உன் நிழல் நான் தாெட ep 19

Advertisement

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
உன் நிழல் நான் தாெட
--செசிலி வியாகப்பன்

அத்தியாயம் 19

ஜயமுண்டு பயமில்லை மனமே!-இந்த

ஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு.
பயனுண்டு பக்தியினாலே-நெஞ்சிற்
பதிவுற்றற குலசக்தி சரணுண்டு பகையில்லை

புயமுண்டு குன்றத்தைப் போலே-சக்தி
பொற்பாத முண்டு அதன் மேலே;
நியம மெல்லாம்சக்தி நினைவன்றிப் பிறிதில்லை;
நெறியுண்டு,குறியுண்டு,குலசக்தி வெறியுண்டு

மதியுண்டு செல்வங்கள் சேர்க்கும்-தெய்வ
வலியுண்டு தீமையைப் போக்கும்;
விதியுண்டு,தொழிலுக்கு விளைவுண்டு,குறைவில்லை;
விசனப்பொய்க் கடலுக்குக் குமரன்கைக் கணையுண்டு

அலைபட்ட கடலுக்கு மேலே-சக்தி
அருளென்னுந் தோணியி னாலே
தொலையெட்டிக் கரையுற்றுத் துயரற்று விடுபட்டுத்

துணிவுற்ற குலசக்தி சரணத்தில் முடிதொட்டு.


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அனைத்தும் நல்லபடியாக நடந்துவிட்ட மகிழ்ச்சியுடன் ரத்னாவின் குடும்பத்தினரும், அஜீத்தின் குடும்பத்தினரும் கோயம்பத்தூர் நோக்கி வந்து கொண்டிருக்க, சிரிப்பு சந்தோஷம் மட்டுமே அவர்களிடையே இருந்தது.

தென்காசியை தாண்டி அவர்களின் கார் சென்று கொண்டிருக்கும் பொழுது ரத்னாவின் மனக்கண்முன் பலவிதமான காட்சிகள் வர ஆரம்பித்தது. முதலில் தெளிவற்ற பிம்பங்களாய் தெரிய ஆரம்பித்த காட்சி, இப்பொழுது முழு வடிவமாய் தன் கண்முன் தோன்றி மறைந்தது.

டெல்லியில் இருக்கும் வரை ரத்னாவின் பெரும்பாலான நேரம் ரோஜாவுடன் பேசுவதிலும், மொட்டை மாடியில் நின்று வேடிக்கை பார்ப்பதுமாகவே இருந்துவந்தது.

அவ்வாறு ஒருநாள் ரத்னா மாடியிலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, அடுத்த தெருவில் ஏதோ சண்டை நடக்க ரத்னா அதை கவனிக்கலானாள். வாய் வார்த்தையாக நடந்துகொண்டிருந்த சண்டை கைகலப்பில் முடிய இறுதியில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள ஆரம்பித்தனர்.

ரத்த காயத்துடன் நின்றவர்களை மற்றவர்கள் பிரித்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். சண்டையிட்டவர்கள் ரத்த காயம் நிறைந்த முகம் ஒரு நிமிடம் ஜஸ்வந்த் முகத்தை நினைவுபடுத்த, அதன்பின்பு ஏதேதோ சில காட்சிகள் தோன்றி மறைந்தது.

அதன் பிறகும் பலமுறை இதுபோன்ற காட்சிகள் தோன்றி மறைய, ஒவ்வொரு முறையும் ரத்னா பதட்டம், மயக்கம் என இருந்து கொண்டிருந்தது. பெரும்பாலும் இவை அனைத்தும் ரத்னா தனியே தன் அறையில் இருக்கும்பொழுது நிகழ்ந்ததால் அஜீத் இதை அறிந்திருக்கவில்லை.

ஒருநாள் அஜீத்துடன் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று வரும் வழியில் எதிர்பாராதவிதமாக தன் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மோத வர, அதை கவனித்த அஜீத் ரத்னாவை வேகமாக தள்ளிவிட்டான். இறுதிநேரத்தில் விலகிச் சென்ற அஜீத்தின் மீது லேசாக அந்த கார் உரசி சென்றுவிட அஜீத் சிறு காயத்துடன் தப்பினான்.

