உன் நிழல் நான் தாெட Ep5

Advertisement

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
. உன் நிழல் நான் தொட
-- செசிலி வியாகப்பன்

அத்தியாயம் 5

தேனூத்து (தேனூற்று) தென்காசி அருகில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சுற்றுச்சூழலில் அமைந்துள்ளது. குற்றாலம் அருவிகள் அருகில் உள்ளதால் இவ்வூர் பருவ மழைத் தூறலுக்குப் பெயர் போனது.

தேனூத்தில் வைரவேலின் குடும்பத்தை பற்றி தெரியாதவர் என்று யாருமில்லை. ஊரிலேயே மிகப்பெரிய வீடு வைரவேலினுடயைது. எனவே சுற்றியுள்ள அனைத்து ஊர் மக்களும் வைரவேலின் குடும்பத்தை "பெரிய வீட்டுக்காரங்க" என்று அழைப்பதை வழக்கமான ஒன்றாகிவிட்டது. வீட்டைப் போலவே அவர்களுடைய மனதும் பெரிதாக இருந்த காரணத்தால் அந்த ஊர் மக்களின் மனதில் நிலையான ஒரு இடத்தை பெற்றிருந்தார்.

யார் வீட்டில் என்ன விசேஷம் என்றாலும் முதல் அழைப்பு வைரவேல் குடும்பத்திற்கு தான் இருக்கும். அதுபோல அவரும் ஊர் நல்ல காரியங்களுக்கு செலவு செய்வதில் தாராள மனதுடன் இருப்பதால் செய்வதால் அவர் பேச்சுக்கு ஊர் மக்களிடையே மரியாதை இருந்தது.

ஊரின் மத்தியில் 4 மனை அளவு இடத்தில் நடுவில் அமைந்திருந்த அந்தப் பெரிய வீட்டில் நடுவில் இருந்த ஊஞ்சலில் தன் மடியில் படுத்திருந்த 8 வயது தங்கையின் தலையை கோதிக்கொண்டே ரூபவதி பாடிக் கொண்டிருந்தாள்

சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே!
சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்!
சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே!

பெரிய பேத்தியின் இனிய குரலில் தன்னை மறந்து சாய்வு நாற்காலியில் கண்ணை மூடி பாடலின் இனிமையை அனுபவித்துக் கொண்டிருந்தார் வைரவேல்.

பிள்ளைக்கனியமுதே, -கண்ணம்மா!
பேசும் பொற்சித்திரமே!
அள்ளியணைத்திடவே-என்முன்னே
ஆடிவருந் தேனே
சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே!

ஓடி வருகையிலே- கண்ணம்மா!
உள்ளம் குளிருதடீ;
ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய்
ஆவி தவிழுதடி பாட்டுப்பாடி

ரத்னாவை தூங்கவைக்கும் ரூபவதியை கண்ட பார்வதிக்கும் மாணிக்கத்திற்கு இருவரின் பாசப்பிணைப்பை கண்டு பிள்ளைகள் எப்பாெழுதும் ஒற்றுமையுடனும் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டனர்.

உச்சிதனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளருதடி
மெச்சி யுனை யூரார்- புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ.

கன்னத்தில் முத்தமிட்டால்-உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடீ
உன்னை தழுவிடிலோ- கண்ணம்மா
உன்மத்த மாகுதடீ.

உன் கண்ணில் நீர்வழிந்தால்- என்நெஞ்சில்
உத்திரங் கொட்டுதடி;
என் கண்ணில் பாவையன்றோ? கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ!
என் உயிர் நின்னதன்றோ!
என் உயிர் நின்னதன்றோ!

ஒருவழியாக ரத்னா உறங்கியதும் அவளை தூக்கிச்சென்று அவளது அறையில் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு மாணிக்கம் முன்னறைக்கு வர அதற்காகவே காத்துக்கொண்டிருந்த முத்துவேல்

"மாணிக்கம் நீ என்ன சொன்னாலும் சரி நான் ரூபாவை படிக்க சென்னைக்கு அனுப்ப போறது இல்ல. படிக்கணும்னு ஆசைப்பட்டா படிக்கட்டும், அதை நம்ம ஊர்ல இருந்து படிக்கட்டும். அத விட்டுட்டு அவ்வளவு தூரம் போய் படிக்க வேண்டாம்." அண்ணன் பேசியதைக் கேட்ட மாணிக்கம் அவரிடம்

"அண்ணன் பாவம் ரூபா தாயில்லாத பொண்ணு, அம்மா இருந்திருந்தால் அப்பாகிட்ட பேசி நம்ம படிக்க அனுப்பி இருப்பாங்கன்னு அவ மனசுல ஒரு நினைப்பு வந்து விடக்கூடாது, அதற்காகவாவது படிக்கிறதுக்கு அனுப்புங்க." மனைவியின் பேச்சை எடுத்ததும் சிறிது நேரம் யோசித்த முத்துவேல்

