உன் நிழல் நான் தாெட ep 15

Advertisement

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
உன் நிழல் நான் தொட
--செசிலி வியாகப்பன்

அத்தியாயம் 15

மனதிலுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;

கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.

கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்,

மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;

உண்மை நின்றிட வேண்டும்.

காதல் என்பது அதன் பொருளை உணராதவர்களை பொருத்தவரை மூன்றெழுத்து ஒரு வார்த்தையே; ஆனால் அதன் பாெருளை உணர்ந்தவர்களுக்கு அது வார்த்தை அல்ல, வாழ்க்கை. உலகில் பலரை இயக்கும் சக்தியாகவும், சில சமயம் அழிக்கும் ஆற்றலாகவும், ஏதோ ஒரு விதத்தில் அனைவருள்ளும் காதல் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. ஜஸ்வந்தும், அஜீத்தும் அதற்கு விதிவிலக்கல்ல.

பதினேழு வயது ஜஸ்வந்த் பதினோரு வயது ரத்னாவின் மீது கொண்டது நிச்சயம் உண்மை காதலே. ஆனால் அவனது இயற்க்கை குணம் அவனின் காதலை பிடிவாதமாகவே மற்றவர்களுக்கு காட்சிப்படுத்தியது. அன்று ஹர்ஷத் ஜஸ்வந்திடம் கூறிய

"ரத்னா சாெல்லுவ நீ வேண்டானு, ரத்னாக்கு குடும்பம் தான் முக்கியம். நீ இல்ல." என்ற வார்த்தைகள் ஜஸ்வந்திடம் இருந்த பிடிவாத குணத்தை தலைதூக்க செய்தது.

ஜஸ்வந்த் பிடிவாத குணம் அவன் ரத்னாவின் மீது காெண்ட காதலை அவனையே உணர விடாமல் செய்தது. தனக்கு ரத்னா மீது இருப்பது ஆசையே, அதுவும் வாழும் நாள் முழுதும் ரத்னாவை தன்னாேடு வைத்துக்காெள்ளும் ஆசை என தனக்கு தானே காரணம் கற்பித்துக்காெண்டான்.

ரத்னா தனது பரிசை மறுத்தது அவனின் இருந்த பிடிவாதத்தை வளரச் செய்தது. அன்றிலிருந்து வெறிபிடித்தவனாக தன் கவனம் முழுவதையும் படிப்பிலும், அது முடிந்ததும் தந்தையின் தொழிலிலும் செலுத்த ஆரம்பித்தான்.

தொழில் பொறுப்பை ஏற்ற சில மாதங்களிலேயே தந்தை மற்றும் தமையனின் பாராட்டை பெரும் அளவுக்கு தன் நிலையை உயர்த்திக் கொண்டான். இதற்கிடையில் தன் மனது ரத்னாவின் ஞாபகங்களை எழுப்பினாலும் அவற்றை ஜஸ்வந்த் தன் மனதுக்குள்ளேயே அடக்கிக்கொண்டான்.

தம்பியின் பொறுப்புணர்வை பார்த்த ஹர்ஷத், ஜஸ்வந்த் ரத்னாவை மறந்து விட்டான் என நினைத்து இருக்க, நான் மறக்கவில்லை என்பதை பல வருடங்களுக்குப் பின்பும் ஜஸ்வந்த் நிரூபித்தான்.

மீண்டும் ரத்னாவை சந்தித்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, ரத்னாவை தன் வாழ்வில் கொண்டுவரவே முயற்சி செய்தான். ஜஸ்வந்த் செய்த முயற்சி தவறாகி அது ரத்னாவின் காதலை பெறுவதற்கு பதிலாக ஜஸ்வந்த் மீது ஒரு பயத்தை உருவாக்கியது என்பதை பாவம் அவன் அறிந்திருக்கவில்லை.

