உன் நிழல் நான் தாெட ep4

Advertisement

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
உன் நிழல் நான் தொட
--செசிலி வியாகப்பான்


அத்தியாயம் 4

ஞாயிற்றுக்கிழமை பல மனிதர்களை பொருத்தவரை அது ஒரு அற்புதமான நாள். ஆறு நாள்களின் எதிர்பார்ப்பு அந்த ஒரு நாளாகத்தான் இருக்கும். உழைப்பவர்களுக்கு ஓய்வு நாளாக, படிப்பவர்களுக்கு விடுமுறை நாளாக, வீட்டிலேயே அடைந்து இருப்பவர்களுக்கு விடுதலை நாளாக, என பல்வேறு எதிர்பார்ப்புகளை கொண்ட நாள்.
அன்று மட்டும் அலாரம் இல்லை.
படிப்பு இல்லை.
வேலை இல்லை.
பரபரப்பு இல்லை.
ஆனால் எதிர்பார்ப்புகள் மட்டும் உண்டு.


செயின்ட் ஃபாத்திமா சர்ச்சில் இருந்து ஸ்டெல்லா வந்துகொண்டிருந்தாள். அவளுக்காக ரத்னா காத்திருக்க அவள் அருகில் வந்த ஸ்டெல்லா

"எதுக்கு இப்படி வெளியே காத்துக்கிட்டு நிற்க உள்ளே வந்து உட்கார வேண்டியது தானே." அதற்கு ரத்னா

"போடி உள்ள வந்தா ஒன்னும் புரிய மாட்டேங்குது.வந்தாேமா சாமிய பாத்தேமா கிளம்னாமானு இருக்கனும். அதவிட்டுட்டு நீங்க என்னடான நின்னு, முட்டி பாேட்டு, விழுந்து கும்பிட்டு, முடியல. அதான் வெளியே வந்து வேடிக்கை பாக்க ஆரம்பிச்சுட்டேன்."

"சரி வா லைப்ரரி போகலாம், அடுத்து எங்க வீட்டுக்கு போயிட்டு சாப்பிட்டுட்டு அதுக்கு அப்புறமா உன்ன ஹாஸ்டல்ல விட்டுரேன். "

"ஸ்டெல்லா நமக்குதான் காலேஜ் உள்ளேயே லைப்ரரி இருக்குதானே? அப்புறம் எதுக்கு இந்த லைப்ரரிக்கு பாேகனும்?"

"நம்ம காலேஜுக்கு உள்ள இருக்குற லைப்ரரி ஒரு ஐடி காட்க்கு ஒரு புக்கு தான் எடுக்க முடியும், அதான் இந்த லைப்ரரியில் எல்லா புக்கும் கிடைக்கும் இங்க மெம்பர் ஆகிட்டா தேவைப்படும்போது இங்க வந்து புக்கு வாங்கிக்கலாம்." தாேழி விளக்கத்தை கேட்ட ரத்னா

"அது சரி படிக்கிற பிள்ளைகளுக்கு நிறைய புக்கு தேவைப்படும். எனக்கு எதுக்கு? நான் எல்லா காலேஜில குடுக்குற புக்கையே இந்த வருஷம் முழுக்க வாசித்து பார்த்தாலும் புரியாது. இதுல எக்ஸ்ட்ரா வேற புக்கு எடுத்து படிக்கணுமா? போடி இதுக்குத்தான் கூப்பிட்டேன்னு தெரிஞ்சிருந்தா நான் வந்திருக்கவே மாட்டேன். நல்லா இழுத்து மூடி தூங்கியிருப்பேன். ஸ்டெல்லாவின் பார்வையில் பார்த்து பேச்சை நிறுத்திய ரத்னா

"எதுக்கு என்ன இப்படி பாக்குற நான் என்ன அவ்வளவு அழகாகவா இருக்கிறேன்?" கண்னை சிமிட்டி பேசிய ரத்னாவின் முக பாவனையை பார்த்து ஒரு சின்ன சிரிப்புடன்

"இல்ல மூணு நாளைக்கு முன்னாடி ஒரு மாமேதை ஒருத்தி, தெரியாத தெரிஞ்சுக்க வந்திருக்கேன்.......
படிச்சு கிழித்து விடுவேன்.....
கப்பல கவுத்து விடுவேன்.....
வசனம் பேசினா, அது யாருன்னு தெரியுமா?