பதட்டத்துடன் எழுந்து வந்த அஜீத் ரத்னாவிற்கு ஏதாவது காயம்பட்டிருக்கின்றதா என பார்க்க, ரத்னாவின் கவனம் முழுவதும் அஜித்தின் முகபாவனையில் மட்டுமே இருந்தது.

அஜீத்தின் நெற்றியிலிருந்து ரத்தம் வந்து கொண்டிருக்க அதை கவனித்த ரோஜா

"தம்பி உங்களுக்கு ரத்தம் வருது, வாங்க சீக்கிரம் ஹாஸ்பிடல் போயிட்டு வரலாம்." எனக்கூற

அதன் பிறகே கீழே விழுந்ததால் தன் நெற்றியில் ஏற்பட்ட காயத்தையும், அதிலிருந்து வரும் குருதியையும் அஜீத் உணர்ந்தான்.

மருத்துவமனை சென்று காயத்திற்கு மருந்திட்டு வீடு வரும்வரை ரத்னா அமைதியாகவே இருக்க, விபத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சி என்று நினைத்து அஜீத்தும், ரோஜாவும் ரத்னாவின் அமைதியை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

வெளியில் அமைதியாக காட்சியளித்தாலும் ரத்னாவின் ஆழ்மனது விடை தெரியாத பல கேள்விகளுக்கு விடை அளித்துக் கொண்டிருந்தது. இரவில் அஜீத் உறங்கியது எழுந்து அமர்ந்த ரத்னா இரவு விளக்கின் வெளிச்சத்தில் அஜீத்தின் முகத்தை மட்டுமே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்.

எந்தவித கவலையுமின்றி உறங்கிக் கொண்டிருக்கும் அஜீத்தின் முகம் தெளிவாக இருக்க, காலையில் தான் பார்த்த முகத்திற்கும் இப்பொழுது இருக்கும் முகத்திற்கும் இடையிலுள்ள வேறுபாடு ரத்னாவிற்கு பல விஷயங்களை புரிய வைத்தது.


கோவிலுக்கு சென்று வரும் வழியில் தன்னை கார் ஒன்று மாேத வருவதை கவனித்த அஜீத்தின் முகம் ஒரு வினாடியில் கோபத்தில் சிவந்து இருக்க, அவன் கண்களும் அப்பட்டமாக அந்தக் கோபத்தை பிரதிபலித்தது.

அந்த கோப முகத்துடனேயே அஜீத் ரத்னாவை காப்பாற்ற தள்ளி விட்டிருந்தான். அன்று ஜஸ்வந்த் தன்னை காரிலிருந்து தள்ளி விடும் பொழுது ஜஸ்வந்த் முகமும் இதேபோன்ற உணர்வுகளை மட்டுமே பிரதிபலித்தது.

கீழே விழுந்த தன்னை நோக்கி நெற்றியில் ரத்தம் வழிய வந்த அஜீத் முகம் கோபத்தை தொலைத்து, அவன் விழிகள் தன் நலனை ஆராய்ந்து கொண்டிருக்க, அந்த விழியின் தேடல் ரத்னாவுக்கு புரியவைத்தது அரை மயக்க நிலையில் தன்னை கைகளில் ஏந்திகொண்டு நடந்த ஜஸ்வந்த் விழிகளில் இருந்த தேடலைத் தான்.

இதை தெரிந்த பின்பு ரத்னாவின் மனது ரத்னாவின் மனது மேலும் மேலும் பல கேள்விகளை கேட்டுக் கொண்டே இருந்தது. விபத்து அன்று நடந்த எதுவும் நினைவில்லாமல் இருந்த ரத்னா தன் மனம் எழுப்பிய கேள்விகளை தனக்குள் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்க, அதற்கு தாமதமாக மூளை கூறிய பதிலில் ரத்னா ஸ்தம்பித்து விட்டாள்.

தெளிவற்ற குரல்கள் காதில் மீண்டும் மீண்டும் கேட்க, அது யார் என்பதை உணர்ந்து கொண்ட பொழுது நடந்த அனைத்தையும் தெளிவை அறிந்து கொண்டாள். கருணையின் மறு உருவாய் இருந்தவரா ஜஸ்வந்த்தை கொலை செய்திருப்பார் என்ற உண்மையை ரத்னாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நடந்த உண்மையை தன் மனதிற்கும், மூளைக்கும் புரியவைத்த ரத்னா அதன்பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை தனக்குள் முடிவு செய்து கொண்டான்.

