உன் நிழல் நான் தாெட ep 6(1)

Advertisement

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
.உன் நிழல் நான் தொட

அத்தியாயம் ஆறு

ஜஸ்வந்த்தை பொறுத்தவரை இந்த 15 நாட்களும் ஆனந்தமான நாட்களாக இருந்தது. ரத்னாவுடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு காரணத்திற்காக சிரித்துக்கொண்டு, அவளுடன் வம்பிழுத்து சிறு செல்ல சண்டைகளும், செல்ல கோபங்களும் ஏதோ ஒரு மாய உலகில் இருப்பதாகவே அவனுக்கு உணர்த்தியது. ஆனால் இவை அனைத்தும் நாளை மாலை வரையில் என்பதை நினைக்கும் பொழுது அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

சிறுவயதிலிருந்தே ஜஸ்வந்த் வைத்ததுதான் வீட்டில் சட்டமாக இருந்து வந்தது. அவன் ஆசைப்பட்ட எந்த ஒரு பொருளும் அவனுக்கு கிடைக்காமல் இருந்ததில்லை. அவனிடம் இருக்கும் பொருட்களைப் போலவே ரத்னாவும் தன்னுடன் இருந்துவிட வேண்டும் என்று இப்பொழுது அவனுக்கு ஆசை வந்தது. யோசனையுடன் தன் அறையில் நடைபயிற்சி கொண்டிருந்த ஜஸ்வந்த் நினைவுகள் காலையில் ரத்னா தன்னிடம் கூறியதை நினைத்து பார்த்துக்கொண்டிருந்தான். காலையில் ஜஸ்வந்த் ரூபாவிடம்

"அண்ணி நீங்க தங்கவேலு ரெண்டு பேரும் இங்கதான படிக்கிறீங்க. அதுமாதிரி ரத்னாவும் இங்கு உள்ள ஸ்கூல்ல படிக்கலாம் தானே." ரூபா ஜஸ்வந்த்திடம்

"நீ கேட்கிற கேள்வி நியாயமான கேள்விதான். எனக்கும்கூட ரத்னா இங்கிருந்து படிச்சா சந்தோஷமாத்தான் இருக்கும். ஆனா நீ இந்த கேள்விய ரத்னா கிட்ட தான் கேக்கணும். ரத்னா ஒருவேளை சரின்னு சொல்லிட்டா, அப்பாகிட்டயும் சித்தப்பாகிட்டயும் பேசி அவளை இங்கேயே உள்ள ஸ்கூல்ல படிக்க வைக்கலாம்." ரூபாவின் பதிலை கேட்ட ஜஸ்வந்த் உடனே ரத்னாவிடம் வந்து

"ரத்னா நீயே எங்க ஸ்கூல்ல வந்து படிக்க கூடாது." பதிலுக்கு ரத்னா

"எனக்கு உங்க ஸ்கூல்ல படிக்க பிடிக்கல."

"ஏன் பிடிக்கல, நீ படிக்கிற ஸ்கூல்ல விட எங்க ஸ்கூல் எவ்ளோ பெரிய ஸ்கூல் தெரியுமா. சென்னையிலேயே தீ பெஸ்ட் ஸ்கூல்."

"உங்க ஸ்கூல் உனக்கு வேணா பெஸ்ட் இருக்கலாம். அதுக்குன்னு நான் படிக்கிற ஸ்கூல் ஒன்னும் நல்லா இல்லைன்னு அர்த்தம் கிடையாது. அத மட்டும் இல்லாம இங்க எனக்கு புடிச்ச என்னோட பிரண்ட்ஸ் யாருமே இல்ல."

"ஏன் ரத்னா நான் உன்னோட ஃப்ரெண்டு இல்லையா?"

"நீ என் ஃப்ரண்டு தான். ஆனா நீ என் கிளாஸ்ல படிக்க மாட்ட தானே."

"நீ இங்கேயே சென்னையிலிருந்து படிச்ச சண்டே பீச்சுக்கு போகலாம், மால் எல்லாம் சுத்தி பாக்கலாம், தீம் பார்க் இருக்கு, பெரிய தியேட்டர்ல படம் பார்க்கலாம். நான் உனக்கு செஸ், கேரம், வீடியோ கேம் நிறைய சொல்லி தரேன். இது எதுவுமே உங்க ஊர்ல உனக்கு சொல்லிட்டே சொல்லித் தர யாரு இருக்கா?"