ஒவ்வொரு முறையும் ரத்னா தன்னைவிட்டு விலகிச் செல்வதையும், அதேசமயம் அஜீத்துடன் நெருங்கிக் கொண்டே இருப்பதையும் உணர்ந்த ஜஸ்வந்தால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

ரத்னா அஜீத்துடன் பழகுவதில் எனக்கு விருப்பமில்லை என்பதை வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்த, அது ஹர்ஷத் பொருத்தவரை ஜஸ்வந்த் ரத்னாவால் அஜீத் மீது பொறாமை கொண்டவனாக சித்தரித்தது.

ரத்னாவை காரணமாகக் கொண்டு சகோதரர்கள் இருவருக்கும் இடையில் பல வாக்குவாதங்களும், சில சண்டைகளும் ஏற்பட இறுதியில் ஜஸ்வந்த் காதலையும், அவன் காதலின் ஆழத்தையும் புரிந்துகொண்ட ஹர்ஷத் மற்றும் அவனது வீட்டார், எப்படியாவது ரத்னாவை ஜஸ்வந்த் வாழ்க்கையில் இணைத்தே தீருவது என்ற தீர்மானத்திற்கு வந்தனர்.

எனினும் ரூபா ஹர்ஷத் திருமணத்தால் ஏற்பட்ட மனக்கசப்பு இன்னும் நீங்கதிருக்க, ரத்னா ஜஸ்வந்த் திருமணத்தை பற்றி பேச்சை ஆரம்பிக்க தேவராஜ் மேக்னா தம்பதிகள் தயக்கம் காட்ட, ஹர்ஷத் ரூபா தம்பதிகள் முயற்சியை கையில் எடுத்துக்கொண்டு ரத்னாவை ஜஸ்வந்த் பெண் கேட்டனர்.
அவர்கள் எதிர்பாராத திருப்பமாக முத்துவேல் திருமண முடிவை ரத்னாவின் கையில் தந்தது. நாட்கள் அதன் போக்கில் செல்ல ரத்னாவின் படிப்பு முடியும் சமயம் அஜீத்தின் பெற்றோரும் ரத்னாவை பெண் கேட்டது அனைவரும் எதிர்பாராத மற்றொரு திருப்பம்.

முதலில் ஜஸ்வந்த்க்கு சாதகமாக நின்று தங்கவேலு தங்கைக்கு ஆதரவாக மாறி விட, ரத்னாவின் பெற்றோர் அஜீத்திற்கு தங்கள் ஆதரவை அளிக்க, ஜஸ்வந்த் புறம் கொஞ்சம் பலவீனமாகவே இருந்தது. இதை அனைத்தையும் அறிந்த ஜஸ்வந்த் வீட்டார் ஒருவர் அறியாமல் மற்றவர் என அனைவருமே அஜீத்தை சந்தித்தனர். தேவராஜ் அஜீத்தை சந்தித்து

"அஜித் நான் சுத்தி வளச்சி பேச விரும்பல, ரத்னாவுக்கு உனக்கும் மேரேஜ் பண்றது பத்தி உங்க வீட்டில பேச்சு நடந்துகிட்டு இருக்கு. அதை பத்தி உன் கருத்து என்னன்னு நான் தெரிஞ்சுக்க தான் வந்து இருக்கேன்."

"ஆமா நீங்க கேக்குற விஷயம் உண்மைதான் அங்கிள். இதுல நான் சாெல்ல என்ன இருக்கு."

"எனக்கு தெரிய வேண்டியது உனக்கு இதுல விருப்பம் இருக்கா? இல்லையா? அது மட்டும் தான்."

"அதை எதுக்கு நீங்க கேக்கறீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா."

"ஓ எஸ் தாராளமா நீ தெரிஞ்சுக்கலாம். என்னோட பையன் ஜஸ்வந்த் ரத்னாவை லவ் பண்றான். அவனோட வழியில் இருந்து விலகிடனும். ஒருவேளை என்னால விலக முடியாதுன்னு நீ சொன்னா உன்னை எப்படி என் பையன் வழியிலிருந்து விலக்கனுமாே அப்படி நானே விலகிடுவேன்."

