உன் நிழல் நான் தாெட ep 12

Advertisement

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
இதுவரை கருத்துக்கள் மூலம் ஆதரவு அளித்த.

All My Dear
Banumathi Jayaraman, Chitra Ganesan, apooja soundarya, Chitra Saraswathi, Saroja, janavi, Krishnav, Rabi, kishore, Priya Praveen Kumar, umamanoj64, rsakthi, Mila, Arulselvi, sainandhu, Chittijayaram, Rekajegan, Barkkavi, Ugina, Rajienia, lvna, Devi Mayan, Eswari kasi, Vijayasanthi Viji, Hari Priya.
நன்றி

யாருடையா பெயரவது விடுபட்டிருந்தால் உங்கள் தாேழியை மன்னிச்சிடுங்க. தாெடர்ந்து நீங்கள் கருத்துக்களை பகிர்வதன் மூலமே எனக்கு எழுதும் ஆர்வம் அதிகமாகிறது. Umamanoj64காக இந்த UD. அனைவரும் படித்துவிட்டு பிடித்தால் like பண்ணுங்க, மறக்காம comment பண்ணுங்க.



உன் நிழல் நான் தாெட
-- செசிலி வியாகப்பன்

அத்தியாயம் 12


உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ
மாயையே -- மனத்
திண்மையுள் ளாரைநீ செய்வது மொன்றுண்டோ --
மாயையே.
எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்
மாயையே -- நீ
சித்தத் தெளிவெனும் தீயின்முன் நிற்பாயோ --
மாயையே.
என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்கெட்ட
மாயையே -- நான்
உன்னைக் கெடுப்ப துறுதிஎயன் றேயுணர்
மாயையே.
சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு
மாயையே -- இந்தத்
தேகம் பொய் யென்றுணர் தீரரை யென்செய்வாய் --
மாயையே.
இருமை யழிந்தபின் எங்கிருப்பாய் அற்ப
மாயையே -- தெளிந்
தொருமை கண்டார் முன்னம் ஓடாது நிற்பையோ --
மாயையே.


ஆயிற்று ரத்னா ஜஸ்வந்த் திருமணம் முடிந்து இரண்டு மாதம் ஆகிவிட்டது. ரத்னாவின் இயல்பிலே மற்றவர்களின் பேச்சை ஏற்று நடக்கும் குணம் ஜஸ்வந்த் விட்டிலும் அனைவரையும் ஏற்று நடக்க செய்தது. CLAT examல் தேர்வாகி லா கல்லூரியில் சேர்ந்துவிட்டாள். இருந்தாலும் வீட்டில் ரத்னா செய்யும் சேட்டைகள் அவளை இன்னாெரு ரதிகாவாக காட்ட, அதை தடை செய்வார் யாரும் இல்லை.

தேவராஜ்க்கு பெண் குழந்தை என்றால் பிடிக்கும், பிறந்தது இரண்டும் ஆண் குழந்தை என்றாகிவிட்டது. ரூபா வீட்டிற்கு மருமகளாய் வந்த பின் தாெழிலில் உதவி செய்தாலும் அது அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. ராதிகா பிறந்த பின்னே வீடு உயிர்புடன் இருப்பதாக உணர்ந்தார். இப்பாேது ரத்னாவும் ராதிகாவுடன் சேர்ந்து செய்யும் குறும்பு செய்வதை ரசித்து பார்ப்பதை வேலையாக்கிக் காெண்டார்.

வீட்டிற்குள் வந்த ஜஸ்வந்த் நடப்பதை பார்த்துவிட்டு மாடிக்கு செல்ல, ரத்னா எதையும் கவனிக்காமல் ராதிகாவுடன் விளையாடிக்கொண்டிருக்க தேவராஜ் ரத்னாவை,

"ரத்னா என்னோட கேகே கம்பெனி ஃபைல் ஒன்னு ஜஸ்வந்த் ரூம்ல இருக்குது அதை எடுத்துட்டு வந்து தறியாமா."

"இருங்க மாமா எடுத்துட்டு வந்துர்றேன், அதுவரைக்கும் ராதிகா எதையும் மாத்தி வச்சி என்னை ஏமாத்தாம பாத்துக்கோங்க." மாடிக்கு தனது அறைக்கு வந்த ரத்னா, ஜஸ்வந்த் அமர்ந்திருப்பதை பார்த்து

"நீங்க எப்ப வந்தீங்க."

