உன் மனதில் நானா காவலனே - 13

#1
PicsArt_04-22-07.36.29.jpgஅத்தியாயம் 13:

தன் கணவன் தன்னை விட்டுப் பிரிந்து உடன் சுயநினைவுக்கு வந்தவள் கண்களைத் திறந்து பார்க்க அங்கு அவளது கணவனோ ருத்ர மூர்த்தியாக அவளை பார்த்தபடியே நின்று கொண்டிருந்தான். வேகமாக எழுந்தவள் "என்ன ஆச்சு" என்று பதட்டமாக கேட்க, அவனோ "நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க எத மனசுல வெச்சுட்டு இப்ப நீ இத பண்ணுன" என்று கேட்க அவளோ எதுவும் கூறாமல் அமைதியாக தலைகுனிந்து நின்றாள்.
"இப்போ சொல்லப் போறியா இல்லையா. நான் உன்கிட்ட வந்து நின்னா கூட ஒதுங்கி போவ, இன்னிக்கு மட்டும் என்ன ஆச்சு" என்று கேட்க அவளோ ஒன்றும் இல்லை என்று கூறி தலைகுனிந்தவாறு நின்றாள்.
" மலர் எனக்கும் பொறுமைக்கும் ரொம்ப தூரம் இதுக்கு மேல என்னால பொறுமையா கேட்டுக்கிட்டு இருக்க முடியாது. இப்போ நீ உண்மைய உன் வாயாலேயே சொல்ல போறியா இல்லையா" என்று கேட்க அவனது மனைவியும் சற்று நேர அமைதிக்குப் பின் தன் மனதைத் தேற்றிக்கொண்டு, "உங்க மனைவி என்கிற உரிமையை நிலைநாட்டனும் என நெனச்சேன். அதுக்கு என்னால முடிஞ்ச ஒரே வழி இதுதான்.. அதனாலதான்.." என்று கண்களில் இருந்து கண்ணீர் வடிய திக்கி திணறியவாறே கூறினாள்.
அவள் கூறியதைக் கேட்டவுடன் தொப்பென்று கட்டிலில் அமர்ந்த தீரன் தலையில் கை வைத்துக்கொண்டு அமர்ந்து விட்டான். முதன்முறையாக தான் செய்தது தவறோ என்கிற எண்ணம் அவன் மனதிற்குள் பிரளயத்தை ஏற்படுத்தியது. தான் தன்னுடைய குடும்பத்தாரிடம் திருமணம் செய்தது பற்றி முன்னமே கூறி இருக்க வேண்டுமோ என்றும், ராதாவின் குடும்பத்தார் வந்து திருமணப் பேச்சை ஆரம்பிப்பது மலருக்கு எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என்பது அவளது செய்ய துணிந்த செயலை வைத்து அவன் உணர்ந்து கொண்டான்.

தீரன் பின் தன்னிலைக்கு வந்து அவனது மனைவியின் அருகில் சென்றவன் "இன்னைக்கு நடந்தது உனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்ததா" என்று கேட்க அவளோ கண்கலங்கிய படியே ஆமாம் என்று தலையசைத்தாள்.
பின்பு ஒரு முடிவெடுத்துவனாக "நான் நமது திருமண விஷயத்தைப் பற்றி உடனே போய் வீட்டுல இருக்க எல்லார்கிட்டயும் சொல்கிறேன்" என்று கூற அவளோ அவனை அதிர்ச்சியாக நிமிர்ந்து பார்த்தவள்.
" வேண்டாம் நீங்க இப்ப சொல்ல வேண்டாம். எப்போது சொல்லலாம்னு ஏற்கனவே முடிவு பண்ணியிருக்கீங்களோ அப்பவே சொல்லுங்க. அவசரப்பட்டு சொல்லி ஏதாவது பிரச்சனைனா என்ன பண்றது" என்று கூற அவனோ "நெஜமாத்தான் சொல்றியா" என்று கேட்டான்.
"எனக்கு நீ கஷ்டப்படுவது பார்க்கும்போது நான் பண்றது பெரிய தப்பு பண்றேன்னு தோணுது. என்னோட சுயநலத்துக்காக உன்ன கஷ்டபடுத்துறேன்னு நினைக்கும் போது எனக்கு இங்க வலிக்குது" என்று நெஞ்சைத் தொட்டு காட்டியவன், "இப்போது கூட பிரச்சனை இல்ல நான் சொல்லி விடுகிறேனே" என்று கேட்க அவளோ கூடவே கூடாது என்று மறுத்துவிட்டாள்.

