்" என்றவாறே பிங்கியை ஏறிடகரி இன்ஜின் போல் புகைந்து கொண்டிருந்தவளோ "ரொம்ப நாளா என் கையாள அடிவாங்கல்லல அதான்" என்றவாறு கையை மடக்க"அப்படியே பேசி அனுப்பிட போறீங்களா?" என்றவாறே விஷ்வதீரன் வர கூடவே ஆரோஹியும் வந்து வணக்கம் வைக்க ஆண்கள் வேறாகவும் பெண்கள் வேறாகவும் அமர்ந்துக் கொண்டனர்.
6.jpg images (19).jpg"இவ என் அக்கா" பிங்கி அறிமுகப் படுத்த"அது தெரிஞ்ச விஷயம் தானே! தீரன் பிரதர்ஸ் வைப்னா நீங்க ரெண்டு பேரும் சிஸ்டேர்ஸ் தானே!" ஆரு சொல்ல"சிரித்தவாறே ஆரோஹி "இவ என் சித்தி பொண்ணு நான் அவ பெரியம்மா பொண்ணு அத தான் சொன்னா" என்று சொல்ல"ஓகே" என்றனர் கவி, ஆரு."நாங்க ரெண்டு பேருமே டீசர்ஸ்" என்று பிங்கி ரூஹிக்கு ஹை பை கொடுக்க"நாங்க ரெண்டு பேரும் டாக்டர்ஸ்" கவி ஆருவுக்கு ஹை பை கொடுத்தாள்."உங்க பெயர் A ல தொடங்குது என் பெயரும் A ல தொடங்குது" ஆரு சினேகமாக ஆரோஹியை ஏறிட"இன்னும் ஏதாவது மிச்சம் இருக்கா? மேல ஆராய்ச்சி பண்ணலாமா?" கவி சொல்ல யோசனையில் விழுந்தாள் பிங்கி"என்ன பிங்கிமா யோசனை?" ஆரோஹி கேட்க"பசங்க எங்க?" சத்தமே இல்ல""உங்க பசங்க எல்லாம் வெளிய இருந்தாங்க, நம்ம பசங்களும் சேர்ந்து விளையாடுறாங்க" கவி புன்னகைக்க"அஜய், விஜய் பார்த்துப்பாங்க. ரொம்ப வளர்ந்துட்டாங்க" ஆரோஹியின் தோளளவில் இருந்த மகன்களை நினைத்து பெருமையாக கூற,"அதுக்கேத்தா மாதிரியே யதீரன் வாலா இருக்கான். இந்த ரெட்டை வாலுங்களும் அவனோடு சேர்ந்து ஆடுதுங்க, ஆராதனா மட்டும் தான் சொல் பேச்சி கேக்குறா" பிங்கி உதடு சுளிக்க"உங்க பேஸ் எக்ஸ்ப்ரெசன் சூப்பருங்க" ஆரு பிங்கியை போல் செய்து செய்து பார்த்து விட்டு முடியாமல் விட்டு விட"இவ பண்ணாத வாலுதானத்தையா இவ பொண்ணுங்க பண்ணுதுங்க. ஒருத்திய சமாளிச்ச என் கொழந்தனாரு கூட இன்னும் ரெண்டு பேர சமாளிக்கிறாங்க அவ்வளவுதான் வித்தியாசம்" ஆரோஹி சிரித்தவாறே சொல்லஒரு கணம் அக்கா தங்கைக்குள் மோதலோ என்று பார்த்த கவியும், ஆருவும் பிங்கி அசடுவழியவும் ஆரோஹி கிண்டல் பண்ணுவதை புரிந்து கொண்டு சேர்ந்து சிரிக்கலாயினர்.

download (34).jpg 20190509_171822.jpg

"ஆதி சார் உங்கள எப்படி கூப்பிடுறதுனே புரியல" தீரமுகுந்தன் மரியாதையாக சொல்ல"அண்ணான்னு கூப்பிடுங்க ப்ரோ""ஐயோ.. எம்.எல்.ஏ. வாக இருந்தீங்க, ஐ.ஏ.எஸ் படிச்சிருக்கீங்க. அத சொன்னேன்""ஆமா நீங்க தேர்தல்ல நின்னா மந்திரியாகி இருக்கலாம்" வாக்கியத்தை முடிக்காமல் விஷ்வதீரன் நிறுத்த" ஐ.ஏ.எஸ் படிச்சது ஊருக்கு நல்லது பண்ண எம்.எல்.ஏ. ஆனேன். நல்லது பண்ணி இளைஞர்களுக்கு வழி காட்டிட்டேன். பதவிக்கு வந்துதான் ஊருக்கு நல்லது பண்ணனும்னு இல்லையே!""அது என்னமோ உண்மை தான். ஆனா பதவியும் இருந்தா இன்னும் பக்க பலமா இருக்கும்" விஷ்வதீரன் உறுதியாக சொல்ல"கண்டிப்பாக... நாட்டுக்கு நல்லது செய்யணும்னு நினைக்கிற நல்லவங்க நிறைய பேர் இருக்காங்க அவங்கள அடையலாம் கண்டு நிறுத்துற பொறுப்பும் இருக்கணும்" ஆதி இன்முகமாக சொன்னான்."இந்த எட்டு வருஷத்துல, தர்மாண்ணா எம்.எல்.ஏ ஆனார். ஊருல இருக்கிற அனுபவம் மிக்க படிப்பாளிங்களா பாத்து தேர்வு செய்யிறாரு" கார்த்திக் கிண்டலடிக்க"படிப்பாளிங்க மட்டுமில்ல தம்பி இளைஞர்களையும் நிக்க வைப்பேன். நெஸ்ட் நம்ம வாசுதான்""நிஜமாவா? சீனுவ நிக்க வைப்பீங்கனு நினச்சேன்" கார்த்திக் புருவம் உயர்த்த"சீனு நம்ம குடும்ப எங்குறதாலையே அவனை ஒதுங்க சொல்லிட்டேன். அவன் சொல்லலையா?""சரி டி.எஸ்.பி. சார் பெண்கள் பாதுகாப்புக்கு என்ன நடவடிக்கை எடுக்க போறீங்க?" ஆதி திடுமென கேக்க"நீங்க கேக்குறது புரியல" விஷ்வதீரன் யோசனைக்குள்ளானான்."நீங்க மூணு பேருமே போலீஸ் டிபார்ட்மெண்ட்டுல இருக்கீங்க. தீரன் தம்பி வேற டெக்னோலஜி ஸ்பேசலிஸ்ட். டீன் ஏஜ் பொண்ணுங்க, கல்யாணமான பொண்ணுக இந்த சோசல் மீடியாவால தங்களோட வாழ்க்கையே கேள்விக் குறியாகிக்கிறாங்க, இதெல்லாம் எப்படி கண்ட்ரோல் பண்ணுறது?""பெண்கள் மட்டுமில்ல சில ஆண்களும் பெண்களால் ஏமாற்றபடுறாங்க. என்ன பாதிப்பு பெண்களுக்கு அதிகம் என்பதால சமூகம் அதை கண்டுகொளவதில்லை" விஷ்வதீரன் சொல்லதலையசைத்து ஏற்றுக்கொண்ட ஆதி தீரமுகுந்தனை ஏறிட "டெக்னோலஜி வந்திருச்சு. கேமரா போனாலதான் எல்லாம், குழந்தைகளுக்கு மொபைல் கொடுக்காதீங்கன்னு சொல்லுறதெல்லாம் சுத்த வேஸ்ட். இப்போ நிறைய நாடுகளுள ஸ்கூல்லயே டாப் கொடுக்குறாங்க ஹோம்வர்க் பண்ணி மிஸ்ஸுக்கு மெயில் பண்ணா அவங்க திருத்தி அனுப்புறாங்க. உலகம் இப்படி போகுது. நாமதான் டெக்னோலஜியை எப்படி தப்பா பயன்படுத்தலாம்னு யோசிக்கொறோம்" தீரமுகுந்தன் தீவீரமுக பாவனையில் சொல்ல