"நான் வந்தது கூட கவனிக்காம மேடம் ரொம்ப பிசியா இருக்கீங்க. சரி காரணமில்லாமல் மேடம் மேல வர மாட்டீங்களே என்ன விஷயம்."

"அதுவா மாமா உங்ககிட்ட கேகே கம்பெனியோட ஃபைல கொடுத்தாங்களாமே, அதை எடுத்துட்டு வர சொன்னாங்க. அதை எடுக்கத்தான் வந்தேன்." அப்படி எந்த கம்பெனியின் தங்களுடன் தொழில் தொடர்பில் இல்லை. ரத்னாவை மேலே அனுப்புவதற்காக தன் தந்தை செய்த செயல் இது என்பதை அறிந்துகொண்ட ஜஸ்வந்த், அலுவலரை அலுவலக அறையை நோக்கி சென்ற ரத்னாவை பிடித்திழுத்து,

"நீ பைல அப்புறமா தேடு. இப்ப எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு."

"வேலை இருந்தா போய் பார்க்க வேண்டியதுதானே, என்னை எதுக்காக எப்படி இழுத்தீங்க." என மனதில் தாேன்றிய எரிச்சலை மறைத்து கூற,

"என் வேலையே உன்கூட தானே. எப்பவும் எல்லாருக்கு கூடவும் இருக்க வேண்டியது. நீ என்ன மட்டும் கவனிச்சா போதும்."

"அதெல்லாம் முடியாது என்னை விடுங்க, மாமா காத்துகிட்டு இருப்பாங்க."

"ரதிகுட்டி நீ இன்னும் குழந்தையாகவே இருக்கியே நான் வந்ததை கவனிச்ச அப்பா பொய் சொல்லி உன்னை மேலே அனுப்பி இருக்கிறார், என்ன இருந்தாலும் காதல் வாழ்க்கையில் எங்களுக்கு சீனியர் அவர்தான." அதன் பிறகு ரத்னாவிடம் கொடுக்க வேண்டியதை கொடுத்து பெற வேண்டியதை கட்டயப்படுத்தி பெற்று ரத்னாவை விடுவிக்க, தன்னை சரி செய்துகொண்டு கீழே வந்த ரத்னா வீட்டில் தேவராஜ் இல்லை என்பதே ஜஸ்வந்த் கூறியது உண்மை என்பதை நிரூபிக்க சிறு கசந்த முறுவலுடன் தன் வேலையை தொடர்ந்தாள். அடுத்த நாள் உணவு அருந்தும்போது ரூபா

"ஜஸ்வந்த் நாளைக்கு வீட்ல இருந்து எல்லாரும் வராங்க."

"வரட்டும் ரூப்ஸ் அதுக்காக நீங்க ஏன் மூஞ்சியை இப்படி வச்சிருக்கீங்க."

"ஏன்னா அவங்க வந்து சாெல்லப்பாேற விஷயம் அப்படி."

"அப்படி என்ன சொல்ல போறாங்க."
"அது வந்து அடுத்த வாரம் ஆடி ஆரம்பிக்குது சோ ரத்னாவை வீட்டுக்கு கூட்டிட்டு போவதற்காக வராங்க."

"ஓகே இதுல என்ன இருக்கு. ரத்னா நீ காலேஜுக்கு லீவ் சொல்லிடு நானும் என்னோட வேலையெல்லாம் வந்து பாத்துக்குறேன். நம்ம ரெண்டு பேரும் போயிட்டு வரலாம்."

"ஜஸ்வந்த் ஆடி மாசம் முழுக்க பொண்ணுங்க அம்மா வீட்ல தான் இருக்கணும். நீ இங்க தான் இருக்கணும்."

"ரூப்ஸ் நான் ஒன்னும் சின்ன பையன் இல்லை. இந்த ஆடி மாசம் அப்படின்னா என்னன்னு தெரியாம இருக்கிறதுக்கு, அதான் இப்ப வர எல்லா கதைகளையும் இந்த ஆடி மாசத்த வச்சி ஒன்னு ரெண்டு எப்பிசாேட் டிவலப் பண்ணிட்டு இருக்காங்களே. ஆடி மாசம் முழு ரத்னா அம்மா வீட்டுக்கு போனா படிப்புக்கு டாட்டா சொல்லிட வேண்டியதுதான்."

"கடைசியா என்ன சாெல்ல வர."

