உறவால் உயிரானவள் P15

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கியூட்டிபாய்ஸ் எல்லாரும் நல்லா இருக்கீங்களா?

இந்த கொஞ்சம் நாளாவே ரொம்ப பிசி, அம்மாக்கு உடம்பு முடியாம ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணவேண்டியதா போச்சு. she is ok now.

Surjith
விஷயம் கூட லேட்டா தான் யூடியூப்ல பார்த்தேன். நாலுநாளா இருட்டுல குழந்தை எவ்வளவு பயந்து போய் இருந்திருப்பான் னு நினைக்கும் போதே.......

என்னோட கருத்து அஞ்சு வயசு வரைக்கும் குழந்தைகளை கண்ணுக்குள்ள வச்சி பார்த்துக்கணும். பெற்றோர்கள் எந்த வேலைல ஈடு பட்டு இருந்தாலும் தன் கண்பார்வை விழும் வட்டத்துக்குள்ளையே குழந்தைகளை வைத்துக் கொள்ள வேண்டும்.

சமயலறையில் கூடுதலான கவனம் வேணும். கூர்மையான பொருட்கள் கத்தி, தேங்காய் துருவும் துருவி இந்த மாதிரி எதுவும் கைக்கெட்டாத விதமா வைங்க.

வாளியில் நீர் நிரப்பி வைக்கிறதா இருந்தா மூடி போட்டு இறுக மூடிடுங்க. எங்க ஊர்ல நடந்த சம்பவம் வாளியில் மூணு இன்ச் நீர்ல குப்புற விழுந்து ஒன்னரை வயது பையன் இறந்துட்டான்.

குழந்தைகளுக்கு பாலூட்டும் போது அமர்ந்தே கொடுங்க, படுத்துக்க கொண்டு கொடுக்க போய் அன்னையே குழந்தையின் மேல் ஏறி குழந்தை மூச்சு திணறி இறந்த சம்பவம் கூட எங்க ஊர்ல நடந்த கொடுமை.

குழந்தையின் இழப்பு பெற்றோரை தவிர யாரையும் அதிகம் பாதிக்காது. சோ பெற்றோர்களே! குழந்தைகளின் விஷயத்தில் ரொம்பவும் கவனமாக இருங்க.
 
mila

Writers Team
Tamil Novel Writer
11380295_473308529503354_796973262_n.jpgபால் செம்போடு முதலிரவு அறைக்குள் நுழைந்த ஆருத்ரா கணவனை தேட அவனோ பால்கனியில் யாருடனோ! போனில் பேசிக் கொண்டிருந்தான்.

"இங்க பாருங்க நா படிக்கணும். இந்த முதலிரவெல்லாம் அப்பொறம் வச்சுக்கலாம் முதல்ல ஒருத்தருக்கொருத்தர் நல்ல புரிஞ்சிக்க கிட்டு வாழ்க்கையை தொடங்கலாம். நான் சொல்லுறது சரிதானே! என்ன சொல்லுறீங்க?" பட படவென சொன்னவள் புடவை முந்தியை திருக்கியவாறே அவனின் பதிலுக்கு காத்திருக்க, சத்தமாக சிரித்தான் கார்த்திக்.

"உப்... இவ்வளவுதானா? நானே இத எப்படி சொல்லுறதுனு யோசிச்சு கிட்டு இருந்தேன். நல்ல வேல நீயே சொல்லிட்ட. எதுக்கு டென்ஷனா இருக்க? கூல்... இப்படி வந்து உக்காரு" அவனும் அவளிடம் சமாதானமாக பேச

"அடாப்பாவி சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா அதையே உண்மையாக்குவான் போல இருக்கே!" அவனிடமிருந்து அப்படியொரு பதிலை எதிர்ப்பார்க்காத ஆரு கார்த்திக்கை முறைக்க

"ஆமா நா உன்ன கல்யாணத்துக்கு முன்னாடி எங்கயோ! பாத்து இருக்கேன்" கார்த்திக் யோசனையாக ஆருத்ராவின் முகத்தையே! பார்த்து யோசிக்க

"நல்ல டெக்னீக். பசங்க தெரியா…த பொண்ணுங்க கிட்ட நம்பர் வாங்க இப்படித்தான் பேசுவாங்க. நீங்க என்ன பொண்டாட்டி கிட்டயே இப்படி பேசுறீங்க"

"நிஜமாவா? எனக்கு தெரியல?" புன்னகைத்தவாறே சொல்ல அவனை கூர்ந்து பார்த்தவள் பொய் சொல்லுறானா உண்மை சொல்லுறானா என்று கண்டு பிடிக்க முயன்றாள்.

749f251309bac1264a1dcbe46742ddd8.jpg

"நா உன்ன எப்படி கூப்பிடனும்?"

"மாமா என்ன பொம்முன்னுதான் கூப்பிடுறாரு" ஆதியின் நினைவில் முகம் மலர

"ஓஹ்.. சார் உன்ன பொம்மு னா கூப்பிடுறாரு?" தெரியாதவன் போல் கேட்டவாறே மனைவியை நெருங்கி அமர்ந்தான் கார்த்திக்

"என்னது சாரா? அவரு உங்களுக்கு அண்ணன் முறை. அண்ணான்னு கூப்பிடுங்க?" அவன் புறம் திரும்பி அதட்ட

"செத்தேன். கவி என்ன சார் னு தான் கூப்பிட சொன்னா. அப்போ தான் நமக்கு பொறக்க போற குழந்தையை, அவங்களுக்கு பொறக்க போற குழந்தைக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க முடியுமாம்" குரலை தாழ்த்தி ரகசியம் பேசினான் அந்த வளர்ந்த ஆண் மகன்.