"சரி அப்ப அந்த வேலையை சீக்கிரம் முடிச்சிட்டு முதல் வேலையா நம்ம வீட்ல கல்யாணத்தை பத்தி சொல்லிவிடுறேன்" என்று கூற அவள் சந்தோஷமாக சரி என்று தலை அசைத்தாள்.

இருவரும் சற்று நேரம் ஒருவருக்கொருவர் அணைப்பிலேயே கட்டுண்டு கிடக்க பின் அவனை தள்ளி நிறுத்தியவள் "சரி நீங்க உங்க ரூம்ல போய் தூங்குங்க" என்று கூற அவனும் "இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒருத்தவங்க தான் வேறு ஏதோ சொன்னாங்க. இப்ப என்ன தனியா போய் ரூம்ல படுக்க சொல்றாங்க" என்று கேலியாக கூற, அவளும் "அது நான் அப்போ சொன்னேன். இப்ப நீங்க கிளம்புங்க" என்று கறாராகக் கூற அவனும் சிரித்துக் கொண்டே அவள் நெற்றியில் முத்தமிட்டு தனது அறைக்கு வந்து சேர்ந்தான்.
இனிமேலும் காலதாமதம் செய்வது நல்லது அல்ல என்று முடிவு செய்தவன் அனைத்து வேலைகளையும் சீக்கிரம் முடிக்க ஆரம்பித்துவிட்டான். மறுபக்கம் கதிரவனும் மலரும் அவனை முடிந்த அளவுக்கு பாடு படுத்த ஆரம்பித்தனர்.

அவனது தம்பியும் மனைவியும் அடிக்கும் கொட்டத்தை பலநேரம் அவன் கண்டும் காணாமல் போய்விடுவான். வீட்டில் இருக்கும் அனைவரிடமும் வம்பு வளர்ப்பது தீரன் அவளிடம் தனியாக பேசி வந்தால் வேண்டுமென்றே அவளுடன் முக்கியமான விஷயம் பேசுவதாக இருவருக்கும் தனிமை கொடுக்காமல் இருப்பது என்று இருவரும் பல வருட தோழர்களையும் மிஞ்சிவிடும் அளவிற்கு சேட்டைகளை செய்து கொண்டிருந்தனர். மலர் சின்ன வயதில் இழந்த அத்தனையும் அந்த குடும்பம் பல மடங்கு அவளுக்கு திரும்ப தந்தது.

மலர் அங்கு வந்து இரண்டாம் மாதம் கடந்திருக்க அன்று காலையிலேயே எழுந்த போதே இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட செய்தி தான் அவர்கள் வீட்டிற்கு வந்தது. அரக்கப்பரக்க அங்கே சென்றவர்கள் அந்த விவசாயிகள் தங்களது நிலத்தில் உள்ள மரத்தில் தூக்கு மாட்டி தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள்.
வேலுச்சாமி "இன்னும் எத்தனை பேர் சாவது நம்ம கண்ணால பார்க்கிறது" என்று மன வருத்தத்தில் கூற சுதந்தி அவருக்கு ஆறுதல் கூறும் விதமாக அவரது தோளில் கை வைத்தார்.
"இன்னும் எத்தனை பேர் உயிர் இப்படி போகும். என்னால முடியலம்மா" என்று மனம் வருந்தி கொண்டிருக்க, அங்கு வந்த தீரனும் கோபம் கொப்பளிக்க கைமுட்டி இறுக நின்றுகொண்டிருந்தான். மலர் ஏற்கெனவே கதிரிடம் கொஞ்சம் அவர் கூடவே இருங்களேன். அவர் ரொம்ப கோவமா இருக்கார்" என்று சொல்லி அனுப்ப அவனும் புரிந்தது போல் தன் அண்ணனுடனே இருந்தான்.