"நானும் ரத்னாவும் உங்க அம்மா வீட்டுக்கு போறோம். ஒரு வாரம் அங்க தங்க போறோம், ரத்னா திரும்பி வந்து காலேஜ் போக போற, நான் உங்க ஊர்ல ஒரு மாசம் தங்க போறேன்." தம்பியின் பதில் திகைத்த ஹர்ஷத்

"என்னடா சொல்ற?"

"அண்ணா தென்காசியில் என் ஃப்ரெண்டு விமல்க்கு ஒரு ஹோட்டல் கட்டி தர சொல்லி கேட்டு இருந்தான், அதுக்கான வேலை கூட நாளைக்கு ஸ்டார்ட் பண்ணிடுவாங்க. ஒரு மாசம் இருந்து பாத்துட்டு வரப்போறேன். அதுவரைக்கும் மாமனார் வீட்ல தாங்கிக்கிறேன்.

டெல்லி

அஜீத் டெல்லியில் உள்ள பிரபலமான அகாடமியில் ஐஏஎஸ் படிப்பதற்காக சேர்ந்து மூன்று மாதங்களில் ஆகிவிட்டது. படிப்பு ஒரு பக்கம் நன்றாக சென்று கொண்டிருந்தாலும் ரத்னாவின் நினைவு மட்டும் தொண்டையில் சிக்கிய மீன் முள்ளாய் உறுத்திக் கொண்டிருந்தது. நான் செய்தது தவறா? சரியா? என லட்சம் முறையாவது தன் மனதுக்குள் கேட்டுக் கொண்டிருப்பான்.

டெல்லி வந்த பிறகு தேவைக்கு மட்டுமே தன் பெற்றோரை தொடர்பு கொள்பவன், ரத்னாவின் அழைப்பை மட்டும் கவனமாக தவிர்த்து வந்தான். இனி ரத்னாவின் வாழ்வில் தனக்கு இடம் இல்லை என்பதை அஜீத் ஒருவாறாக ஏற்றுக்கொள்ள பழகி தன் கவனம் முழுவதையும் படிப்பில் செலுத்து தொடங்கியிருந்தான். அன்று காலையிலிருந்தே மனதுக்குள் ஏதோ நெருடலாக இருக்க காரணம் தெரியாமல் குழப்பத்தில் இருந்தவனை மாலை கடந்த வேளையில் போன் ஒலி எழுப்ப, அதை எடுத்து பார்க்க அதில் பிரபு என்ற பெயர் வரவும் எடுத்து

"என்னடா ஒரு வழியா என் மேல இருந்த கோபம் போயிருச்சா? இப்ப மாதிரி என் கிட்ட உனக்கு பேசணும்னு தோணுச்சா?"

நீண்ட நாள் கழித்து தன்னிடம் நண்பன் அழைத்ததால் மகிழ்ச்சியுடன் பேச, பிரபு கூறிய பதில் போனே தவறவிட்ட அஜித் வேகமாக கிளம்பி அடுத்த விமானத்தில் மதுரை வந்து அங்கிருந்து தென்காசி வந்து சேர்ந்தான்.

தென்காசில் மிகப்பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரத்னாவை பார்த்து அஜீத் அருகில் வர, ரத்னாவவாே எங்காே வெறித்து பார்த்தப்படி தன் அருகில் வந்த அஜீத்தை கூட உணராமல் அமர்ந்திருக்க, உணர்வெல்லாம் மறத்துவிட்ட நிலையில் இருக்கும் மகளை உணவு உண்ணும்படி அருகில் உள்ள நாற்காலியில் அமந்தபடி கேட்டுக்காணெ்டிருந்த பார்வதி, அஜீத்தை பார்த்ததும் சேலை முந்தானையால் தன் வாயை மூடிக்கொண்டு அழ, இதை எதையும் பார்க்க விரும்பாமல் வெளியறிய அஜீத்தின் தாேளை பிரபு தொட,
"என்னடா ஆச்சு என் ரத்னாவுக்கு?"