"இதெல்லாம் சொல்லித் தர எங்க ஊர்ல யாரும் இல்ல. ஆனா எங்க ஊர்ல பெரிய அருவி இருக்கு, மாந்தோப்பு இருக்கு, எங்க அக்கா எனக்கு பாரதியார் பாட்டு ஒன்னு பாடி காட்டுவாங்க, அந்த பாட்டுல வர்ற மாதிரியே தென்னந்தோப்பு நடுவில ஒரு வீடு இருக்கு, அது மட்டும் இல்ல அங்கதான் என் அப்பா, அம்மா, பெரியப்பா தாத்தா, பாட்டி எல்லாரும் இருக்காங்க. இந்த வருஷம் படிப்பு முடிஞ்சதும் எங்க அக்கா ஊருக்கு வந்துருவாங்க. அதனால எனக்கு எங்க ஊரு தான் பிடிக்கும் இந்த ஊரு எனக்கு பிடிக்கல."

"ரத்னா அப்படின்னா நீ என்ன விட்டு உங்க ஊருக்கு போறியா."

"ஆமா நான் எனக்கு பிடிச்ச எங்க ஊருக்கு போறேன்."

~~~~~~~~~~~~

தம்பியின் அறையில் வெளிச்சம் தெரிவதை பார்த்த ஹர்ஷத் உள்ளே வந்து

"ஜஸ்வந்த் தூக்கம் வரலையா." அண்ணனிடம் வந்த ஜஸ்வந்த்

"இல்ல அண்ணா."

"ஏன் என்னாச்சு. ஏதாவது பிரச்சினையா?"

"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லன்னா."

"எதுக்காக தூக்கம் வரல? ஏதோ யோசிச்சுகிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு. என்ன சொல்லு என்னால முடிஞ்சா நான் வாங்கி தரேன்." சிறிது நேரம் யோசித்துவிட்டு அண்ணனிடம்

"அண்ணா நான் உன்கிட்ட ஒன்னு கேட்கணும், அது எப்படி ஒவ்வொரு தடவையும் கேட்காமலேயே எனக்கு ஏதாவது தேவைப்படுதுன்னு நீங்க புரிஞ்சுக்குவீங்க." தம்பியை பார்த்து ஒரு சிரிப்புடன்

"ஜஸ்வந்த் நான் ஒன்னு கிட்டத்தட்ட 17 வருஷமா பார்த்துகிட்டு இருக்கேன். உனக்கு ஏதாவது தேவைன்னா அதை நீ என்கிட்ட கேக்குறதுக்கு முன்னாடி இப்படிதான் நைட் டைம்ல ரூம்ல குறுக்கும் நெடுக்கும் நடந்துகிட்டு இருப்ப. சொல்லு என்ன வேணும்?"

"அண்ணா எனக்கு ரத்னா வேண்ணும்." தம்பி ஏதாவது ஒரு பொருளை கேட்பான் என்று நினைத்துக்கொண்டிருந்த ஹர்ஷத் அதிர்ச்சியுடன்

"வாட் நீ என்ன சொல்ற?"

"அண்ணா எனக்கு ரத்னா வேணும்னு சொன்னேன்."

"ஜஸ்வந்த் நீ என்ன விளையாடுறியா. நீ கேட்டது ஒன்னும் கடையில விக்கிற பொருள் கிடையாது. உனக்கு வேணும்னா வாங்கிட்டு வந்து தருவதற்கு."

"ஐ நோ தேட் அண்ணா. யூ நோ ஒன் திங் இந்த பதினைந்து நாளும் நான் ரொம்ப ஹாப்பியா இருந்தேன். அதுக்கு ரத்னா மட்டும் தான் காரணம். எனக்கு என் வாழ்க்கை முழுக்க சந்தோஷமா இருக்கணும்னு ஆசையா இருக்கு. அதுக்கு ரத்னா என்கூடவே இருக்கணும்." தம்பி கண்களில் தெரியும் தீவிரத்தை பார்த்த ஹர்ஷத் அவனருகில் அமர்ந்து

"ஜஸ்வந்த் நீ மூணு வயசுல சைக்கிள் கேட்ட நாங்களும் உனக்கு வாங்கித் தந்தோம். பட் ஜஸ்ட் ஒன் வீக்ல அது பிடிக்கலன்னு தூர போட்டுட்ட. அதே மாதிரி 14 வயசுல ஒரு பைக் கேட்ட அதோட விலை என்னனு தெரியுமா? கிட்டத்தட்ட 13 லட்சம் ஆனா அதை நீ ஒரு மாசத்துல பிடிக்கலைன்னு சொல்லிட்ட. இப்போ அது நம்ம வீட்டுல கார் செட்ல சும்மாதான் நிக்குது.

ரத்னா ஒன்னும் அந்த பைக் மாதிரியோ இல்லை சைக்கிள் மாதிரி ஒரு பொருள் கிடையாது. நீ கேட்டதும் வாங்கிட்டு வந்து கொடுக்கிறதக்கும் உனக்கு வேண்டாம்னா அதை தூர போடுவதற்கும். நாளைக்கு ரத்னா ஊருக்கு போயிட்டு வா அதுக்கப்புறம் நீங்க பார்க்க மட்டும் இல்ல. ரத்னா இங்க வர வாய்ப்பு கூட ரொம்ப கம்மிதான்."

"அண்ணா உனக்கு எப்படி ரூபா அண்ணி தேவையாே, அது மாதிரி எனக்கு ரத்னா வேணும்."