அந்த விவசாயிகளின் உடல்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பின் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அனைத்து காரியங்களையும் கூடவே இருந்து முடித்த பின்னரே தீரனும் அவனது தந்தை, சகோதரர்களும் வீட்டிற்கு வந்தனர். வீட்டிற்கு வந்த உடனேயே குளித்துவிட்டு தங்கள் அறைக்கு அனைவரும் செல்ல தீரனும் குளித்துவிட்டு தனது அறையிலேயே தங்கி விட்டான்.

அவன் அன்று நடந்த பிரச்சனைகளில் இரவு அவனது மனைவியைக் கூட காண செல்லவில்லை. ஏதோ ஒன்றைப் பற்றி தீவிரமாக யோசித்தவன் அதை எப்படி செயலாற்றுவது என்பதை பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது சரியாக அவனது அறை கதவு தட்டப்பட்டது. இந்த நேரத்தில் யார் கதவை தட்டியது என்று யோசித்தவன் ஒருவேளை தனது மனைவியாய் இருக்குமோ என்று எண்ணத்தில் கதவைத் திறக்க அங்கே மலர்தான் நின்று கொண்டிருந்தாள்.
அவளை வேகமாக இழுத்தவன் கதவை சாத்திவிட்டு, "என்ன ஆச்சு மலர். இந்த நேரத்துல இங்க வந்துருக்க. யாராவது பாக்க போறாங்க" என்று அவளிடம் கூற, அவளோ அவனை அணைத்துக் கொண்டு "நான் வேணா கையெழுத்துப் போட்டுக் கொடுத்து விடுகிறேன். இந்த மாதிரி பிரச்சனை எல்லாம் இனிமேல் வராமல் இருக்குமே" என்று கூற அவனும் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தான்.

ஆழமூச்சு எடுத்து தன்னை சமன்படுத்தி கொண்டவன் "அப்படி பண்ணினா மட்டும் இந்த பிரச்சனை தீர்ந்து போயிடும்னு சொல்ல முடியாது. அது மட்டும் இல்லாமல் நீ இங்கே இருக்கிறது அந்த குடும்பங்களுக்கு தெரிஞ்சாலும் அவங்க உன்னை என்ன வேணும்னாலும் செய்யலாம். அதனால நீ கொஞ்சம் அமைதியா இருக்கறதுதான் நல்லது. அந்த ஒரு காரணத்திற்காக மட்டும் தான் நான் உன்னை வெளியில அனுப்புறது இல்ல. நீ எங்கயாவது வெளில போய் ராஜசேகர் ஆட்கள் பாத்துட்டாங்க மொத்த கதையும் முடிந்தது. உன் உயிருக்கு கூட இதனால ஆபத்து வரும் மலர் கொஞ்சம் புரிஞ்சுக்கோ" என்று கூற,
அவளும் "எனக்கு புரியுது ஆனா மனசு கேட்க மாட்டேங்குது. இன்னைக்கு நடந்தது பாக்கும்போது என் மனசு எவ்வளவு வலிக்குது தெரியுமா" என்று தன் கணவரிடம் தனது சோகத்தை மொத்தமும் வெளிப்படுத்தினாள். அவனை நிமிர்ந்து பார்த்தவள் "ஏங்க இந்த பிரச்சனை முடிந்து விடுமா" என்று கேட்க,
அவனோ "சீக்கிரம் முடித்துவிடுகிறோம் நீ கவலப்படாத. அதற்காகத்தான் நான் ஒவ்வொரு நாளும் காத்துகிட்டு இருக்கேன். நீ தெரிஞ்சோ தெரியாமலோ எனக்கு இன்னொரு நல்லதையும் பண்ணியிருக்க. அதைப்பற்றி நான் உன்கிட்ட இன்னொரு நாள் சொல்றேன் இப்ப நீ எதைப் பத்தியும் யோசிக்காத" என்று கூற அவளும் சரி என்று சிறிது நேரம் அவனை அணைத்தபடியே நின்றுகொண்டிருந்தாள்.

