உன் நிழல் நான் தாெட ep 3

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
#1
உன் நிழல் நான் தாெட
--செசிலி வியாகப்பன்

அத்தியாயம் -3


ஒவ்வாெரு மனிதனுக்கும் ஒவ்வாெரு எதிர்பார்ப்பு. எதிர்பார்ப்பு ஒன்றே மனிதனை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றது. அந்த எதிர்பார்ப்பை அடைய அவர்கள் செய்யும் முயற்சிகள் அனைத்தும் வாழ்க்கையை சுவாரஸ்யமாக்குகின்றது. எதிர்பார்ப்பின் முடிவில் அவர்களுக்கு காத்திருப்பது என்ன என்பதை அவர்களின் விதியே நிர்ணயம் செய்கின்றது. மகிழ்சி, துக்கம், எமாற்றம், வெற்றி, தாேல்வி எதுவென்றாலும் அது அவர்களின் வாழ்க்கைப் பாதையை மாற்றியமைக்கின்றது.

சனிக்கிழமை காலை அஜீத் எதிர்பார்ப்புடன் college groundக்கு வர, தனக்கு முன் வந்து groundல் ரத்னாவிடம் பிரபு பேசிக் காெண்டு இருப்பதை பார்த்து வேகமாக அவர்கள் அருகில் செல்ல, பிரபு ரத்னாவிடம்

"ரத்னா, நான் சாென்னேன் இல்ல என் best friend அஜீத் சந்திரன், நம்ம class தான்" என அறிமுகம் செய்து வைக்க ரத்னா

"இது ரெம்ப ஓவரா இல்ல, best friendனு சாென்னா ஓகே, ஆனா college ஆரம்பிச்சு பத்து நாளுக்கு அப்புறம், என் பக்கத்து பெஞ்ச்ல இருக்கிறவர எங்கிட்ட நம்ம classனு அறிமுகப்படுத்துன ஒன்னு நான் கஜினி படத்துல வர சூர்யா மாதிரி நியாபக மறதி கேஸா இருக்கனும், இல்லன நீ அதிமேதாவியா இருக்கனும். எனக்கு தெரிஞ்சவரைக்கும் எனக்கு நியாபக மறதி இல்ல, அப்புடின ரெண்டாவது காரணம் தான் சரியா இருக்கனும். என்ன அஜீத் சார் உங்க friendமேதாவிதான?"

"ஹேய் என்ன!.. ஐய்யாே பாவம் நம்ம கூட படிக்கிற பெண்ணு தனிய நிக்குதுன்னு வந்து பேசுனா, இந்த பிரபுவ பார்த்து மக்குனு சாெல்லுற" என்ற பிரபுவிடம் ரத்னா

"ஹலாே மிஸ்டர் பிரபு, நான் உங்கள அதிமேதாவினுதான் சாென்னேன், ஆனா உங்களை நீங்களே மக்குனு சாென்ன நானா பாெறுப்பு". என கெத்தான பார்வையுடன் நிற்க, பிரபு தன் நண்பனை ரத்னாவிடம் பேச வைப்பதற்கு

"டேய் இங்க ஒரு பாெண்ணு உன் நண்பன, உயிர் தாேழன, உன் தளபதி மட்டம் தட்டி imageஅ damage பன்ற நீ இந்த அநியாயத்த தட்டி கேட்க மாட்டியடா" என இருவரையும் காேர்த்து விட ரத்னா அஜீத் புறம் திரும்பி பேச வாய் திறக்கும் நேரம் அவர்களிடம் வந்த ஸ்டெல்லா

"சாரிடி ரத்து, காெஞ்சம் லேட்டாகிட்டு"

"பாேடி நான் வந்து 20 நிமிசம் ஆகிடுச்சு, நான மட்டும் தனியா நின்னுட்டு இருந்தேன், பேசாம தனியா நிக்கிறது எவ்வளவு காெடுமையான விஷயம் தெரியுமா?" தாேழிகள் இருவரும் பக்கத்தில் நின்று காெண்டிருந்த இரு ஜீவன்களை மறந்து தங்கள் உலகில் சஞ்ஜரித்துவிட தாேழர்கள் இருவரும் மெளனமாக வேடிக்கை பார்த்துக்காெண்டு நின்றன.