திருமணத்திற்கு பின் நடந்த அனைத்தையும் தற்போது யோசித்துப் பார்க்கும் பொழுது தனக்கு ஜஸ்வந்த் மீது ஏற்பட்ட அவநம்பிக்கை, பயம், அஜீத் மீது ஜஸ்வந்த் பொறாமை கொண்டிருப்பதாகத் தான் நினைத்தது அனைத்தும் திட்டமிட்டு செய்யப்பட்ட சதி என்பது புலப்பட்டது.

ஆனால் எதற்காக அவர் இதை செய்ய வேண்டும், ஜஸ்வந்த் மரணத்தால் அவர்களுக்கு கிடைக்கப்போவது என்ன என யோசித்து யோசித்து ரத்னாவுக்கு தலை வெடிப்பது போல் இருந்தது.

முதலில் அஜீத்திடம் இதைக் கூறி தீர்வு காணலாம் என நினைத்து காத்திருக்க, அன்றுதான் அஜீத்தின் ப்ரிமிலரி எக்ஸாம் முடிவு வெளியாகியிருந்தது. அதில் அஜீத் வெற்றி பெற்றதாக தன் சந்தோஷத்தை தெரிவிக்க, அவன் மகிழ்ச்சியைக் கண்ட ரத்னா தன் முடிவை கைவிட்டாள்.

'நான் உங்ககிட்ட இப்போ இத சொல்ல போறது இல்ல, இப்ப நான் உங்ககிட்ட இத சொன்னா நிச்சயமா நீங்க உண்மையை கண்டுபிடிக்க புறப்படுவீங்க. இதனால உங்கள் கனவு இலட்சியம் எல்லாம் தடைபடும். அது என்னால் நடக்க நான் அனுமதிக்க மாட்டேன்.'

அதன்பிறகு தனக்கு தெரிந்த உண்மையை ரத்னா தன் மனதுக்குள் புதைத்துக்கொண்டு, சரியான வாய்ப்பு வருவதற்காக காத்திருந்தாள்.

அஜீத் அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்று ஐஏஎஸ் பயிற்சி மட்டும் மீதமிருக்க ரத்னா தான் கோயம்புத்தூரில் லா கல்லூரியில் சேர விருப்பம் இருப்பதாக தெரிவித்தாள்

கோயம்புத்தூர் செல்வதாக இருந்தால் தன் மொத்த குடும்பத்தையும் ஒன்று சேர்த்த பின்பு அது முடியும் என்பது ரத்னாவுக்கு நன்கு தெரியும். அப்படி குடும்பம் ஒன்று சேரும் நேரம் உண்மையான கொலையாளி தன்னை நெருங்கும் பொழுது காரணத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்பதே ரத்னாவின் திட்டமாக இருந்தது. அதன்படியே அனைத்தும் நடந்தது.

ரத்னாவின் திட்டம் இப்படி இருக்க இதை அறியாத அஜீத், ரத்னா வைத்து கொலைகாரனை பிடிக்க மற்றொரு திட்டம் தீட்டினான். இவர்கள் இருவரின் திட்டத்தை அறியாத தங்கவேலு அவன் வழியில் கொலைகாரனை கண்டுபிடிக்க முயற்சி செய்தான்.

ரத்னா தனது திட்டத்தின் முதல் படியாக தனக்கு தேவையான தகவல்களை தனது கல்லூரி சீனியர் சாகுல், முத்து, மற்றும் மணி மூவரின் மூலம் திரட்ட ஆரம்பித்தாள். கிடைத்த தகவல் மூலம் கொலைக்கான காரணம், ஆதாரம் கிடைக்காத பொழுதும் கொலையாளியின் அன்றாட நடவடிக்கைகள் தெரியவர ரத்னாவிற்கு வியப்பு மேலிட்டது.