"நீ சொல்றது சரிதான் ஆனா ரத்னாவை நினைச்சு பாத்தியா, ரத்னா ரூபா இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க மாட்டா." தன் மக்களுக்காக யோசிக்கும் பெரியவரைப் பார்த்து மனம் நிறைந்த பார்வதி

"பெரிய அத்தான் ரத்னா கவலையை பார்த்து ரூபாவை படிக்க அனுப்பாமல் இருக்க முடியுமா, நாளைக்கு ரூபாவை கல்யாணம் பண்ணி கொடுக்கும்போதும் வேற இடத்துக்குத்தான் அனுப்புவோம், அப்போவும் இவ கவலைப்படுவானு பார்த்தா முடியுமா. ரெண்டு நாள் கவலைப்படுவா அதுக்கு அப்புறம் அவளுக்கு பழகிவிடும்." தம்பி மனைவியின் பேச்சில் இருந்த உண்மையை புரிந்துகொண்ட முத்துவேல்

"சரி படிக்க போகட்டும், ஆனா தினமும் போன் பண்ணி ரத்னா கிட்ட பேசிடனும், இல்லன்னா ரத்னா ஏங்கிட போறா. படிச்சு முடிச்சதும் நான் சொல்ற மாப்பிள்ளையை தான் கல்யாணம் பண்ணனும். அதை விட்டுவிட்டு காதல் கீதல் என்று எதையாவது இழுத்துட்டு வந்து நின்னா கொலை பண்றதுக்கு கூட நான் தயங்க மாட்டேன்."

"அண்ணே ரூபா நம்ம பொண்ணு. அப்படிலாம் பண்ண மாட்டா."

"பண்ணாம இருந்தா சரிதான். ஆக வேண்டியத பாரு." என்று மறைமுகமாக தன் சம்மதத்தை கூறி விட்டு தன் அறைக்குள் முத்துவேல் சென்றுவிட

"தேங்க்யூ தேங்க்யூ தேங்க்யூ சோ மச் சித்தப்பா. அப்பா என்ன சென்னைக்கு அனுப்ப ஒத்துக்குவாங்கனு நான் கொஞ்சம்கூட எனக்கு நினைக்கவே இல்லை. ஆனா எனக்கு உங்க மேல கொஞ்சம் கோபம் இருக்குது சித்தப்பா."

"ஏன்டா என் மேல கோவம்."

"பின்ன என்ன சித்தப்பா அப்பாகிட்ட தாயில்லாத பாெண்ணுன்னு சொல்றீங்க. எனக்குத்தான் அம்மாவா பார்வதி அம்மா இருக்காங்களே அப்புறம் எப்படி நான் தாயில்லாத பொண்ணு ஆவேன்." என்று பார்வதியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு செல்லம் கொஞ்ச பார்வதியும்

"அப்படி சொல்லுடா என் செல்லம்" என்று அவள் கண்ணத்தில் முத்தமிட அந்த இடமே மகிழ்ச்சியாக இருந்தது.

தன் சிறிய தங்கையை ஒரு வழியாக பேசி சமாளித்து ரூபாவதி அந்த புகழ்பெற்ற இன்ஜினியரிங் காலேஜில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார். அப்பொழுது அவளுக்கு அங்கு அறிமுகமானவர்தான் ஹர்ஷத்.

ஹர்ஷத்தின் தந்தை தேவராஜ் ஒரு தமிழர். தொழில் நிமித்தமாக மும்பை சென்ற அவர் அங்கு அறிமுகமான மேக்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஹர்ஷத் ரூபா படித்த அதே கல்லூரியில் எம்பிஏ படித்துக்கொண்டிருந்தான். தோற்றத்தில் தந்தையையும், நிறத்தில் தாயையும் கொண்டு ஆணழகனாக பிறந்திருந்ததாலும், அவன் வசதிக்காகவும் பல பெண்கள் அவனை வட்டமிட்டன. ஆனால் ஏனோ அவன் மனம் எந்த பெண்கள் புறம் திரும்பியது இல்லை.

அந்த ஆண்டு கல்லூரி விழாவில் ரூபாவின் பாடலை கேட்ட ஹர்ஷத் அவளின் குரலின் இனிமையிலும், எளிமையான அழகினாலும் ஈர்க்கப்பட்டு காதலிக்க ஆரம்பித்தான். முதலாம் ஆண்டு முடிவில் தன் காதலை ரூபாவிடம் கூற, முதலில் தன் குடும்பத்தை நினைத்து தயங்கினாலும் பின் இரண்டாமாண்டு முடிவில் தன் சம்மதத்தை தெரிவித்தாள். படிப்பு முடிந்ததும் ஹர்ஷத் தன் தந்தையின் தொழிலை ஏற்று நடத்த ரூபாவும் தன் படிப்பில் கவனத்தை செலுத்தினாள்.