"ரத்து டியர், நான் ஏன் லேட்டா வந்தேன்னு தெரியாம கேவப்படாத"

"எதனால லேட்?"

"இதனால தான் லேட்" எனக் கூறி பாக்ஸ் நிறைய கேரட் அல்வாவை தர ரத்னா தன் காேபத்தை மறந்து அல்வாவில் ஐக்கியமாவிட

"காேபம் பாேயிட்டா"

"அது அல்வாவை பார்த்ததும் பாேயிட்டு, அல்வா சூப்பர், நீ செஞ்சிய?"

"இது மட்டும் நான் செய்ததா இருந்த நீ இப்பாே God ட பார்க்க travel பன்னிட்டு இருந்துருப்ப, மிச்சத்த அப்புறம் சாப்பிடு, வா சீனியர்ஸ் கிட்ட பாேகலம்" என்று ரத்னாவை அழைத்து சென்றுவிட பிரபு நண்பனிடம்

"பாத்தியாடா என்னமாே இங்க யாருமே இல்லாத மாதிரி பேசுனா, அல்வா சாப்பிட்டா, ஒரு பாய் கூட சாெல்லாம பாேய்டா" அதற்கு அஜீத்

"எனக்கு தெரிஞ்சவர நீ அவங்க கண்டுக்கிடாம பாேனதுக்கு வருத்தபடல, அல்வா உனக்கு தராம ரத்னா மட்டும் சாப்பிட்டதுதான் உன் கவல, விடுடா நான் உனக்கு வாங்கி தரேன்" என அஜீத் சமாதான முயற்சியில் இறங்க பிரபு

"அதவிடு நான் எவ்வளவு கஷ்டபட்டு ரத்னா கிட்ட பேசி உனக்கு அறிமுகப்படுத்தின நீ பேசம பிடிச்சு வச்ச பிள்ளை யார் மாதிரி நிக்குற, உன் வைச்சு நான் என்ன பன்ன?"

"என்ன எங்கடா பேச விட்டிங்க, கேப்பே விடாம மாத்தி மாத்தி பேசிட்டு இருந்திங்க, கடைசியா வாயே திறக்குறதுக்கு முன்னாடி அவ friend வந்துட்டாங்க, சரி வா நாமலும் பாேகலாம், இன்னைக்கு எப்புடியும் ரத்னாவே வந்து என் கிட்ட பேசுவா பாரு"

அனைத்து முதலாம் ஆண்டு மாணவர்களும் வந்து விட, சீனியர்களின் முன்பு தங்கள் திறமையை காட்ட அன்றைய ஹீரே அஜீத் தான். தனி நபர் விளையாட்டு பலவற்றில் அவனுக்கு இருந்த திறமையை பார்த்த அவனை பாரட்டிவிட்டு சென்றன. பெண்களுக்கான பிரிவில் ரத்னா ஓட்டம், டென்னிஸ் இரண்டில் திறமையை காட்ட ஒரு வழியாக sports events முடிவடைந்ததும் cultural events தேர்வு ஆரம்பமானது அனைத்து போட்டி தேர்வும் முடிவடையும் நிலையில் மாணவர்கள் தங்கள் பாடல் திறமையை வெளிப்படுத்தி கொண்டிருந்தனர். இறுதியாக வந்த அஜீத் ஒரு நாெடி ரத்னா மீது தன் பார்வையை செலுத்தி விட்டு பாட ஆரம்பித்தான்

நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்!
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா

நின்னைச் சரணடைந்தேன்!

அதுவரை தன் தாேழியுடன் அரட்டையடித்துக்காெண்டும், மீதம் இருந்த அல்வாவை சாப்பிட்டுக்காெண்டும் இருந்த ரத்னா, அனைத்தையும் மறந்து பாட்டுடன் கலந்துவிட்டாள்.

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா

நின்னைச் சரணடைந்தேன்!