இனி எதுவாக இருந்தாலும் தான் கோயம்பத்தூரிலாே அல்லது சென்னையிலாே இதுதான் செய்யவேண்டும் என்பதை புரிந்து கொண்ட ரத்னா அதன்பின் அமைதியாக இருக்க ஆரம்பித்தாள்

இடையில் அஜீத்தின் காதலை புரிந்து கொண்டாலும் அதை தன்னிடம் வெளிப்படுத்தாமல் இருப்பதை பார்த்து கோபம் வந்தாலும் அதையும் வெளிக்காட்டவில்லை.

அஜீத் ஜஸ்வந்த் கொலை செய்யப்பட்டான் என்பதை கேள்விப்பட்டதில் இருந்து மிகவும் கவனமுடன் தன்னைச் சுற்றி நடக்கும் எல்லாவற்றையும் கவனிக்க ஆரம்பித்தான். அதுவரை அஜீத் சாதாரணமாக நினைத்து அனைத்தும் தற்போது சந்தேகத்துக்குரிய விஷயமாகவே பட்டது.

ஸ்டெல்லாவாேடு தான் இணைந்து இருப்பது போல எடுக்கப்பட்ட புகைப்படம்.
ரத்னாவை விட்டு தான் விலக நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்யப்பட்ட முயற்சிகள்.
டெல்லியில் எற்பட இருந்த விபத்து என அனைத்தும் ரத்னாவையும் ஜஸ்வந்தடன் சேர்த்து கொலை செய்வதற்காக நடத்தப்பட்ட முயற்சியாகவே நினைக்க வைத்தது.

விசாரிக்க ஆரம்பித்த இரு தினங்களிலேயே எதிர்பாராத ஒரு நபர் கொடுத்த வாக்கு மூலத்தின் மூலம் கொலையாளியை அஜீத் ஓரளவு நெருங்கிருந்தான்.

எனினும் கொலைக்கான காரணத்தையும் தெரிந்து கொள்ளவும், ஆதாரத்துடன் சட்டத்தின் முன் நிறுத்தவும் அஜீத் தன் திட்டத்தை ரத்னாவின் மூலம் செயல்படுத்த ஆரம்பித்தான்.

எந்த ஒரு சூழ்நிலையிலும் தன் நெருங்கியநண்பனிடம் கூட தன் முழு திட்டத்தை அஜீத் கூறவில்லை.

"அஜீத் கொலைகார யாருன்னு தெரியாம நீ இப்படி தான் எல்லா பிரச்சனையும் தனியாக சமாளிக்க முடியும்."

"நான் இப்போ யாரையும் நம்பர மனநிலைமை இல்ல பிரபு."

"அதுதான் எனக்கு நல்லா தெரியுதே. என்ன கூட நம்மள நீ."

"ஏன்டா இப்படி பேசுற உன்ன நம்பாமலா யார்கிட்டயும் உதவி கேட்காம உன்கிட்ட உதவி கேட்டுகிட்டு இருக்கேன்."

"எஸ் நீ என்கிட்ட உதவி மட்டும் தான் கேட்கிற, உன்னுடைய பிரச்சனையே முழுசா ஷேர் பண்ணிக்கல. நீ எந்த ஒரு விஷயமும் யோசிக்காமல் செய்ய மாட்ட அஜீத். உனக்கு கொலைகார யாருன்னு நிச்சயமா தெரிஞ்சிருக்கு. தெரியாம இவ்வளவு பெரிய ஆபத்தான விஷயத்தில ரத்னாவை நேரடியா சம்பந்தப்படுத்த நினைக்க மாட்ட." என கூறும் பிரபுவின் கண்களில் இருந்தது தன் நண்பன் தன்னை நம்ப வில்லையே என்ற ஆதங்கம் மட்டுமே.

"உண்மையை உன்கிட்ட சொல்லக் கூடாதுன்னு நான் நினைக்கல பிரபு. என்னால உன்னுடைய லைப் எதுவும் பிரச்சனை வந்துடக் கூடாதுன்னு உன்கிட்ட இருந்து நான் கொஞ்சம் தள்ளி நிக்கிறேன்."

"பிரச்சனை என்று வந்தால் உதவி பண்றது தாண்டா உண்மையான நட்பு. அது இல்லாட்டி நட்புக்கு என்னடா மரியாதை இருக்கு."

"நான் உண்மைய மறைக்க இன்னொரு காரணம் நீ வருத்தப்படக்கூடாதுன்னு தான்."

