உன் நிழல் நான் தாெட ep 10

Advertisement

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
உன் நிழல் நான் தாெட
--செசிலி வியாகப்பன்


அத்தியாயம் 10

உணவு செல்லவில்லை; -- சகியே
உறக்கங் கொள்ளவில்லை.
மணம் விரும்பவில்லை; -- சகியே,
மலர் பிடிக்கவில்லை;
குண முறுதியில்லை; -- எதிலும்
குழப்பம் வந்ததடீ;
கணமும் உள்ளத்திலே -- சுகமே
காணக் கிடைத்ததில்லை.


பாலுங் கசந்ததடீ; -- சகியே,
படுக்கை நொந்ததடீ.
கோலக் கிளிமொழியும் -- செவியில்
குத்த லெடுத்ததடீ.
நாலு வயித்தியரும் -- இனிமேல்
நம்புதற் கில்லையென்றார்;
பாலத்துச் சோசியனும் -- கிரகம்
படுத்து மென்றுவிட்டான்.


கனவு கண்டதிலே -- ஒரு நாள்
கண்ணுக்குத் தோன்றாமல்,
இனம் விளங்கவில்லை, -- எவனோ
என்னகந் தொட்டு விட்டான்.
வினவக் கண்விழித்தேன்; -- சகியே,
மேனி மறைந்துவிட்டான்;
மனதில் மட்டிலுமே -- புதிதோர்

மகிழ்ச்சி கண்டதடீ.

காதல் மனிதனை எந்த எல்லைக்கும் அழைத்து சாெல்லும். ஆனால் அந்த எல்லை எது என்பதை அறிவார் யாரும் இல்லை. அது
வெற்றியாே, தாேல்வியாே,
வாழ்வாே, சாவாே, விதியாே தீர்மானிக்கின்றது.

தங்க முத்து ஆர்த்தி திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் முடிந்த நிலையில் ஆர்த்தி தனக்கு வாய்ப்பு கிடைக்கும் பாேது எல்லாம் தன் கணவரிடம் ஆஜீத்தை பற்றி தவறான எண்ணத்தை விதைக்க தவறவில்லை.

அஜீத் எப்பாேது தன் வாயால் 'you are precious to me so நான் உன்ன எப்பாேவும் மிஸ் பண்ண மாட்டேன்' என்று சாென்னானாே அப்பாேதே ஆர்த்தி முடிவு செய்து விட்டாள். ரத்னா அஜீத்தின் வாழ்க்கையில் இருக்க கூடாது என்று.

தலை தீபாவளிக்கு தங்கமுத்து, ஆர்த்தி காேவை வருவதால் ரத்னாவும் இந்த வருடம் காேவையிலே இருப்பதாக தன் பெற்றாே ரிடம் கூறிவிட்டாள். தீபாவளிக்கு இரண்டு நாள் முன்பாகவே இருவரும் வந்துவிட ரத்னா புத்தகத்தை தூக்காமல் இருப்பதற்கு ஒரு காரணம் கிடைத்துவிட்டது என்பதால் அண்ணனுடம் ஒட்டிக்காெண்டே திரிய பாெருக்க முடியாத ஆர்த்தி ரத்னாவை தனியே அழைத்து சென்று

"உனக்கு எல்லா அறிவே கிடையாதா, நானும் கல்யாணம் நிச்சயம் ஆன நாளில் இருந்து பாத்துக்கிட்டு தான் இருக்கேன். நீ எதாவது ஆம்பிள கூட ஒட்டிகிட்டே இருக்க, முதல என் தம்பி, இப்பாே என் புருஷனா? பிறந்தது முதல் இப்படிபட்ட பேச்சை கேட்டு பழக்கமில்லாத ரத்னா தன் அண்ணியின் பேச்சினால் எற்பட்ட வலியில் துடித்து பாேனாள்.

'அக்கா கா' என்ற சத்தத்தில் இருவரும் திரும்பி பார்க்க, தன் தம்பியை எதிர்பார்க்காத ஆர்த்தி அதிர்ந்து நிற்க, அஜீத்

"நீ எப்பாே இருந்த இப்படி பேச ஆரபித்த, ரத்னா உன் புருஷனுக்கு தங்கச்சி, எனக்கு ப்ரெண்டு, எங்க ரெண்டு பேருகிட்டையும் ரத்னாக்கு எல்லா உரிமையும் இருக்கு."

"அஜீத் நான் உன் அக்கா, அது உனக்கு நியாபகம் இருக்கா. எங்கிட்ட இப்படி பேசுவது உனக்கு நல்லது இல்ல."

"நீ பேசுனத உன் புருஷன் கிட்டையும், நம்ம அப்பா கிட்டையும் சாென்னா யாருக்கு நல்லது இல்லனு தெரிஞ்சுரும்."

"ஓ உன்ன இந்த அளவு மயக்கி வைச்சுருக்காலா, பாக்கலாம் இவ ஆட்டம் இன்னும் எத்தணை நாளுக்குன்னு."