இந்நிலையில் தங்கவேலுவிற்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க அவனும் படிப்பிற்காக சென்னை வந்தான். ஏனோ தங்கவேலுவிற்கு சிறுவயது முதலே வெளியிடங்களில் உணவு ஒத்துக் கொள்வதில்லை. ஆகவே தந்தையர்கள் இருவரும் சென்னையிலேயே ஒரு வீடு எடுத்து வேலைக்கு ஆட்களையும் ஏற்பாடு செய்து ரூபாவையும், தங்கவேலுவையும் அங்கிருந்து படிப்பதற்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்தனர்.

ஒரு நாள் தமக்கையின் காதலை தெரிந்துகொண்ட தங்கவேல் முதலில் கோபப்பட்டாலும் பெண் பின் ஹர்ஷத்தை நேரில் சந்தித்தபோது மறுப்பதற்கு எந்த காரணமும் இல்லை என்பதால் தன் அக்காவின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டினான்.

அந்த ஆண்டு ரூபாவிற்கு செமஸ்டர் முடிந்து விடுமுறையாக இருக்க, தங்கவேலுவிற்கோ பரீட்சை நடந்து கொண்டிருந்தது. எனவே தம்பியை தனியே விட்டுச் செல்ல மனமில்லாத ரூபாவும் விடுமுறைக்கு வீடு செல்லாமல் அங்கேயே தங்கிவிட, ரத்னா தனது அக்காவையும், அண்ணனையும் சந்திப்பதற்காக அடம்பிடிக்க வேறு வழியில்லாமல் மாணிக்கம் ரத்னாவை சென்னை அழைத்து வந்தார். வந்தவர் ரூபாவிடம்

"ரத்னாவை கவனமா பாத்துக்கணும், உனக்கே தெரியும் ஊர்ல இந்த நேரத்தில் நிறைய வேலை இருக்கு அதனால நாங்க யாரும் உங்க கூட தங்க முடியாது. ரத்னாவுக்கு லீவு தானே அவ இங்க இருக்கட்டும். லீவு முடியும் போது வந்து கூட்டிட்டு போறேன். என்று ரூபாவிடம் கூறிவிட்டு ரத்னாவிடம் திரும்பி

"ரத்னா சேட்டை பண்ணாம ஒழுங்கா இருக்கணும். அண்ணன் படிக்கும்போது தொந்தரவு பண்ண கூடாது. அக்காகிட்ட அடம் பிடிக்காமல் இருக்கணும் சரியா." சமர்த்துப் பிள்ளையாக ரத்னாவும்

"சரிப்பா சேட்டை பண்ண மாட்டேன்." என்று வாக்களிக்க மாணிக்கம் அன்றிரவே தன் சொந்த ஊருக்கு திரும்பிச் சென்றார்.

தங்கவேலு பெரும்பான்மையான நேரம் படித்துக் கொண்டிருப்பதால் சகோதரிகள் இருவரும் கோவிலுக்கு செல்வது ஊர் சுற்றுவது என்ன பிஸியாக இருந்தன. ரத்னாவுடன் கோவிலுக்கு சென்றபோது அங்கு வந்த ஹர்ஷத் ரூபாவின் அருகில் வந்து கையை பிடித்தபடி அவளுடன் பேசிக் கொண்டிருக்க, புதியவன் உடன் தன் அக்கா பேசிக் கொண்டிருப்பதை கவனித்தேன் ரத்னா "யாரு அக்கா இது உனக்கு தெரிஞ்சவங்களா?" ரத்னாவின் கேள்விக்கு

"ஆமாம்." என்று ஒற்றை வார்த்தையில் ரூபவதி பதிலளிக்க ரத்னாவோ

"உன்கூட படிக்கிறார்களா, இல்ல பார்த்தா ரொம்ப பெரியவங்க தெரியுறாங்க, நம்ம சொந்தக்காரங்களா. ஆனா நான் இவங்கள இதுவரைக்கும் பார்த்ததே இல்லையே." என்று புதியவன் யார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேள்வி கேட்க, ரூபாவிற்கு தங்கையிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள். அப்போது ஹர்ஷத் ரத்னாவிடம் நட்புக் கரம் நீட்ட எண்ணி