"என்னடா சொல்ற."

"உனக்கு தெரியாமலேயே எங்க வாழ்க்கையில பிரச்சனை நடக்க உன்ன பயன்படுத்தி இருக்காங்க."

"என்னையா யாருடா அது தயவுசெய்து சொல்லித் தொலை."

"மிஸ்டர் ராபர்ட்."

"ஸ்டெல்லா அப்பாவா."

"எஸ் அவர்தான்."

"அவர் எதுக்காக இதெல்லாம் பண்ணனும்."

"எப்படி எல்லாத்தையும் செஞ்சாரு கண்டுபிடிச்ச என்னால எதற்காக இதையெல்லாம் செய்தாருன்னு கண்டுபிடிக்க முடியல."

"சரி உனக்கு இதையெல்லாம் சொன்னது யாரு சாென்ன."

"ஸ்டெல்லா....
எங்க வாழ்க்கையில நானும் ரத்னாவும் பெயர் புகழ் சம்பாதிக்கிறது முன்னையே நல்ல நண்பர்களை சம்பாதிக்கிறாேம். எனக்கு என்னுடைய நட்புக்கு நீ எப்படி உண்மையாகவும் உறுதுணையாகவும் இருக்கிறியோ, அதே மாதிரி ஸ்டெல்லா ரத்னாவின் நட்புக்கு எந்த விதத்திலும் குறைந்து போய்விடவில்லை."

நண்பர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அங்கு ஸ்டெல்லா வர,

"ஹாய் ஸ்டெல்லா"

"ஹாய் அஜீத், ஹாய் பிரபு.

"சாரி அஜீத் அப்பா இவ்வளவு பிரச்சனை பண்ணி இருப்பாரு நான் நினைச்சு கூட பாக்கல."

"வீடு ஸ்டெல்லா உங்க அப்பா பண்ண தப்புக்கு நீ என்ன பண்ணுவ."

"இல்ல அஜீத் எங்க அப்பா அன்னைக்கு அஜீத்தை பிடிக்குமான்னு கேட்டாரு. நானும் அன்னைக்கு நீயும் ரத்னாவும் ரொம்ப நாளுக்கு அப்புறம் எங்க அப்பா கூட என்ன அதிகமா டைம் ஸ்பென்ட் பண்ண வச்ச சந்தோசத்துல ரொம்ப புடிக்குமுன்னு சொல்லிட்டேன்.

நான் சொன்னதுகாக இப்படி பண்ணுவாரு நான் கொஞ்சம் கூட நினைக்கல. அவரால உங்க ரெண்டு பேரோட லைஃப்ல இவ்வளவு பிரச்சனையும் வந்து இருக்கு. இப்ப கூட உனக்கு ரத்னாவுக்கு இடையில எங்க அப்பாவால் அதான் பிரச்சினை வந்திருக்கிறத நினைக்கும்போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு."

"சரி விடு ஸ்டெல்லா உன்ன கஷ்டப்படுத்திக்காத."

"என்னால விட முடியாது, உங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனை என்று எனக்கு தெரியல. ஆனா ரத்னா அதனால் சென்னைக்கு போகணும்னு சொல்றா.

இன்னைக்கு நைட் அப்பா வந்ததும் நான் அவர் கிட்ட இத பத்தி பேச போறேன்."

"உங்க அப்பா இங்கே வர போறா."

"ஆமா அப்பா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் போன்ல சொன்னாங்க."

"ஏற்கனவே ரொம்ப நேரம் ஆகிட்டு, நீ வீட்டுக்குப் போ, தயவு செஞ்சு உங்க அப்பாகிட்ட இதைப் பற்றி இப்போது எதுவும் பேசாத. நானே உங்க வீட்டுக்கு வரேன் அப்ப பேசிக்கலாம்." ஸ்டெல்லா அங்கிருந்து கிளம்பியதும் பிரபு

"என்னடா ஸ்டெல்லா தான் உன்கிட்ட எல்லாமே சொன்னான்னு சொன்ன. அவளுக்கு பெருசா எதுவும் தெரிஞ்ச மாதிரி தெரியல."