தீரன் "சரி வா உன்னோட ரூம்ல கொண்டு போய் விட்டு விடுகிறேன்" என்று கூறி அவளை அவளது அறைக்குள் அனுப்பி வைத்துவிட்டு இனிமேல் இதை தள்ளிப்போடக்கூடாது இருக்கிறத வச்சு சீக்கிரம் அடுத்த கட்டத்துக்கு போயே ஆகணும் என்று உறுதி கொண்டான்.

அடுத்த ஒரு வாரத்தில் அவர்களது ஊரில் திருவிழா நடைபெறுவதாக இருந்த அந்த இருவர் இறப்பிற்குப்பின் அங்கு யாருக்கும் திருவிழா கொண்டாடும் மனமே இல்லை. ஆனாலும் கோவில் காரியத்தை விடமுடியாது அப்படி வைத்தால் ஏதாவது ஆகிவிடுமோ என்று பயந்தவர்கள் அதற்கான ஏற்பாட்டை செய்ய ஆரம்பித்தனர். திருவிழா அன்று கட்டுவதற்காக சுகந்தி மற்றும் சுபாஷினி மலருக்கு ஒரு புடவையை பரிசாக அளித்தனர்.

"இத நோம்பி அன்னைக்கு கட்டிக்கோமா" என்று கூற அவளும் சந்தோஷமாக அவர்களிடமிருந்து அதை வாங்கிக் கொண்டாள். திருவிழாவிற்கு சுகந்தியின் பிறந்த வீட்டிலிருந்தும், சுகாசினியின் பிறந்த வீட்டிலிருந்தும் அனைவரும் வந்திருந்தனர். தீரன் என்னதான் ராதா உடனான திருமணத்தை வேண்டாம் என்று கூறியிருந்தாலும், ராதாவோ 'இப்பொழுது திருமணம் தான வேண்டாமென சொல்லியிருக்காரு. என்னை வேண்டாம்னு சொல்லலையே' என்ற எண்ணி அவன் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தாள்.

தீரனுக்கும் ராதா தன் பின்னால் சுற்றிக் கொண்டிருப்பது பிடிக்காவிட்டாலும் விசேஷ நாட்களில் இந்த மாதிரி அவளை ஏதாவது சொல்லி விட்டால் பிரச்சினை ஆகி விடுமோ என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் அமைதி காத்தான்.
அன்று இரவு கோவில் பூஜை பற்றி அங்கிருந்த பெரியவர்களிடம் வேலுச்சாமி மற்றும் அவரது மகன்கள் பேசிக்கொண்டிருக்க அப்பொழுது அந்த வீட்டின் முன்னால் வந்து நின்றது ஒரு உயர் ரக கார். அனைவரும் யாரென்று அங்கு திரும்பிப் பார்க்க அதிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தாள் ஒரு அழகிய மங்கை.

ஜீன்ஸ் டி-ஷர்ட் அணிந்து நவநாகரீக மங்கையாக வந்து இறங்கியவளை கண்ட தீரன் வேகமாக முன்னேறி சென்று "சௌமி வாட் எ சர்ப்ரைஸ்" என்று கூறியவன், "கம் கம்" என்று கூறி அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றான். பின் தந்தை மற்றும் தாய் ஆகியோரிடம் அவளை அறிமுகப்படுத்தியவன், இது என்னோட ஃபிரண்ட் சௌமியா. என்னோட வேலை பார்க்குறாங்க" என்று கூற அவர்களும் அவளை வரவேற்று, "சரியான நேரத்துக்கு தான் வந்திருக்க. நம்ம ஊர்ல திருவிழா மா" என்று கூற அவளும் "அப்படியா நான் எதேச்சையாக தான் வந்தேன். பட் நவ் ஐ கேன் என்ஜாய் த ஃபன்க்ஷன்" என்று கூற, அவளை உள்ளே அழைத்துச் செல்லுமாறு அவன் தந்தை கூறினார்.
பின் தீரன் வீட்டில் உள்ள அனைவரையும் அவளுக்கு அறிமுகப்படுத்த அப்பொழுது அங்கு வந்த மலரையும், " இது மலர் என்னோட மாமா பொண்ணு" என்று கூறியவன் அவளைப் பார்த்து கண்ணடிக்க அவளோ முகம் சிவந்தாள்.