கணவனின் அருகாமையில் மயங்கி நிற்க வேண்டிய மனமோ தடம் மாறி எங்கையோ ஓரத்தில் பதுங்கி இருந்த கவியின் மீதான வெறுப்பு முளைவிட மூளை விழித்துக் கொண்டது

"அட லூசுங்களா? மாமா சொன்னது சரிதான் போல" மனதுக்குள் நினைத்தாலும் சிரித்து வைத்தவள் "கவி னா உங்களுக்கு ரொம்ப புடிக்குமோ!" பொறாமை எட்டிப் பார்த்தது ஆருவின் குரலில்.

"ம்.. அவ என் அம்மு மா... ஷி ஐஸ் தி குயின் ஒப் மை ஹார்ட்" நெஞ்சை தடவியவாறே சொல்ல ஆருத்ராவின் விழிகளில் கோபம் அனல் மூண்டது.

கவி என்றாலே தன்னிலை மறக்கும் கார்த்திக், இதயத்தில் இடம் கொடுக்கவேண்டியவள் தான் மட்டும் தான் என்று மனைவி எதிர்பார்க்கின்றாள் என்று புரியாமல் பேச

"குயினாம் குயின். அந்த கவிய பதவில இருந்து தூக்கி உன் மனசுல நான் சிம்மாசனம் போட்டு உக்காரல என் பேர் ஆருத்ரா இல்லடா என் ஐ.பி. எஸ் புருஷா..." மனதினில் சபதம் எடுத்துக் கொண்டாள் அந்த காவல்காரனின் மனைவி.
 
banumathi jayaraman

Well-Known Member
ஹாய் கியூட்டிபாய்ஸ் எல்லாரும் நல்லா இருக்கீங்களா?

இந்த கொஞ்சம் நாளாவே ரொம்ப பிசி, அம்மாக்கு உடம்பு முடியாம ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணவேண்டியதா போச்சு. she is ok now.

Surjith
விஷயம் கூட லேட்டா தான் யூடியூப்ல பார்த்தேன். நாலுநாளா இருட்டுல குழந்தை எவ்வளவு பயந்து போய் இருந்திருப்பான் னு நினைக்கும் போதே.......

என்னோட கருத்து அஞ்சு வயசு வரைக்கும் குழந்தைகளை கண்ணுக்குள்ள வச்சி பார்த்துக்கணும். பெற்றோர்கள் எந்த வேலைல ஈடு பட்டு இருந்தாலும் தன் கண்பார்வை விழும் வட்டத்துக்குள்ளையே குழந்தைகளை வைத்துக் கொள்ள வேண்டும்.

சமயலறையில் கூடுதலான கவனம் வேணும். கூர்மையான பொருட்கள் கத்தி, தேங்காய் துருவும் துருவி இந்த மாதிரி எதுவும் கைக்கெட்டாத விதமா வைங்க.

வாளியில் நீர் நிரப்பி வைக்கிறதா இருந்தா மூடி போட்டு இறுக மூடிடுங்க. எங்க ஊர்ல நடந்த சம்பவம் வாளியில் மூணு இன்ச் நீர்ல குப்புற விழுந்து ஒன்னரை வயது பையன் இறந்துட்டான்.

குழந்தைகளுக்கு பாலூட்டும் போது அமர்ந்தே கொடுங்க, படுத்துக்க கொண்டு கொடுக்க போய் அன்னையே குழந்தையின் மேல் ஏறி குழந்தை மூச்சு திணறி இறந்த சம்பவம் கூட எங்க ஊர்ல நடந்த கொடுமை.

குழந்தையின் இழப்பு பெற்றோரை தவிர யாரையும் அதிகம் பாதிக்காது. சோ பெற்றோர்களே! குழந்தைகளின் விஷயத்தில் ரொம்பவும் கவனமாக இருங்க.
இதைத்தான் நானும் சொல்றேன்,
பஸ்மிலா டியர்
அஞ்சு வயசுன்னு இல்லை
தனக்கு ஏதாவது தேவை or இடைஞ்சல் எதுவாக இருந்தாலும் விவரம் தெரிந்து இன்னது வேணும் தனக்கு இன்ன கஷ்டம்ன்னு அந்த குழந்தை வாய் விட்டு சொல்லும் வரை குழந்தைகளிடம் நமது கவனம் கூடுதலாக இருக்கணும்

ஒரு விவரமும் தெரியாத இரண்டு வயசு பிஞ்சு அந்த குழிக்குள் என்ன பாடுபட்டதோன்னு நினைத்து நினைத்து அடிவயிறும் நெஞ்சும் கலங்குது
நாலஞ்சு நாளா சாப்பாடே இறங்கலை
பண்டிகையாவது
இன்னொன்றாவது
 
Last edited:

நான் tv news பார்க்கவே மாட்டேன். இந்த மாதிரி சம்பவங்கள தேடி போடுவாங்க. அத பார்த்த பிறகு எந்த வேலையும் ஓடாது. குழந்தைகளுக்கு ஆபத்து எப்படி வேனா வரலாம் பெற்றோர்கள் தான் கவனமாக பார்க்கனும். இந்த மாதிரி சம்பவங்கள் இனிமேல் தொடராமல் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top