"ஸ்டெல்லா பேபி, அது அப்படியே அந்த நேரத்துக்கு பேசணும்னு தோணுச்சு பேசினேன். மத்தபடி இங்கிலீஷ்க்கும் எனக்கும் ஒத்து வராது."

"நீ முதல்ல என்கூட லைப்ரரிக்கு வா. அப்புறமா ஒத்து வருமா வராதா பாக்கலாம்."

தாேழியை சரிகட்டி லைப்ரரியில் மெம்பராகி, வீடு வருவதற்குள் ஸ்டெல்லா ஒரு வழியாகிவிட்டாள். ஸ்டெல்லாவின் வீடு அது மிகப்பெரிய மாளிகை. அதில் இல்லாத வசதிகளே இல்லை என்னும் விதம் ராபட் தன் மகளுக்காக பார்த்து பார்த்து கட்டியது. இருவரும் உள்ளே வந்த நேரம் வெளியே செல்ல தயாராகிக்காெண்டிருந்த ராபட் ரத்னாவை பார்த்து

"ஹலாே ரத்னா, எப்புடிமா இருக்க? முதல்தடவை வீட்டுக்கு வந்துருக்க சாப்பிட்டுட்டு தான் பாேகணும். அப்புறம் ஸ்டெல்லா, எனக்கு காெஞ்சம் வேலை இருக்கு பாேயிட்டு வரேன், பாய்." என கூறி செல்லும் தந்தையின் முதுகை வெறித்து பார்த்துக் காெண்டிருந்த தாேழியை உலுக்கிய பின்னே சுய உணர்வு பெற்றவள்

"என்னடி?"

"என்ன என்னடி? இந்த கேள்விய நான் கேக்கனும். இப்பாே எதுக்கு மந்திரிச்சு விட்ட ஆடு மாதிரி நிக்குற"

"ஐ மிஸ் கிம் பேட்லி."

"சம்மந்தம் இல்லாம லூசு மாதிரி பேச கூடாது. அப்பா உன் கூட தான இருக்காங்க பின்ன ஏன் மிஸ் பண்ணுறேன்னு சாெல்ற?" என்ற ரத்னாவை பார்த்து விரக்தியான புன்னகையை செலுத்திவிட்டு

"என் கூட தான் இருக்கிறார்கள். ஆனால் என்ன விட்டு ரொம்ப தூரமா இருக்கிறார்."

"சத்தியமா நீ பேசுவது எனக்கு புரியல."

"எங்க அப்பா என்கிட்ட நல்ல பேசி எவ்வளவு நாளாகுதுன்னு உனக்கு தெரியுமா, அவருக்கு என்ன விட பணம் தான் பெரிசு. ஒரு அஞ்சு நிமிஷம் எனக்காக செலவு செய்ய முடியாதவர் தான் என் அப்பா. வி ஆர் ஜஸ்ட் லவிங் இன் ஒன் roof that's ஆல்." ரத்னா சிறுது நேரம் யோசித்துவிட்டு

"ஸ்டெல்லா நீ உங்க அப்பாவை பத்தி தப்பா நினைக்காதே, உங்க அப்பாவுக்கு உன் மேல நிறைய பாசம் இருக்கு. ஆனால் அதை அவரு காட்டிய விதம் உனக்கு பிடிக்கல." தோழியின் பேச்சை கேட்ட ஸ்டெல்லா

"பாசமாவது ஒன்றாவது. நான் முக்கியம்னு நினைத்திருந்தால் அஞ்சு வயசுல என்ன ஹாஸ்டல்ல சேர்த்து இருக்க மாட்டாரு, இப்பாே கூட ஹையர் ஸ்டடீஸ்க்கு என்ன ஃபாரின் அனுப்புவது தான் அவரோட பிளான். பட் நான் சண்டை போட்டு இங்க படிக்கிறேன்."

"இங்க பார் ஸ்டெல்லா சும்மா ஹாஸ்டலுக்கு அனுப்பிவிட்டார், வெளிநாட்டுக்கு அனுப்ப பாத்தாரு, கோவப்படாத. ஏன் என் அப்பா அம்மா கூட ஹாஸ்டல்ல வச்சு படிக்க வைக்கிறாங்க. அதுக்குன்னு அவங்களுக்கு என் மேல பாசம் இல்லன்னு சொல்ல முடியும். இந்த உலகத்துல எந்த அப்பா அம்மாவும் தன் பிள்ளையை வெளிநாட்டுக அனுப்பி படிக்க நினைச்சது இல்லையா. அதுமாதிரிதான் உங்க அப்பாவும் நினைத்திருப்பார்."