"ஹாய் குட்டிமா." மேற்கொண்டு அவன் பேசும்முன்

"அப்படி சொல்லாதீங்க, எங்க வீட்டுல உள்ளவங்க மட்டும் தான் என்ன குட்டிமானு சாெல்லனும். தெரியாதவங்க யாரும் என்ன அப்படி கூப்பிட்டால் எனக்கு பிடிக்காது." சிறுபிள்ளை தனத்துடன் சாெல்ல

"சரி ஓகே இனி அப்படி கூப்பிடலை, என் பேரு ஹர்ஷத், நான் உங்க அக்காவோட பிரண்டு சாே என்ன உன்னாேட பிரண்டா ஏத்துக்குவிய." என்ற கேள்விக்கு பதில் சாெல்லாமல் ரத்னா தன் அக்காவையும், அவள் கரங்களுடன் காேர்த்திருந்த ஹர்ஷத் கையையும் பார்த்து

"வா அக்கா போகலாம்." என்று தமக்கையின் கையைப்பிடித்து இழுத்த வண்ணம் கோவிலை விட்டு வெளியேற, தங்கையின் செயலின் காரணம் புரியாத ரூபா திரும்பி திரும்பி பார்த்துக்காெண்டே செல்ல, செல்லும் அவர்களைப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்த ஹர்ஷத், அவர்கள் வெளியேறிய உடன் அவனும் வீடு நோக்கி சென்றான்.

வீட்டிற்கு வந்ததும் ரூபா ரத்னாவிடம் பேச முயற்சி செய்ய ரத்னா யோசனையில் ஆழ்ந்திருந்தாள். படித்து முடித்துவிட்டு உணவருந்த வந்த தங்கவேல் ரத்னா அமர்ந்திருந்த நிலையை பார்த்துவிட்டு ரூபாவின் அருகில் சென்று

"என்ன ஆச்சு? எந்தக் கோட்டையைப் பிடிக்க இப்படி யோசிச்சுகிட்டு இருக்கா." தம்பியை பார்த்து பரிதாபமாக விழித்து விட்டு

"இன்னைக்கு கோயிலுக்கு போய் இருந்தோமா, அங்க ஹர்ஷத் வந்திருந்தாரு. என் கிட்ட பேசிக்கிட்டு இருக்கும்போதே என் கையை புடிச்சு இழுத்துட்டு வந்துட்டா. அதுக்கு அப்புறம் பேசாம யோசிச்சுக்கிட்டே தான் இருக்கா. என்னன்னு தெரியல." அக்காவின் நிலையைப் புரிந்துகொண்ட தங்கவேலு ரத்னாவிடம் சென்று

"செல்ல குட்டி என்ன ஆச்சு, எதுக்காக இப்படி உட்கார்ந்து இருக்கீங்க." என்று கேள்வி கேட்ட அண்ணனின் புறம் திரும்பி

"நான் சும்மா உட்கார்ந்து இருக்கல. யோசிச்சுக்கிட்டு இருக்கேன்."

"அப்படி என்ன யோசிச்சிட்டு இருக்க."

"நான் பண்ணது சரியா, தப்பான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்."

"நீ என்ன பண்ண சொல்லு, சரியா தப்பானு நான் சொல்றேன்."

"தெரியாத ஒருத்தர் நம்மளை செல்ல பெயர் வைத்து கூப்பிடக்கூடாது தானே."

"ஆமாம் கூப்பிடக்கூடாது."

"அதே மாதிரி பிரெண்டாவே இருந்தாலும் ஆம்பள பிள்ளைகளும் பாெம்பளப்பிள்ளைகளும் தொட்டு பேச கூடாதுன்னு அம்மா சொல்லி இருக்காங்க சரிதானே."

"சரிதான் இப்ப அதுக்கு என்ன?"

"அப்பனா நான் செஞ்சது சரிதான். ரூபா அக்கா தான் தப்பு பண்றாங்க. ஏன் தப்பு பண்றாங்கன்னு கேளுங்க."

"சரி அக்கா கிட்ட கேக்குறேன். வா வந்து சாப்பிடு." சாப்பிடும்போது அக்காவின் புறம் திரும்பாத ரத்னா சாப்பிட்டு முடித்ததும் அமைதியாக சென்று உறங்கிவிட தங்கவேல் அக்காவிடம் வந்து

"கோயில்ல வச்சு என்ன நடந்துச்சு." கோவிலில் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் தன் தம்பியிடம் கூற

"ரத்னா சொன்னமாதிரி தப்புலாம் உன் பேரில் தான் இருக்கு."

"நான் என்னடா தப்பு பண்ணினேன்."

"ரத்னா இருக்கும்போது ஹர்ஷத் அத்தான நீ வர சொல்லி இருக்க கூடாது. அப்படியே அவர் வந்திருந்தாலும் ரத்னா முன்னாடி கைய புடிச்சு கிட்டு பேசியிருக்க கூடாது."