அஜீத் பாடிய பாடலின் இனிமையை கேட்ட பிரபுவிற்காே "இவன் இவ்வளவு அருமையா பாடுவனா நமக்குதான் தெரியாம இருந்துருக்கு" நேற்றிலிருந்து நண்பனிடம் தெரியும் மாற்றத்தை பார்த்து அவன் மனதில் தாேன்றிய கேள்வி ஒன்றுதான். உண்மையிலேயே இது என் பிரண்டு அஜீத் தானா, இல்ல ஆவி ஏதாவது இவன் உடம்புக்குள்ள வந்துடுச்சா நமக்கு ஒன்னும் புரியலையே, ம்ம் பாக்கலாம் என்ன நடக்குதுன்னு" என்று தன் மனதுக்குள் புலம்பிக் கொண்டிருக்க அங்கு ரத்னாவோ அஜித்தின் பாடலில் தன்னை மறந்து ஒன்றிருந்தாள்.

மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவை போக்கென்று
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா

நின்னைச் சரணடைந்தேன்!

அஜீத் பாடிய இந்த பாடல் வரிகள் தனக்காகவே பாடப்பட்டது போல ரத்னா கேட்டுக்கொண்டே இருக்க இதைக் கவனித்த பிரபு நண்பனின் திட்டத்தை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை அதேநேரம் ரத்னாவுக்கு இந்தப் பாடல் பிடிக்கும் என்பது இவனுக்கு எப்படித் தெரியும் என்கின்ற கேள்வியும் மனதில் எழாமல் இல்லை

தன் செயலெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின் செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம்
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்!


துன்பமினியில்லை சோர்வில்லை
சோர்வில்லை தோற்பில்லை
நல்லது தீயது நாமறியோம் நாமறியோம்
நாமறியோம்
அன்பு நெறிகள் அறங்கள் வளர்ந்திட
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்!

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா

நின்னைச் சரணடைந்தேன்!

அஜீத் பாட்டு பாடி முடித்தும் அந்த வரிகளின் தாக்கத்தில் இருந்து வெளி வராது இருந்தவள், அனைவரின் கைதட்டல் ஓசையில் சுய உணர்வு பெற்றாள். அனைவரும் அஜீத்தை பாராட்டி விட்டு செல்ல இறுதியாக ரத்னாவும் தன் தோழி ஸ்டெல்லாவை அழைத்துக்கொண்டு அவனருகில் சென்று பேச ஆரம்பித்தாள்.

"உங்களுக்கு பாரதியார் பாட்டுன்னா புடிக்குமா? எனக்கு பாரதியார் பாட்டுன்னா ரொம்ப புடிக்கும், அதுவும் இந்தப் பாட்டு ரொம்ப ரொம்ப பிடிக்கும். நான் சின்ன பிள்ளையா இருக்கும்போது எங்க அக்கா இந்த பாட்ட அடிக்கடி பாடி காட்டுவா. தேங்க்யூ சோ மச் இந்த பாட்ட பாடியதற்கு. நீண்ட நாள் கழித்து தனக்கு பிடித்த பாடலை கேட்ட சந்தோஷத்தை ரத்னா வெளிப்படுத்த பதிலுக்கு அஜீத்தும்

"நீங்க கூட நல்ல டான்ஸ் பண்ணிங்க சூப்பரா இருந்துச்சு" என ரத்னாவின் நடனத்தை பாராட்ட
"தேங்க்யூ" கூறிவிட்டு மேற்கொண்டு பேச ஆரம்பிப்பதற்கு முன் அருகிலிருந்த ஸ்டெல்லா

"ரத்து அப்பா கால் பண்றாங்க சோ நான் வீட்டுக்கு போகணும், வாடி உன்னையும் உங்க ஹாஸ்டல்ல விட்டுட்டு போறேன். என்று தோழியை அழைக்க,

"சரிடி போகலாம்" என உடனே கிளம்ப இம்முறை மறக்காமல் அஜீத் புறம் திரும்பி

"சாரி ஃப்ரெண்ட்ஸ் நான் இப்போ கிளம்புறேன். திங்கட்கிழமை கிளாஸ்ல பார்க்கலாம் பாய். அப்புறம் மிஸ்டர் பிரபு உங்களுக்கு குடுக்காம கேரட் அல்வா சாப்பிட்டதுக்கு கோபப்படாதீங்க, அது என் பிரண்டு எனக்காக கொண்டு வந்தது சோ அதை ஷேர் பண்ணு முடியாது. நெக்ஸ்ட் டைம் நான் வாங்கிட்டு வந்து உங்களுக்கு தரேன் பாய்" என்று இந்த முறை முறையாக விடைபெற, தனித்துவிடப்பட்ட இரு நண்பர்களும் அங்கிருந்து நேராக புறப்பட்டுச் சென்று பக்கத்திலிருந்த மரத்தடியில் அமர்ந்து கொண்டு பேச ஆரம்பித்தன.