"ஜஸ்வந்த் புரியாம பேசாத. நாங்க லவ்வர்ஸ், அதவிட முக்கியமான விஷயம் உனக்கு வயசு 17, ரத்னாக்கு 11. இன்னும் காெஞ்ச நாள் பாேன நீயாே ரத்னாவ வேண்டானு சாெல்லிருவ."

"நான் சாெல்ல மாட்டேன் அண்ணா."

"நீ ஒரு வேளை சாெல்லாம இருக்கலாம். ஆனா ரத்னா சாெல்லுவ நீ வேண்டானு, ரத்னா குழந்தைடா அவளுக்கு குடும்பம் தான் முக்கியம். நீ இல்ல." தம்பியின் யாேசனை படர்ந்த முகத்தை பார்த்து

"கவலைபடாம தூங்கு. ஒன்னு ரெண்டு மாசத்தில நீயாே ரத்னாவ மறந்துடுவ." என்று தம்பியை சமாதானப் படுத்திவிட்டதாக நினைத்து தன் அறைக்கு வந்துவிட, இரவு முழுவதும் தூங்காமல் யாேசித்துக்காெண்டே இருந்த ஜஸ்வந்த்,

அடுத்த நாள் காலை முதல் வேலையாக நகரின் மிகப் பெரிய நகை கடைக்கு வந்தது கடை முழுவதையும் அலசி ஆராய்ந்து ரத்தின கற்கள் பதித்த வளையல்களை வாங்கிக்காெண்டு ரூபாவின் வீட்டிற்கு வந்த ஜஸ்வந்த் ரத்னாவிடம்

"ரத்னா நீ இன்னைக்கு ஊருக்கு பாேகப்பாேற தான சாே நான் உனக்கு ஒரு கிப்ட் வாங்கிட்டு வந்தேன். இத பார்க்கிற பாேது உனக்கு என் நியாபகம் வரும்தான." என்று அந்த வளையல்களை தர, அதை பார்த்த ரத்னா

"நீங்க என்ன வேலை செய்யிரீங்க ஜஸ்வந்த்."

"நான் வேலை பாக்கல, படிச்சுக்கிட்டு இருக்கிறேன்."

"அப்பாே இது எனக்கு வேண்டாம். எங்க பெரியப்பா சாென்னங்க சம்பாதிக்கிறவங்க மட்டும் தான் செலவு பண்ணனும்னு. நீங்க தான் சம்பாதிக்கவே இல்லயே அப்புறம் எப்படி எனக்கு பரிசு வாங்கி தரலாம்."

"ரத்னா இது எங்க அப்பா எனக்காக தந்த பணத்தில வங்கினேன்."

"உங்க அப்பா உனக்காக தந்தது, எனக்காக இல்ல. எனக்கு வேண்டாம்"

தான் தந்த வளையலை வாங்க மறுத்த ரத்னாவை ஒரு அடிபட்ட பார்வை பார்த்துவிட்டு மேற்க்காெண்டு எதுவும் பேசாமல் வெளியேறிய ஜஸ்வந்த் அதன் பிறகு ரத்னாவை சந்திக்க 7 வருடங்கள் எடுத்துக்காெண்டான். படிப்பை முடித்து தந்தையின் தாெழிலில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிய பின்னரே ரத்னாவை சந்திக்க வந்தான்.

இடையில் நடந்த அண்ணனின் பதிவு திருமணத்திற்கும், பல பிரச்சனைகளை கடந்து அனைவரின் முன்னினையில் நடந்த திருமணத்திற்கும் சரி எதிலும் கலந்துகாெள்ளவில்லை. தம்பியின் அமைதியான நடவடிக்கையை பார்த்து ஜஸ்வந்த் ரத்னாவை மறந்துவிட்டான் என்று ஹர்ஷத் நினைத்துக்காெண்டிருந்தான். அதனால் ஜஸ்வந்த் அமைதி ரத்னாவை நாேக்கி எடுத்து வைக்கின்ற அடி என்பதை கவனிக்க தவறிவிட்டான்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

"ஜஸ்வந்த்த்த்த்தத்" என்று தன் காதுக்கு அருகில் வந்து கத்திய ரத்னாவின் சத்ததில் நிகழ்காலத்திற்கு வந்த ஜஸ்வந்த் ரத்னாவை பார்த்து

"ரதி சாரி சாரி உங்கள அப்புடி கூப்பிட்டா உங்களுக்கு பிடிக்காது. ரத்னா நீங்க சீக்கிரம் கிளம்புங்க. உங்க ஃப்ரெண்டு வேற உங்களுக்காக வெய்டிங்."

"ப்ளிஸ் ஜஸ்வந்த், சத்தியமா எனக்கு உங்கள அடையாளம் தெரியல. கடைசிய நான் பார்க்கும் பாேது மீசை இல்லாம ஒல்லியா இருந்திங்க. ஆனா இப்பாே ஆளே மாறிட்டீங்க. சரி நான் தான் தப்பு பண்ணிடேன் சாரி சாரி சாரி இப்பமாவது ரூபா அக்கா பத்தி சாெல்லுங்க."

"ஓகே ரத்னா உன் சாரி எற்றுக்காெள்ளப்பட்டது. பட் என்ன நீ மறந்ததுக்கு தண்டனையா 20 நாளுக்கு அப்புறம் தான் உன் ரூபா அக்கா பத்தி சாெல்லுவேன்.

"அவ்வளவு நாளா! என்னால முடியாது, இப்பவே சொல்லுங்களேன்."

