உன் நிழல் நான் தாெட ep 18

Advertisement

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
உன் நிழல் நான் தாெட
-- செசிலி வியாகப்பன்

அத்தியாயம் 18


மருத்துவமனையிலிருந்து வெளியேறிய ரத்னா மனது முழுவதும் அஜீத்தை சுற்றியும், தன் வாழ்க்கையில் இனி என்ன நடக்கு என்ற என்னம் மட்டுமே.

ரத்னா இதுவரை எதிர்காலத்தை பற்றி நினைத்து எப்பாெழுதும் கவலை காெண்டது கிடையாது.
அஜீத் தன்னை திருமணம் செய்ய மறுத்து,
ஜஸ்வந்துடன் தன் திருமணம் நடைபெற்றது,
திருமணத்திற்கு பின் ஏற்பட்ட குழப்பம்,
ஜஸ்வந்தின் மரணம், அஜீத்துடன் நடந்த மறுமணம். இப்படி அனைத்து சூழ்நிலையிலும் ரத்னா நடப்பதை எற்று வாழ பழகிக்காெண்டாள்.

ஆனால் இப்பாெழுது மருத்துவமனையில் மருத்துவர் கேட்ட கேள்வி, நடைபெற்ற பரிசாேதனை அஜீத்துடனான தான் உறவை கேள்விக்குறியாக்கியதாகவே உணர்ந்தாள்.

தங்கள் இருவரின் உறவு எந்த இடத்தில் இருக்கின்றது, அஜீத்திற்கு தன்னை பிடிக்கவில்லையாே, தான் இன்னும் அஜீத்துடன் வாழ்க்கையை தாெடங்கவில்லை என்ற உண்மை தெரிந்த மைதிலி இனி என்ன செய்ய பாேகின்றார், என பல கேள்விகள் தன்முன் பூதகரமாக நிற்க, அனைத்தையும் இன்று அஜீத்திடம் பேசி விடுவது என்ற முடிவுடன் வீடு வந்தாள்.

மருத்துவமனை சென்ற பெண்கள் வீடு வந்த பாேது முடிவு என்னவாக இருக்கும் என்பதை ஓரளவு அனைவரும் அறிந்திருந்ததால் யாரும் அதை பற்றி பேசவில்லை.

நாளை மறுநாள் நடைபெற இருக்கும் ரிசப்ஷன் எற்ப்பாடுகளை கவணிப்பதிலும், பத்து நாள்களில் பயிற்சிக்காக அஜீத் செல்ல இருப்பதால் பிற ஏற்பாடுகளை கவணிப்பதிலும் பிஸியாகின.

"அஜீத் நான் உன்கிட்ட பேசனும்."

"அம்மா அப்புறம் பேசலாம் மா எனக்கு காெஞ்சம் முக்கியமான வேலை இருக்கு."

"உன் முக்கியமான வேலைய தூக்கி குப்பையில பாேடு." தாய் காேபத்தை உணர்ந்த அஜீத்

"அம்மா எதுக்கு இவ்வளவு காேபமா இருக்கிறீங்க."

"இன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல டாக்டர் என்ன சாெல்லிருப்பாங்கனு உனக்கு நல்ல தெரியும். அப்புறம் நான் எதுக்கு காேபமா இருக்கிறேனு தெரியாத மாதிரி கேக்கிற."

"அம்மா ரத்னாக்கு இப்பாே 22, எனக்கு 24 தான் ஆகுது இப்பாே எங்களுக்கு குழந்தை இல்லனு நீங்க இவ்வளவு காேவப்படனுமா. இன்னும் காலம் இருக்குமா. டெல்லில எங்க சூழ்நிலையில குழந்தைய பத்தி யாேசிச்சு பாக்கலமா."

"நீ குழந்தையை பத்தி மட்டுமில்ல, யார பத்தியும் யாேசிக்கல, ரத்னாவ பத்தியும் யாேசிக்கல."

"அம்மா ஃளீஸ், நடந்த கல்யாணத்தில உங்களுக்கு இன்னம் காேவம் பாேகலயாமா. அப்பிடியே காேபம் இருந்தாலும் அதுக்கு எல்லா கரணமும் நான் மட்டும் தான், தயவு செய்து ரத்னாகிட்ட காேபத்த காட்டதீங்க மா, அவளால தாங்க முடியாது."

"ஆமா தாங்கமுடியாதுடா ரத்னாவால மட்டும் இல்லடா, எந்த ஒரு பொண்ணலயும் இரக்கத்தால் மட்டும்தான் கணவன் நம்ம கூட இருக்கிறான் என்கிற விஷயத்தை தாங்க முடியாது."