"அதுதான் உங்களுக்கு என்ன எப்படி விலக்கனும்னு தெரிஞ்சிருக்கே அதுபடியே செய்யுங்க. I don't care about that, because I know very well that Rathna can't love your son. At the same time she can't reject the marriage proposal with me."

"Over confidence ah"

"Yes அங்கிள் ரத்னா மேல எனக்கு இருக்குற கான்ஃபிடன்ஸ் ஓவர் தான். இந்த உலகத்திலேயே ரத்னாவை என்ன விட அதிகம் புரிஞ்சுக்கிட்டுடங்க வேற யாரும் இருக்க முடியாது. கல்யாண பேச்சு எடுத்தா ரத்னா முடிவு ஒன்னு இந்த அஜீத்தா இருக்கும், இல்லன்னா இந்த அஜீத் எடுக்கிற முடிவா இருக்கும்."

"அஜீத் நான் என் பையனுக்காக எந்த லெவல்க்கும் இறங்க தயாரா இருக்கேன்."

"அதேமாதிரி ரத்னாவுக்குகாக உங்க அளவுக்கு வர நானும் தயாராக இருக்கிறேன். போங்க அங்கிள், இந்த வயசுல ரொம்ப கோபப்பட்டு உடம்பை கெடுத்துக்காதீங்க."

அதன்பிறகு தேவராஜ் பலமுறை பல விதமாக பேசியும் அஜீத்தின் பதில் மட்டும் மாறாமல் ரத்னா தன்னவள் என்பதாகவே இருந்தது. திருமண விஷயத்தில் தங்கவேலு அஜீத்தின் கருத்தை அறிந்துகொள்ள அஜீத்திடம் நேரடியாகவே

"உனக்கு ரத்னாவை பிடிக்குமா அஜீத்?"

"அத்தான் எனக்கு ரத்னாவை பிடிக்கும்னு எல்லாருக்கும் தெரியும். இதுல உங்களுக்கு என்ன சந்தேகம்."

"என்னுடைய சந்தேகம் ரத்னாவை உனக்கு பிடிக்குமா பிடிக்காதானு இல்ல. கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு பிடிக்குமான்னு தான்"

"எதுக்காக இந்த கேள்வினு நான் தெரிஞ்சுக்கலாமா."

"நம்ம ரெண்டு பேர் வீட்லயும் இப்போ இருக்கக்கூடிய ஒரே ஒரு குழப்பம் என்னன்னு உனக்கு நல்லாவே தெரிந்திருக்கும். அப்பா அதற்கான முடிவு எடுக்கிற பொறுப்பை ரத்னா கிட்ட கொடுத்திருக்காங்க.
ரத்னாவை என்னைக்கும் இது வேணுமா இல்ல அது வேணுமா அப்படி என்கிற சூழ்நிலைக்கு தள்ளுவதில் எனக்கு விருப்பமில்லை. அவ குழப்பத்தில விட எனக்கு விருப்பம் இல்ல."

"அத்தான் கவலப்படாதீங்க இதை பத்தி நானே ரத்னா கிட்ட நேரடியா நீ பேசிக்கிறேன்."

தங்கவேலுவை சமாளித்து அனுப்பிய அஜீத்தை அடுத்த நாளில் சந்திக்க வந்தன ஹர்ஷத் மற்றும் ரூபா. ஹர்ஷத் பேச்சை ஆரம்பிப்பதற்கு முன் அஜீத்

"நீங்க என்ன சொல்லப்போறீங்க என்று எனக்கு நல்லாவே புரியுது. தயவு செஞ்சு அத பத்தி பேச வேண்டாம், பேசினாலும் உங்க அப்பா கிட்ட நான் சொன்ன அதே பதில் தான் உங்க கிட்டயும் சொல்ல வேண்டியதா இருக்கும்." என்ற அஜீத்திடம் ஹர்ஷத்

"அஜீத் நான் உன்கிட்ட ரத்னாவை ஜஸ்வந்துக்கு விட்டுக் கொடுன்னு கேட்க வரல. ரத்னா விட்டு விலகி இருன்னு சொல்ல வந்தேன்."