"இங்கு பேச வேண்டாம் டா, வா வெளிய போகலாம்." இருவரும் வெளியில் வந்த நேரம் அப்பொழுதுதான் பொழுது விடிந்து சிறிது நேரமே ஆகி இருக்க அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் மட்டுமே அந்த மருத்துவ வளாகத்தில் இருந்தன. அஜீத்தை மரத்தடியில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர வைத்து

ஆடி முடிஞ்சு ரத்னாவும் ஜஸ்வந்த் ஊருக்கு கிளம்பி போன கொஞ்ச நேரத்திலேயே தெ ன்காசி to மதுரை ரோட்ல ஆக்சிடென்ட் ஆயிட்டு, அடி காெஞ்சம் பலமாதான் இருக்கு, அதிர்சி மட்டும் தான், பிரச்சனை இல்லைனு சாெல்லிடாங்க."

"ரத்னா இங்க இப்படி இருக்க, ஆனா அவங்க வீட்டுல அவங்க அம்மாவைத் தவிர வேறு யாரும் இங்கு ஏன் இல்லை."

"நடந்த ஆக்சிடென்ட்ல ஜஸ்வந்த் ஸ்பாட் அவுட் அதனால ரத்னா வீட்டுல உள்ள எல்லாரும் சென்னை போயிருந்தாங்க. வந்துட்டாங்க இன்னைக்கு பதினாறாவது நாள், இன்னைக்கு எதே பூஜை இருக்காம் எப்படியும் ரத்னாவ வீட்டுக்கு கூட்டிட்டு பாேக வந்துடுவாங்க."

"ஏன்டா இத்தனை நாளா என்கிட்ட சொல்லல"

"சொல்லியிருந்தா மட்டும் என்னடா பண்ணி இருப்ப."

"இன்னைக்கு இந்த நெலமைல ரத்னா இருக்குறதுக்கு முக்கிய காரணம் நீ மட்டும் தான்டா."

"நானா? நான் எப்படி டா காரணமாக முடியும்."

"நீ எந்த உண்மையை எங்க கிட்டே இருந்து குறிப்பா ரத்னாகிட்ட இருந்து மறைக்க நினைச்சியாே அது ரத்னாவுக்கு தெரியும். உண்மையை மறைச்சு அவளோட பாதி சந்தோஷத்தை நீ அழிச்சிட்டுட மகரராசன் அவள கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்ப செத்துப்போய் அவள்ட மீது சந்தோஷத்தை எடுத்துட்டு போயிட்டான்."

இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ரத்னாவின் வீட்டார் வந்து ரத்னாவை வீட்டிற்கு அழைத்து செல்ல, இதை அறிந்த அவர்களின் பின்னே வீடு சென்ற அஜீத் பார்த்த காட்சி அவனை வேதனையும் உச்சத்திற்கே அழைத்து சென்றது. உடலின் காயங்கள் கூட முழுதாக குணமடைய ரத்னாவை வீட்டின் நடுக்கூடத்தில் அமரவைத்து கணவனை இழந்த பெண்ணிற்கு செய்யும் சடங்கு என வயதான பெண்கள் செய்யும் கொடுமையை பார்த்து விரைந்து சென்று அவர்களிடம்

"உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே கிடையாதா ஏற்கனவே உடல் அளவிலம், மனசு அளவிலும் காயப்பட்டு இருக்கிற ஒரு பொண்ணு இப்படிதான் கொடுமைபடுத்தவீங்களா."

"தம்பி புரியாம பேசாதீங்க இது எல்லாம் காலங்காலமா நடக்குறதுதான்."

"காலம் மாறினாலும் உங்கள மாதிரி சில முட்டாள் இருக்கிறவரை எப்பவும் மாத்த முடியாது." சத்தம் கேட்டு அனவைரும் கூடத்திற்கு வர,

"அவங்களுக்குத்தான் அறிவு இல்லைனா, உங்களுக்கெல்லாம் எங்க போச்சு." என ரத்னாவின் வீட்டாரை நாேக்கி கேட்க, அஜீத்தின் அருகில் வந்த கிருஷ்ணன்

"அஜீத் தேவையில்லாம எதுவும் பேசாத, நீ அமைதியா இரு."

"எப்படிப்பா கண்ணுக்கு முன்னாடி நடக்கிற கொடுமையை பார்த்துகிட்டு அமைதியா இருக்க முடியும்."