"ஓகே நீ சொல்றது எல்லாம் நான் ஒத்துக்குறேன். பட் எனக்கு கூட பணம், வீடு, கார் எல்லாம் இருக்கு ஆனா இது எல்லாம் என்கூட இருந்தா அளவு என் அப்பா என் கூட இல்லை. ஐ நீட் ஹிம் வித் மை சைட் பார் எவர். அவருக்கு ஏன் என் feelings புரியல, புரிஞ்சிருந்த எனக்காக டைம் ஒதுக்கிருப்பரே தவிர, என்ன ஒதுக்கிருக்க மாட்டாரு."

"முதல்ல நீ உன் அப்பாவ புரிஞ்சுக்க பாரு. நாம ரெண்டு பேரும் உள்ள வரும் பாேது நீ என்ன அறிமுகப்படுத்தி வைக்கிறதுக்கு முன்னாடி உங்க அப்பா என் பெயரை சாெல்லி தான் கூப்பிட்டார். எப்புடின்னு யாேசிச்சு பாத்தியா? நீ சாெல்லாமலே என்ன பத்தி உங்க அப்பா தெரிஞ்சு வைச்சுருக்காரு. தூரமா இருந்தாலும் உன் பக்கத்தில என்ன நடக்குதுன்ன பாத்துக்கிட்டுதான் இருக்கிறங்க." தனக்கு தாேன்றியதை கூறிவிட்டு ஸ்டெல்லா யாேசிப்பதை பார்த்து,

"நீயும் புரிஞ்சுகாே, உன்னை உங்க அப்பாக்கும் புரிய வைக்க முயற்சி பண்ணு. நான் பாேயிட்டு வரேன் நாளைக்கு பார்க்கலாம்." அவளிடம் விடைபெற்று வந்த ரத்னா காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நிலையத்திற்கு வந்து பேருந்துக்காக காத்து இருந்தாள்

அங்கு அஜீத் சந்திரன் வீட்டில் கிருஷ்ண சந்திரன் வேலை விஷயமாக காலையிலேயே கிளப்பிவிட அர்ச்சனா பாடலை சத்தமாக அலற விட்டுக்கொண்டு ஆடிக் கொண்டிருந்தாள்

பதினெட்டு வயசு பட்டாம்பூச்சி..
படிதாண்ட துடிக்கும் பருவ பட்சி..
நான் பதினெட்டு வயசு பட்டாம்பூச்சி
படிதாண்ட துடிக்கும் பருவ பட்சி
செடி நட்டதும் மலர்மொட்டுக்கள் விட உத்தரவிடுவோம்
விதை இட்டதும் கனி சட்டென வர கட்டளையிடுவோம்
இளம் கன்னியரின் வெண்ணிலவினில் கப்பலும் விடுவோம்
எமை முட்டிட வரும் முட்செடிகளை முட்டி முட்டி முன்னேறுவோம்
பதினெட்டு வயசு பட்டாம்பூச்சி..
படிதாண்ட துடிக்கும் பருவ பட்சி..
நான் பதினெட்டு வயசு பட்டாம்பூச்சி

படிதாண்ட துடிக்கும் பருவ பட்சி

அந்நேரம் அங்கு வந்த சமையல்கார பெண்மணி கற்பகத்தை பார்த்து பாட ஆரம்பித்தாள்.

சமையல்கார பெண்ணாக தமிழ் பொண்ணு நின்னாக..
அந்த காலம் போயே போச்சு
சர்வதேச பெண்ணாக தமிழ் பொண்ணுக ஆனாக…
சாஸ்திரங்கள் போயே போச்சு…
அப்பாவே அப்பாவே பெத்த பொண்ண திட்டாதே…


மகளின் நடனத்தை பார்த்து முறைத்துக் கொண்டே வந்த மைத்திரியிடம் திரும்பிய அர்ச்சனா அம்மா திட்ட ஆரம்பிப்பதற்கு முன் தானும் பாடலோடு இணைந்து பாடிக்கொண்டே நடனத்தை தொடர்ந்தாள்