"நான் வேணும்னு எதுவும் செய்யலடா."

"உன்னோட நிலைமை எனக்கு புரியுது. அதே மாதிரி ரத்னாவை பற்றி நீ நெனச்சு பாத்தியா, இதுவரைக்கும் ரத்னா நாம என்ன சொல்கிறோமோ அதை மட்டும்தான் செய்யவா, சொல்லிக்கொடுத்த நாமலே அதை மீறினால் என்ன செய்வா இப்படித்தான் இருப்பா. இனி பாத்து நடந்துக்காே."

அன்று ஏனோ ரூபாவிற்கு உறக்கம் வரவில்லை. எனவே ஹர்ஷத்தை அழைத்து வீட்டில் நடந்த அனைத்தையும் கூற ஹர்ஷத்

"சின்ன விஷயத்துக்கெல்லாம் கவலைப்படாத. நாளைக்கு பத்து மணிக்கு உன் தங்கச்சிய மால்க்கு கூட்டிக்கிட்டு வா. ரத்னாவை சமாதானப்படுத்துற வேலைய நான் பார்த்துக்கிறேன்."

"சரி கூட்டிட்டு வரேன்."

"ஓகே பாய். கவலை படாம துங்கு."

"ம்ம் சரி பாய்."

காலையில் தன்னுடன் வர மறுத்த ரத்னாவை சமாளித்து நகரின் நடுவில் இருந்த மாலிற்க்கு ரூபா அழைத்து வந்தாள். அவர்கள் இருவரும் வருவதற்கு முன்பே அங்கு காத்திருந்ததும் ஹர்ஷத்தும், அவனுடைய +1 படிக்கும் தம்பி ஜஸ்வந்த்தும் அவர்களை பார்த்ததும் அருகில் வர நேற்று கோவிலில் சந்தித்த அந்த புதியவருடன் இன்னொருவரும் இருப்பதைப் பார்த்து ரத்னா

"அக்கா வா வீட்டுக்கு போகலாம், இப்ப நீ வீட்டுக்கு கூப்பிட்டு போகலைன்னா நான் அண்ணா கிட்ட போன் பண்ணி நீ தப்பு பண்ற சொல்லுவேன்."

"ரத்னா ப்ளீஸ் கொஞ்ச நேரம் நான் சொல்றதை கேளு."

"நான் கேட்கமாட்டேன் கா இப்போ உடனே என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போ"

சகோதரிகள் இருவரின் உரையாடலில் இடையில் புகுந்த ஜஸ்வந்த் ரத்னாவின் அருகில் வந்து,

"ஏய் குட்ட கத்திரிக்காய், யார் என்ன பேசினாலும் முழுசா கேட்காம இப்படித்தான் தையத் தக்கான்னு குதிச்சுக்கிட்டு இருப்பியா" தன் உயரத்தை தளத்தைப் பற்றி கேலி செய்த ஜஸ்வந்த் புறம் திரும்பிய ரத்னா

"யாரப்பாத்து குட்டை கத்தரிக்காய் என்று சொன்ன."

"ஏன் உனக்கு காது சரியாக கேட்கலையா. உன்ன பாத்து தான் சொன்னேன்."

"ஒழுங்கு மரியாதையா இப்ப என்கிட்ட மன்னிப்பு கேளு."

"கேட்கலன என்ன செய்வ." என்று திமிருடன் பேசிக்கொண்டிருந்த ஜஸ்வந்த் எதைக்கொண்டு அடிக்கலாம் என்று என்று சுற்றும் முற்றும் பார்த்த ரத்னா ஒன்றும் கிடைக்காமல் போக, என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசிக்க, வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காம ஜஸ்வந்த்

"ஜெம்ஸ் மிட்டாய், தேவையில்லாம யோசிக்கிறீங்க பெயரில இல்லாத மூளையே ரொம்ப கஷ்டப்படுத்தாத. உன் மண்டைல இருக்கிறதுதானே களிமண்ணு தான்னு எல்லாருக்கும் தெரிஞ்சிட போகுது." அதற்கு மேல் பொறுக்க முடியாத ரத்னா ஜஸ்வந்த் அருகில் சென்று அவன் கையை கடித்து வைத்துவிட இதைப் பார்த்த ஹர்ஷத்தும் ரூபாவும் இருவரையும் பிரித்து எடுக்க, ஜஸ்வந்த் கையில் ரத்னாவின் பற்கள் பட்டு ரத்தம் வந்து கொண்டிருந்தது. இருவரும் ஜஸ்வந்த்தை அழைத்துக்கொண்டு மருத்துவமனை செல்ல, அங்கே ஜஸ்வந்திற்கு சிகிச்சை நடந்துக்காெண்டிருக்கும் பாேது தன் தங்கையை தனியே அழைத்து வந்த ரூபா