அப்பொழுது சரியாக உள்ளே ராதா வந்து கொண்டிருக்க, சௌமியா " ஐ அம் பீலிங் வெரி டயர்ட்" என்று கூறி தீரனின் தோலில் சாயந்துகொண்டாள். அதை கண்ட அங்கிருந்த இருவர் அவனை அனல்கக்கும் விழிகளோடு பார்த்துக்கொண்டிருந்தனர். ஒன்று மலர் என்றால் மற்றொன்று ராதா.

ஆனால் தீரனோ அதை சற்றும் கவனிக்காமல் "சாரி நீ ரொம்ப நேரம் டிராவல் பண்ணி வந்திருக்க. நான் மறந்துட்டு உன்னை நிக்க வச்சு பேசிகிட்டு இருக்கேன். இரு உனக்கு கெஸ்ட் ரூம் ரெடி பண்ண சொல்றேன்" என்று கூறியவன் தன் தாயிடம் அவளுக்கு தங்க ஒரு அறை கொடுக்குமாறு கூறிவிட்டு தனது தந்தையை காணச் சென்று விட்டான்.

அங்கு வந்த கதிர் மலரின் முகத்தை வைத்து 'இன்னைக்கு அண்ணனுக்கு பிரம்பு அடி கன்ஃபார்ம்' என்று மனதில் எண்ணிக் கொண்டவன் சிரித்தவாறு அங்கிருந்து சென்று விட்டான்.

சௌமியாவும் அனைவரிடமும் நன்றாக பேச மலருக்கும் அவளை பிடித்து இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. அவளிடம் ஒதுக்கமும் காட்டவில்லை. ராதாதான் சௌமியாவை முறைத்துக்கொண்டே சுற்றினாள். அதைக் கண்ட கதிரவனும் 'லைசன்ஸ் வாங்குன டிக்கெட் கூட அமைதியா இருக்கு இந்த வித்தவுட் பண்ற அழிச்சாட்டியம் தாங்க முடியலடா சாமி' என்று புலம்பியபடியே சென்றான்.

அன்றைய கோவில் நிகழ்ச்சியைப் பற்றி சகுந்தலாவிடம் கேட்ட மலர் "பாட்டி இன்னைக்கு என்ன விசேஷம்" என்று கேட்க அவரோ " பகவதியம்மன் கோவில் திருவிழா மா. இன்னைக்கு இரவு கோவில் ஆத்தங்கரையில கரகம் வைத்து சாமி கும்பிடுவார்கள். அதுக்கப்புறம் கரகத்தை ஆத்துல இருந்து கோவிலுக்கு அழைத்து வந்து பூஜை நடத்தி மாவிளக்கு எடுப்பாங்க. அது முடிச்சதுக்கப்புறம் நைட்டு சாமிக்கு பலி கொடுக்கிற நிகழ்வு நடக்கும். அடுத்த நாள் காலையில பொங்கல் வைத்து சாமிக்கு படைப்பாங்க மறுபடியும் சாய்ந்திரம் நம்ம ஊர்ல மட்டும் விசேஷமாக தேர்த்திருவிழா நடக்கும்" என்று அவளிடம் ஒவ்வொன்றாக கூறிக்கொண்டிருந்தார்.

அப்பொழுது அங்கு வந்த சௌமியா மலர் அருகில் அமர்ந்து, "பாட்டி நானும் இந்த திருவிழா ஃபுல்லா பாக்கணும். ஃபர்ஸ்ட் டைம் இது மாதிரி பார்க்க போறேன்" என்று கூற, அவரும் "கண்டிப்பா மா. நீயும் இப்ப எங்க வீட்டு பொண்ணு தானே கண்டிப்பா திருவிழாவுல எல்லா விஷயத்துக்கும் வரணும்" என்று கூறியவர், அவளுக்கு ஒரு புடவையை தந்து "இதை நீ கட்டிக்கோ" என்று கூறினார். அதைக் கையில் வாங்கிக் கொண்ட சௌமியா தேங்க்ஸ் பாட்டி என்று கூற மலர் இதை சிரித்த முகமாக பார்த்துக்கொண்டிருந்தாள்.