எப்பொழுதும் தம்பியை மட்டம் தட்ட வாய்ப்பை தேடிக் கொண்டிருக்கும் ஆர்த்தி, இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள எண்ணி

"என்னடா கொடுமை நடக்கிறது, நீ ரத்னாவுக்கு பண்ணின கொடுமையை விடவா. நீ மட்டும் ரத்னாவ கல்யாணம் பண்ணியிருந்தா இந்த மாதிரி ஒரு நெலமை ரத்னாவுக்கு வந்திருக்குமா? நீ அவள வேண்டாம்னு சொன்ன, அதனால தானே ஜஸ்வந்த்க்கு கல்யாணம் பண்ணி வைச்சாங்க. எல்லாம் உன்னால தான். பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்ப ரொம்ப நல்லவன் மாதிரி நாங்க கொடுமை பண்றோம் அப்படின்னு பேசிகிட்டு இருக்க. நாங்க பண்றது கொடுமைனா நீ பண்ணதுக்கு பேரு என்ன? ஒன்னு மட்டும் நல்லா ஞாபகம் வச்சுக்கோ இப்போ ரத்னா கஷ்டப்படுவதுக்கும், காலம் முழுக்க அவ வடிக்கப் போற கண்ணீருக்கும் நீ மட்டும் தான் காரணம்."

எப்பொழுதும் பிறரின் மனதை கட்டுப் படுத்துவதற்காக மட்டுமே ஆர்த்தி இவ்வாறு பேசுவாய் என்பதை அஜீத் உணர்ந்திருந்தாலும் தற்போது ஆர்த்தி கூறும் குற்றச்சாட்டில் இருக்கும் உண்மை சுட மௌனி ஆகிப் போனான்.

நடப்பது எதுவும் உணராது பொம்மை போல் இருந்த ரத்னாவை பார்த்து கண்கலங்கிய அஜீத்திடம் வந்த அர்ச்சனா

"அண்ணா ரத்னாவை நீ உன் கூடவே கூட்டிட்டு போறியா? அர்ச்சனாவின் கேட்ட கேள்வி அருகில் நின்ற மைதிலி செவியை எட்ட,

"என்ன பேச்சு பேசுற வாய மூடு." என்ன மகளே அதட்ட கூட்டத்தில் நின்ற வயதான பெண்மணி ஒருவர்

"என்னமா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்க பையன் நாங்க என்னமாே ரத்னாவ கொடுமை பண்ணுறதா சொன்னான்தானே, எங்க அப்படி அந்த பொண்ணுக்கு நல்லது நடக்கணும்னு நினைக்கிற பரந்த மனசு இருந்தால் அந்த பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க சொல்ல வேண்டியதுதானே."

பேச்சு திசை மாறுவதை உணர்ந்த வைரவேல் அனைவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைக்க நினைக்க, அங்கிருந்து வெளியேறிய அஜீத் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து நாற்காலியில் அமர்ந்து இருந்த ரத்னாவிடம் வந்து, அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு ரத்னாவின் கழுத்தில் தன் கையில் இருந்த மாங்கல்யத்தை அணிவிக்க, ரத்னா அவனை நிமிர்ந்து மட்டும் பார்க்க அனைவரும் வாயடைத்துப் போயினர்.

அஜீத்திடம் வந்த மைதிலி அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்து

"என்ன காரியம் பண்ணி வைச்சுருக்க, புத்தி இருந்தா இப்படி பண்ணுவியா."

"நான் நல்லா யோசிச்சு தான் இந்த முடிவை எடுத்திருக்கேன்." என்று அஜீத்திடம் வந்த முத்துவேல்

"நீ என்ன பண்ணுனாலும் நாங்க அமைதியா இருப்போம்னு நீ நினைச்சுட்டியா அஜீத் அன்னைக்கு நாங்க ரத்தினாவ கல்யாணம் பண்ணிக்கோனு சொன்னப்போ முடியாதுன்னவே, இப்போ எதுக்காக அவ கழுத்துல இதைக் கட்டுன."

"நீங்க என்னை பத்தி என்ன நினைச்சாலும் எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை. ரத்னா இப்போ என்னோட மனைவி." அஜீத் மனைவி என்றதும் கோபமாக அவரிடம் வந்த மைதிலி

"என்னடா சொன்ன இது உனக்கு பொண்டாட்டியா? கல்யாணம் பண்ணிட்டு போனேன் ரெண்டாவது மாசமே புருஷனை தூக்கி கொடுத்துட்டு நிக்கிற இவ உனக்கு பொண்டாட்டியா, எதுக்கு உன்னையும் எமனுக்கு தாரைவார்க்கவா."