"உனக்கு எப்படிடா ரத்னாவுக்கு பாரதியார் பாட்டு புடிக்குமுன்னு தெரியும். சீக்கிரம் சொல்லு இல்லாட்டி என் மண்டை வெடிச்சிடும்" தன் சந்தேகத்திற்கான விடையை நண்பனிடம் எதிர்பார்க்க அஜீத்

"அன்னைக்கு ரத்னா கையில பாரதியார் கவிதைகள் புக்க பார்த்தேன், சோ அவளுக்கு பாரதியார்பாட்டுன்னா புடிக்கும்னு ஒரு சின்னத கெஸ் பண்ணுனே, அது கரெக்டா முடிஞ்சிருகு. பார்த்தே இல்ல ரத்னாவை என்கிட்ட பேசு வச்சுட்டேன். நெக்ஸ்ட் அவ கூட பிரண்டாக போறேன். நவ் ஐ அம் சோ ஹேப்பி டா. Monday பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு."

நண்பனின் மகிழ்ச்சியை பார்த்த பிரபு இவன் எப்பவும் இதே மாதிரி சந்தோஷமா இருக்கணும் என்று கடவுளிடம் அவசரமாக வேண்டுதல் வைத்தான். பாவம் பிரபு கடவுள் அவன் வேண்டுதலை நிராகரித்து விட்டதை அவன் அறியவில்லை.

ஹாஸ்டல்ஸ் வாசல்வரை வந்து தோழியை அனுப்பிவிட்டு ஸ்டெல்லா வீடு திரும்ப, ரத்னா தன் அறையை நோக்கி சென்றுகொண்டிருந்தாள். அப்போது அங்கு தனக்காக தன் அம்மாவும் அப்பாவும் காத்துக்கொண்டு இருப்பதை பார்த்து மகிழ்ச்சியாக அவர்களிடம் சென்று,

"என்ன அம்மா அப்பா எப்படி இருக்கீங்க? வீட்ல பெரியப்பா, பெரியம்மா, பாட்டி, தாத்தா எல்லாரும் எப்படி இருக்காங்க? நான் இல்லாட்டி ரொம்ப சந்தோஷமா இருப்பீங்கன்னு பார்த்தா என அனுப்பி விட்டு பத்து நாள்ல பின்னாடி வந்து நிக்கிறீங்க. என்ன பொண்ணு மேல அவ்ளோ பாசமா! இல்லையே அப்படி இருக்க வாய்ப்பில்லை, சோ நீங்க வேற ஏதோ காரணத்துக்காக தான் இங்க வந்திருக்கீங்க சரியா?" என்று தன் பெற்றோருக்கு வாய்ப்பே தராமல் பேசிக் கொண்டு போக ஒரு கட்டத்தில் பொறுக்கமுடியாத அவளுடைய தாய்,

"மெதுவா மெதுவா ஒவ்வாெரு கேள்வியா கேளுடி, எப்பதான் திருந்த போறியோ? இன்னும் எவ்வளவு நாளு இப்படி வாயாடி கிட்ட திரிய போற. இப்படியே பேசிக்கிட்டு இருந்தேன் வையி நீ போற வீட்டுல, உன் மாமியார் என்ன பிள்ளைய இப்படி வளர்த்து இருக்காங்கன்னு எங்களை தான் குறை சொல்லுவாங்க" என்று மகளை வசவு மழையில் குளிப்பாட்ட மாணிக்கம் மனைவியை நோக்கி

"பார்வதி இப்போ எதுக்கு புள்ளைய திட்டிக்கிட்டு இருக்க, அதெல்லாம் நம்ம பொண்ணு விவரமானவள். நம்ம கிட்ட மட்டும் தான் இப்படி பேசுவா, மத்தபடி யார்கிட்ட எப்படி பேசணும்னு நல்லா தெரியும். நீ கொஞ்ச நேரம் சும்மா இரு" என்று மனைவியை அதட்டிவிட்டு மகளிடம் திரும்பி

"வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்க, நாங்க இங்க ஒரு முக்கியமான வேலையாத்தான் வந்தோம். அப்படியே உன்னையும் ஒரு எட்டு பாத்துட்டு போகலாம் என்றுதான் காத்துக்கிட்டு இருந்தோம்"

"என்னப்பா அந்த முக்கியமான வேலை?"