"அம்மா நான் ஒன்னும் இறக்கப்பட்டு ரத்னா தான் கல்யாணம் பண்ணல. இந்த விஷயத்தை நீங்க நல்லா புரிஞ்சுக்கோங்க, எனக்கு ரத்னாவை பிடிக்கும், பிடித்ததால் மட்டும் தான் கல்யாணம் பண்ணினேன்."

"அப்படி உனக்கு பிடிச்சிருக்குனா, நாங்க சொல்லும்போதே எதுக்கு நீ கல்யாணத்துக்கு ஒத்துக்கல."

"அம்மா அன்னைக்கு இருந்த சூழ்நிலையில் என்னால கல்யாணத்தை பத்தி நினைச்சு பார்க்க முடியல மா."

"என்னடா பாெல்லாத சூழ்நிலை, சூழ்நிலை போல மேல பழிய தூக்கி போட்டுட்டு நீ தப்பிக்க பாக்கிறீயா. அன்னைக்கு இருந்த சூழ்நிலையில உன்னால் ரத்னாவை கல்யாணம் பண்றது பத்தி யோசிச்சு பாக்க முடியல, டெல்லியில இருந்த சூழ்நிலையில் குழந்தையை பற்றி யோசித்து பார்க்க முடியல.

இப்படி நீ உன்ன பத்தி மட்டும் தான் யோசிச்சு பார்த்துகிட்டு இருக்க. இதுல எங்கயாவது நீ உன்ன சுத்தி இருக்கிறவங்களை பத்தி யோசிச்சு பார்த்தியா. நீ எடுக்கும் முடிவு எங்க எல்லாரையும் எந்த அளவு கஷ்டப்படுத்திலுக்கும்னு யோசிச்சு பார்த்தியா.

அதெல்லாம் எங்க யோசித்திருக்க போற உனக்கு உன்னுடைய சூழ்நிலை மட்டும்தான் பெருசு. மத்தவங்க யாரும் உன் கண்ணுக்கு தெரிஞ்சிருக்க மாட்டாங்க. உன்னால மட்டும் தான் ரத்னா வாழ்க்கையில் இவ்வளவு பிரச்சனை நடந்திருக்கு."

மைதிலி கேட்ட எந்த கேள்விக்கும் அஜீத்திடம் பதிலில்லை. ஏற்கனவே குற்ற உணர்வில் தவித்துக்கொண்டிருந்த அஜீத்தின் மனது மைதிலியின் கேள்விகளால் மீண்டும் மீண்டும் காயப் பட்டது. எப்பொழுதும் தான் எடுக்கும் அனைத்து முடிவுகளும் சரியானதாக இருக்கும் என்ற கர்வம் ரத்னா விஷயத்தில் அடிபட்டு போனது.
"நீங்க சொல்றது நான் ஒத்துக்குறேன் மா ரத்னா வாழ்க்கையில் நடந்தது எல்லாத்துக்கும் நான் மட்டும் தான் காரணம். நிச்சயமா எல்லாத்தையும் நான் சரி பண்ணுறேன் மா, தயவுசெஞ்சு என்ன நம்புங்க." அஜீத்தின் குரலில் இருந்த வருத்தத்தை உணர்ந்த மைதிலி

"அஜீத் நான் உன்னை கஷ்டப்படுத்த இத சொல்லல, ஒரு பெண்ணா ரத்னா அந்த ஜஸ்வந்த் கிட்ட எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்திருப்பா நினைச்சாலே எனக்கு உன் மேல கோபம் கோபமா வருது." ஜஸ்வந்த் மீது தாய் சொத்து சுமத்தும் குற்றச்சாட்டில் துணுக்குற்ற அஜீத்

"அம்மா ஜஸ்வந்த் ரத்னாவை கஷ்டப்படுத்தினதா உங்ககிட்ட யாரு சொன்னா."

"ரத்னா அடிபட்டு ஹாஸ்பிடல்ல இருக்கும்போது நான், அர்ச்சனா, அவங்க அம்மா பார்வதி மூணு பேரும்தான் பக்கத்துல இருந்தோம். அப்போ அவ அம்மா நர்ஸ் கிட்ட ஏதோ கேட்க வெளியே போயிருந்த சமயம் ரத்னா அலறிய அலறல் இன்னும் என் காதுல கேட்டுகிட்டே இருக்கு."

'ஜஸ்வந்த் கிட்ட வராதே, போ என்கிட்ட இருந்து, கிட்ட வராதே. நான் இனி அஜீத் பத்தி பேசமாட்டேன். கிட்ட வராதே ஐயோ எனக்கு பயமாயிருக்கு, என்ன ஒன்னும் பண்ணாதீங்க. இங்கிருந்து போயிடு. அம்மா அப்பா யாராச்சும் வருவாங்க, எனக்கு பயமாயிருக்கு என்ன காப்பாத்துங்க."