"உன் மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்க, இவ பெரிய கவரிமான் ஒரு சாெல்லு பாெருத்து பாேக மாட்டிய, நேத்து என்னடான காேவில்ல இருந்து என் கையை பிடிச்சு இழுத்துக்கிட்டு வர, இன்னைக்கு விளையாட்டா ஜஸ்வந்த் பேசிகிட்டு இருக்கும் பாேது கடிச்சு வச்சுருக்க." ரூபாவின் அருகில் வந்த ஹர்ஷத்

"ரூபா விடு ரத்னா சின்ன பாெண்ணு. தெரியாம செஞ்சிருப்பா."தங்கைக்கு சாதகமாக பேசிய ஹர்ஷத்திடம் திரும்பி

"யாரு இவ சின்ன பாெண்ணா? பேச்சு எல்லாம் பெரிய மனுசி மாதிரி பேசிகிட்டு இருக்க." அதன் பின் அவர்களின் பேச்சு வார்த்தை பாதி ஹிந்தியிலும், பாதி ஆங்கிலத்திலும் இருக்க ரத்னாவிற்கு எதுவும் புரியவில்லை. அவளுக்கு புரிந்து ஒன்று தான், பிறந்தது முதல் யாரிடமும் திட்டு வாங்காத தான்னை தன் அன்பு அக்கா திட்டிக்காெண்டு இருக்கிறாள். அவர்கள் இருவரும் டாக்டர் அறைக்குள் சென்றுவிட அருகில் இருந்த ஒருவரிடம் சென்று,

"அண்ணா ப்ளீஸ் உங்க பாேன் காெஞ்சம் தங்களேன் நான் என் அண்ணா கிட்ட பேசிட்டு தரேன்." அந்த நபரும் பாேனை தர,

"அண்ணா நான் ரத்னா பேசுரேன்."

"ரத்னா என்னமா இது யாரு பாேன் என்ன அச்சு?"

"என்ன வீட்டுக்கு கூட்டிடு பாேங்க அண்ணா."

"என்ன நடந்துச்சி சாெல்லுமா."

"என்ன வீட்டுக்கு கூட்டிடு பாேங்க அண்ணா."

"அக்கா எங்கமா?"

"என்ன வீட்டுக்கு கூட்டிடு பாேங்க அண்ணா" சாென்னதையே திரும்ப திரும்ப ரத்னா சாெல்ல ஏதாே பிரச்சனை என்பதை உணர்ந்த தங்கவேலு

"சரி அண்ணன் வரேன், நீ எங் ...."மேற்க்காெண்டு அண்ணன் பேசும் முன் ரத்னா பாேனை அணைத்த உரியவரிடம் காெடுத்துவிட்டு ஒரு நாற்காலியில் சென்று அமர்ந்து காெண்டாள். சிகிச்சை முடிந்து மூவரும் வெளியே வந்ததும் ஜஸ்வந்திடம் சென்ற ரத்னா,

"என்ன மன்னிச்சிடுங்க. நான் காேபத்தில கடிச்சு வச்சுட்டேன் சாரி." என்று கண்ணீர் காேர்த்திருந்த கண்ணுடன் கரம் கூப்பி மன்னிப்பு கேட்க, அந்நேரம் அங்கு வந்த தங்கவேல்,

"அக்கா என்ன நடந்திச்சு, exam முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் நீங்க இல்லனு பாேன் பண்ண ஹாஸ்பிடல்ல இருக்கேன்னு சாெல்ற, எதுக்கு ஹாஸ்பிடல் வந்திருக்கிங்க." ரூபா பேசும் முன்பு ரத்னா தன் அண்ணனிடம்

"அண்ணா வீட்டுக்கு பாேகலாம் ப்ளீஸ்." தங்கையின் கலங்கிய முகத்தை பார்த்த தங்கவேலு

"சரி அக்கா நான் ரத்னாவ கூட்டிகிட்டு பாேரேன். நீ ஹர்ஷத் அத்தான் கூட வந்துடு." என்று கூறி விட்டு தங்கையை அழைத்துக்காெண்டு வீடு வந்ததும்,

"குட்டிமா என்ன ஆச்சு?" அண்ணனின் கேள்விக்கு பதில் கூறாமல்

"நான் வீட்டுக்கு பாேறேன்."