அப்போது அங்கு வந்த ராதா தன் அக்காவிடம் "என்ன இங்க புதுசா வந்த எல்லாருக்கும் புடவை எடுத்து தாராங்க" என்று கேட்க "உனக்கு வேணும்னா சொல்லு நான் ஒன்னு வாங்கி தரேன்" என்றாள் சுகாசினி.
" நான் என்ன புடவைக்கு வக்கத்து போயா இருக்கேன்" என்று கூறியவள் "எனக்கு எப்படியாவது தீரன் மாமாவை திருமணம் செய்து கொண்டால் போதும்" என்று கண்களில் கனவுடன் கூற, சுகாசினி "அதுக்கு முதல்ல தீரன் சம்மதம் சொல்லனும். அதுக்கு அப்புறம் தான் திருமணம் எல்லாம்"என்று கூறினாள்.
ராதாவோ "நான் தான் அவர் பின்னாடியே சுற்றி பார்த்து விட்டேன். ஆனால் அவர்தான் சம்மதம் தெரிவித்த மாட்டேங்குறாரு" என்று கூற, "அப்ப சம்மதம் சொல்லாதவர் பின்னாடி நீ ஏன் சுத்துற. உனக்கு புடிச்ச மாதிரி ஒரு பையனா பாத்து கல்யாணம் பண்ணிக்கலாமே" என்று கேட்டாள் சுகாசினி.
ராதாவோ கோபமாக "இப்ப எனக்கு புரியுது. எங்க உனக்கு போட்டியா இந்த வீட்ல நான் மருமகளா வந்துடுவேன் என்று நீ நினைக்கிறாய்" என்று கேட்க அவளைப்பார்த்து சுகாசினி "மருமகளுக்கு உள்ள ஒற்றுமை இருந்தால் போதும் போட்டி இருக்கணும்னு அவசியம் இல்ல. நீ அதை போட்டியா பார்க்குற. அதனாலதான் இந்த குடும்பத்துக்கு நீ ஒத்து வர மாட்டேன்னு நான் நினைக்கிறேன்" என்று கூற, அவளும் "அப்ப நான் அம்மா அப்பா எல்லாம் உன் குடும்பம் கிடையாதா" என்று கேட்டாள்.
,"அது என் குடும்பம் தான் ஆனால் அது என் பிறந்த வீடு. இது புகுந்த வீடு என் வாழ்க்கை முழுவதும் என்னோட குடும்பம் நான் சொல்லக்கூடியது இத மட்டும் தான். என்னால இந்த குடும்பத்துல ஒரு சின்ன விரிசல் வருவதை கூட பார்க்க முடியாது. இந்த வீட்டுக்கு மூத்த மருமகளாக என் கடமையை நான் சரியா செய்யணும்னு நினைக்கிறேன். சரியாவும் செய்வேன்" என்று கூற, ராதாவும் "உன் கண்ணு முன்னாடியே இருந்த வீட்ல நான் மருமகளா வந்து காட்டுகிறேன்" என்று கூற, சுகாசினியும் "உன்னால முடிஞ்சதா செஞ்சுக்கோ" என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்று விட்டார். ராதாவும் எப்படியாவது தீரனை தனது வலையில் விழ வைக்க வேண்டும் என்று திட்டம் தீட்ட ஆரம்பித்தாள்.

ராதாவை பொருத்தவரை மலர் மேல் அவளுக்கு பெரிதாக எந்தவித ஈடுபாடும் இல்லை அவளால் தீரனே திருமணம் செய்துகொள்ள முடியாது என்றும் அவன் எப்படியும் அவளுக்கு சிக்க மாட்டான் என்றும் உறுதியாக நம்பினாள்.

ஆனால் புதிதாக வந்திருக்கும் சௌமியாவை அவள் நம்பத் தயாராக இல்லை எப்பொழுதும் தீரனுடன் இருப்பதும் அவனுடன் உரசிக்கொண்டு பேசுவதுமாக இருப்பது அவளுக்கு மிகுந்த எரிச்சலை தந்தது. எப்படியாவது தீரனே தன் வசப்படுத்த வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்க அங்கு தீரனின் மனையாளும் சௌமியாவுடன் அவன் காட்டும் நெருக்கத்தில் பயத்தின் உச்சத்திற்கு போயிருந்தாள். என்னதான் கணவன் தனக்கு மட்டுமே என்று அவளுக்கு புரிந்தாலும் இன்னும் குடும்பத்தில் அங்கீகாரம் கிடைக்காத சமயத்தில் அவளால் இதை இயல்பாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.