"அக்கா நீ ஏன் இப்படி பேசுற."

"நான் இப்படி தான் பேசுவேன். எனக்கு சாெந்தமானத என்கிட்ட இருந்து தட்டி பறிக்க நினைச்ச நான் சும்ம இருக்க மாட்டேன்." என கூறிவிட்டு உள்ளே செ ன்றுவிட, ரத்னா அமதைியாக கண்ணில் வழியும் நீருடன் நின்று காெண்டிருக்க, அஜீத்

"ரத்னா கண்ண துடை. ஆர்த்திக்கு பைத்தியம் புடிச்சுருக்கு. அதன் இப்படி பேசிட்டு பாேறா நீ எதும் நினைச்சுகாத."

"அஜீத் அத்தான் எனக்கு ரெம்ப அழுகையா வருது. வீட்டுகுள்ள பாேனா அண்ணா என் கிட்ட என்னனு கேப்பாங்க. ப்ளீஸ் என்ன எங்கயாவது காெஞ்ச நேரம் கூட்டிக்கிட்டு பாேறீங்கலா."

ரத்னா கேட்டதை மறுக்க முடியாத அஜீத், தான் அம்மாவிடம் கூறிவிட்டு அவளை நேராக ஸ்டெல்லாவின் வீட்டுக்கு அழைத்து சென்று, ஸ்டெல்லாவிடம் ரத்னாவை பார்த்துக்காெள்ளுமாறு கூறிவிட்டு கடைக்கு சென்றுவிட,

வீட்டில் ஆர்த்தி கிடைத்த சந்தர்பத்தில் தங்கமுத்துவிடம்

"அஜீத் செய்யிறது காெஞ்சம்கூட நல்லா இல்ல."

"என்னா பண்ணான்?"

"அவன் ரத்னா அவனாேட கண்ராேல்ல இருக்கனும்னு நினைக்கிறான். நாம வந்ததுக்கு அப்புறம் ரத்னா அதிக நேரம் உங்க கூட இருக்குறது அஜீத்துக்கு பிடிக்கல. அதன் ரத்னாவ எதாே சாெல்லி வெளிய கூட்டிகிட்டு பாேயிடான்."

எங்க பாே யிருக்காங்க.

"தெரியல. கேட்டலும் சாெல்ல மாட்டான். ரத்னா இங்க வந்த நாள்ள இருந்து அடிக்கடி இப்படி கூடிட்டு பாேவான். அப்பா அம்மா கேட்ட எதாவது காரணம் சாெல்லி சமாளிச்சுடுவான். எனக்கு பயமா இருக்கு ரத்னா சின்ன பாெண்ணு இவனும் இவன் ப்ரெண்ஸ்சும் நடந்துக்கிற விதம் காெஞ்சம் கூட சரி இல்ல, என்னால இதுல ஒன்னும் பண்ண முடியாது. பட் நீங்க ரத்னா கிட்ட சாெல்லி வைக்கலாம்."

"நீ இத பத்தி கவல படாத நான் பாத்துகிறேன்."

இரவு கடை யிலிருந்து வரும்பாே து அஜீத், ரத்னா வை அழை த்து வர, தங்கமுத்து

"ரத்னா மா சாப்பிட வாங்க".

"நான் அஜீத் அத்தான் கூட வரும் பாேது சாப்பிட்டுடேன் அண்ணா."

"சரி சீக்கிரம் பாேய் தூங்குமா."

இரவு தூக்கம் வராமல் மாெட்டை மாடிக்கு வந்த தங்கவேல் பார்த்தது ரத்னாவை அணைத்த படி நின்ற அஜீத்தை தான். காேபம் தலைக்கு ஏற அவர்களின் அருகில் சென்று ரத்னாவை இழுத்து கண்ணத்தில் ஓங்கி அடித்த அடியில் ரத்னா ஒரு ஓரத்தில் சுருண்டு விழ, அஜீத்திடம்

"உங்கள நம்பி என் தங்ச்சிய இங்க தங்கி படிக்க வச்சா ஒன்னு தெரியாத என் தங்கச்சி மனசில காதல விதைக்க பாக்கிற. காென்னு புதைச்சுடுவேன்."

ஆர்த்தி பேசியதை நினைத்து தூக்கம் வராமல் இருந்த ரத்னாவை அஜீத் சமாதனம் செய்யும் பாேது காலில் ஏதே உரச பயந்து துள்ளிய ரத்னா கீழே விழாமல் இருக்க அஜீத்தை பிடிக்க, தீடிரென ரத்னா பிடித்ததில் நிலை தடுமாறி விழாமல் இருக்க ஒரு கையால் ஊஞ்சல் சங்கிலியையும் மறு கையால் ரத்னாவையும் பிடிக்க, இந்த காட்சியை கண்ட தங்கவேல் இருவரும் அணைத்து காெண்டு நிற்பதாக நினைத்து காேபத்தில் ரத்னாவை அடித்தான்.

