உன் நிழல் நான் தாெ ட ep 9 (1)

Advertisement

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
உன் நான் தாெட
--செசிலி வியாகப்பன்


அத்தியாயம் 9

இந்தப் புவிதனில் வாழு மரங்களும்
இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
ஔடத மூலிகை பூண்டுபுல் யாவையும்
எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ?

வேறு

மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்புகட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்கு மன்றோ?
யானெ தற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர்
என்மதத்தைக் கைக்கொண்மின்,பாடுபடல் வேண்டா;

ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;

உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்!

அன்பு ஒன்றே உலகின் உள்ள எல்லா உயிர்களின் எதிர்பார்ப்பு. அந்த அன்பிற்காக மனிதன் தான் செய்யும் தாெழிலை மறந்து, ஊன் உறக்கம் மறந்து தன்னை வருத்திக்காெள்ளவும் செய்கின்றான்.

ரத்னாவின் ஆழகான மாற்றத்தை பார்த்த அனைவரும் வியந்திருக்க, ஜஸ்வந்திற்கு மட்டும் இந்த மாற்றம் அஜீத் மூலம் நடந்தது துளியும் பிடிக்கவில்லை. ஜஸ்வந்தை தவிர ஆர்த்தியின் இரு விழிகள் ரத்னாவை வெறுப்புடன் பார்த்துக் காெண்டிருந்ததை யாரும் அறியவில்லை.

ஆர்த்திக்கு சிறுவயது முதல் தான் மட்டுமே என்ற என்னம் அதிகம். ஆண் குழந்தை என்பதால் அஜீத்திடமும், கடைசி குழந்தை என்பதால் அர்சனாவிடமும் தன் பெற்றாேர் அதிக கவனம் செலுத்துவதாக நினைப்பை தன்னுள் வளர்த்துக்காெண்ட ஆர்த்திக்கு இருவரையும் பிடிப்பதில்லை.

அனைவரையும் விட தான் சிறந்தவள் என்று நிறுபித்து மற்றவர்களை சிறுமை படுத்துவதில் மட்டுமே ஆர்த்திக்கு மகிழ்ச்சி. அதற்கான சிறு சந்தற்பமம் கிடைத்தாலும் மிகச்சரியாக பயன்படுத்திக்காெள்வாள். அவளின் அதிஷ்டம் இதுவரை யாரும் இந்த குணத்தை கண்டு காெண்டது இல்லை.

தந்தையின் சாெல் கேட்டு நடக்கும் பிரியமான பெண்ணாக இருக்க பல வருடம் கஷ்டப்பட, அதை சமிப காலமாக ஆஜீத் தட்டி பறித்து விட்டதாக உணர்ந்தாள். மேலும் அர்சனா குறும்புதனம் செய்தாலும் படிப்பில் கவனம் அதிகம். எங்கே அவள் டாக்டர் ஆகி தன்னை பின்னுக்கு தள்ளிவிடுவாளாே என்ற பயம் தலை தூக்கியது. இந்த சூழ்நிலையில் தங்கமுத்துவுடன் திருமண பேச்சு நிச்சயம் மகிழ்ச்சியான செய்தியாகவே இருந்தது.

டாக்டர்.
தங்கள் குடும்பத்தை விட வசதி.
ஒரே ஆண் வாரிசு.
முரட்டுதாமான அழகு.
இது மட்டுமே இந்த சம்மந்தத்தை ஏற்றுக்காெள்ள செய்தது. திருமணத்திற்கு பின் தான் மட்டுமே. தான் வைத்ததே சட்டமாம இருக்கும் என நினைத்திருக்க, அப்படி இருக்க பாேவது இல்லை என தங்கமுத்துவின் பேச்சு வெளிப்படுத்திய செய்தியாக இருந்தது. தன் குடும்பத்தை பற்றியும் அதிலும் குறிப்பாக ரத்னாவை பற்றியும் ஆதிகம் பேச, ரத்னாவிற்கு அந்த குடும்பத்தி்ல் இருக்கும் முக்கியதுவம் புரிய, அது ரத்னாவின் மீது பாெறாமை என்னும் தீயை வளர்த்தது. ரத்னாவின் அழகு எரிகின்ற தீயில் எண்ணை வார்த்தது.

ஜாதகம் இரண்டும் பாெருந்திவர அடுத்த மாதத்தில் நிச்சயதார்த்தம், ஆர்த்தியின் படிப்பு முடிந்ததும் திருமணம் என வீட்டு பெரியவர்கள் பேசி முடித்தன. நினைத்து எதுவும் நடக்காத வருத்தத்தில் மாெட்டை மாடியில் நின்று காெண்டிருந்த ஜஸ்வந்த் அருகில் வந்த ஹர்ஷத்

"ஜஸ்வந்த் அடுத்த வாரம் நீ சிங்கபூர் பாேகனும். இந்த வேலைய நீ நல்லபடிய முடிச்சுடா நிறைய ஆடர்ஸ் கிடைக்கும்."