மைதிலியின் பேச்சு கோபமடைந்த ரத்னாவின் வீட்டார் ஒரு புறம் பேச, மைதிலிக்கு சார்பாக கிருஷ்ணனும் மற்றும் சிலர் பேச வீடே சிறுது நேரத்தில் போர்க்களமாக மாறியது. இவ்வளவு நடந்தும் அது எதுவும் தன்னை பாதிக்கவில்லை என்ற ரீதியிலேயே ரத்னா அமர்ந்திருந்தாள். இறுதியில் மைதிலி

"நடந்ததை கல்யாணம்னு என்னால ஏத்துக்க முடியாது. இப்பமே அவ கழுத்துல நீ கட்டுனத கழட்டுனா ஏன் பையனா இருக்கலாம். இல்ல நான் அவளுக்கு வாழ்க்கை கொடுத்து தியாகியா தான் வருவேன் அப்படின்னு முடிவு பண்ணிட்டா உனக்கு நம்ம வீட்டிலேயே இடம் இல்ல அதை ஞாபகம் வச்சுக்கோ"

தாயின் பேச்சில் அதிர்ந்த அஜீத் தன் தந்தையின் முகம் பார்க்க 'என் முடிவும் அதுதான்' என்றரீதியில் நிற்க ஒரு பெருமூச்சை இழுத்து விட்ட அஜீத்,

"இதுதான் உங்க முடிவுன அத நான் மனசார ஏற்றுகிறேன். நான் தியாகியா மாற ரத்னாவை கல்யாணம் பண்ணல. அது என் மனசுக்கு தெரியும்."

"மனசாம் மனசு பொல்லாத மனசு, மூணு மாசத்துக்கு முன்னாடி அந்த மனசு எங்கடா போச்சு." என மகனிடம் வாதாடிக்கொண்டிருக்கும் மைதிலியிடம் வந்த கிருஷ்ணன்

"நீ இப்போ எது சொன்னாலும் இவனுடைய மனசுலயும் சரி மூளையிலையும் சரி ஏற போறது இல்ல, வா போகலாம்." என மனைவியையும் மகளையும் அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

சிறுது நேரம் புயல் அடித்து ஓய்ந்தது போல இருந்த வீட்டில் அனைவரும் அமைதியாக இருக்க, தேவராஜ் நடுவில் வந்து

"நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க எப்போ கல்யாணம் பண்ணி ரத்னாவ நீங்க தாரை வார்த்து கொடுத்தீங்களே, அப்பவே ரத்னா எங்க வீட்டு பொண்ணு ஆகிட்டா. ஆமா என்னோட பையன் இப்போ இந்த உலகத்துல இல்ல, அதுக்காக ரத்னா ஓட வாழ்க்கை இப்படியே இருக்கட்டும்னு எங்களால விட முடியாது. நிச்சயமா அவளோட வாழ்க்கைல ஒரு நல்லது நடக்கணும்னு நான் ஆசைப்பட்டேன். ஆனா அது இவ்வளவு சீக்கிரமா நடந்துடுச்சு. இதை மறுத்து பேச உரிமை இந்த வீட்டுல இப்ப யாருக்கும் கிடையாது. ரத்னாவுக்கு அந்த உரிமை இருக்கு அப்படி பிரச்சினை வந்தா அதை இனிமேல் அஜீத் பாத்துக்குவான்."

பிரச்சினையை வளர்க்க வேண்டும் என நினைத்த ஆர்த்தி

"அதுக்குன்னு இவன் நடந்துகிட்டது எல்லாம் சரின்னு சொல்ல வரீங்களா?"

"எல்லாம் சரினு சாெல்லல, அஜித் எடுத்த முடிவு சரிதான். அத பக்குவமா எல்லார்கிட்டயும் எடுத்து சொல்லிட்டு மெதுவா செஞ்சிருக்கலாம்."

அனைவரையும் ஒருவழியாக தேவராஜ் பேசியே சமாளித்து விட்டார். தங்கள் மகளின் வாழ்வு என்னவாகுமோ என நினைத்துக் கொண்டிருந்த ரத்னாவின் வீட்டார் அஜீத்தின் முடிவில் சிறிது நிம்மதி அடைந்தார் என்று தான் சொல்லவேண்டும். ஆனால் தங்களை பற்றி ஊர் என்ற பேசுமோ என்பதே அவர்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியை முகத்தில் பிரதிபலிக்காமல் செய்தது.