"ரத்னாவை அவன் எந்த அளவுக்கு கொடுமைபடுத்தி இருந்தா சுயநினைவு இல்லாத நேரத்துல ரத்னா அலறி துடிச்சிருப்பா. உனக்கும் ஜஸ்வந்துக்கும் இடையில என்ன பிரச்சனை நடந்ததுன்னு நான் கேட்க போறது இல்ல. ஆனால் இனிமேல் ரத்னா வாழ்க்கையில சின்னதா ஒரு கஷ்டம் வந்தாலும் நீ அம்மானு ஒருத்தி இருந்தது மறந்திடு."

தன்னிடம் காேபமாக பேசி சென்ற அம்மாவின் வார்த்தைகளில் இருந்த வலியை அஜீத் உணர்ந்தே இருந்தான். தான் அவசரத்தினால் எடுத்த முடிவால் நடந்த விபரீதத்தை மாற்றமுடியாது எனினும் நடக்கப்பாேவதை மாற்ற முடியும். யாேசனையில் அமர்ந்திருந்த அஜீத்திடம் வந்த தங்கவேலு

"அஜீத் ரத்னாகிட்ட ஜஸ்வந்த் மர்டர் பத்தி கேட்டியா? எதாவது தகவல் கிடைச்சுதா."

"இல்ல அத்தான்."

"அஜீத் இன்னும் பத்து நாளில் நீ ட்ரைனிங் கிளம்பிடுவ. அதுக்கு முன்ன ஜஸ்வந்த்தை காெலை பண்ணது யாருன்னு கண்டு பிடிக்கனும். அவங்களால ரத்னாவுக்கு ஆபத்து வர முன்னாடி தடுக்கனும்."

"புரியுது அத்தான் இப்பமே ரத்னாகிட்ட இத பத்தி பேசிட்டு காலையில சாெல்றேன்."

இரவு உணவு முடிந்து தன் அறைக்கு வந்த அஜீத் ரத்னாவிடம் எவ்வாறு இதை பற்றி பேச்சை ஆரம்பிப்பது என்பதை பற்றி யாேசித்துக்காெண்டிருந்த அஜீத்திடம் வந்த ரத்னா,

"அஜீத் அத்தான் நான் உங்க கிட்ட காெஞ்சம் பேசனும்."

"நானும் உன் கிட்ட பேசனும்."

"சாெல்லுங்க அத்தான்."

"முதலில் ஆரமித்தது நீ தான, நீயே சாெல்லு."

"இல்ல நீங்களே சாெல்லுங்க. நான் ரெம்ப பேசனும். நேரம் ஆகிட்ட நான் தூங்கிடுவேன். இதுவே நான் பேசுனா எனக்கு தூக்கம் வராது."

"ரத்னா நான் உன்கிட்ட கேட்க பாேற விஷயம் காெஞ்சம் சீரியஸன விஷயம் சாே நீயே முதல்ல சாெல்லிடு."

"அதுவந்து..... எனக்கு எப்படி ஆரம்பிக்கனு எனக்கு தெரியல. அதனால நீங்க சாெல்ல வந்ததை சாெல்லுங்க."

"ரத்னா நான் கேட்க பாேற கேள்விக்கு காெஞ்சம் பாெறுமையா யாேசிச்சு பதில் சாெல்லு."

"ம்ம்ம் கேளுங்க."

"ஜஸ்வந்துக்கு உன்ன பிடிக்குமா ரத்னா. உன்ன நல்லபடியா பாத்துக்கிட்டாரா."

அஜீத் கேள்வியில் நிமிர்ந்து பார்த்த ரத்னா பார்வையில் 'நீயா எங்கிட்ட இத கேட்ட' என் கேள்வியே இருக்க, அஜீத்திற்கு அது புரிந்தாலும் ரத்னாவின் பதிலுக்காக அமைதியாக காத்திருந்தான்.

அஜீத் மட்டுமின்றி ஜஸ்வந்த் அரூபமும் ரத்னாவின் பதிலுக்காக காத்திருந்ததை இருவரும் அறியவில்லை. அஜீத் தன் பதிலுக்காக காத்திருப்பதை உணர்ந்த ரத்னா காதுகளில்

'ஆம்பளைங்க எப்பவும் தன் பாெண்டிட்டிக்கு தன்னை தவிர வேற யாரையும் பிடிக்க கூடாதுன்னு ஒரு நினைப்பு இருந்துக்கிட்டே தான் இருக்கும். அவங்களுக்கு வரக்கூடிய முதல் காதல், முதல் ஈர்ப்பு எல்லாத்தையும் பாெண்ணுங்க சாதாரண காமெடியா நினைச்சு மறந்திடனும்.