"நான் எதுக்காக ரத்னா விட்டு விலகி இருக்கணும்." எனக்கூறிய அஜீத்தை பார்த்து ஒரு எள்ளல் நிறைந்த பார்வையை செலுத்திவிட்டு ஹர்ஷத் மேற்கொண்டு பேசும்முன் இடையில் புகுந்த ரூபா
"அஜீத் நீ விலகலனா உங்க அக்கா ஆர்த்தியால ரத்னா சந்தோஷம் காணாம போயிடும். இப்போ ரத்னாவுக்கு சாதகமா பேசுற உங்க அப்பாவும் அம்மாவும் நாளைக்கு அவங்க பொண்ணுக்கு சாதகமா பேச ஆரம்பிக்கலாம், அதனால உங்க வீட்டுக்குள்ள பிரச்சனை வரலாம், உங்க வீட்டுல வர பிரச்சனை அப்படியே தங்கவேலு ஆர்த்தி வாழ்க்கையையும் பிரச்சனை காெண்டு வரலாம்." எனக் கூறிக் கொண்டிருந்த ரூபாவை தடுத்து ஹர்ஷத்

"ஒருவேளை இது எல்லாம் உன்னால சமாளிச்சு ரத்னாவை நீ கல்யாணம் பண்ணனும்னு நெனச்ச, உன்னால உன்னோட கனவு, அதுதான் ஐஏஎஸ் அந்த மூன்றெழுத்து உன் பேருக்கு பின்னால சேர்க்கவே முடியாமல் போய்விடும். உன்ன ஐஏஎஸ் ஆக விடாம தடுக்கவும் எனக்கு தெரியும், உங்க அப்பாவ ஆண்டியா மாற்றவும் எனக்கு தெரியும்."

"என்ன சார் மிரட்டி பாக்குறீங்களா."

"இது மிரட்டல் இல்ல அஜீத் ஒரு அண்ணனா தம்பிக்கு என்ன செய்யணுமோ அதை தான் செஞ்சுக்கிட்டு இருக்கேன். யோசிச்சு நல்ல முடிவா எடுப்பன்னு நம்புறேன்." எனக்கூறிவிட்டு செல்ல இவர்களை அடுத்து ஆர்த்தி,

"அஜீத் எனக்கு நீ அந்த ரத்னாவை கல்யாணம் பண்றது சுத்தமா பிடிக்கல. ஒருவேளை ரத்னா இந்த வீட்டுக்கு மருமகளா வந்தா அவளுடைய நிம்மதி மொத்தமா அவனை விட்டுப் போய்விடும்."

"எதுக்குக்கா ரத்னா மேல உனக்கு இவ்வளவு வெறுப்பு. ரத்னா உனக்கு அப்படி என்ன பண்ணுனா."

"என் வெறுப்பு ரத்னா மேல மட்டும் இல்லை உன் மேலும் சேர்த்துதான். நீ பிறந்ததுக்கு அப்புறம் எனக்கு இந்த வீட்டில முக்கியத்துவம் இல்லாம போயிடுச்சு. நான் போன வீட்ல அந்த ரத்னாவால என்னோட பேச்சுக்கு மரியாதையே இல்லாம போயிட்டு. இப்ப நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டாங்க."

"அக்கா அப்படிலாம் இல்ல."