"சொல்ல முடியாது. ம்ம் உன்ன பாத்தா கொஞ்சம் பாவமாத்தான் இருக்கு சோ நாளைக்கு நீ என்ன VOC Parkல ஈவ்னிங் பாக்க வா. அப்போ நான் சொல்றேன்."

இப்பொழுது ஜஸ்வந்திடமிருந்து ரூபாவை பற்றி எந்த செய்தியையும் பெறமுடியாது என்பதை புரிந்துகொண்ட ரத்னா கோபமாக அந்த அறையை விட்டு வெளியேற, அவள் பின்னே வந்த அஜீத்

"ரத்னா ரொம்ப நேரமாகிட்டு, உங்க ஹாஸ்டல் வார்டன் திட்ட மாட்டாங்களா." தன்னுடன் வரும் அஜீத்தை கவனித்த ரத்னா

"இல்ல அஜீத் நான் ப்ரைவேட் ஹாஸடல்ல தான் இருக்கேன். எங்க ஹாஸ்டல்ல ஈவினிங் எட்டு மணி வரைக்கும் அவுட்டிங் உண்டு போகலாம். சாே திட்ட மாட்டாங்க, நான் பார்த்து போயிடுவேன். நீ அந்த ரூம்ல இருக்க எருமையை யார்கிட்டயாவது விட்டுட்டு போ." என்று சொன்ன பிறகும் ரத்னாவை ஆட்டோ ஒன்றில் ஏற்றிவிட்டு

"ஓகே ரத்னா பாய், பாத்து போயிட்டு வா." என்று கூறி வழியனுப்பி வைத்தான். அப்போது வெளியே வந்த பிரபு

"என்னடா ரத்னாவை வழி அனுப்பி வச்சிட்டியா."

"ம்ம் இப்பதாண்டா ஆட்டோ ஏத்தி அனுப்பினேன். நீ ஏண்டா இங்க வந்து நிக்கிற உள்ள அவரு தனியா இருப்பார் இல்ல."

"ரொம்ப ஓவரா பண்ணாத. அந்த ஆளுக்கு அடி ஒன்னும் பெருசா இல்ல, வீட்டுக்கு போகலாம்னு சொல்லிட்டாங்க. அவர் பிரெண்டு இப்ப வரேன்னு சொல்லி இருக்காரு. இன்னும் கொஞ்ச நேரத்துல நீ உங்க வீட்டுல இல்லைன்னு வை உங்க அப்பா அடிக்கிற அடியில நாளைக்கு நீ தான் வந்த ஆஸ்பத்திரியில இருப்ப. வா போகலாம்." என்று நண்பனின் கையை இழுத்துக் கொண்டு வந்து பைக்கில் ஏற்றிய பிறகு பிரபு அஜீத்திடம்

"அஜீத் எனக்கு என்னமோ அந்த ஜஸ்வந்த் பார்த்தா சந்தேகமா இருக்கு."

"ஏண்டா அப்படி சொல்ற."

"பின்ன என்னடா ரத்னா அவ அக்காவை பத்தி கேட்கும்போது சொல்லணும் இல்லாட்டி சொல்லாம போகணும், அத விட்டுட்டு ஹாஸ்டல்ல இருக்குற பொண்ணுகிட்ட நாளைக்கு evening என்னை மீட் பண்ணனும்னு சொல்றது சரியில்ல தானே."

"நீ சொல்றதும் கரெக்டாதான் மச்சான். நாளைக்கு காலையில இத பத்தி பேசலாம்." பேச்சை அத்துடன் அஜீத் முடித்துக்கொள்ள பிரபுவின் மனம் மட்டும் ஏதோ சரியில்லை என்று அவன் மனம் கூறிக் கொண்டிருந்தது.

அங்கு மருத்துவமனையில் ஜஸ்வந்தை பார்க்க வந்த அவனது நண்பன் கார்த்திக்

"நீ பண்றது கொஞ்சமாவது உனக்கு நல்லா இருக்கா, அண்ணிகிட்ட ரத்னா ஹாஸ்டல் போன் நம்பர் குடுத்தா அவங்க ரெண்டு பேரும் பேசிக்க போறாங்க. இல்லன ரத்னாகிட்ட ரூபா அண்ணி போன் நம்பர் கொடுத்த போதாதா. இதுக்கு ஏன்டா ரெண்டு வாரமா கோயம்புத்தூர் சுத்தி சுத்தி வந்து கிட்டு இருக்க."நண்பனைப் பார்த்த ஜஸ்வந்த்

"நான் இங்கே என் பிஸ்னஸ் விட்டுட்டு வந்தது ரூபா அண்ணியையும் ரத்னாவையும் சேர்த்துவைக்க இல்லை. ரத்னாவ என் கூட கூட்டிக்கிட்டு பாேறதுக்கு."

"என்னடா சொல்ற."

"எஸ். ரத்னாவுக்கு அவ குடும்பத்தை மட்டும்தான் பிடிக்கும், அதை மாத்தி என்ன மட்டும் பிடிக்கிற மாதிரி செய்யப்போகிறேன். அதுக்கப்புறம் என்னோட ரதி பேபி என்கூட மட்டும் தான் இருப்பா. நீ வேணா பாரு நாளைக்கு என்னோட முதல் முயற்சிய வெற்றிகரமா முடிச்சு காட்டுறேன்."

வீட்டிற்கு வந்த அஜீத் தன் அறைக்கு வந்ததும் அவன் மனம் 'பிரபு சொல்றமாதிரி அந்த ஜஸ்வந்த்தால் ரத்னாவுக்கு ஏதாவது பிரச்சனை வரப்போகுதா? நோ நோ அப்படி ரத்னாவுக்கு எந்த பிரச்சினையையும் நான் வர விடமாட்டேன்.' என்று மனதில் ஒரு உறுதியான முடிவை எடுத்த பின்பு உறங்கச் சென்றான்.