"நம்ம தங்கவேலுக்கு பொண்ணு பாக்க வந்தோம்" என தந்தை கூறியதை கேட்டு

"போங்கப்பா என் கிட்ட யாருமே இதை பத்தி பேசவே இல்ல, அண்ணே கூட இதை பத்தி சொல்லல, நான் இப்போ ரொம்ப கோவமா இருக்கேன். அண்ணன் கூட இனிமேல் பேசமாட்டேன் சொல்லிருங்க." என்று சொன்ன மகளின் கோபத்தை பார்த்து மாணிக்கம் சிரித்துவிட தந்தையைப் பார்த்து ஒரு முறைப்பு பார்வையை செலுத்தினால் ரத்னா. ரத்னாவின் கோவத்தை பற்றி நன்கு அறிந்த மாணிக்கமும்

"பாப்பா இப்படிச் சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்படக்கூடாது. நாங்க பொண்ணு பாக்க வரப்போற செய்தியே எங்களுக்கு நேத்து சாயங்காலம் தான் தெரியும். எங்க கிட்டயே பெரியப்பா சாயங்காலம் சொன்னதால நாங்களும் காலையிலேயே கிளம்பி இங்க வந்தோம். அதான் உன்கிட்ட சொல்ல முடியல." பெரியப்பா என்ற பெயரைக் கேட்டவுடனேயே ரத்னா சமாதானமாகி விட்டாள். உலகத்திலேயே ரத்னா பயப்படக்கூடிய ஒரே ஆள் யார் என்றால் அது அவங்க பெரியப்பா தான் ஏதாவது ஒரு சின்ன தப்பு செஞ்சாலும் கம்பு உடைந்து போற அளவுக்கு அடி கிடைக்கும்.

" இந்த இடம் அவ்வளவா பொருந்தி வராதுன்னு நினைக்கிறேன். திரும்பி வர வழியில பெரியப்பா அவள் பிரென்ட் வீட்டுக்கு போயிட்டு வரத சொன்னாரு. நாங்களும் உன்ன பாக்குறதுக்கு இங்க வந்தோம்." என்று தந்தை என்ன சமாதனப்படுத்தினாலும் ரத்னாவின் மனதுக்குள் ஒரு வலி பரவியது மட்டும் உண்மை.

ரத்னாவின் குடும்பம் ஒரு கூட்டுக்குடும்பம் அதன் குடும்ப தலைவர் வைரவேல், தலைவி பூவரசி. அவருகளுக்கு இரு புதல்வர்கள் மூத்தவர் முத்துவேல், இளையவர் மாணிக்கவேல்.

முத்துவேல் மனைவி மலர்காெடி. முத்துவேல் மலர்காெடி தம்பதியருக்கு ரூபவதி, தங்கவேல் என்று இரு பிள்ளைகள்.

இளையவர் மாணிக்கவேல் பார்வதி தம்பதியருக்கு ரத்னா மட்டுமே. பெரியவரின் மனைவி மலர்காெடி இறப்புக்குப்பின் பார்வதி மூன்று பிள்ளைகளுக்கும் தாயாகி போனாள். பிள்ளைகளும் ஒற்றுமையுடன் இருந்தன.

பெரியவள் ரூபவதி கல்லூரியில் படிக்கும் பொழுது பழக்கமான ஒருவரை காதலித்து பதிவு திருமணம் செய்து கொள்ள, அதை அறிந்த குடும்பத்தினர் முறைப்படி ரூபாவின் திருமணத்தை நடத்தி முடித்து அவளுடனான உறவையும் முறித்துக் காெண்டது. இது எதுவும் அறியாத 12 வயதுசிறுமி ரத்னாவிற்கு அன்றிலிருந்து வீட்டில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. காரணம் தெரியாத போதும் ரத்னா அனைத்தையும் ஏற்று நடக்க கற்று கொண்டாள்.