"சரி சித்தப்பாக்கிட்ட கூட்டிக்கிட்டு பாேக சாெல்றேன். அதுக்கு முன்னாடி என்ன நடந்துச்சுன்னு சாெல்லுங்க." அண்ணனை ஒரு நிமிடம் பார்த்த ரத்னாவின் கண்கள் அது வரை அடக்கி வைத்திருந்த கண்ணீரை சிந்த பதறிய தங்கவேலு கண்ணீரை துடைத்துவிட்டு

"குட்டிமா அழாதிங்க, நீங்க அண்ணகிட்ட எதுவும் சாெல்ல வேண்டாம்." ரத்னா அண்ணனை காட்டிப் பிடித்து தேம்பியபடி

"அண்ணா, தெரியாதவங்க செல்லப் பெயர் வைச்சு கூப்பிடக்கூடாதுன்னு அப்பா எங்கிட்ட சாென்னாங்க, அதன் அவங்கக்கிட்ட நான் பேசல.
பசங்க பாெண்ணுங்கள தாெட்டு பேசக்கூடாதுன்னு அம்மா சாென்னாங்க, அதன் அக்காவ காேவில்ல இருந்து கூட்டிக்கிட்டு வந்தேன்.
யாராவது தப்பு பண்ண மன்னிப்பு கேக்கனும்னு நீங்க தான சாென்னிங்க, அதன் இன்னைக்கு அந்த பையன மன்னிப்பு கேட்க சாென்னேன், ஆன அவங்க மன்னிப்பு கேக்காம பட்டப்பெயர் வச்சு கூப்பிட்டான், அதான் காேபத்தில கடிச்சிட்டேன். தப்புதான் மன்னிப்பு கூட கேட்டேன் ஆனா அக்கா என்ன திட்டிடாங்க. நான் அம்மாட பாேறேன்." என்று அண்ணனை கட்டிக்காெண்டு அழ, சமாதானப்படுத்தி சாப்பிட வைத்து தூங்க வைக்க, தூக்கத்திலும் விசும்பிக்காெண்டிருந்த தங்கையை பார்த்து அக்காவின் மீது வந்த காேபத்தைக் கஷ்டப்பட்டு அடக்கிக்காெண்டிருந்தான். வீட்டிற்குள் வந்த அக்காவிடம் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, ரூபா தம்பியின் அருகில் வந்து மாலில் நடந்ததை சாெல்லிவிட்டு

"ஏன் இவ இப்படி நடந்துக்கிறா, ஹர்ஷத் என்ன நினைப்பாரு." ரத்னாவை குறை சாெல்லும் அக்காவை பார்த்து

"நீங்க ஏன்கா இப்படி நடந்துக்கிறிங்க, ரத்னா உங்களை பத்தி என்ன நினைப்பா." ரத்னா கூறிய அனைத்தையும் கூறிவிட்டு

"நீங்க மாறிட்டீங்க அக்கா. உங்களுக்கு உங்க காதலும், அவங்க வீட்டுல உள்ளவங்களும் முக்கியமா இருக்கலாம். அதுக்காக ரத்னாவ காயப்படுத்தாதிங்க. அக்கா ரத்னாக்கு 10 வயசுதான் ஆகுது அவளுக்கு நாம மட்டும்தான் உலகம், நாம என்ன சாெல்றாேமாே அத மட்டும் தான் செய்வ, அத தாண்டி வேற எதை பத்தியும் யாேசிக்க கூட மாட்ட, அத நீங்க புரிஞ்சு நடந்துக்கிட்டா நல்லது."

தன் அறைக்கு வந்ததம் உறங்கிக்காணெ்டு இருந்த ரத்னாவின் கண்ணத்தில் இருந்த கண்ணீர் காேடுகளைப் பார்த்து பதறிப்பாேன ரூபா தான் செய்த தவறை புரிந்துகாெண்டாள். மறுநாள் விடிந்ததும், ரூபா ரத்னாவிடம் வந்து

"அக்காவை மன்னிச்சிடு, நான் நேத்து கோபத்துல உன்னை திட்டிட்டேன். நான் பண்ணது தப்புதான்." என்று ரூபா தங்கையிடம் மன்னிப்பு வேண்ட, அக்காவை கட்டி கொண்டு

"இனிமேல் நீ என்ன திட்ட கூடாது சரியா. நீ திட்டின எனக்கு ரொம்ப அழுக அழுகையா வருது."