~~~~~~~~~~~~~~~

அடுத்த நாள் கல்லூரி வந்ததும் பிரபுவும் அஜீத்தும் ரத்னாவிடம் பேச காத்திருக்க, வழக்கம்போல ரத்னா தாமதமாக வகுப்பிற்கு வர பேச முடியாமல் போனது. மதிய உணவு இடைவேளையின் போது இருவரும் ரத்னாவிடம் வர, ரத்னா ஸ்டெல்லாவை பார்த்து

"ஸ்டெல்லா இன்னிலிருந்து இவங்க ரெண்டு பேரும் நம்ம ஃப்ரெண்ட்ஸ் ஓகே." என்று இருவரையும் ஸ்டெல்லாவுடன் நண்பர்களாக்க, சுற்றி வளைக்காமல் அஜீத் நேரடியாக ரத்னாவிடம்

"ஜஸ்வந்த் யாரு?" என்று கேட்க ரத்னா ஜஸ்வந்த் பற்றி கூறிய பின்பு, தனக்கும் பிரபுவிற்கும் ஜஸ்வந்த் மீது ஏற்பட்ட சந்தேகத்தை பற்றி கூறிவிட்டு

"ரத்னா நான் உன்கிட்ட ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்கிறதா தப்பா நினைக்காதே, உன்னோட நல்லதுக்காகத்தான் சொல்றேன்." தன் நல்லதை நினைத்து அஜீத் பேசுவதை புரிந்து கொண்டு

"ஓகே நான் ஜஸ்வந்த் பார்க்க இன்னைக்கு போகல. 20 நாளுக்கு அப்புறம் ஜஸ்வந்த் சொன்னால் சொல்லட்டும். இல்லாட்டி எப்படியும் எங்க அக்கா என்ன பாக்க வருவாங்க. சோ வெயிட் பண்றது ஒன்னும் தப்பு இல்ல."

"தேங்க்யூ ரத்னா. நான் சொன்னது தப்பா எடுத்துக்காம புரிஞ்சுகிட்டுதுக்கு. அப்போ உன்கிட்ட இன்னொன்னு சொல்லணும்."

"என்ன?"

"ஜஸ்வந்த் உங்க அக்காவை பத்தி உன்கிட்ட சொல்லாடி கூட நீ உன் அக்கா பத்தி தெரிஞ்சிக்கலாம்."

"எப்படி எப்படி தெரிஞ்சிக்கலாம்."

"ஃபேஸ்புக், இன்ஸ்டகிரம் இப்படி நிறைய சோசியல் மீடியா இருக்கு அதுல எதுலயாவது உங்களுக்காக அக்கா இருக்கலாம் தானே."

"அக்கா இருக்கலாம், ஆனா நான் இல்லையே."


"என்னா இல்லையா, சரி வீடு நான் உனக்கு கிரியேட் பண்ணி தரேன். நாளைக்கே நீ உங்க அக்க கிட்ட பேசலாம்."

"அக்கௌன்ட் ஓபன் பண்ணி பேசலாம் அஜீத், ஆனா அதுல ஒரு சின்ன பிரச்சனை இருக்கு."

"ரத்னா என்ன பிரச்சனை? உங்க வீட்ல தெரிஞ்சா உன்ன திட்டுவாங்கல."

"அது இல்ல. என்கிட்ட போன் இல்ல."

"எனது போன் இல்லையா."

"நீ எதுக்கு இவ்வளவு அதிர்ச்சி ஆகுற, என்கிட்ட போன் இல்ல அவ்வளவுதான்." இருவருகும் இடையில் நடந்த உரையாடலை கவனித்துக்கொண்டிருந்த பிரபு அஜீத்திடம்

"டேய் மச்சான், இதுக்கு உங்க அப்பா தம்பி ராமையாவை பரவால்லடா உனக்கு போன், கம்ப்யூட்டர் எல்லாம் வாங்கி தந்துருக்காரு." ரத்னா பிரபுவிடம்

"அஜீத் அப்பாவ தம்பி ராமையான்னு ஏன் சொல்ற?" ரத்னாவின் கேள்விக்கு பிரபு அஜித்தின் தந்தையைப் பற்றியும் அவருடைய குணத்தை பற்றியும் கூற, ரத்னா அஜீத்திடம்

"எனக்கு உன்னுடைய ஃப்ரெண்ட்ஷிப் வேண்டாம்." ரத்னாவின் பேச்சில் பதறிய அஜித்

"என்னாச்சு ரத்னா எதுக்காக இப்படி சொல்ற."

"பின்ன என்ன பிரபு உங்க அப்பாவை கிண்டல் பண்ற நீ எதுவும் சொல்ல மாட்டேங்குற."

"அவன் உண்மையை தானே சொன்னான். இதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு."

"நீ சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லையா."

"என்ன இருக்கு ரத்னா?"

"நிறைய இருக்கு அஜித், உங்க அப்பா உன்னை டாக்டராகவோ இல்லாட்டி ஒரு டீச்சராக பார்க்கணும்னு ஆசைப்பட்டார். இதுல என்ன தப்பு இருக்கு. உன்னால முடியும்ன முடியும்னு சொல்லு, இல்லாட்டி முடியாதுன்னு சொல்லு. அதை விட்டுட்டு உங்க அப்பா எங்கேயும் விட்டுக்கொடுத்து பேசாதே."

"முடியாதுன்னு சொன்னா மட்டும் எங்க அப்பா கேட்பாருனு நினைக்கிறாயா."

"நான் நினைக்கிறது இருக்கட்டும், நீ என்னைக்காவது தைரியமா உங்க அப்பா முன்னாடி உனக்கு பிடிச்சது, பிடிக்காததை சொல்லி இருக்கியா." இருவரின் உரையாடலின் இடையில் புகுந்த பிரபு

"ரத்னா நீ என்ன பாட்டிமா மாதிரி அட்வைஸ் பண்ணிட்டு இருக்க."

"அட்வைஸ் யாரு வேணாலும் யார்கிட்டயும் சொல்லலாம். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அஜித் எனக்கு சொன்ன மாதிரி. புடிச்சிருந்தா கேட்கிறதோ, பிடிக்காட்டி கேக்காம இருக்கிறதோ அவங்கவங்க விருப்பம்."