எங்கே ரூபவதி போல ரத்னாவும் காதலித்து விடுவாளோ என்பதற்காகவே முத்துவேல் அவளை கல்லூரி செல்வதற்கு தடை விதித்தார். பல போராட்டங்களுக்குப் பின்பு ரத்னா கல்லூரி செல்வதற்ற்கு தடை விதித்தார். பல போராட்டங்களுக்குப் பின்பு ரத்னா கல்லூரி செல்வதற்கு அனுமதி வாங்கிய போது அருகிலுள்ள எந்த கல்லூரியிலும் இடம் இல்லாதுபோக தெரிந்தவர் ஒருவரின் சிபாரிசின் பேரில் இங்கு கோயம்புத்தூரில் படிப்பதற்கு இடம் கிடைத்தது. முதலில் ஹாஸ்டலில் தங்கிப் படிப்பதற்கு ஒத்துக் கொள்ளாத அவள் பெரியப்பாவை சமாளித்து இங்கு வந்து சேர்ந்து படிக்க ஆரம்பித்தாள்.

மாணிக்கத்திற்கு தன் மகளை பார்க்கும் பொழுது எப்பொழுதும் தோன்றும் ஒரு வருத்தம் இப்பொழுதும் தோன்றியது அவள் வயது பிள்ளைகள் கச்சிதமாக உடை உடுத்தும் பொழுது ரத்னா மற்றும் தொளதொளவென்று இருக்கும் உடையுடன் எண்ணெய் வழியும் முகத்துடனும் அழகை மட்டுப்படுத்திக் காட்டும் தோற்றத்துடனும் இருப்பது அவருக்கு வருத்தம்தான்.

ஆனால் தன் அண்ணனை எதிர்த்து பேசாத மாணிக்கம் தன் மகளின் வாழ்க்கை குறித்து எடுக்கும் முடிவுகளை அவர் அண்ணன் இடமே ஒப்படைத்து விட்டதால் அதைப்பற்றி வெளிப்படையாக என்றும் பேசுவது இல்லை.

சிறுது நேரம் பேசிவிட்டு தன் மகளுக்காக வாங்கிய பொருட்களை ரத்னாவின் பெற்றோர் விடைபெற ரத்னாவும் அவள் அறைக்கு சென்றதும் தன் குடும்பத்தை பற்றி நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஏனோ இன்று அஜீத் பாடிய பாடலைக் கேட்ட பின்பு தன் அக்கா ரூபவதியுடன் பேச வேண்டும் போல் இருந்தது. ஆனால் ரத்னாவிடம் ரூபவதி பற்றிய எந்தத் தகவலும் இல்லை. எனவே தன் தமக்கையிடம் பேசுவதாக நினைத்து அனைத்தையும் தனது டைரியில் எழுதி வைத்தாள்.

ரத்னா பிறக்கும் பாேது ரூபாவிற்கு பத்து வயது, தங்கவேலுவிற்கு எட்டு வயது. சிறுமியான ரத்னாவிற்கு ரூபா தான் இன்னாரு தாய். காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை ரூபாவை மட்டுமே சார்ந்திருந்து பழகிய ரத்னா ரூபா இல்லாத வாழ்க்கையை பழகிக்காெள்ள சில வருடங்கள் தேவைப்பட்டது. வாழ்க்கையை வாழ பழகிக் கொண்டாலும் தாயாகிய தாங்கிய தக்கையை மறந்து வாழ பழகவில்லை.

அதே நேரம் சென்னையில் அந்தப் பெரிய வீட்டில் தங்கையை நினைத்து தூக்கத்தை தொலைத்த ரூபாவும் நடைபயின்று கொண்டிருந்தாள். ரூபாவிற்கு தன் சாெந்த தம்பி தங்கவேலுவை விட, ரத்னாவை தான் பிடிக்கும். இந்த ஐந்து நீண்ட வருடங்களில் எத்தனை இனிய மாற்றங்கள் தன் வாழ்வில் நிகழ்ந்த இருந்தாலும், அது எதுவும் தங்கைக்கு ஈடான மகிழ்ச்சியை தரவில்லை. ஒவ்வொரு முறையும் தன் மகள் ராதிகாவை பார்க்கும்போதெல்லாம் தன் தங்கையின் நினைவு வந்து போகவும் தவறுவது இல்லை.