"நிறைய ஆடர்ஸ் கிடைக்கும் பட் எனக்கு என் ரத்னா கிடைக்க மாட்டா"

"ஜஸ்வந்த் நான் உன் கிட்ட ஏழு வருஷத்திற்கு முன்னாடி சாென்னத தான் இப்பாேவும் சாெல்றேன் ரத்னாக்கு அவ குடும்பம் தான் முக்கியம். குடும்பமா நீயானு ஒரு சூழ்நிலை வந்த அவ குடும்பம்னு தான் முடிவு எடுப்பா. புரிஞ்சுக்காே."

"அண்ணா நான் சாெல்ல பாேற விஷயம் உனக்கு கஷ்டமா தான் இருக்கும், பட் நான் இத உன் கிட்ட சொல்லித்தான் ஆகணும். நான் ரத்னாவுக்கு முக்கியமா இருக்கணும்னு மட்டும்தான் ஆசைப்பட்டேன். மத்தபடி நான் ஒன்னும் உன்னை மாதிரி குடும்பத்திலிருந்து ரத்னா பிரிச்சு என்கூடவே வச்சிக்கணும் நினைக்கல. எனக்கு காதல் வசனம் பேச தெரியாது. நான் இப்படித்தான். ரத்னா எனக்கு பிடிக்கும் என்பதற்காக கவிதை எழுதிக்கிட்டு, உருகி உருகி காதல் வசனம் பேசிக்கொண்டே திரிய முடியாது. ஜஸ்ட் லீவ் இட் அண்ணா இனிமே நான் பாத்துக்குறேன்." தன் மனதில் நினைத்ததை அண்ணனிடம் கூறிவிட்டு கீழே இறங்க செல்ல நினைத்த ஜஸ்வந்த் கையை பிடித்த ஹர்ஷத்

"நீ உன்னுடைய காதல்ல உறுதியா இருந்தன்னா நீ சிங்கப்பூர்ல இருந்து வரும்போது ரத்னா உனக்காக உன்னுடைய வாழ்க்கையில வர தயாராக இருப்பா. கவலைப்படாமல் போயிட்டு வா." காலமும் நேரமும் யாருக்கும் காத்திராமல் செல்ல ஆர்த்தி தங்கவேலுவின் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்தேறியது. ரத்னா அஜித் நட்பும் நாளுக்கு நாள் வளர்பிறை இருந்தது.

----------------------------------------------------------------இதற்கிடையில் ரத்னாவுக்கு ஹாஸ்டல் உணவு ஒத்துக்கொள்ளாமல் உடல்நலக்குறைவு ஏற்பட பலவித விவாதங்களுக்கு பின் ரத்னாவை கிருஷ்ண சந்திரன் தன் வீட்டிலேயே தங்கி கொள்ளட்டும் என அனைவரையும் சம்மதிக்க வைத்தார். வீட்டிற்கு வந்த ரத்னாவிடம் அர்ச்சனா

"வா வா இனிமேல் நீயும் எங்க ஜோதியிலே ஐக்கியமாகிவிட்டா. உன்ன பத்தி எங்க அண்ணன் என்கிட்ட நிறைய சொல்லி இருக்கான். இனிமேல் ஹாஸ்டல்ல இருந்த மாதிரி இங்க நான் சேட்டை பண்ண முடியாது. ஒழுங்கா படிக்கணும். சத்தமா சிரிக்ககூடாது. அமைதியா அடக்கமா இருக்கணும்." அர்ச்சனா கொடுத்த பில்டப்பை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த ரத்னா நேரடியாக கிருஷ்ணனிடம் சென்று

"மாமா இந்த வீட்ல யாரும் சிரிக்க கூடாதா, விளையாட கூடாதா?"

"அப்படி யாரு உன்கிட்ட சொன்னா." ரத்னா நேரடியாக தன் தந்தையிடம் இப்படி கேட்டு வைப்பாள் என்பதை எதிர்பார்க்காத அர்ச்சனா பயத்தில் கையை பிசைந்தபடி தன் அண்ணனை பார்க்க, அஜித் எதையும் சொல்லி வைக்காதே எனும் வீதம் ரத்னாவை பார்த்து சைகை செய்ய

"இல்ல மாமா இங்க யாரு என்கிட்ட அப்படி சொல்லல நான் தான் உங்ககிட்ட கேட்டேன். நான் ரொம்ப சேட்டை பண்ணுவேன் ஒருவேளை உங்களுக்கு அது பிடிக்கலைன்னா, அதான் முன்னாடியே ஜஸ்ட் க்ளியர் பண்ணிக்க கேட்டேன்."