"இப்போ கடைசியா நீ என்ன சொல்ல வர."

"நான் ஒன்னும் சொல்லல. ஜஸ்ட் ஒரே ஒரு நாள் நீங்க எல்லாரும் உங்க அப்பா என்ன வேலை பாக்குறாரு அப்படிங்கறத கூடவே இருந்து பாருங்க, அதுக்கு அப்புறம் உங்க அப்பா கோபப்படுவது சரியா தப்பானு சொல்லுங்க." தந்தையை பற்றிய பேச்சிற்கு முற்று புள்ளி வைக்க அஜீத்

"சரி ஓகே ரத்னா இதை பத்தி நாம அப்புறம் பேசலாம், உனக்கு பேஸ்புக் அக்கௌன்ட் என்னோட போன்ல கிரியேட் பண்ணி, அதுல இருந்து உங்க அக்காவோட காண்டக்ட் ஏதாவது கிடைக்குதான்னு பாக்குறேன். நீ காலேஜ் முடிஞ்சதும் ஸ்டெல்லா கூட உன் ஹாஸ்டலுக்கு போயிடு."

"பேச்ச மாத்தாத அஜீத், நீ சொன்ன அட்வைஸ் எனக்கு சரின்னு பட்டுச்சு, நான் அதை கேட்டுக்குறேன். நீயும் யோசிச்சு பாரு."

"பார்க்கலாம் ரத்னா."

கல்லூரி முடிந்ததும் ரத்னா ஸ்டெல்லாவுடன் காரில் ஹாஸ்டல் சென்றுவிட, ஜஸ்வந்த் ரத்னாவிற்காக VOC parkல் 6 மணி வரை காத்திருந்துவிட்டு ரத்னா வராததால் ஏற்பட்ட காேபத்துடன் அடுத்த நாள் கல்லூரிக்கே வந்து காத்திருக்க, வழக்கத்திற்கு மாறாக அன்று ரத்னா சீக்கிரம் வந்துவிட அவள் அருகில் வந்த ஜஸ்வந்த்

"நேத்து நீ ஏன் park க்கு வரல?" திடீரென்று தன் முன் நின்று கேள்வி கேட்ட ஜஸ்வந்தை எதிர்பார்க்காத ரத்னா

"நீங்க தான நான் ஒரு நிமிசம் பயந்துட்டேன். அடிபட்ட வலி இல்ல தான."

"ரத்னா நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சாெல்லல."

"ஜஸ்வந்த் நீங்க என்ன parkக்கு வர சாென்னீங்க, ஆனா நான் உங்க கிட்ட வரேன்னு சாென்னதா எனக்கு நியாபகம் இல்ல."

"உனக்கு உங்க அக்காவ பார்கனும்னு ஆசை இல்லையா?"

"கண்டிப்பா ஆசை இருக்கு. அதுக்காக எனக்கு பிடிக்காததை செய்யனும்னு எந்த அவசியமும் இல்ல."

"உனக்கு என் கூட பேச பிடிக்கலயா?" ரத்னாவிற்கு ஜஸ்வந்தின் கேள்வியில் உள்ளர்த்தம் புரியாமல்

"எனக்கு உங்க கூட பேச பிடிக்கலனு நான் சாெல்லவே இல்ல. ஆனா நீங்க சாென்ன நேரத்தில சாென்ன இடத்தில பேச பிடிக்கல." ரத்னா, ஜஸ்வந்த் உரையாடலை தூரத்திலிருந்து பார்த்த முத்து அவர்களின் அருகில் வந்து

"ரத்னா மா எதாவது பிரச்சனையாமா?"

"ஹாய் முத்து மச்சான், நீங்க இருக்கும் பாேது உங்க மரிக்காெழுந்துகிட்ட யாராவது பிரச்சனை பண்ண முடியுமா? இவரு எனக்கு தெரிஞ்சவருதான்."

"ஓ அப்பிடியா மா."