"சரி இனிமேல் நான் உன்னை எப்போதும் திட்டவே மாட்டேன்." என்று தங்கையின் கை மீது தன் கையை வைத்து சத்தியம் செய்ய, அதன் பின்பு இருவரும் சமாதானமாகி விட, காலை உணவுவை சிரிப்புடனும் விளையாடுடனும் உண்டு கொண்டிருந்த நேரம் அங்கு வந்த ஹர்ஷத், ஜஸ்வந்த் இருவரையும் பார்த்து ரத்னா சிரிப்பதை நிறுத்தி மௌனமாகி விட, ரூபாவும் அவர்களை கவனித்துவிட்டு

"உள்ள வாங்க." என்று அவர்களை அழைத்து அமரவைத்து குடிப்பதற்கு பழச்சாறு வணங்கியப்பின் என்ன செய்வது என்று யோசிக்க, ஜஸ்வந்த் ரத்னாவிடம் வந்து

"சாரி நான் உன்னை கிண்டல் பண்ணுவதற்காக அப்படி பேசல, உங்க அக்கா பெரியவங்க தானே அவங்க முன்னாடி நீ சத்தமாக பேசக் கூடாதுதான அதற்காகத்தான் அப்படி பேசிட்டேன். அதுமட்டுமில்லாம நீ ரொம்ப ஸ்வீட்டா இருப்பேன்னு உங்க அக்கா சொன்னாங்க, அதான் உன்ன ஜெம்ஸ் மிட்டாய் சொன்னேன் சாரி என்ன மன்னிச்சிடு." என்று ஜஸ்வந்த் தன் செயலுக்கான விளக்கத்தை கூறி மன்னிப்பு கேட்க, தன் அறையிலிருந்து வெளிவந்த தங்கவேலு ரத்னாவிடம்

"குட்டிமா ஜஸ்வந்த் வந்து உன்கிட்ட மன்னிப்பு கேட்டுடாங்கள் தானே இனிமேல் கோபப்படக்கூடாது சரியா."

"சரின்னு இனிமேல் நான் கோபப்பட மாட்டேன்."

"இனிமேல் ஜஸ்வந்த் உனக்கு பிரண்டு தான் அதனால நீ ஜஸ்வந்த் கிட்ட பேசலாம்."

"சரி னா."

"அதேமாதிரி ஹர்ஷத் அத்தான் நம்ம அக்காவோட பிரெண்டு, அவரு அக்காகிட்ட பேசுவதற்காக எப்பவாவது வருவாரு அதை நீ பார்த்து கோபப்படக்கூடாது புரிஞ்சுதா."

"புரிஞ்சுது அண்ணா." அதன்பிறகு வந்த நாட்களில் ஜஸ்வந்த் ரத்னாவும் நல்ல நண்பர்களாகினர். பெண் குழந்தைகளுடன் பிறக்காத காரணத்தினாலோ என்னவோ ஜஸ்வந்த் ரத்னா செய்யும் சேட்டைகளை பார்த்து மிகவும் பிடித்துவிட்டது. ரத்னாவிற்கும் தன் அக்காவிடம் உரிமையாக பேசும் ஹர்ஷத்தை விட தன்னிடம் தோழமையாக பழகும் ஜஸ்வந்தை மிகவும் பிடித்துவிட்டது.

அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வது, அவளுக்கு புரியாதவற்றை புரிய வைப்பது, தெரியாதவற்றை தெளிவுபடுத்துவது, எனறு நாட்களில் அதன் போக்கில் செல்ல விடுமுறை முடிந்து ரத்னா ஊருக்கு செல்லும் நாளும் வந்தது.

அதன் பிறகு என்ன நடந்தது?

ஜஸ்வந்த்திற்கு எப்படி ரத்னாவின் மீது காதல் வந்தது?

ரூபா ஹர்ஷத் காதல் எப்படி அனைவருக்கும் தெரிந்தது?

அவர்களின் திருமணம் எப்படி நடந்தது?

என்பதற்கான பதில் அடுத்த அத்தியாயத்தில்

உன் நிழலை நான் தொடர்வேன்
 

banumathi jayaraman

Well-Known Member
ஸ்டோரி சூப்பரா இருக்கு, செசிலி டியர்
ஆனால் போன அப்டேட்ல ஜஸ்வந்த்
ரூபாவின் காதலன்னு சொன்ன மாதிரி இருந்ததே
இருங்க திருப்பியும் படிச்சுட்டு வர்றேன்
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
ஸ்டோரி சூப்பரா இருக்கு, செசிலி டியர்
ஆனால் போன அப்டேட்ல ஜஸ்வந்த்
ரூபாவின் காதலன்னு சொன்ன மாதிரி இருந்ததே
இருங்க திருப்பியும் படிச்சுட்டு வர்றேன்
நான் அப்படி எதுவும் சாெல்லவில்லை தாேழி
 

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
ஜஸ்வந்த் ரத்னாவ விரும்புரானா
அப்ப அஜித்
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு
ஜஸ்வந்த் ரத்னாவ விரும்புரானா
அப்ப அஜித்
இதற்கான பதில் இன்னும் சில அத்தியாயத்திற்கு பின்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top