உயிரே உன் உயிரென நான் இருப்பேன் teaser 6

mila

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் கியூட்டிபாய்ஸ் today no epi so குட்டி teaser ஓடு வந்துட்டேன்:love:ENJOY

images (28).jpg

"விஷ், விஷ் பிங்கிய காணோம்" ஆரோஹியின் பதட்டமான குரல் அலைபேசி வழியாக விஷ்வதீரனை தீண்ட"என்ன சொல்லுற முதல்ல டென்ஷனாகாத, நின்னு கிட்டு இருக்கியா? உக்காரு. தண்ணி குடி" என்று அவளை ஆசுவாச படுத்தலானான்.அவன் சொன்னவைகளை மளமளவென செய்தவளின் பதட்டம் இன்னும் குறையவில்லை."ஆழ்ந்து மூச்ச இழுத்து விடு""விஷ் விளையாட நேரமில்லை பிங்கிய அரைமணித்தியாலமா காணோம்""இப்போ நீ எங்க இருக்க" ஆரோஹி தான் இருக்கும் காபி ஷாப்பின் பெயர் சொன்னதும் வண்டியில் ஏறியவாறே"இப்போ சொல்லு என்ன நடந்தது""இன்னைக்கி சண்டேன்னு ஐஸ் கிரீம் பாலர் கூட்டிட்டு போக சொல்லி அஜய்யும், விஜய்யும் ஒரே அடம், சரினு பிங்கியும் நானும் பசங்கள கூட்டிகிட்டு வந்தோம். ஐஸ் கிரீம் சாப்பிட்டுட்டு, பார்க்கல கொஞ்ச நேரம் இருந்துட்டு, ஷாப்பிங் பண்ணோம். அப்பொறம் காபி ஷாப் வந்தோம், ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன்னு போனவ பத்து நிமிஷமாகியும் வரல, உடம்புக்கு முடியாம ஏதாவதோன்னு போய் பாத்தேன் அவ இல்ல. காபி ஷாப் உள்ள, வெளிய எல்லா இடமும் பாத்தேன் அவ மொபைல் வேற டேபிள் வச்சிட்டு போய்ட்டா. அவ எங்கயும் இல்ல விஷ். எங்க போய் இருப்பா? அவளுக்கு ஏதாவது ஆபத்து…."ஆரோஹி விசும்புவது தெளிவாக கேக்க "ஆரா ரிலேக்ஸ். பசங்க எங்க?""இங்கதான் காபி ஷாப்ல இருக்காங்க" அவளுடன் பேச்சு கொடுத்தவாறே, மற்ற அலைபேசியால் தீரமுகுந்தனுக்கு ஒரு குறுஞ்செய்தியை தட்டி விட்டான்.

விஷ்வதீரன் காபி ஷாப்பை அடைய ஆரோஹி அழுதவாறே அலைபேசியை காதில் வைத்துக் கொண்டிருந்தாள். விஷ்வதீரனை கண்டதும் ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டு கதறலானாள். அவள் அலைபேசியில் சொன்னவைகளையே மீண்டும் மீண்டும் சொல்ல, அவ்வளவு நேரம் அலட்ச்சியமாக இருந்த காபி ஷாப் உரிமையாளர், விஷ்வதீரனின் காக்கி உடையை கண்டு வெலவெலத்து போக அவன் கேட்ட அணைத்து கேள்விகளுக்கும் பவ்வியமாக பதில் சொல்ல ஆரம்பித்தார். சீசீடிவியை செக் பண்ணியவன் பிங்கி காணாமல் போக முன்னாடி வந்த அனைத்து வண்டிகளின் எண்ணை குறித்துக் கொண்டு அது யார் வண்டி என்று விசாரிக்க உத்தரவிட்டான்.

images (21).jpg

அழுது கொண்டிருந்த குழந்தைகளை சமாதானப் படுத்தி காபி ஷாப்பில் இருந்த குழந்தைகள் விளையாடும் இடத்துக்கு ஒரு கான்ஸ்டபுளோடு அனுப்பி வைத்தவன் ஆரோஹியை அணைத்தவாறே தான் எல்லா வேலைகளையும் பார்த்தான். அவள் அழுவதை நிறுத்தவுமில்லை, புலம்புவதை விடவுமில்லை. அவளை சமாதானப் படுத்தாமல் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் திணறியவன்"ஆரா ஒரு வேல பிங்கி என் தம்பிய பிடிக்காம அவ லவர் கூட ஓடி போய் இருப்பாளோ!"அவன் அணைப்பில், அவன் மார்பில் தலை வைத்து விசும்பிக் கொண்டிருந்தவள் விசுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்து"என்ன உளறுற? உன் போலீஸ் புத்திய இங்க காட்டாத, என் தங்கச்சி யாரையும் லவ் பண்ண மாட்டா "அவளை அணைத்திருந்த கையை விடாமலேயே "என் தம்பி மேல அவ வீசுற லவ் லுக்க பாத்துமா இப்படி சொல்லுற?"சிறிது நேரம் யோசித்தவள் "ஆனாலும் உன் தம்பி அத புரிஞ்சிக்கிட்ட மாதிரி தெரியல" ஆரோஹி நொடித்துக் கொள்ள"எப்படி நீ என் லவ் வ புரிஞ்சிக்காத மாதிரியா?" அவள் முகம் போன போக்கை பாத்து "நீ அவ கிட்ட ட்ரைனிங் போ" என்று சிரிக்க"நீ உன் தம்பிக்கு ட்ரைனிங் குடு" முகத்தை நொடித்தாள் ஆரோஹி.

:love::love::love:
 
Advertisement

New Episodes