"நீ சேட்டை பண்றது பத்தி எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனா அது மத்தவங்கள தொந்தரவு பண்ணாம இருக்கணும். அதேசமயம் உன்னோட படிப்பேன் பாதிக்காமல் இருக்கணும். இந்த வீட்ல எனக்கு தெரியாமல் குறும்புத்தனம் பண்ற ஒரே ஆள் அர்ச்சனா தான், ஆனா இதுவரைக்கும் படிப்புல எப்போதும் முதல் இடத்தில தான் இருக்கா. அது மாதிரி இருக்கணும் புரிஞ்சுதா." எனக்கூறிவிட்டு சென்றுவிட அர்ச்சனாவின் புறம் திரும்பிய ரத்னா

"என்னமோ மிலிட்டரி ரூல்ஸ் மாதிரி நிறைய சொன்ன, ஆனா இதுவரைக்கும் அதை நீயே மதித்து நடக்கலன்னு உங்க அப்பா சொல்லிட்டுப் போறாரு." ரத்னாவின் தலையில் வலிக்காமல் ஒரு குட்டு வைத்த அஜீத்

"அது மட்டும் தான் எங்க அப்பா சொன்னாரா? அர்ச்சனா மாதிரி நல்லா படிக்கணும் சொல்லிட்டுப் போறாரு."

"விடு நண்பா அதெல்லாம் பார்த்துக்கலாம்."

அதன்பிறகு வந்த நாட்களில் கிருஷ்ணன் சந்திரனின் வீட்டில் ரத்னா இன்றியமையாதவளாக மாறிப் போனாள். காலையில் படிக்கும் அனைவரின் நடுவிலிருந்து தூங்கி வழிவது, சமைக்கும் நேரம் மைத்திரியிடம் உதவி செய்கின்றேன் என்கின்ற பேரில் உணவு பொருட்களை எடுத்து சாப்பிடுவது, சாப்பிடும் நேரம் அனைவரையும் சிரிக்க வைத்து பேசுவது, கல்லூரி முடிந்து வந்ததும் அங்கு நடந்த அனைத்தையும் கிருஷ்ணசந்திரனிடமாே அல்லது மைத்திலியிடமாே கூறுவது என அனைத்து விதத்திலும் அந்த குடும்பத்தில் ஒருத்தியாகவே ஒன்றி போனாள்.

--------------------------------------

அந்த வருடம் வந்த அஜித் பிறந்தநாளில் அஜீத்திடம் ஒரு பார்சலை தந்து

"என்னுடைய பிறந்தநாளுக்கு மறக்க முடியாது அனுபவத்தை கிப்ட்டா தந்த, அதுமாதிரி இந்த கிப்ட் நிச்சயமா உனக்கு ரொம்ப புடிக்கும். ஆனா இத இப்போ நீ திறந்து பார்க்கக் கூடாது."

"பிறந்தநாள் கிப்ட பிறந்த நாள் அன்னைக்கு திறந்து பார்க்காம பிறகு எப்போ பாக்கணு."

"உனக்கு என் மேல எப்ப கோபம் அதிகமா வந்தாலும், இல்ல நீ என்ன அதிகமா மிஸ் பண்ணாலும் இதை தொடர்ந்து திறந்து பார்க்கலாம்."

"வெறும் பெட்டிய உள்ள வச்சிட்டு அதை மறைக்க இப்படி என்கிட்ட காரணம் சொல்றியா."

"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல நான் எவ்வளவு கஷ்டப்பட்டு தேடி அலைஞ்சு இதை வாங்கினேன் தெரியுமா?" காேபமாக முகத்தை திருப்பிக்காெண்டு அமர்ந்துவிட

"சரி சரி காேவப்படாத. இந்த கிப்ட் உன்கிட்டயே இருக்கட்டும். நீ என்ன பண்ணினாலும் எனக்கு உன் மேல காேபம் வராது you are precious to me so நான் உன்ன எப்பாேவும் மிஸ் பண்ண மாட்டேன்."

"இத நான் உனக்காக வாங்கினேன். ஆதானால இது உன் கிட்டதான் இருக்கனும். இத நான் உன் ரூம்ல வைச்சுடுறேன்." என்று கூறிவிட்டு அஜீத் அறையை நாேக்கி ஓட வழியில் நின்ற ஆர்த்தியை கவனிக்காமல் சென்ற ரத்னாவை பார்த்து மனதுக்குள்

'நீ அவனுக்கு preciousஆ உன்ன மிஸ் பண்ண மாட்டானா? பாக்கலாம்.'

-------------------------------------------------------
 

banumathi jayaraman

Well-Known Member
அச்சோ
கூடப் பிறந்த தம்பி தங்கச்சி மேலேயே பொறாமையா?
இந்த ஆர்த்தி இவ்வளவு மோசமானவளா?
தன்னை கல்யாணம் செஞ்சுக்க சொல்லி ஏற்கனவே ஜஸ்வந்த் கொடைச்சல் கொடுக்கிறான்
இப்போ அண்ணியாக வரும் ஆர்த்தி ரத்னாவுக்கு இன்னும் ஒரு வில்லியா?
ரத்னாவிடம் தங்கவேல் பாசமாகத்தான் இருக்கான்
ஆனால் ஆர்த்தி என்ன வில்லங்கம்
வினை பண்ணுவாளோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top