தான் ஒன்றை நினைத்து பேச அது வேறு வகையில் திரும்பியதை நினைத்து ஆத்திரமுற்ற ஆர்த்தி என்ன செய்யலாம் என நினைத்திருக்க, அவளின் கையை பிடித்து இழுத்துச் சென்ற தங்கவேலு தங்கள் அறைக்குச் சென்றதும்

"நான் சொல்லுற வரைக்கும் நீ இந்த ரூமை விட்டு வெளியே வரக்கூடாது." என கூறிவிட்டு செல்ல, அதற்குள் விஷயம் கேள்விப்பட்டு அக்கம் பக்கத்திலிருந்த நெருங்கிய உறவுகள் வீட்டிற்கு வர ஆரம்பித்தன.

வந்தவர்கள் ஆளுக்கு ஒவ்வொன்றாக பேச இறுதியில் வைரவேலின் குடும்பத்தின் மீது அனைவருக்கும் இருந்த மரியாதையின் காரணமாக அவரிடம் பணிவாகவே

"ஐயா என்ன இருந்தாலும் நீங்க பாப்பாவோட வாழ்க்கையை பாக்கணும் தானே. வாழ வேண்டிய வயசுல வாழ்க்கையை தொலைச்சுட்டு நிக்கது. அதுக்கு கடவுளா பாத்து ஒரு வாழ்க்கையை கொடுத்திருக்காரு, அதை நீங்க கெடுக்க வேண்டாமே."

ஊர் பெரியவர்களே இவ்வாறு கூற தங்கள் மனதில் கலக்கம் அகன்ற வைரவேல்

"நீங்க சொல்றது ஏத்துக்க கூடிய விஷயம்தான். ஆனா பையனோட அப்பா பிரச்சனை பண்ணுவாரு என்ன பண்ண."

"பையன் முடிவுல உறுதியா இருக்கும்போது அவரால் என்ன பண்ண முடியும்."

இங்கு அனைவரும் பேசிக்கொண்டிருக்க அஜீத் வெகுநேரமாக ரத்னா நாற்காலியிலேயே அமர்ந்திருப்பதைபார்த்து, மெதுவாக அழைத்துச் சென்று அவள் அறையில் ஓய்வெடுக்க வைத்துவிட்டு, பார்வதியிடம் வந்து

"அத்த ரத்னா சாப்பிட்டு ரொம்ப நேரம் ஆயிருக்கும், அவளுக்கு ஏதாவது சாப்பிட குடுத்துட்டு மருந்து மாத்திரை ஏதாவது இருந்தா கொடுங்க." இதையெல்லாம் கவனித்த அந்த பெரியவர்

"எத்தனை பேரு இருக்கோம் உங்க யாருக்காவது இது தோணிச்சா, கொஞ்சநாள் போச்சுன்னா ரத்னாவுக்குனு ஒரு துணை வேணும் அது இந்த தம்பிதானு கடவுள் எழுதி வைச்சுருக்காறாே என்னவாே." எனக்கூறிவிட்டு அனைவரும் செல்ல, அஜீத்திடம் வந்த வைரவேல்

"ஒரு தடவை உங்க அப்பா சொன்னதை நம்பி எங்க பொண்ண உனக்கு தர சம்மதித்தோம், இப்ப நாங்க சம்மதித்த காரணம் எதுவும் உன்கிட்ட இல்லை. எத நம்பி எங்க பொண்ண உனக்கு கொடுக்கிறது."

"நீங்க என்ன மட்டும் நம்புங்க. நான் ரத்னாவை பாத்துக்குவேன்." அதன் பிறகு ஒரு வாரம் ரத்னாவின் வீட்டிலேயே தங்கியிருந்த அஜீத் ரத்னாவின் உடல் குணமாகிவிட்டது இனி பயணம் செய்யலாம் என தங்கவேல் கூறிய அடுத்த நாள் டெல்லிக்கு கிளம்ப தயாராக, அதை தடுக்க நினைத்த ரத்னாவின் வீட்டாரிடம்

"என்னால ரத்னாவை பாத்துக்க முடியும். மூணு வருஷம் எங்க அப்பாகிட்ட வேலை பார்த்து சேர்த்த பணம் என்கிட்ட போதும் என்கிற அளவு இருக்கு, பயப்படாதீங்க." என அனைவரையும் சமாளித்துவிட்டு ரத்னாவை டெல்லிக்கு அழைத்து வந்துவிட்டான்.

முதலில் தயங்கினாலும் தேவராஜ் நான் பார்த்துக் கொள்கின்றேன் என நம்பிக்கை அளித்ததில் பெயரில் அரைகுறை மனதுடன் இருவரையும் வழியனுப்பி வைத்தனர். டெல்லிக்கு வந்து இறங்கியதும் அவர்களுக்காக தேவராஜ், ஹர்ஷத் இருவரும் காத்திருப்பதை கண்டு அவர்களிடம் ரத்னாவை அழைத்துச்சென்று

"நீங்க இங்க வருவீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கல அங்கிள்."

"நான் அன்னைக்கே சொன்னேன் ரத்னா எங்க வீட்டு பொண்ணுன்னு."

அனைவரும் அஜீத் தங்கியிருந்த அறைக்கு வர அது மிகச்சிறிய வீடு. ஒரு ஹால், கிச்சன், பெட்ரூம் என மிகச்சிறிய வீடு வீட்டிற்கு வந்ததும்

"நீங்க இங்க தான் இருக்க போறீங்களா அஜீத்."

"ஆமாங்க உங்களுக்கே தெரியும் டெல்லியில வீட்டு வாடகை எவ்வளவு இருக்கும்னு. இது பிரபு சித்தப்பா ஒருத்தரோட வீடு அதனாலதான் கம்மியான வாடகைக்கு தந்திருக்காங்க."

"இனி என்ன செய்யப் போற."

"என்ன செய்யப் போறேன்னா? நீங்க சொல்றது எனக்கு புரியல அங்கிள்."

"இவ்வளவு நாள் உங்க அப்பாவோட பணத்துல படிச்சிட்டு இருந்த, இனி?"

"படிச்சுக்கிட்டு மட்டுமில்லாமல் வேலையும் பார்த்துட்டு இருந்தேன். அதுல சம்பாதிச்ச பணத்தை நான் எப்பவும் செலவு பண்ணவே இல்ல. அந்த பணம் அப்படியே என்னோட அக்கவுண்ட்ல தான் இருக்கு. அது இப்போ போதும் எனக்கு நம்பிக்கை இருக்கு நான் இந்த தடவை யுபிஎஸ்சி எக்ஸாம்ல பாஸ் பண்ணி விடுவேன். அப்புறம் எந்த கவலையும் இல்லை.

"ரத்னா கவனிச்சுகிட்டு உன்னால படிக்க முடியுமா நிச்சயமா?"

"முடியும் அங்கிள்."

"உனக்கு என்ன உதவினாலும் என்ன மறக்காம கேளு பா."

"கண்டிப்பா கேக்குறேன் அங்கிள்."

"ரத்னாவுக்கு தான் மாமா முறை உனக்கு எப்பவுமே அப்பாதான்."

"மன்னிச்சிடுங்க அங்கிள், என்னால எங்க அப்பாவை தவிர வேறு யாரையும் வெறும் வார்த்தைக்காக கூட அப்பான்னு கூப்பிட முடியாது, வேணும்னா பெரியப்பானு கூப்பிடுறேன் பரவாயில்லையா."

இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு சென்றுவிட, கடையில் வாங்கி வந்த உணவை பிரித்து வைத்துவிட்டு ரத்னாவை அழைக்க செல்ல ரூமின் மூலையில் அமர்ந்து கொண்டிருந்த ரத்னாவை பார்த்து அருகில் செல்ல ரத்னா,

"கிட்ட வராதே, போ என்கிட்ட இருந்து, கிட்ட வராதே. நான் இனி அஜீத் பத்தி பேசமாட்டேன். கிட்ட வராதே." என கத்திவிட்டு மயக்கமடைய அதிர்ச்சியும் கவலையுடன் நின்றிருந்தான் அஜீத்.

அஜீத் என்ன உண்மையை மறைத்தான்.

ரத்னாவின் வாழ்வில் நடந்தது என்ன?

எதற்காக ரத்னாவின் இந்த அலறல்?

இனி இருவரின் வாழ்வில் நடக்கப்போவது என்ன?

அடுத்த அத்தியாயத்தில் தாெடர்வாேம்

உன் நிழலை நான் தொடர்வேன்.
 

umamanoj64

Well-Known Member
அதானே பார்த்தேன். ..ஸ்பாட் அவுட் ஆக்கிடீங்களா..சந்தோஷமா:mad:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top