"அவளுக்கு முழு விவரமும் தெரியாது. இப்போ அது பிரச்சனை இல்லை ராபர்ட் சென்னையில் இருக்கிறதால மட்டும்தான் ரத்னா கிட்ட கொஞ்சம் கடுமையா பேசினேன், ஜஸ்வந்த் பத்தி கேட்டா கோபப்பட்டு ரத்னா சென்னைக்கு கிளம்புவானு நினைச்சா, அந்த ஆள் இங்க வரப்போறாரு.

எப்படியாவது ரத்னாவை சென்னைக்கு கிளம்ப விடாமல் செய்யணும். காலையில இந்த மீதியை பேசிக்கலாம்."

பிரபுவிடம் பேசிவிட்டு தன் வீட்டிற்கு வந்த அஜீத் தன் அறையில் ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்த ரத்னாவிடம் வந்து
''ரத்னா"

எதிர்பாராத அழைப்பில் அதிர்ந்து திரும்பிய ரத்னா அஜீத்தை பார்த்ததும்

"சொல்லுங்க அத்தான்."

"தூக்கம் வரலையா ரத்னா."

"இல்ல." ஒற்றை வாரத்தையில் ரத்னா பதில் வர அஜீத்

"இப்போ உன் மனசுல ரொம்ப குழப்பம் இருக்கும். உன்னுடைய குழப்பத்திற்கான எல்லா விடையும் நான் முசோரி போறதுக்கு முன்னே சொல்லிட்டு தான் போவேன்."

ஒரு நிமிடம் அஜித்தை நிமிர்ந்து பார்த்த ரத்னா தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு

"காலம் கடந்து கிடைக்கக்கூடிய எதுவும் நமக்கு நிம்மதியே தராது."

"ரத்னா ப்ளீஸ் தயவு செஞ்சு இப்படி பேசாத. நான் உன்கிட்ட சொல்ல வேண்டியது, பேச வேண்டியது நிறைய இருக்கு .ஆனா இப்ப பேச முடியாது. ரிசப்ஷன் முடியட்டும் அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு."

"பொறுமையாகத்தான் இதுவரைக்கும் நான் இருந்தேன். கிட்டத்தட்ட ஒரு வருஷம், என்னோட வாழ்க்கையில நடந்த எல்லா விஷயங்களையும் சகித்துக்கொண்டு பொறுமையாதான் இருக்கிறேன்.

இதுவரைக்கும் நான் பெருசா எதையும் எதிர்பார்ப்பது இல்லை. என் வாழ்க்கையில முதல்முறையா நான் ஒரு விஷயத்தை எதிர்பார்த்தேன். அது நடந்துச்சு ஆனா ரொம்ப காலதாமதமாக நடந்துச்சு. அதுல யாருக்குமே சந்தோஷம் இல்லை.

அதுல ஒருவேளை உங்களுக்கும் சந்தோஷம் இல்லாட்டி சொல்லிடுங்க, நான் நிரந்தரமா உங்க வாழ்க்கையை விட்டு போயிடுவேன்."

தன்போக்கில் பேசிக்கொண்டிருந்த ரத்னாவை தடுத்து நிறுத்தியது அஜீத்தின் கவலை நிறைந்த முகமே.

"ஏன் ரத்னா நிறுத்திட்ட சொல்லு, உன் மனசுல இருக்குற எல்லாத்தையும் சொல்லிவிடு.

இந்த உலகத்திலேயே உன்ன புரிஞ்சுகிட்ட, உன்னை சந்தோஷமா வச்சுக்கக்கூடிய ஒரே ஆள் நான் மட்டும்தான்னு இதுவரைக்கும் நெனச்சுக்கிட்டு இருந்தேன். அது இல்லன்னு நான் புரிஞ்சுகிட்டேன்."

அஜீத் கவலை நிறைந்த வார்த்தைகளை கேட்ட ரத்னா, கட்டிலின் அருகில் மடங்கி அமர்ந்து கதறி அழ ஆரம்பித்தாள்.