அதே மாதிரி நமக்கு வந்த, மனசில இருக்கிற காதலை ஈர்ப்பை மறைச்சிடனும். இல்ல நான் புருஷனுக்கு உண்மையா இருக்க பாேறேன்னு எல்லாத்தையும் சாென்ன வாழ்க்கை நரகமாகிடும்."
"இந்த கேள்விய ஒரு பத்து மாதத்திற்கு முன்னாடி நீங்க கேட்டிருந்த நான் பதில் சாெல்லிருப்பேன். இப்பாே என்ன சாெல்றதுன்னு எனக்கு தெரியல."

"ரத்னா நான் ஒரு முக்கியாமான காரணத்திற்காக தான் கேட்கிறேன், நீ சாெல்லப்பாேற பதில்ல தான் நம்ம வாழ்க்கையே இருக்கு."

"எனக்கு என்ன சாெல்றதுன்னு தெரில ஒரு தடவை நான் சாென்ன உண்மை என் வாழ்க்கையை இங்க காெண்டு வந்து நிறுத்திருக்கு. இன்னாெரு தடவை அதே தப்ப நான் எப்படி பண்ணுவேன்."

"என் மூளை உண்மைய சாெல்லதன்னு சாென்னலும், என் மனசில உங்க மேல இருக்கிற நம்பிக்கை பதில் சாெல்ல சாெல்லுது."

"ஜஸ்வந்த்க்கு என்ன ரெம்ப பிடிக்கும், எனக்காக எல்லாம் செய்கின்ற அளவுக்கு, எனக்காக தனக்கு பிடிச்சத இழக்குற அளவு, எனக்கு பிடிச்ச சின்ன விஷயம் கூட நான் சாெல்லாமலே என் கண் பார்வையை வச்சு தெரிஞ்சுக்கிற அளவு பிடிக்கும்."

"என்ன ரெம்ப நல்ல பாத்துகிட்டாங்க. என் நினைப்பை மட்டுமே அவங்க மனசில சுமந்துகிட்டு வாழ்ந்தாங்க. எனக்காக மட்டுமே இருந்தாங்க."

இதை எல்லாம் கேட்டுக்காெண்டிருந்த ஜஸ்வந்த் ஆன்ம

"ரதி பேபி இது பாேதும் எனக்கு, நீ என் அன்பை புரிஞ்சுக்கலயாேனு நினைச்சு தவித்த எனக்கு நீ இப்பாே சாென்ன இந்த வார்த்தை பாேதும்."

தன் காதலியை, தன் மனைவியை மற்றாெருவன் அதீத உரிமையுடன் அன்புடன் கவணித்துக்காெண்டன் என்ற விஷயம் உலகில் எந்த ஒரு மனிதனுக்கும் பிடிக்காது.

அஜீத்தும் அதற்கு விதி விலக்கல்ல. இருந்தும் தான் இந்த நிலையில் இருப்பதற்கு தான் மட்டுமே காரணம் என்று தன்னை சமாளித்துக்காெண்டு

"அப்புறம் என் ஜஸ்வந்த் உன்ன காெடுமை படுத்தனும்."

"நீங்க எதனால இப்படி ஒரு முடிவுக்கு வந்தீங்கனு நான் தெரிஞ்சுகலாமா. ஏன்னா நான் ஜஸ்வந்த் பத்தி இதுவரைக்கும் யாருகிட்டையும் பேசுனது இல்ல. அப்படி இருக்கும் பாேது எத வைச்சு அவர் என்ன காெடுமை பண்ணதா நீங்க முடிவு பண்ணீங்க."

"நீ எங்ககிட்ட ஜஸ்வந்த் பத்தி சொன்னது இல்ல. ஆனால் நம்ம டெல்லி போன அன்னைக்கு உன்னுடைய அலறல் இன்னும் கூட என் காதில் கேட்டுகிட்டே இருக்கு. அதுக்கு என்ன அர்த்தம்."

"அத்தான் நீங்க எதைப் பத்தி சொல்லுறீங்கனு எனக்கு புரியல. நான் எப்பாே அப்படி எல்லாம் அலறினேன், எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை."

ரத்னா தன் சுய நினைவில் இல்லாத போதே இவை நடந்திருக்கும் என்பதை புரிந்து கொண்ட அஜீத், ஜஸ்வந்த் ரத்னாவை கொடுமை படுத்தவில்லை என்றால், எதற்காக தன்னை மறந்த நிலையிலும் ஜஸ்வந்தை நினைத்து ரத்னா எதற்காக பயப்படவேண்டும்.

"ஓகே ரத்னா லீவ் இட் உங்களுக்கு ஆக்ஸிடெண்ட் ஆன அன்னைக்கு என்ன நடந்துச்சு."