ஒருவாறு அன்று மாலையும் வந்துவிட அன்று இரவு அனைவரும் கரகம் பளிக்க ஆற்றுக்குச் செல்லவேண்டும் என்பதால் சீக்கிரமாக உணவு உண்ணலாம் என்று உணவு உண்ணும் அறைக்கு வந்திருந்தனர். சௌமியாவையும் ஆண்களுடன் அமரச்சொல்லி உணவு பரிமாறிக் கொண்டிருந்தனர் பெண்கள். அப்பொழுது ராதாவும் வர அவளையும் அமரச்சொல்லி மலர் கூற அவள் அவளை எகத்தாளமாக பார்த்துவிட்ட தீரனின் மறு பக்கத்தில் வந்து அமர்ந்தாள். தன் கணவனுக்கு சப்பாத்தியை வைத்து விட்டு அருகில் இருந்த சௌமியாவுக்கு வைக்க போகும் நேரம் சௌமியா தீரனிடம், "நீ எப்ப வந்து ப்யூடி ஜாயின் பண்ண போற" என்று கேட்டாள். அவனோ "இன்னும் ஒரு மாசத்துல வந்து விடுவேன் என நினைக்கிறேன்" என்று கூற மலர் புரியாமல் "என்ன டியூட்டி" என்று கேட்டாள்


கதிர் "அண்ணன் வேலையில ஜாயின் பண்ண போகணுமில்ல" என்று கூற, அவள் குழம்பிய முகத்துடன் "என்ன வேலை எங்க போய் ஜாயின் பண்ணனும்" என்று கேட்க அனைவரும் அவளை ஆச்சர்யமாக பார்த்தனர். பின் கதிரோ அவளை அதிர்ச்சியாக பார்த்து, "உங்களுக்கு அண்ணே என்ன வேலை பார்க்குறாங்க தெரியாதா" என்று கேட்க அவளோ உதடு பிதுக்கி இல்லை என்பது போல் தலையசைத்தாள்.
.சௌமியா "இவ்வளவு நாளா எங்க இருக்க அவரு என்ன வேலை பார்கிறார்ன்னு கூட உனக்கு தெரியாதா" என்று கேட்டவள், "அவர் ஒரு ஐபிஎஸ் ஆபீஸர். போலீஸ் டிபார்ட்மென்ட் ஏசிபி ஆக இருக்கிறார்" என்று கூற மலரோ அவனை அதிந்து பார்த்தபடி சிலையாக நின்றாள்.
 
#10
அச்சோ இரண்டு விவசாயிகள் எதுக்கு ஏன் எப்படி இறந்து போனாங்க?
என்ன காரணம்?

மலர் இங்கேயிருப்பது ராஜசேகருக்கு ஏன் தெரியக் கூடாது?

ஒரு சாதாரண வேலைக்காரி வீட்டை விட்டு போனதுக்கு அன்னிக்கே வசு ஏதோ சொன்னாள்
மலர் பெண்ணின் சொத்து ஏதாவது ராஜசேகர் பேமிலி ஆட்டையைப் போட்டு விட்டார்களா?
எங்கேயோ இடிக்குதே

ஹா ஹா ஹா
தீரன் பெத்த போலீஸ் ஆபீஸர்ன்னு நாங்கள்ல்லாம் அன்னிக்கே சொன்னோமில்லே
இந்த ஆதிரா பொண்ணுதான் இல்லேன்னு சொல்லிட்டாங்கப்பா

அடுத்த போலீஸ் ஆபீஸர் சௌமிப் பொண்ணு வெறுமனே திருவிழா பார்க்க வந்த மாதிரி தெரியலையே
சௌமியை தீரன்தான் இங்கே வர வைச்சானோ?
வேற ஏதோ விஷயம் இருக்கு போலவே
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes