உறவால் உயிரானவள் P26

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
download (14).jpg


சில வருடங்களுக்கு முன் தெருவோரத்தில் தள்ளு வண்டி கடையொன்றை நடத்தி வந்த பிரேமா என்பவர் சாலை விபத்தில் காலமாக ஆனாதையானாள் அவளுடைய ஒரே மகள். பிறந்ததிலிருந்தே தந்தையாரேன்று அறியாத, தாயையே நம்பி இருந்த அந்த இளம் குருத்து அன்னை இறந்த பின் வயிற்று பசிக்காக என்ன செய்வதென்று அறியாமல் சிக்கனலில் பிச்சையெடுக்க ஆரம்பித்தாள்.



அன்னை இறந்த அதிர்ச்சி, தனக்கிருந்த வாடகை அறையிலிருந்து வெளியேற்றம் என அந்த ஏழு வயதில்லையே பல அதிர்ச்சசிகளை பார்த்தவள் பேச்சு திணற ஆரம்பித்தாள்.



ரோட்டில் பிச்சையெடுப்போரோடு தெருவோரம் தூங்கி எந்திரித்து பசிக்கு பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவள் கடத்திச் சென்று காமுகர்கள் பந்தாட நினைக்க அவர்களிடமிருந்து தப்பியோடியவள் ராணியின் முன் வந்து விழ அவளிடம் அடைக்கலமானாள்.



அவளை துரத்தி வந்தவர்களை பார்த்த உடனே ராணிக்கு விஷயம் புரிய கோழிக் குஞ்சாய் வெட வெடவென நடுங்கும் சிறுமியை ஆட்டோவில் ஏற்றியவள் வீட்டுக்கு அழைத்து வந்தாள்.



அன்னை இறந்த அதிர்ச்சியில் திக்கிக் திக்கி பேசியவள், முற்றாக பேச்சை நிறுத்தியிருந்தாள். அவளை குளிப்பாட்டுவது, சாப்பாடு ஊட்டுவது, தூங்க வைப்பது என்று எல்லாம் ராணி கவனித்துக்கொள்ள அவளிடம் மட்டும் ஒட்டியவள் வெளியே செல்லவே அஞ்சினாள்.

images (18).jpg

அவளின் பெயரும் யாருக்கும் தெரியவில்லை. ஆதலால் அனைவரும் அவளை "முன்னி" என்று அழைக்க ஆரம்பித்திருக்க ராணி அவளை தத்தெடுக்க எண்ணி வானதியிடம் பேச வானதியும் அதற்கான வேலைகளில் ஈடுபட்ட சமயத்தில் தான் அந்த அசம்பாவிதம் நடந்தது.



பாடசாலையிலிருந்து வெளியே ஒருநாள் சுற்றுப்பயணம் சென்ற தீப்தி உட்பட அவளுடைய வகுப்பு மாணவர்கள் அனைவரும் குண்டு வெடிப்பில் சிக்கி இறந்த செய்தி வீட்டாரை அடைய, சாந்தினி முற்றாக உடைந்துப்போனாள்.



இறந்த குழந்தையின் உடல் கூட சரிவர கிடைக்காத நிலையில் சம்யுத அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்க, மயக்க நிலையிலையே இருக்கும் கர்ப்பிணியான சாந்தினியை பார்த்துக்கொள்வது வானத்திற்கு பெரும்பாடாகிப்போனது.



அழுது அழுது கண்களில் கண்ணீர் வழிய நின்றவளை தன் பிஞ்சு கரம் கொண்டு கண்ணீரை துடைத்தாள் முன்னி. அவளை இறுக அணைத்துக் கொண்ட சாந்தினி தீப்தி வந்து விட்டதாக கதற அன்றிலிருந்து முன்னி அனைவருக்கும் தீப்தியானாள்.



சாந்தினியின் அன்பும், சம்யுத்தின் வழிகாட்டலும் தன் வாழக்கையில் ஒளி வீச கூட்டிலிருந்து வெளியே வந்திருந்தாள் தீப்தி.

images (10).jpg

தீப்திக்கும் சீனுவுக்கும் திருமணம் பேசிய போது உறவுமுறை சிக்கலை வரளிநாயகி முன் வைக்க, ராணி தனக்கு தங்கையென்றும் தீப்தியை தான் வளர்த்தாலும் அவள் என்றுமே ராணியின் மகள் தான் என்றும் விளக்கமளித்தார் சம்யுத்.



வரளிநாயகிக்கு தீப்தியின் பிறப்பு பற்றின குழப்பங்கள் இல்லை. கடவுளின் படைப்பில் அனைவரும் சமம் என்று நினைப்பவர், ஏழை பெண்களின் திருமணத்தை முன் நின்று நடத்துபவர் ஒரு பெண்ணின் பிறப்பைக் கொண்டு வாழ்க்கையை தீர்மானிக்க முனையவில்லை. தீப்தியை அனைவருக்கும் பிடித்திருந்தது. அதுவே சம்மதம் சொல்ல போதுமானதாக இருந்தது.
 

mila

Writers Team
Tamil Novel Writer
தீப்தி @ முன்னி ரொம்பவே பாவம்
இந்த சீனுவுக்கு ஜோடி சேர்க்க நான் படாத பாடு பட வேண்டி இருக்கு. தீப்தி flashback ரொம்ப சொல்லல :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top