அம்மாவே அம்மாவே advice பண்ணி கொல்லாதே
சேலைபோனது jeans வந்தது காலத்தின் மாற்றம்..
முதலை வாயில் நாக்கே இல்லை…
மூன்றாம் பிறையில் கரையே இல்ல..
பெய்யும் மழையில் உப்பே இல்ல
பெண்கள் மனசில் தப்பே இல்ல…


செடி நட்டதும் மலர்மொட்டுக்கள் விட உத்தரவிடுவோம்
விதை இட்டதும் கனி சட்டென வர கட்டளையிடுவோம்
இளம் கன்னியரின் வெண்ணிலவினில் கப்பலும் விடுவோம்
எமை முட்டிட வரும் முட்செடிகளை முட்டி முட்டி முன்னேறுவோம்
பதினெட்டு வயசு பட்டாம்பூச்சி..
படிதாண்ட துடிக்கும் பருவ பட்சி..
நான் பதினெட்டு வயசு பட்டாம்பூச்சி

படிதாண்ட துடிக்கும் பருவ பட்சி

சத்தம் கேட்டு கீழே வந்த தன் அண்ணனை பார்த்த அர்ச்சனா அவன் புறம் திரும்பி

வெளியில் வந்தா சந்தோஷம் வீட்டுக்குள்ளே சந்தேகம்..
எங்க பாடு பெரும்பாடு…
மேகம் தாண்டி போகலாம்.. வானம் தாண்ட முடியுமா
தெரியும் எங்கள் எல்லைக்கோடு…
கண்டாங்கி கண்டாங்கி salwarஆகி போனாலும்..
தென்காசி தென்காசியில் தமிழ் பண்பு மாறாது
sticker உலகம் தோன்றியபின்னும் குங்குமம் இருக்கு
ஐஸ்வர்யா ராய் அழகை வாங்கு…
ஜான்சி ராணி வீரம் வாங்கு..
சானியா மிர்சா இளமை வாங்கு
மூன்றும் சேர்த்து உலகை வாங்கு…


செடி நட்டதும் மலர்மொட்டுக்கள் விட உத்தரவிடுவோம்
விதை இட்டதும் கனி சட்டென வர கட்டளையிடுவோம்
இளம் கன்னியரின் வெண்ணிலவினில் கப்பலும் விடுவோம்
எமை முட்டிட வரும் முட்செடிகளை முட்டி முட்டி முன்னேறுவோம்
பதினெட்டு வயசு பட்டாம்பூச்சி..
படிதாண்ட துடிக்கும் பருவ பட்சி..
நான் பதினெட்டு வயசு பட்டாம்பூச்சி

படிதாண்ட துடிக்கும் பருவ பட்சி… ஹோய்…….

ஹேய் என்ற சத்தத்துடன் திரும்பிய அர்ச்சனா வாசலில் கோபமான பார்வையுடன் நின்று கொண்டிருந்த தன் தந்தையைப் பார்த்து அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டாள்.

"நான் வீட்ல இல்லாட்டி இப்படித்தான் ஆடிக்கிட்டு இருக்கியா, +2 படிக்கிறது கொஞ்சமாவது உனக்கு ஞாபகத்துல இருக்கா. ஒழுங்கா படிக்கணும் நல்ல மார்க் வாங்க வேண்டும் என்று கொஞ்சமாவது பயம் இருந்தா இப்படி ஆட தோணுமா, ஒழுங்கா படிக்கிற வழியைப்பாரு போ" மகளை திட்டி விட்டு தன் மனைவியின் புறம் திரும்பி

"அவதான் சின்ன பொண்ணு ஆடிக்கிட்டு இருக்கிறானா நீயும் பாத்துக்கிட்டு சும்மா நிக்கிற. பிள்ளைங்களை பெத்துக்கிட்டா மட்டும் போதாது, அவங்களை நல்லாபடியா வளக்கணும் புரியுதா. அதை விட்டுட்டு ஆட விட்டு வேடிக்கை பார்க்க கூடாது."

அனைவரையும் ஒரு முறை முறைத்து பார்த்துவிட்டு தான் மறந்து விட்டுச்சென்ற முக்கியமான பைல் ஒன்றை எடுத்துக்கொண்டு கிருஷ்ணசந்திரன் வெளியேறிய உடனே அனைவரிடமிருந்தும் ஒரு நிம்மதி பெருமூச்சு ஒரே சமயத்தில் வெளியேறியது.

"கொஞ்சமாவது நான் சொல்றத கேக்குறியா, உன்னால அப்பாகிட்ட நானும் சேர்ந்து திட்டு வாங்கி இருக்கேன்." மகளின் சோகமான முகத்தை பார்த்த மைதிலி

"சரி மூஞ்ச தூக்கி வச்சுக்கிட்டு இருக்காத, இன்னைக்கு உனக்கு புடிச்ச பாயாசம் செஞ்சு தரேன் சரியா." என்று மகளை சமாதானப்படுத்தி விட்டு மகன் புறம் திரும்பிய மைதிலி

"என்னடா நீ எங்கயாவது வெளியே கிளம்பிட்டியா."

"ஆமாமா பிரபு வீட்டுக்கு போயிட்டு வரேன்."

"சீக்கிரம் அப்பா வரதுக்கு முன்னாடி வந்துடு. அவர் வர நேரத்தில நீ இல்லன்னா உங்க அப்பாவை என்னால சமாளிக்க முடியாது."

"சரி மா சீக்கிரம் வந்துடுறேன்." வீட்டை விட்டு வெளியே வந்த அஜீத் பிரபுவை தன் செல்போனில் அழைத்து

"பிரபு நான் காந்திபுரம் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து விடுவேன். என்ன அங்க வந்து பிக்கப் பண்ணிக்க." என்று தொடர்பை துண்டித்து விட்டு காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் நோக்கி சென்றான்.

கண்ணாடி முன் நின்று தன்னை சரி பார்த்துக்காெண்டிருந்தவன் முன் காேபமாக வந்து நின்று

"நீ உன் மனசில என்ன நினைச்சுக்கிட்டு இருக்கிற. உன்ன விசாரிச்சு எல்லாரும் எனக்கு பாேன் பண்ணி டார்ச்சர் பண்றாங்க. நீ என்னடான அந்த ரத்னா பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கிற."

"உன் கேள்விக்கான பதில வந்து சாெல்லுறேன். இப்பாே நான் என் ரதி பேபிய மீட் பண்ண பாேறேன்."

"டேய் இன்னைக்கு சன்டே காலேஜ் லீவ்."

"தெரியும். என் பேபி இன்னைக்கு ஸ்டெல்லாவ மீட் பண்ண பாேயிருக்க. எப்புடியும் காந்திபுரம் பஸ் ஸ்டாண்டுக்கு தான் வருவா." என்று கூறிவிட்டு காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் நோக்கி சென்றான்.

பேருந்திற்காக ரத்னாவும்,

ரத்னாவிற்காக அவனும் காத்திருக்க, காத்திருப்பின் பலனாக ரத்னாவை கண்டு காெண்டவன் அவள் அருகில் செல்ல,

பேருந்து நிலையத்தில் பிரபுவை காணாது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அஜித் தூரத்தில் நின்று கொண்டிருந்த ரத்னாவை பார்த்து முன்னேற, அஜித் தன்னிடம் வருவதைப் பார்த்த ரத்னாவும் அவனைப் பார்க்க, அந்நேரம் நடந்து கொண்டு வந்த காெண்டிருந்தவன் மீது ஒரு கார் மோத இருவரும் விரைந்து அந்த அடிபட்ட நபரின் அருகில் சென்றனர். பெரிதாக அடி எதுவும் இல்லாதபோதும் மயங்கி இருக்க அதை பார்த்த ரத்னா அஜித்திடம்,

"சீக்கிரம் ஆட்டோ புடிங்க இவரை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகலாம்." என்று சொல்ல அஜித்தும் விரைந்து சென்று ஆட்டோவை அழைத்துவந்து அடிபட்ட அந்த நபரை அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவருக்கு சிகிச்சை நடந்து கொண்டிருந்த அந்த வேளையில் அவரின் வீட்டிற்கு தகவல் சொல்ல நினைத்து அவருடைய போனை பார்க்க அது பாஸ்வேர்ட் கேட்டது. எனவே அந்த முயற்சியை கைவிட்டு விட்டு சிகிச்சையை முடிவதற்கு இருவரும் காத்திருந்தனர். அறையிலிருந்து வெளியில் வந்த நர்ஸ் ரத்னாவின் கையில் ஒரு மருந்துச் சீட்டை கொடுத்து அதில் உள்ள மருந்துகளை வாங்கி வருமாறு கூற தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்பதை உணர்ந்த ரத்னா என்ன செய்வது என்று விழித்துக் கொண்டிருக்க, அஜீத் அவள் கையிலிருந்த மருந்துச் சீட்டை வாங்கிக்கொண்டு

"நீ இங்கேயே இரு ரத்னா, நான் போய் மருந்து வாங்கிட்டு வரேன்." என்று சென்றுவிட ரத்னா அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து காத்துகொண்டு இருந்தாள்.

பிரபுவிடம் மருத்துவமனையில் இருக்கும் விஷயத்தை கூறிவிட்டு, வாங்கி வந்த மருந்தை நர்சிடம் கொடுத்துவிட்டு ரத்னாவின் அருகிலிருந்த நாற்காலியில் அஜீத் வந்து அமர்ந்தான்.

"தேங்க்ஸ் அஜீத் என்கிட்ட பஸ்ஸுக்கு மட்டும் தான் காசு இருந்துச்சு. நான் நாளைக்கு காலேஜுக்கு வந்தவுடனே உனக்கு பணத்தை திருப்பித் தந்திடுவேன்."

"பணம் ஒரு பிரச்சனை இல்லை ரத்னா. நீ அவருக்கு உதவி பண்ணனும் நினைச்சு ஹாஸ்பிடல்ல சேர்க்க சொன்ன, அதே மாதிரி நானும் உதவி பண்றதுக்காக தான் மருந்து வாங்கி கொடுத்தேன். அதனால நீ பணத்தை திருப்பித் தரணும் என்று எந்த அவசியமும் இல்லை. கடவுள் எனக்கும் கொஞ்சம் புண்ணியத்தை சேர்த்து கொடுக்கட்டும் ஓகேயா."

"நீ எவ்வளவு பேசுவியா அஜீத்."

"ஏன் நான் பேச கூடாதா ரத்னா?"

"பேசலாம் ஆனா காலேஜ்ல இத்தனை நாளா புக் தவிர வேற எதையும் நான் பார்க்க மாட்டேன் என்கிற மாதிரி தான் இருப்ப அதன் கேட்டேன்."

"தேவைப்பட்டா பேசலாம் சும்மாவே உன்னை மாதிரி பேசிக்கிட்டு இருக்க முடியுமா."

"அப்போ என்ன வாயாடின்னு சொல்ற." என்ற ரத்னாவிடம் தன் வழக்கமான ஒரு புன்னகையை செலுத்திவிட்டு

"உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும் ரத்னா"

"என்கிட்ட என்ன முக்கியமான விஷயம் பேச வேண்டியது இருக்கு."

"அது வந்து.........."

"அதன் வந்துட்டியே சொல்லு." என பழைய மொக்கை ஜோக் ஒன்றை சொல்லிவிட்டு பதிலுக்காக அஜித்தை பார்க்க

"எனக்கு பாரதியார் பாட்டெல்லாம் பிடிக்காது உனக்காக தான் பாடினேன்."

"எனக்காகவா"

"எஸ். என்ன சந்தேகப்படாத ஐ நீட் யுவர் பிரண்ட்சிப் ஒன்லி, சோ உன் கையிலே இருந்த பாரதியார் புக்கப்பாத்து உனக்கு பாரதியார் பாட்டுன புடிக்கும்னு நினைத்த அந்த பாட்டு பாடினேன்."

"இதோ பாருடா நம்ம கிட்ட ஃபிரண்டாக ஒருத்தர் பாட்டெல்லாம் பாடி இருக்காரு. சரி அஜீத் எதுக்காக நீ என்கிட்ட ஃபிரண்டாக நினைச்சே."

"தெரியல ஏன் அப்படி நினைத்தேன் என்று. என் வாழ்க்கையில ரெண்டாவது தடவை அப்படின்னு நினைச்சு இருக்கேன். முதல் தடவை பிரபு, இப்போ நீ. அது மட்டும் இல்ல அதிகம் பேசின இரண்டாவது ஆளும் நீதான். என்ன உன் பிரண்டா ஏத்துக்கிட்டியா."

"ஓகே. ஆனா அதுக்கு நிறைய கண்டிஷன் இருக்கு."

"அப்படி என்ன கண்டிஷன்"

"நான் நிறைய பேசுவேன், என்ன வாய மூடு என்று சொல்லக்கூடாது."

"ஓகே"

"அப்புறம் நான் நிறைய சேட்டை பண்ணுவேன் என்ன திட்ட கூடாது."

"ஓகே"

"நீ வீட்டிலிருந்து கொண்டு வர சாப்பாடு எனக்கு புடிச்சு இருந்தா அதை எனக்கு கொடுத்துவிடனும்."

"ஓகே. அவ்வளவு தான. வேற ஏதும் இருக்கா."

"இப்போதைக்கு அவ்வளவுதான் அஜீத், நியாபகம் வந்தா அப்புறம் யோசிச்சு சொல்றேன்."

"சரி இப்போ சொல்லு பிரெண்ட்ஸ் ஆகலாமா."

"ஆல்ரெடி பிரண்ட் ஆகிட்டோம்." என்று சொல்லி அஜித்தின் கையை பிடித்து குலுக்க ஒரு அழகான நட்பு அங்கு உருவாகியது. மருத்துவமனைக்குள் நுழைந்த பிரபு இருவரும் கைகுலுக்கிய படி அமர்ந்திருந்த காட்சியே முதலில் பட்டது.

என்னடா நடக்குது இங்க. இவன் பாேகின்ற வேகத்த பாத்த 3 வருட படிப்பு முடிஞ்சு பட்டம் வாங்குறதுக்கு முன்னாடி கல்யாணத்தையே முடிச்சுருவான் பாேல என மனசாட்சியுடன் பேசிக்காெண்டு அவர்கள் அருகில் பிரபு சென்றான்.

"என்னடா accidentனு சாென்ன பாத்த அப்புடி தெரியல நல்லாதான இருக்குற" என ரத்னாவை கேலி செய்யும் நாேக்குடன் கேட்க, பாெங்கி எழுந்த ரத்னா

"எனக்கு ஏன் accident ஆக பாேகுது, நீ பாத்து பாே இல்லாட்டி தண்ணி லாரிக்காரன் அடிச்சு தூக்கி உனக்கு பால் ஊத்திடப்பாேறான்."

"அம்மா தாயே நீ பேசுறத பாத்த தண்ணி லாரிக்கு பதில நீயே அடிச்சு தூக்கிருவ பாேல. என்ன மன்னிச்சுடுமா நான் பேசுனது தப்புதான் தப்புத்தான்." என சரணாகதி அடைய

"இந்த ஒரு தடவை மன்னிச்சு விடுறேன் ஆனா இன்னாெரு தடவை இப்புடி பேசுன உன்ன....." பேச்சின் இடை யில் புகுந்த அஜீத்

"ப்ளீஸ் ரத்னா விட்டுடேன்." என இருவருக்கிடையே சமாதான ஒப்பந்தம் செய்து வைக்க, நர்ஸ் ரத்னாவிடம் வந்து

"மேடம் அவருக்கு மயக்கம் தெளிஞ்சுடுச்சு. உங்களை உள்ள கூப்பிட்டார்." என்று சாெல்லிவிட்டு செல்ல, மூவரும் உள்ளே சென்றன.

உள்ளே நுழைந்ததும் அஜீத் அந்த நபரை பார்த்து

"என்ன சார் இப்போ ஓகேவா. உங்க வீட்டு அட்ரஸ் இல்லடி கான்டக்ட் நம்பர் கொடுத்தீங்கன்னா பாேன் பண்ணிட்டு நாங்க கிளம்பி விடுவோம்." என்று அஜீத் பேசிக்கொண்டிருக்க அந்த நபரோ ரத்னாவை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்க அதை கவனித்த பிரபு

"ரத்னா நீ ஹாஸ்டலுக்கு போகணும் தானே, நீ அஜீத் கூட கிளம்பு, நான் அவங்க வீட்ல இருந்து ஆள் வரும்வரை இவரை பாத்துக்குறேன்." என்று ரத்னாவை அஜீத்துடன் அங்கிருந்து வெளியேற்ற முயற்சி செய்ய அந்த நபர் பிரபுவை பார்த்து

"என் வீட்டுக்கு போன் பண்ணனும் எந்த அவசியமும் இல்லை. ஏன் ரதி பேபி நீ என்ன பாத்துக்க மாட்டியா." என்று உரிமை உள்ள நபரிடம் பேசுவது பாேல் பேச