"எதுக்காக அத்தான் என்னை அன்னைக்கு வேண்டாம்னு சொன்னீங்க. நீங்க மட்டும் அப்பவே என்ன கல்யாணம் பண்ணி இருந்தா இவ்வளவு பிரச்சனை நடந்திருக்காது தானே. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு." அழுது கொண்டிருந்த ரத்னாவின் அருகில் அமர்ந்த அஜீத்

"ரத்னா அழாதே, இங்க பாரு, என்ன ஒரு நிமிஷம் பாரு. நான் பண்ணது தப்புதான், நடந்ததை என்னால மாத்த முடியாது. ஆனால் நடக்கப்போகிறது நல்லபடியா நடக்க வைப்பேன்." என ஆறுதல் கூற

ரத்னா அஜீத்தின் மார்பில் சாய்ந்து தேம்பிக்கொண்டிருந்தாள். தேம்பிக்கொண்டிருந்த ரத்னாவின் முகத்தை முகத்தை தன் இரு கரங்களிலும் ஏந்தி

"ஐ மிஸ் யூ ரத்னா
ஐ மிஸ் யூ பேட்லி
ஐ வாண்ட் ரத்னா இன் மை லைஃப்
ஐ லவ் யூ ரத்னா
மூணு வருஷம் என்ன உன்னுடைய நண்பனா மட்டும் பார்த்த நீ காதலனகாவும், கணவனாகவும் எத்துக்க மாட்டியாே என்கிற பயம் மட்டுமே என்னுடைய காதல உன்கிட்ட சொல்லமுடியாமல் தடுத்துட்டு."

தன் முகத்தை பிடித்திருந்த கையை தட்டிவிட்டு எழுந்து நின்ற ரத்னா

"இதுவரைக்கும் நீங்க சொன்னது எல்லாமே நான் செஞ்சிருக்கேன், அப்படி இருக்கும்போது உங்க காதல சொல்லியிருந்தாலும் நான் நிச்சயம் யோசிச்சு பாத்து இருப்பேனே தவிர மறுத்திருக்க மாட்டேன்." எனக்கூறிவிட்டு பால்கனி போடப்பட்டிருக்கும் நாற்காலியில் சென்று அமர்ந்து கொள்ள, ரத்னாவின் பின்னே வந்த அஜீத்

"ஏய் குட்டி பாப்பா, அழுமூஞ்சி பாப்பா அதான் அத்தான் இவ்வளவு சொல்றேன் இல்ல, இந்த அத்தான் பாத்தா உனக்கு பாவமா இல்லையா."

"அதெல்லாம் பாவமா இல்லடா உனக்கு எல்லாம் இனிமேல் நான் பாவம் பார்க்க மாட்டேன்." பழைய ரத்னா வெளிவருவதை கண்ட அஜீத்

"ஏய் என்ன மரியாதை எல்லாம் ரொம்ப குறையுது."

அஜீத் கூறிய பின்புதான் தான் அஜீத்தை ஒருமையில் அழைத்ததையும் டா போட்டு பேசியதையும் உணர்ந்த ரத்னா, உள்ளுக்குள் ஏற்பட்ட உற்சாகத்தை மறைத்துக் கொண்டு

"இனிமேல் அப்படித்தாண்டா டா பாேட்டு கூப்பிடுவேன், என்னடா பண்ணுவ."

ரத்னாவின் முகம் உற்சாகத்தை மறைத்தாலும், குரலில் இருந்த துள்ளலும், கண்களில் இருந்த ஒரு குறுகுறுப்பும் காட்டிக்காெடுத்துவிட,

"டா வா ஓகே நீ தான கூப்பிட்டுக்காே. பட் மிஸ் யூனு சாென்ன கிட்ட வருவனு பார்த்தா பால்கனிக்கு ஓடி வர, இனி எப்படி என்ன விட்டு எப்படி தள்ளி போறேன்னு நானும் பாக்குறேன்." எனக் கூறிக்கொண்டு நாற்காலியில் அமர்ந்திருந்த ரத்னாவை தன் இரு கரங்களையும் ஏந்தி கொள்ள.

"ஐயோ அத்தான் ப்ளீஸ் அத்தான் ப்ளீஸ் கீழே இறக்கி விடுங்க எனக்கு பயமா இருக்குது, கீழே போட போறீங்க."