"இந்த பிரச்சினைக்கு ரெண்டு வழி இருக்கு, குடும்ப சூழல் மத்தது சுற்றுப்புறசூழல். பெத்தவங்க குழந்தைகளை வளர்க்கும் முறையில் இருக்கு. அது பெரிய டாபிக். அத டீடைலா பேசுவோம்" விஷ்வதீரன் இடைமறிக்க தீரமுகுந்தன் தொடர்ந்தான்சுற்றுப்புற சூழல்ல பத்தி சொன்னா... முதல்ல நம்ம நாட்டுல இருக்குற எல்லா ஆபாச தளங்களையும் அரசு தடை செய்யணும். ரெண்டாவது குழந்தைகளுக்கு குறிப்பிட்ட வயது வரை மொபைல் கொடுக்கப்படுத்துனா பெற்றோர் கண்ணானிக்குறது மாதிரியே அவங்களுடைய மொபைல் போலீஸ் கண்காணிக்கணும். நிறைய குற்றங்களை தடுக்கலாம். வழிதவறி போகும் குழந்தைகளை காப்பாற்றலாம். இத நான் பெர்சனல் ரிக்குவஸ்ட்டாகவே கேட்டிருக்கேன். ஓகே ஆனா ஓகே. எவனும் எந்த குழந்தைகிட்டயும் தப்பா பேசவோ. மிரட்டவோ முடியாது கடுமையான தண்டனை""ஆனா கல்யாணம் பண்ணிட்டு வழி மாறும் கேஸுங்கள என்ன பண்ணுறதுன்னுதான் புரியல... " கார்த்திக் யோசனையாக சொல்ல"ஐஞ்சுல வளச்சா..அம்பதுல வளைக்கலாம்..." ஆதி சிரிக்க"இதெல்லாம் நடந்தா next ஜெனரேஷன் ஓகே... இப்போ இருக்குற வாலிபர்களை திருத்துறதுதான் எப்டின்னுனு புரியல" தீரமுகுந்தன்"போலீஸ்காரனும், அரசியல்வாதியும் சேர்ந்தா இதைத்தான் பேசுவீங்கன்னு தெரியும் குடிச்சிட்டு தெம்பா பேசுங்க" குளிர்பான குவளைகளோடு அங்கே வந்த பிங்கி அனைவருக்கும் பரிமாறிவிட்டு குழந்தைகளுக்கு கொடுக்க வெளியேறினாள்.

download (8).jpg images (49).jpg

அங்கே ஆதிதேவ் பிங்கியின் இரட்டையில் ஒன்றான சஷ்டியோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்தான். அவர்களின் சண்டைக்கு காரணமான சக்தியும், யதீரனும் வேடிக்கை பார்க்க, அஜய், ஆராதனா அவளை ஒரு புறம் இழுக்க, தேவ்வை நாதனும் விஜய்யும் மறுபுறம் இழுத்துக்கொண்டு இருந்தனர்.அனைவரும் ஒற்றுமையாக கிரிக்கட் விளையாடிக் கொண்டிருந்தனர். கீப்பர் யதீரன், பேட்டிங் சக்தி பண்ணி கொண்டிருந்தாள், நாதன் பந்து வீச அது விக்கட்டில் பட்டிருக்க சக்தி அவுட் ஆனதை ஏற்றுக்கொள்ளாமல் பந்து தன் கையில் பட்டு விட்டதாக அழ ஆரம்பிக்க நாதன் ஓடி வந்து அவள் கையை பிடித்து தடவ அவன் அடித்ததாக மேலும் அழ அனைத்து குழந்தைகளும் அங்கே ஓடி வர சஷ்டி நாதனை தள்ளி விட, தேவ் சஷ்டியோடு மல்லுக்கு நின்றான்.உண்மையை அறிந்த யதீரன் சக்திக்கு சப்போர்ட் பண்ணி நாதனை குற்றம் சொல்ல நாதன் கொதிக்க, தேவ் நாதனை விட்டுக்கொடுக்காமல் அவன் பக்கம் நிற்க, என்ன நடந்ததென்று ஆராதனா விசாரிக்க, அஜய் மற்றும் விஜய் சண்டையை விலக்க தோட்டத்தில் நடந்த சண்டை வீட்டுக்குள் கேட்கவில்லை.தோட்டத்துக்கு வந்த பிங்கி இதை கண்டு தட்டை விட்டு விட்டு கத்தியவாறு ஓட அனைவரும் தோட்டத்துக்குள் ஓடி இருந்தனர்.பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பிடிக்க தேவ் சஷ்டியை முறைக்க, நாதன் சக்தியை முறைத்துக் கொண்டிருந்தான்."என்ன டா... ஒத்துமையா விளையாடுவீங்கன்னு பாத்தா வந்த உடனே சண்டை போடுறீங்க?" கார்த்திக் தேவ்வையும், நாதனையும் அதட்டஎன்ன நடந்ததென்று விசாரித்த விஷ்வதீரன் "யத்தீரா உண்மைய சொல்லு நாதன் சக்தியை அடிச்சானா?""எஸ் டேட்" என்றவன் திருட்டு முழி முழிக்க"பால் கைல பட்டதா?" மீண்டும் கேட்க சந்தேகமான முகபாவனையை கொடுத்தான் யதீரன்."சக்தி பால் கைல எந்த இடத்துல பட்டது?" தீரமுகக்குந்தன் கேட்க திருதிருவென முழித்தவள் உள்ளங்கையை காட்ட அவள் பொய் சொல்வதை கண்டு கொண்டவன்"பேட்ட புடிச்சி இருக்கும் பொழுது எப்படி உள்ளங்கைல படும்" என்ற கேள்வியை முன் வைக்க"நான் அவுட் ஆகல டேடி...""அப்போ நீ கைல அடி பட்டதென்று பொய் சொல்லி நாதனை தள்ளி விட்டதுமில்லாம அவன் அடிச்சானு பொய் வேற சொல்லி இருக்க. அப்படித்தானே!""நான் தள்ளி விடல சஷ்டி தான் தள்ளி விட்டா"தந்தையிடம் மாட்டிக் கொண்டவள் கண்களை உருட்டி முழிக்க அனைவருக்கும் சிரிப்பு எட்டி பார்த்தது."பிங்கி... இவ பண்ண தப்புக்கு என்ன தண்டனையோ இப்போவே கொடு" என்று சொல்ல பிங்கி கண்களால் அவளை உள்ளே வரும் படி சைகை செய்யநாதனை முறைத்து விட்டு கைகளை பிசைந்தவாறு நிற்க நாதன் யாரும் அறியாமல் அவள் அழுததை சைகை செய்து பழிப்பு காட்ட கோபம் கணக்க மூக்கை சுண்டி விட்டவள் பிங்கியின் பின்னால் நடந்தாள் சக்தி."நீங்க ரெண்டு பேரும் எதுக்கு சண்டை போட்டீங்க" ஆதி சஷ்டியை பார்த்து கேக்க"என் தங்கச்சிய அடிச்சான்னுதான் நாதனை தள்ளிவிட்டேன். அதுக்கு இவன் என் முடிய புடிச்சி இழுத்தான். நா இவன் கால மிதிச்சேன்" வரிசையாய் சஷ்டி சொல்ல"நீ என்ன பண்ண?" தேவ்வை குறுக்கு விசாரணை பண்ண"நாதனை தள்ளினா… நான் சும்மா இருப்பேனா? அதான் முடிய புடிச்சி இழுத்தேன். அதுக்கு இவ என் கால மிதிக்கிறா""என்னங்கடா சண்டை இது ஒரே பாச போரா இருக்கு" கார்த்திக் சிரிக்க"சரி வாங்க உள்ள போகலாம்" சிரித்தவாறே விஷ்வதீரன் சொல்லதீரமுகுந்தனின் தோளில் ஏறிய சஷ்டி தேவ்வை முறைத்தவாறு முன்னே செல்ல மற்றவர்கள் பின் தொடர்ந்தார்கள்.
 
Last edited:

Advertisement

Sponsored