"ரத்னா உனக்கு முன்னாடியே தெரியுமா?" என ஒரே நேரத்தில் அஜீத்தும் பிரபுவும் கேள்வி கேட்க

"எனக்கு இவரை தெரியாது இவரை இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் மீட் பண்றேன்." என்று தோளைக் குலுக்கி விட்டு சொல்ல அதற்கு அந்த நபர்

"என்ன ரதி பேபி அத்தனுடைய மனச இப்படி ஒடைச்சிட்டியே" என வருத்தத்துடன் பேச, ரத்னா அவரை பார்த்து

"என்ன சார் தலையில அடிபட்டதில மூளை எதுவும் குழம்பிடுச்ச. நான் ரத்னா, ரதி இல்ல. அப்புறம் பேபி, அத்தான் இதனால் ரொம்ப ஓவர். இப்படி பேசிக்கிட்டு இருந்தீங்க சின்னதா உடைஞ்சி இருக்கா உங்க மண்டைய பெரிய அம்மிக்கல்லை தூக்கி போட்டு மொத்தமா ஒடச்சிடுவேன்." என பாெரிந்து தள்ள

"என்ன பேபி உனக்கு என்ன ஞாபகம் இல்லையா?"

"யோவ் இம்சை அதான் தெரியலன்னு சொல்ற இல்ல. இப்ப என்ன ஞாபகம் இல்லையா? ஞாபகம் இல்லையானு? அதையே கீரல் விழுந்த ரெக்கார்டு மாதிரி சொல்லிக்கிட்டே இருக்க." நடக்கும் விவாதத்தைக்காெண்டிருந்த அஜீத் ரத்னாவிடம்

"வா போகலாம். பிரபு எல்லாத்தையும் பார்த்துக் கொள்வான்." என்று ரத்னாவை அழைத்துச்செல்ல முயற்சி செய்ய ரத்னாவும் அஜீத்துடன் வெளியேற திரும்பியபோது

"இந்த ஜெம்ஸ் (ரத்தினம்) மிட்டாய பார்க்கிறதுக்கு சிவப்புகல்லு (ரூபி) ஒன்னு காத்துக்கிட்டு. இருக்கு விருப்பம் இல்லனா தாராளமா நீ போகலாம்." என்று அந்த நபர் கூற அவரிடம் வேகமாக வந்த ரத்னா, அந்த நபரின் கை யில் இருந்த தழும்பை பார்த்துவிட்டு

"ஜஸ்வந்த், ரூபா அக்கா எப்படி இருக்கா?
எங்க இருக்கா? எனக்கேட்க


"தெரியாத ஆளு கூட உனக்கு என்னமா பேச்சு, பாே உன் பிரண்டு கூப்பிடுறான் இல்ல நீ ஹாஸ்டலுக்கு போ." என ரத்னாவை விரட்ட
ராத்னா என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்துடன் நின்று கொண்டிருந்தாள். அஜீத் ரத்னா அருகில் வந்து


"உனக்கு இவர தெரியாதுன்னு சொன்ன. பட் இப்போ அவரை ஜஸ்வந்த் அப்படின்னு பேர் சொல்லி கூப்பிடுற. அப்படினா இவரை உனக்கு இவரை தெரியுமா?" என கேட்க

"எனக்கு தெரியும். ஆனால் இப்போ எனக்கு தெரியல." பொறுமையை இழந்த பிரபு குழப்பாமல் புரியிற மாதிரி சொல்றியா

"நான் சின்ன பிள்ளையா இருக்கும்போது பார்த்து இருக்கேன். ரொம்ப வருஷம் கழிச்சு திரும்பவும் இப்பதான் பாக்குறேன் அதன் தெரியல." என்று தன் பழைய நினைவுகளை ரத்னா திருப்பிப் பார்த்து அதில் ஜஸ்வந்த்தை தன் அக்காவுடன் பார்த்த நினைவுகளை மீட்டெடுத்து கூறும் நே ரத்தில், ஜஸ்வந்த் தன் காதல் நினைவுகளில் கலந்தான்

ரத்னா, ரூபாவின் கடந்த காலத்தையும்

ஜஸ்வந்த் யார் என்பதையும்

ஜஸ்வந்த் காதலையும் அடுத்த அத்தியாயத்தில்


உன் நிழலை நான் தொடர்வேன்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top