ரத்னா தன்னிடம் முன்றாம் நபரிடம் பேசுவது பாேல பேசிவிட்டு, முத்துவை மச்சான் என்று அழைத்து சிரித்து பேசுவதை பார்த்து எழுந்த காேபத்தை கட்டுப்படுத்திக் காெண்டு

"ரத்னா நான் உங்கிட்ட தனியா பேசனும்." என்று வார்த்தைகளை அழுத்தத்துடன் கூற அதில் நீ இங்கிருந்து பாே என்னும் செய்தி இருப்பதை உணர்ந்து காெண்ட முத்து

"ரத்னா மா நான் அந்த மரத்தடில இருக்கிற பெஞ்ச்ல தான் இருபேன், எதாவது தேவைனா கூப்பிடு மா பாய்." என்று முத்து சென்று விட

"What is this ரத்னா? உனக்கு யாரும் செல்லமா கூப்பிட்டா பிடிக்காதுன்னு சாெல்லுவே, இப்ப என்னடான அவன் உன்ன ரத்னாமா ரத்னாமான்னு செல்லம் காெஞ்சிகிட்டு இருக்கா நீயும் காேவப்படாமா மச்சான் சாெல்லி சிரிச்சி பேசிட்டு இருக்க."

"ஜஸ்வந்த் இதுல காேவப்பட என்ன இருக்கு? முத்து என்ன மட்டும் இல்ல எல்லா பாெண்ணுங்களுக்கும் மரியாதை காெடுத்து வாமா, பாேமானு தான் பேசுவாங்க. அப்புறம் காலேஜ் வாழ்க்கையில மாமா, மப்பிள, மச்சானு சாெல்லுறது சாதாரண விஷயம்." என்று ரத்னா ஜஸ்வந்த் தன்னிடம் எதிர்பார்க்கும் உரிமையை புரிந்து காெள்ளாமல் என பேச, பேச்சு திசை மாறுவதை தாமதமாக உணர்ந்த ஜஸ்வந்த்.

"ரத்னா நான் உன் நல்லதுக்காக தான் சாென்னேன். It's okey leave it. நான் உன்கிட்ட ரெம்ப முக்கியமான விஷயத்தை பத்தி பேசனும். உன் friends இருந்ததால ஹாஸ்பிடல்ல வச்சு பேச முடியல. உனக்கு parkக்கு தான வர முடியாது, சாே இன்னைக்கு evening உங்க காலேஜ்க்கு வெளிய இருக்கிற காபி shopல வைச்சு பேசலாம். ஜஸ்ட் காெஞ்ச நேரம் ரதி. உங்கிட்ட பேசனும் என்கிற ஒரே காரணத்துக்காக எனக்கு இருக்கிற எல்லா வேலையையும் ஒதுக்கி வச்சுட்டு வந்திருக்கேன். நாளைக்கு ஒரு agreement sign பண்ண சிங்கப்பூர் பாேறேன். வர ஒரு வாரம் ஆகும். அப்புறம் வேலை ஆரம்பிச்சுட்ட இரண்டு வருசம் வர முடியாது." என ஜஸ்வந்த் தன் நிலை யை கூற, ரத்னா

"சரி ஆனா காெஞ்ச நேரம் தான். இப்பாே கிளஸ்க்கு பாேகனும் பாய்." என்று விடை பெற்று முத்துவிடமும்

"பாய் முத்து மச்சான்" என கூறிவிட்டு செல்லும் ரத்னாவை பார்த்துக்காெண்டு நின்ற ஜஸ்வந்த் அருகில் வந்த கார்த்திக்

"ஜஸ்வந்த் நீ நாளைக்கு சிங்கப்பூர் பாேகனும் உனக்கு நியாபகம் இருக்க?

ம்ம்

"என்னடா உனக்கு இருக்கிற வேலையை எல்லா விட்டுட்டு ஒரு சின்ன பாெண்ணு பின்னாடி சுத்திகிட்டு இருக்க. இந்த ரத்னா ஒன்னும் பேரழகி இல்ல பின்ன எதுக்குடா?"

"Yes karthik, I know she is not beautiful, her appearance will not tempt anyone. But I want her us mine."

"உன்ன என்னால புரிஞ்சுக்க முடியலடா. யூஸ் பண்ற எல்லா பாெருளும் world levelல இருக்கனும்னு நினைக்குறவன் நீ ஆனா இப்பாே ஒரு பட்டிக்காட்டு பாெண்ண லவ் பண்ற. ஓகே பட் இந்த காலேஜ் எதாவது பிரச்சனைனு தெரிஞ்சுது என் அப்பா என்ன வெட்டி புதைச்சுடுவாரு பாத்துக்க.

~~~~~~
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அவளை நீ லவ்வு செஞ்சா போதுமா, ஜஸ்வந்த்?
ரத்னா உன்னை லவ்ஸ் பண்ணுறாளான்னு பாரு தம்பி
அடேய் கார்த்திக்
அவனோட ட்ரூ லவ் தெரியாமல் ஜஸ்வந்த்தை நீ கிண்டல் பண்ணாதே
இவங்களுடைய பேச்சை முத்து மாமா கவனிக்கலையா, செசிலி டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top