"நாங்க ஊருக்கு கிளம்பி போய்க்கொண்டு இருந்தோம், எனக்கு தூக்கம் வந்ததால் நான் தூங்கிட்டேன். திடீர்னு எது மேலயாே மோதின மாதிரி இருந்துச்சு. அதுக்கு அப்புறம் எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை."

"நல்லா யோசிச்சு பாரு உனக்கு ஏதாவது ஞாபகம் இருக்கா."

"இல்ல எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை."

ரத்னாவிடமிருந்து எந்த தகவலும் கிடைக்காமல் போக அஜீத்திற்கு குழப்பம் மட்டுமே அதிகரிக்கிறது.

"சரி நீ தூங்கு, ரிசப்ஷனுக்கு தேவையானது பத்தி அத்தான் கிட்ட பேசிட்டு வரேன்."

அறையை விட்டு வெளியேற சென்ற அஜீத் ரத்னாவை நோக்கித் திரும்பி ரத்னா

"உனக்கு ஜஸ்வந்த்தை பிடிக்குமா."

இந்தக் கேள்வியை அஜித் ரத்னாவின் மனதை அறிந்து கொள்ளவே கேட்டான். இதற்கு பதில் அஜீத் தன் காதலை ரத்னாவிடம் கூறியிருக்கலாம். ரத்னா பதில் கூறாது அஜித்தை வெறித்துப் பார்த்துவிட்டு

"இந்தக் கேள்விக்கு என்கிட்ட பதில் இல்லை. இதுக்கு நான் பதில் சொன்னாத்தான் நம்ம வாழ்க்கை நல்லா இருக்கும்னா அதை பத்தி எனக்கு கவலை இல்லை."

"இந்த உலகத்திலே எனக்கு அதிகமா உங்கள தான் பிடிக்கும். ஆனா நீங்க தான் என்னை அதிகமா காயப்படுத்திறீங்க." அஜீத்திடம் எதையாே எதிர்பார்த்த ரத்னா, அஜீத் அசையாமல் நிற்பதை பார்த்து

"நீங்க கேட்ட கேள்விக்கு என்கிட்ட பதில் இல்ல ஆனா நீங்க கேட்கனும்னு நான் எதிர் பார்த்த கேள்விக்கான பதிலை மட்டும் சாெல்ல விரும்புறேன்."

அஜீத்தின் அருகில் நெருங்கி வந்த ரத்னா

"நண்பனே
நட்பு வட்டத்திற்குள்
நாமிருந்தபாேது உன் ஸ்பரிசம்
ஊட்டவில்லை
காதலுணர்வை....

காலம்
சில கடந்த பின்பு
என் மனம் எழுப்பிய சர்ச்சையில்
நண்பனே உன்னை
கணவனாக்கிக் காெண்டேன்
என் மனதில்....

என் நண்பனே என் கணவனான பின்பும்
என் மனம் குழம்பித் தவிக்கின்றதுவே
உன்னால்
உன் நினைவால்....

நம் நட்பின் ஆழத்தில்
காதலையும்....
என் விழியாேர நீரில்
நட்பினையும்....

தேடி தவிக்கின்றேனடா.

ரத்னா தன்னை காதலித்தாள் என்ற என்னமே மகிழ்ச்சியை தர, அஜீத் பேசும் முன் தங்கவேலு அழைக்க, வந்து பேசிக்காெள்ளலாம் என்று நினைத்து அஜீத் வெளியேற, தங்கள் அறையை விட்டு வெளியேறியதும் கட்டிலில் பொத்தென்று அமர்ந்த ரத்னா, வாய்விட்டு புலம்ப ஆரம்பித்தாள்.

'அத்தான் நீங்க எதுக்கு ஜஸ்வந்த் பத்தி என்கிட்ட கேக்குறீங்க. நான் எப்பவும் யாருகிட்டயும் பொய் சொல்ல மாட்டேன், ஆனா இன்னைக்கு உங்க கிட்ட பொய் சொல்லிட்டேன்.'

'ஆக்சிடெண்ட் ஆனா அன்னைக்கு நடந்த பல விஷயம் எனக்கு ஞாபகம் இருக்கு. என்னால அத உங்ககிட்ட சொல்ல முடியாது. நீங்க யாரும் ஜஸ்வந்த் பத்தி தப்பா நினைக்கிறத என்னால அனுமதிக்க முடியாது.'

'ஒருவேளை நான் சரியா நடந்துகிட்டு இருந்தாள் இந்த பிரச்சனை எதுவும் வராமல் இருந்திருக்கலாம்.'

'என்ன மன்னிச்சிடுங்க ஜஸ்வந்த், நான் உங்க காதலுக்கு உண்மையா இல்ல. இப்போ என் மனசுல அஜீத் அத்தான் மட்டும்தான் இருக்கிறாங்க. அதை நான் நல்லா புரிஞ்சுகிட்டேன்.'

தன் யோசனையில் தவித்துக் கொண்டிருந்த ரத்னாவை தோளைத் தொட்டு தன் புறம் திருப்பிய ஸ்டெல்லா,

"ரத்னா என்ன ஆச்சு நான் உன்னை எவ்வளவு நேரமா கூப்பிட்டுக்கிட்டு இருக்கேன்."

"ஸ்டெல்லா நீ எப்ப வந்த..." என கூறி விட்டு தோழியை கட்டிக்கொண்டு கண்ணீர் வடிக்க, தன் தோளின் மீது பட்டுத் தெறித்த நீர்த்துளி தோழியின் கண்ணிலிருந்து வந்தது என்பதை உணர்ந்த ஸ்டெல்லா

"ரத்னா எதுக்கு இப்பொழுது அழுதுகிட்டு கிட்டு இருக்க. அதான் இப்போ எல்லா பிரச்சினையும் முடிச்சிட்டே, உங்க ரெண்டு பேரையும் அஜீத் வீட்டில் ஏத்துக்கிட்டாங்க அப்புறம் என்ன. வேற ஏதாவது பிரச்சனையா."

"இந்த வீட்ல இருக்க யாராலயும் எனக்கு பிரச்சனை இல்லை, என்னோட பிரச்சினை நான் மட்டும்தான்."

"கொஞ்சம் புரியிற மாதிரி சொல்றியா."

"சொல்றேன், அதுக்கு முன்ன நீ எப்படி இப்ப வந்த அதை சொல்லு."

"நீங்க வந்திருக்கிறதா அப்பா சாயங்காலம் தான் சொன்னாங்க, எனக்கு உன்ன பாக்கணும் போல இருந்துச்சு, அதான் உடனே வந்துட்டேன்."

"உன் கல்யாணத்துக்கு தான் கூட இருந்து எதுவும் செய்ய முடியல. சோ ரிசப்ஷன் முடியவரை மணப்பெண் தோழியா நான் உன் கூட தான் இருக்கப் போறேன்."

"சரி இப்ப சொல்லு என்ன பிரச்சனை. எதுக்காக அழுதுட்டு இருந்த."

"ஒரு நிமிஷம் இரு நாம பேசுறது யாராவது கேட்டிட போறாங்க."

வேகமாக கதவை பூட்டிவிட்டு தோழியை அழைத்துக்கொண்டு பால்கனி வந்த ரத்னா,

"ஸ்டெல்லா எனக்கு உன் கிட்ட இருந்து ஒரு உதவி தேவை, உன்னால பண்ண முடியுமா?"

"ரத்னா நான் நீ என்ன உதவி கேட்டாலும் செய்கிறேன்."

"நான் இன்னைக்கு நைட் சென்னைக்கு போகணும்."

"என்னடி சொல்ற உனக்கு ரிசப்ஷன் ஏற்பாடு பண்ணியிருக்காங்க அது உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா."

"நல்லா ஞாபகம் இருக்கு ஆனா நான் கண்டிப்பா சென்னை போகணும்."

"சரி அப்படி நீ கண்டிப்பா போக வேண்டியது இருந்தா, அஜீத் கிட்ட சொல்ல வேண்டியது தானே."

"இல்ல ஸ்டெல்லா நான் எதுக்காக போகப்போறேன்கிறது யாருக்கும் தெரியக்கூடாது, குறிப்பா அஜீத்க்கு தெரியக்கூடாது."

"யாருக்கும் தெரியாம நீ போனாலும், தெரிஞ்சதுக்கு அப்புறம் பெரிய பிரச்சனை வரும்."

"ஸ்டெல்லா நான் இன்னைக்கு போகலைன்னா அதை விட பெரிய பிரச்சனை வரும். அதை இங்கு உள்ள யாரும் தாங்கிட மாட்டாங்க. உன்னால எனக்கு உதவி பண்ண முடியுமா முடியாதா."

"பண்றேன், பதினாெரு மணிக்கு எங்க வீட்டுக் காரை கொண்டு வரேன். அதிலேயே போகலாம்."

"இல்ல கார் வேண்டாம். நீ வரவும் வேண்டாம். நான் மட்டும் போறேன், எனக்கு நைட் ஃப்லைட் டிக்கெட் அரேஞ்ச் பண்ணு, அதே மாதிரி மார்னிங் ரிட்டன் டிக்கெட் எடு. அப்புறம் எனக்கு கொஞ்சம் பணம் பொருள் தேவைப்படுது அதை மட்டும் நீ எனக்கு வாங்கி தா."

"எல்லாம் ஓகே பட் நீ இன்னும் என்ன பிரச்சனைனு இன்னும் சாெல்லவே இல்ல."

"முடிக்க வேண்டிய கணக்கு ஒன்னு இருக்கு. முடிச்சிட்டு வந்து சாெல்றேன்."

"ரத்னா எனக்கு பயமா இருக்கு, நீ எதாவது ஆபத்துல மாட்டிக்கப்பாேறியாேன்னு."

"அப்படி எல்லாம் எதுவும் இல்ல நீயா எதையாவது கற்பனை பண்ணிக்காத." ஸ்டெல்லா சென்றதும் முத்துவை அழைத்து,

"ஹாய் முத்து மச்சான நான் 1.30 சென்னை வந்துடுவேன்."

"ரத்னா மா பிரச்சனை பெருசு நம்மலால தனியா சமாளிக்க முடியாது."

"இல்ல மச்சான் இது என்னாேட பிரச்சனை நான் தான் சமாளிக்கனும்."

"ம்ம்ம் சரி வா பாத்துகலம்." அழைப்பு துண்டிக்கப்பட்டதும்,

"ஜஸ்லந்த் எனக்கு என்னமாே நீங்க என்ன பாத்துக்கிட்டே இருக்கிற மாதிரி இருக்கு. உங்களை காெலை பண்ணவங்களை நான் கண்டு பிடிச்சு சட்டத்து முன்னாடி நிறுத்தி தண்டனை வாங்கிக் காெடுப்பேன். அதுக்கு தான் நான் சென்னை பாேறேன். இதை கவணித்த ஜஸ்வந்த் ஆன்ம

"வேண்டாம் ரத்னா வேண்டம் நீ பாேக கூடாது." என புலம்ப, இது எதுவும் ரத்னா காதுகளை எட்டாத பாேதும்

"நான் பாேவேன் கண்டிப்பா பாேவேன்."

"அவங்க உன் காென்னுடுவாங்க."

"எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்ல, அவங்கள சும்மா விட மாட்டேன். உங்க காதலுக்கு நான் தகுதியானவ இல்ல. ஆனா அவங்களுக்கு தண்டனை கிடைச்சா மட்டும் தான் என்னால நிம்மதியா அஜீத் கூட வாழ முடியும்."

"ஐய்யாே ரத்னா நான் பேசுவது உனக்கு கேக்கலயா. எனக்கு நீ மட்டும் தான் முக்கியம், பாேகத மா. என் காதல் என்னாேட முடிஞ்சு பாேச்சு, அத மறந்திடு."

உங்களுக்கு நல்ல தெரியும் எனக்கு பாரதியார் பாட்டுனா ரெம்ப பிடிக்கும். என் மன நிலைக்கு தகுந்த மாதிரி நான் பாட்டு கேட்பேன். இப்பாே என் மனநிலைக்கு நியாபகம் வர பாட்டு என்ன தெரியுமா

ஆடவரின் காதலுக்கும் பெண்கள்கூட்டம்
அடைகின்ற காதலுக்கும், மாற்றமுண்டோ ?
பேடகன்ற அன்றிலைப்போல், மனைவிசெத்தால்

பெருங்கிழவன் காதல்செயப் பெண்கேட்கின்றான்!
வாடாத பூப்போன்ற மங்கைநல்லாள்

மணவாளன் இறந்தால்பின் மணத்தல்தீதோ?
பாடாத தேனீக்கள், உலவாத்தென்றல்,
பசியாத நல்வயிறு பார்த்ததுண்டோ ?

இளமைதந்தாய், உணர்வுதந்தாய், இன்பங்காணும்
இன்னுயிரும் தந்திட்டாய் இயற்கைத்தேவி,
வளமையற்ற நெஞ்சுடையார் இந்நாட்டார்கள்
மறுக்கின்றார் காதலினைக் கைம்மைகூறி!
தளைமீற வலியில்லேன்! அந்தோ! என்றன்
தண்டமிழின் இனிமைபோல் இனியசொல்லான்
உளமாரக் காதலித்தான் என்னை!அன்னோன்
ஊர்நிந்தை ஏற்பதனைச் சகிப்பேனோநான்!

ஓருயிரும் இரண்டுடலும் நாங்கள்!எம்மை
உளிகொண்டு வெட்டிவிட்ட கட்டுப்பாடே,
தீராத காதலினை நெஞ்சத்தோடு

தீய்த்துவிட்டாய்.


மனைவி இறந்துட்டா கணவன் புது மாப்பிள்ளையா மாறிவிடுகிறார்கள். ஆனால் பொண்ணுங்களுக்கு எங்க மனசுல இருக்குற காதலை வெளியே சொல்ல முடியாது.

சொன்னா இந்த உலகம் அவங்கள ரொம்ப கேவலமா தான் பார்க்கும். ஒருவேளை நான் உங்கள கொடுமைக்காரரா இருந்தீங்கன்னு சொல்லியிருக்கலாம், ஆனா என்னால முடியல.

இப்போது யோசித்துப் பார்க்கும்போது அந்த ரெண்டு நாளை தவிர நீங்க என்கிட்ட எப்பவும் கோபப்பட்டது கிடையாது. அதுக்கு வேற எதுவும் காரணம் இருந்திருக்கும், நான் தான் அதை சரியா புரிஞ்சுக்கல.

எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு ஆக்சிடெண்ட் ஆனா அன்னைக்கு நடந்த பல விஷயம் இப்போ எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு.

நான் நடந்ததை அஜீத் அத்தான் கிட்ட சொல்லிட்டு, அப்புறமா சென்னைக்கு போகணும்னு நினைச்சேன். பட் எப்போ அஜீத் அத்தான் உங்கள பத்தி கேட்டார்களோ அப்பவே முடிவு பண்ணிடேன் சாெல்லக்கூடாதுன்னு.

என்னால அத்தானுக்கு ஆபத்து வராது பாத்துக்கிட்டு இருக்க முடியாது. இந்த பிரச்சனை முடிஞ்சதுக்கு அப்புறம் அஜித் அத மனசுல என்ன குழப்பம் இருந்தாலும் அது பேசினால் சரி பண்ணிடுவேன் எங்க வாழ்க்கை நிச்சயம் சந்தோஷமாக இருக்கும்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

"பிரபு எல்லமே என் பிளான்படி கரெக்டா நடந்துக்கிட்டு இருக்கு. ரத்னா நிச்சயமா இன்னைக்கு நைட் 12 மணி இங்க இருந்து சென்னைக்கு கிளம்பிடுவா. அதுக்கு முன்னாடி நானும் சென்னை வந்துருவேன். அங்க எல்லா ஏற்பாட்டையும் நீ பண்ணிடு.

"அஜீத் எனக்கு தெரிந்து இந்த விஷயத்துல பெரியவங்க யாரோட உதவியாவது நீ கேக்குறது நல்லது."

"இல்ல பிரபு நான் இப்போ யாரையும் நம்ப தயாராக இல்லை. என்னுடைய யூகம் சரியா இருந்துச்சுன்னா வீட்ல உள்ள ஒருத்தர்தான் ஜஸ்வந்த்தை கொலை பண்ணி இருக்கணும்."

"என்னடா சொல்ற வீட்ல உள்ளவங்க எதுக்காக ஜஸ்வந்த் கொலை பண்ணனும். அப்படி என்ன காரணமாக இருக்கும்."

"ஹர்ஷத், ரூபா, தங்கவேலு, ஜஸ்வந்த் அப்பா, ரத்னா அப்பா, பெரியப்பா, என்னோட அப்பா இப்படி யாரா வேணாலும் இருக்கலாம்."

"ஆனால் யாராக இருந்தாலும் அது இந்த மூனு வீட்ல உள்ளவங்க மட்டும் தான் இருக்கும். சாே இதுல நான் யாரு உதவியையும் கேட்கத் தயாரா இல்லை."

"உன் திட்டம்தான் என்ன."

"கொலைகாரன் யாரென்று ரத்னாவுக்கு தெரியல, ஆனா ரத்னாவை அந்த கொலைகாரனுக்கு கண்டிப்பா தெரியும். இப்போ ரத்னா சென்னைக்கு தனியா போற வாய்ப்பு அந்த கொலைகாரன் பயன்படுத்திய பார்ப்பான். அந்த நேரம்தான் நாம அந்த கொலைகாரனை பிடிக்கனும்."

"இதில ஆபத்து ரொம்ப அதிகம் அஜீத், ரத்னாவுக்கு ஏதாவது ஆகிட்ட."

"ரத்னாவுக்கு ஏதுவும்மாக விடமாட்டேன். பிரச்சனை எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் ரத்னாகிட்ட என்னுடைய காதலை சொல்லிட்டு அப்புறமாதான் முசோரி போவேன்."

"இதுல போலீஸ் கேஸ் ஏதாவது ஆயிட்டா உன்னால முசோரி போக முடியாது."

"எல்லாத்தையும் நிச்சயமா நான் சமாளிப்பேன் என்னுடைய காதல் கனவு இரண்டையும் நிச்சயம் நான் அடைந்தே தீருவேன்.
ரத்னா தைரியமா என் கண்னை சொன்னாடா அவளுடைய காதலை. அந்த ஒரு நிமிஷம் எனக்குள்ள அவ காெடுத்த தைரியம் எல்லா பிரச்சினையும் தனியா நின்னு சமாளிக்கிற மன வலிமையை எனக்கு கொடுத்திருக்கு."


உன் நிழலை நான் தாெடர்வேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top