எப்படியாவது ஒரு முறை தன் தங்கையை பார்த்து தன்னை புரிய வைத்துவிட வேண்டும் என்று ரூபா நினைத்துக் கொண்டிருந்தாள். மீண்டும் ஒரு முறையாவது ரத்னாவை பார்த்து தன் பக்க நியாயத்தை கூறுவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் ஆனால் இன்றுவரை அப்படி ஒரு வாய்ப்பு ரூபாவிற்கு கிடைக்கவில்லை. சகோதரிகள் இருவரும் ஒருவர் மற்றவரைப் பற்றிய மூழ்கியிருந்த வேலையில், இரு விழிகள் ரத்னா ரூபவதி இணைந்திருந்த புகைப்படத்தை பார்த்து

"ரூபி don't வொரி, சூன் ஐ கம் வித் மை டியர் ரதி பேபி, நெக்ஸ்ட் ஜூலை 17 உங்க ரெண்டு பேரையும் மீட் பண்ண வைக்கிறேன்." எனறு ரூபாவிடமும்

"ஒரு தடவை ரதி பேபி என்னுடைய காதல நீ புரிஞ்சிகிட்ட போதும், அதுக்கு அப்புறம் உன்னோட வாழ்க்கையில சந்தோஷ மட்டும்தான் இருக்கும்" என்று தனக்கு பிடித்த இரு பெண்களிடம் மானசீகமாக பேசிக் கொண்டிருந்த வேளையில் அவனுடைய கைபேசி இவ்வுலகிற்கு அழைத்து வந்தது. திரையில் ஒளிர்ந்த பெயரை பார்த்ததும் ஒரு புன்னகையுடன் அழைப்பை ஏற்று காதில் வைத்தவன் பேச ஆரம்பிப்பதற்கு முன்

"நீ இங்க எப்ப வர?

"நான்....... மேற்கொண்டு பேசும்முன்

"நீ எப்போ இங்க வர? அதுக்கு மட்டும் பதில் சொல்லு"

"ஜூலை 17"

"அவ்வளவு நாள் அங்க என்ன முக்கியமான வேலை?"

"முக்கியமான வேலை தான். ரூபி கிட்ட சொல்லு ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் ஒன்னு அவளுக்கு காத்துக்கிட்டு இருக்குன்னு. இதுக்கு மேல என்கிட்ட இந்த கேள்விகேட்காத. கேட்டாலும் இப்போ என்னால பதில் சொல்ல முடியாது பாய்." என்று அழைப்பை துண்டித்தவன் மீண்டும் ரத்னாவின் புகைப்படத்தை பார்த்து

"நாளைக்கு நாம மீட் பண்ணலாம் பேபி, உன் நிழல் கூட மட்டும் பேசிக்கிட்டு இருக்கிற நான் கூடிய சீக்கிரம் நிஜமான உன்னை என்னோட பக்கத்துல கொண்டு வரப் போறேன்." என்று பேசிவிட்டு கனவுலகில் சஞ்சரித்தான்.

ரூபாவையும், ரத்னாவையும் இணைக்க நினைக்கும் அந்த நபர் யார்?

எதற்காக அவன் இருவரையும் இணைக்க நினைக்கின்றான்?

ரூபாவிற்கும் அவனுக்கும் என்ன உறவு?

அவன் ஏன் ரத்னாவை காதலிக்கின்றான்?

ரத்னா அவன் காதலை அறிந்தாள் என்ன முடிவு எடுப்பாள்?

ஜூலை 17 அப்படி என்ன நாள்?

அஜித்தின் முயற்சி வெற்றி பெறுமா?

விடை அடுத்த அடுத்த அத்தியாயத்தில்.....


உன் நிழலை நான் தொடர்வேன்
 
#5
Rooby Rathnava serka pogum antha nabar yaru???
avanga tha Rathna jodiya????? july 17th enna nadakka poguthu???
Ajith korikkai niragarikka pattathu theriyama asai valarkiranea pavam....
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement