உறவால் உயிரானவள் P16

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கியூட்டிபாய்ஸ் சீனுவுக்கு ஜோடி வந்தாச்சு....:love::LOL:

இந்த ஜோடிக்கு யாருடைய போட்டு போடலாம்னு மைண்டுல வரல பா... யாராய் போடலாம்?


"ஏய் பொண்ணு நில்லு எங்க போய் கிட்டு இருக்க? இந்த பக்கமெல்லாம் போகக் கூடாது"



என்னதான் கிண்டலும், கேலியாக இருந்தாலும், வேலையென்று வந்தா வெள்ளைக்காரனாக மாறும் சீனு ஒரு பெண் தனியாக நடந்து செல்வதை பார்த்து அவள் கண்டிப்பாக இந்த ஊர் காரியாக இருக்க வாய்ப்பில்லையென்று அவளின் உடையே சொல்ல அவளை நிறுத்தினான்





"இங்க ஒரு பெரிய கூவா {கிணறு} இருக்காமே!" அவள் தமிழில் ஹிந்தி வாடை அப்பட்டமாக வீச





அந்த காலைப்பொழுதிலும் சுறுசுறுப்பாக இருந்த சீனுவின் குறும்புத்தனம் தலைதூக்க "ஏன் தற்கொலை பண்ணிக்க போறியா? காதல் தோல்வியா?"



அவனை முறைத்து பார்த்தவள் "யாராய் பார்த்து என்ன கேள்வி கேக்குற? நான் முரட்டு சிங்கள்" தமிழ் படங்களின் தாக்கம் அவள் பேச்சில்



"ஆமா அவன் அவன் கல்யாணம் பண்ண பொண்ணு கிடைக்காம அலஞ்சிக் கிட்டு நிக்குறான். இதுங்களும் முரட்டு சிங்கள்னு கிளம்பிட்டா நாட்டுல சனத்தொகை பாதியா குறைஞ்சிடும்" முணுமுணுத்தவன் "இந்த பக்கமெல்லாம் போகக் கூடாது" தனக்கு ஒரு அடிமை சிக்கியதாக நினைத்த சீனு அதிகாரம் பண்ண



"ஏன் போகக் கூடாது உன் அப்பன் வீட்டு சொத்தா?" கோபமாக அவளும்



"ஆயா வீட்டு சொத்துமா?" பதிலுக்கு பதில் சொன்னாலும் அதுதான் உண்மையென்றது சீனுவின் மனது.



தன்னிடம் யாருமே இப்படி பேசியதில்லை "யாரிவன்" என்று முறைத்தவாறே தனது நடையை தொடர்ந்தாள் தீபிகா.



"ஏய் பொண்ணு நில்லு சொல்ல சொல்ல எங்க போற?" சீனுவும் அவள் பின்னாலையே போக அவளோ! கிணற்றை அடைந்திருந்தாள்.



அங்கே சுற்று சுவர் ஏதுமின்றி பாதையோடு பாதையாக பெரிய வட்டக் கிணறு ஒன்றிருக்க, வேகமாக நடந்தவள் கிணற்றினுள் எட்டிப் பார்க்க, கிணற்றினுள் இறங்க அடுக்கடுக்காய் படிகளோடு, அவ்வளவு பெரிய கிணறை எதிர் பார்க்காதவள் உள்ளே இறங்கலாமா? வேண்டாமா?என்று யோசிக்கும் வேளையில்



தான் நினைத்தது போல் இவள் தற்கொலைத் தான் பண்ணபோறாளோ! என்றஞ்சிய சீனு அவளின் கையை பிடித்து இழுக்க அதை எதிர் பாராத தீபிகாவும் அவன் மேல் வந்து மோத அவளின் இடையோடு சேர்த்து இறுக அணைத்திருந்தான் சீனு.

*******************************************************

"இங்க குளிக்க இந்த கிணத்த தவிர வேற எங்கேயெல்லாம் இருக்கு?"




"அந்த பக்கம் போனா... ஒரு பெரிய பம்ப் செட் மோட்டார் ரூம் தெரியும். பக்கத்துல தொட்டி கூட இருக்கும். அதுல குளி. யாரும் வரமாட்டாங்க, நீச்சல் தெரியுமில்ல" அவன் சும்மா இருந்தாலும் அவன் வாய் சும்மா இருக்கவில்லை.



"யாரப்பாத்து? நானெல்லாம் நேசரி போற டைம்லயே நீச்சல் குளத்துல குதிச்சவ?" என்று ஆரம்பித்து, அவள் நீச்சல் போட்டியில் கலந்துக்க கொண்டு பரிசு பெற்றது வரை தனக்கு நீச்சல் தெரியும் என்பதை ஐந்து நிமிடங்கள் செலவழித்து விளக்கியிருந்தாள் தீபிகா.



"என்ன இவ ஜென்ம சனி போல கூடவே வரா?" நொந்தவாறே காதை குடைந்து விட்டு "நல்ல வேல ரெத்தம் வரல" சத்தமாக சொன்னவன் "போமா... போ அந்த பக்கம் தான் பம்பு செட்டு இருக்கு"



"சரிங்க சீனு மாமா"



"என்னது மாமாவா?"




:love::love::love::love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
சீனுவுக்கு ஜோடி வந்தாச்சா?
பேர் தீபிகாவா?
சூப்பர், மிலா டியர்
அடேய் சீனு
அவளிடம் வம்பு இழுக்காமல் ஒழுங்கா அவளை லவ்ஸ் பண்ணி செட்டிலாகுற வழியைப் பாரு, சீனிவாசன் சார்
 

Kalki

Writers Team
Tamil Novel Writer
Seenu character nakkal padikum pothu actor sathish than nybagathu vantharu sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top