பயத்தில் ரத்னா தன் இரு கரங்களையும் அஜித்தின் கழுத்தில் மாலை ஆக்கிக்கொள்ள, ரத்னாவின் காதுக்கு அருகில் குனிந்த அஜீத் தன் உதடுகளால் ரத்னாவின் கன்னத்தில் கோலம் இட்ட படி

"இன்னைக்கு உன்னுடைய மொத்த பயத்தையும் நான் உன்ன விட்டு விரட்டப் போறேன்." பேசிக்கொண்டே ரத்னாவை கட்டிலில் வந்து இறக்கிவிட, அஜீத்தின் பார்வையில் இருந்த மாற்றத்தை கண்டுணர்ந்த ரத்னா

"அத்தான் நான் ப்ளீஸ்..... வேண்டாமே...... இதெல்லாம்...... இது சரி இல்லை...... நீங்க ரொம்ப நல்ல பையன்னு நெனச்சேன்......." ரத்னாவின் வாய்மொழியில் மறுப்பு தெரிந்தாலும் அது உண்மை அல்ல என்ன என்பதை அறிந்து கொண்ட அஜீத்

"சரியா, சரி இல்லையான்னு அப்புறமா பேசலாம். நீ என்ன நல்லவன்னு நினைச்சா அதற்கு நானா பொறுப்பு."

"அத்தான் நான் உங்க மேல கோவமா இருக்கேன்."

"இருந்தா இருந்துட்டு போ, ஆனா நான் இப்போ ரொம்ப ரொமான்டிக் மூடில் இருக்கேன்." எனக் கூறிக்கொண்டு ரத்னா அருகில் நெருங்கி வர

"கிட்ட வராதீர்கள் வந்த நான்....."

அவளது பலகீனமான எதிர்ப்பு அனைத்தும் அஜித்தின் பலமான காதலின் முன்பு காற்றோடு கரைந்தன.

காதலை கூற பயந்தவன் இன்று கணவனாக அவளை ஆட்கொண்டான். காதலை தன்னிடம் தெரியப்படுத்தவில்லை என்ற கோபத்தில் இருந்தவள் கணவனின் கரைகடந்த காதலில் கரைந்து உருகிப் போனாள்.

கவிதைகளால் காதல் உணர்வை கேட்டவளின் ஒவ்வாெரு அணுவிற்கும் தன் காதலை உணர்த்தினான் அந்த காதல் கணவன்.

இருவரும் அனைத்தையும் மறந்தன, ஜஸ்வந்த், காெலைகாரன், தங்கள் திட்டம் என அனைத்தையும் மறந்தன. விடியும் வரை இருவரின் நினைவில் இருந்தது எல்லாம் அவர்கள் மட்டுமே. விடிந்த பின் ஒருவர் மற்றவரின் நிழலாயினர்.

உன் நிழலை நான் தாெடர்வேன்.
 

banumathi jayaraman

Well-Known Member
ஐயோ அப்போ ஜஸ்வந்த்தை கொலை செய்தது ராபர்ட்டா?
அடப்பாவி ராபர்ட் ஏன் இப்படி செய்தான்?
அஜீத்தை ஸ்டெல்லா விரும்புறாள்ன்னு கூமுட்டை ராபர்ட் நினைத்து விட்டானா?
ஆனால் ஜஸ்வந்த்தையும் ரத்னாவையும் எதுக்கு கொல்லப் பார்த்தான்?
அவங்க இரண்டு பேரும்தான் கல்யாணமாகி போயிட்டாங்களே
ஒருவேளை ஜஸ்வந்த்துடன் தொழிலில் போட்டியா?
 
Last edited:

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
ஐயோ அப்போ ஜஸ்வந்த்தை கொலை செய்தது ராபர்ட்டா?
அடப்பாவி ராபர்ட் ஏன் இப்படி செய்தான்?
அஜீத்தை ஸ்டெல்லா விரும்புறாள்ன்னு கூமுட்டை ராபர்ட் நினைத்து விட்டானா?
ஆனால் ஜஸ்வந்த்தையும் ரத்னாவையும் எதுக்கு கொல்லப் பார்த்தான்?
அவங்க இரண்டு பேரும்தான் கல்யாணமாகி போயிட்டாங்களே
ஒருவேளை ஜஸ்வந்த்துடன் தொழிலில் போட்டியா?
Wait பண்ணுங்க dear என் twist முடியல
ரத்னா கண்டு பிடிச்ச காெலை காரன் இன்னும் சென்னைல தான் இருக்காங்க.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top