"நீ என்ன சொன்னாலும் சரி நான் கேட்க போறது இல்ல. ஒருவேளை உனக்கு இந்த அக்கா மேலேயும் உன் குடும்பத்து மேலேயும் கொஞ்சமாவது பாசம் இருந்தா நீ அந்த ரத்னாவும் வேண்டான்னு சொல்லணும். அப்படி சொல்லிட்டா அப்ப ஒத்துக்கிறேன் உனக்கு இந்த அக்கா மேல பாசம் இருக்குன்னு."

இப்படி ஐந்து நபர்களின் பேச்சை கேட்டு மலைத்துப் போய் இருந்த அஜீத்தை அடுத்ததாக சந்திக்க வந்தது மேக்னா

"சொல்லுங்க ஆன்ட்டி, உங்க பங்குக்கு நீங்க என்ன சொல்லணும் வந்தீங்களாே சொல்லுங்க. அதையும் நான் கேட்டுக்குறேன்."

"நான் ரத்னாவை நல்லா பாத்துக்கனும்னு நினைக்கிறேன்."

"ஏன் என்னால, எங்க அம்மாவால ரத்னாவை நல்லா பாத்துக்க முடியாதா? ஒத்துக்குறேன் நீங்க எங்களைவிட வசதியான குடும்பம் தான், ஆனா ரத்னாவை எங்களைவிட சந்தோஷமா யாராலும் பார்க்க முடியாது."

"என் குடும்பத்தையும், உங்க அக்காவையும் மறந்துட்டு பேசாத."

"ஆர்த்தியும், மத்தவங்களையும் எப்படி சமாளிக்கிறது எனக்கு நல்லா தெரியும்."

"ஆர்த்தியை நீ சமாளிக்கலாம், ஆனால் வரப்போற பிரச்சினையே உன்னால சமாளிக்க முடியாது." என்று சென்று விட

அடுத்து ஜஸ்வந்த் நண்பன் கார்த்திக் தன் பங்கிற்கு பேசி விட்டுச் செல்ல, அனைத்தையும் யோசித்துக்கொண்டிருந்த அஜீத் செய்த முடிவு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் என்பது மட்டுமே.

முடிந்தவரை பிரச்சனைகளை சுமூகமாக முடித்துவிட்டு, அதன் பிறகு அனைவரின் சம்மதத்துடன் ரத்னாவை திருமணம் செய்ய வேண்டும் என்பதே அவன் ஆசையாக இருந்தது.

ஆனால் அவன் ஆசையை நடக்க விடாது செய்யவே அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் எதற்கும் தளராத அஜித்தின் மனதை அசைத்துப் பார்த்தது. ஒருபுறம் தன் தந்தையின் தொழில் அவருக்குத் தெரியாமலேயே அழியும் நிலையில் இருக்க, தங்கையின் பாதுகாப்பு ஆபத்தில் இருக்க, தமக்கையின் உறவு கேள்விக்குறியாக, இதற்கெல்லாம் மூலகாரணமான ஜஸ்வந்த் அடுத்த நாள் சந்தித்தான்.
"ஹலோ அஜித் எப்படி இருக்க."

"நான் எப்படி இருக்கணும்னு நீங்க எதிர் பாக்குறீங்க."

"நான் எதிர்பார்த்தது இருக்கட்டும், நீ எதுக்காக இவ்வளவு கோபமா இருக்க."

"பண்றதெல்லாம் பண்ணிட்டு நான் எதுக்கு கோபமா இருக்கிறேன் காரணம் தெரியாத மாதிரி கேட்கிறீர்களா."

"சத்தியமா நீ ஏன் கோவமா இருக்குறனு எனக்கு தெரியல. ஐ திங்க் நம்ம மீட் பண்ணி கிட்டத்தட்ட இரண்டே முக்கால் வருஷம் ஆகிவிட்டது. லாஸ்ட்டா ரெஸ்டாரன்ட் நடந்த பிரச்சனைக்காக இப்பவும் நீ கோவமா இருந்தா அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது."

"நான் அதுக்கு கோவமா இல்லன்னு உனக்கு நல்லா தெரியும்."

"அதுக்கப்புறம் நான் எதுவும் பண்ணல அப்படி இருக்கும்போது எதுக்கு எதுக்கு கோவமா இருக்குற."

"நீ எதுவும் பண்ணாமலா என் அப்பாவோட கடை அவர் கையை விட்டுப் போக பார்க்குது, நீ எதுவும் பண்ணாம என் தங்கச்சிய ரெண்டு பேரு ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்காங்க. நீங்க எதுவும் பண்ணாமலா உங்க வீட்டு ஆளுங்க தனித்தனியாக வந்து என்னை மிரட்டிட்டு போறாங்க."

"அஜீத் என்ன நம்பு, நான் உண்மையாக எதுவும் பண்ணல. இப்பகூட நான் உன்கிட்ட ஒரு உதவி கேட்க மட்டும் தான் வந்து இருக்கேன்."

"ரத்னா விஷயத்திலே என்னால உனக்கு எந்த உதவியும் பண்ண முடியாது."

"நான் பேசுறது முழுசா கேட்டு முடிச்சிட்டு உன்னோட முடிவ நீ சொல்லு." என தன் முன் பணிவாகப் பேசும் ஜஸ்வந்தை ஆச்சரியமாக அஜீத் பார்க்க, அஜீத்தின் மௌனத்தையே சம்மதமாக எடுத்துக்கொண்டு ஜஸ்வந்த், ரத்னாவை தான் சந்தித்தது முதல் இன்றுவரை தன் மனதில் அழியாது நிற்கும் காதலை கூறிவிட்டு,

"ஃபர்ஸ்ட் டைம் உன்ன மீட் பண்ணும் போது எனக்கு உன் மேல கோபமா இருந்துச்சு. காரணம் ரத்னா உனக்கு கொடுத்த முக்கியத்துவம். ஆனா பாரு ரத்னா உனக்கு ஏன் அந்த முக்கியத்துவம் கொடுத்தானு நான் யோசிக்க மறந்துட்டேன்.
ஒருவேளை நானும் ரத்னா கிட்ட ஃப்ரெண்ட்லியா மூவ் பண்ணி இருந்தா எங்களுக்குள்ள ஒரு நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருந்திருக்கும். நான் அதை செய்யாமல் விட்டுவிட்டேன். லாஸ்ட் டு இயர்ஸ்ல அத நல்லா புரிஞ்சுகிட்டேன்.
நீ எனக்காக ரத்னா கிட்ட பேசணும்."

"குட் ஜோக் நான் ரத்னா கிட்ட உங்களுக்காக பேசணுமா, நான் எப்படி அதை பண்ணுவேன்னு நீங்கள் எதிர்பார்க்கிறீங்க."

"Because you are the one and only friend for her, The best friend. Just think about it, l will catch you later."

அதுவரை அஜீத்தின் மனதில் இருந்த உறுதி ஜஸ்வந்த் கூறிய "த பெஸ்ட் பிரெண்ட்" என்ற வார்த்தையில் ஆட்டம் காண ஆரம்பித்தது.

நான் இதுவரை செய்த அனைத்தும் சரிதானா?

நான் நட்பு காதல் இரண்டிற்கும் உண்மையாக இல்லையா?

இந்த திருமணத்தால் ரத்னாவிற்கு தன் அன்பின் மீது சந்தேகம் வந்துவிடுமா?

அஜீத் ரத்னாவின் மீது காெண்ட அன்பே அவன் மன உறுதியை ஆட்டம் கான வைத்தது விதியின் செயலாே!

ரத்னா அஜீத்தின் பிறந்த நாளுக்கு அளித்த பரிசு இன்று பிரித்து பார்க்கபாேவது விதியின் விளையாட்டாே!

உன் நிழலை நான் தாெடர்வேன்
 
Last edited:

Friend படிச்சிட்டு command பண்ணுங்க
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top