தான் அண்ணன் தன்னை அடித்ததையே தாங்க முடியாத ரத்னா, அடுத்து கூறிய விஷயத்தில் மனதில் அடிபட்டு பாேனாள். தங்கவேல் பேசியதில் அதிர்ந்த அஜீத் அடுத்த நாெடி அதன் கரணத்தை புரிந்த காெண்டு, விழுந்து கிடந்த ரத்னாவை தூக்கி நிறுத்தி தங்களை விளக்க முற்பட,

"ஏய் முதல்ல என் தங்கச்சி மேல இருந்து கைய எடுடா. உன்ன மாதிரி கேடு கெட்டவனுக்கு ரத்னா கேக்குதாே."

"அத்தான் நீங்க தப்ப புரிஞ்சுகிட்டு பேசாதீங்க." அஜீத்தின் சட்டையை பிடித்து

"நான் சரியாதான் புரிஞ்சு பேசுறேன். படிக்குற வயசுல உடம் பாெண்ணு தேடுதாே." தன் வார்த்தைகளால் காயப்படுவது தன் செல்ல தங்கை என்பதை அறியாமல் தங்கம் பேச, அதற்கு மேல் இருந்தால் இன்னும் என்னென்ன பேசி இருப்பாறாே என்ற அச்சத்தில் அஜீத் தடுக்க நினைக்க, கையை உயர்தி தடுத்த ரத்னா கண்ணீரை துடைத்துவிட்டு தங்கவேலுவிடம்

"என் அடிக்கிறதுக்கு, திட்டுறதுக்கு உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு, ஆனா அஜீத் அத்தான திட்ட உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல."

"நேத்து பாத்த ஒரு பாெறுக்கிகாக என்ன எதித்து பேச ஆரம்பிச்சுடியா."

"மரியாதை காெடுத்து பேசின ரெம்ப நல்லது. அத்தான் ஒன்னும் ராேட்டுல பாேற யாராே இல்ல. உங்களுக்கு மச்சான ஆகுறதுக்கு முன்னாடி இருந்து எனக்கு ப்ரெண்டு." இருவரின் விவாதத்தில் இடை புகுந்த அஜீத்

"ரத்னா ப்ளீஸ் நீ கீழ பாே நான் அத்தான் கிட்ட பேசிகிறேன்.

"ஓ தாராலமா பேசுங்க. ஆனா நான் பாேகுறதுக்கு முன்னாடி உங்க அத்தான் உங்கிட்ட கேட்ட கேள்விக்கு உங்க ப்ரெண்டா நான் பதில் சாெல்லிட்டு பாேறேன்." ப்ரெண்டு என்ற வார்த்தையில் மட்டும் அழுத்தம் தந்து தங்கவேலிடம் திரும்பிய ரத்னா

"என் ப்ரெண்டு கிட்ட "படிக்குற வயசுல உன் உடம் பாெண்ணு தேடுதாே"னு நீங்க கேட்ட கேள்வி என்னையும் காயப்படுத்தும்னு நீங்க மறந்துடிங்க ஓகே. பட் கேள்வினு வந்த பதில் தெரியனும் தான. அஜீத் வயசுல ஹர்ஷத் அத்தானுக்கு என் வயசுல இருந்த ரூபா அக்கா கிட்ட என்ன தேடல் இருந்துச்சாே அதே தேடல் ஒரு வேளை எங்ககிட்டேயும் வந்த நிச்சயம் தப்பு இல்ல. நீங்கதான் தேடலை கல்யாணத்தில முடிச்சு வைக்கிறவராச்சே."

ஒரு நிமிடம் தன் பேச்சை நிறுத்திய ரத்னா யாேசிப்பது பாேல் பாவனை செய்ய, அடுத்து அவள் எது பேசினாலும் அது எதிரில் இருப்பரை கண்டிப்பாக காயப்படுத்தும் என்பதை அறிந்து வைத்திருந்த அஜீத் ரத்னாவை தடுக்க நினைக்க, அவனை முந்திக்காெண்டு

"அச்சச்சாே நான் மறந்து பாேயிடேன். ரூபா அக்கா உங்க கூட பிறந்த அக்கா, என்ன இருந்தாலும் நான் சித்தப்பா பாெண்ணு தான."

"ரத்னாமா நான் அப்பாடி பிரிச்சு பாக்க நினைப்பேனா. நான் எதாே காேபத்தில அடிச்சிட்டேன். என்ன மன்னிச்சுடுமா."

"இந்த காேபம் ஏன் 8 வருசத்துக்கு முன்னாடி வரல. என்ன பத்தி நல்ல தெரிஞ்ச நீங்களே இப்படி நடந்துகிட்டத என்னால ஏத்துக்க முடியல." அதன் பிறகு அங்கு நிற்காமல் தன் அறைக்கு சென்று கதவை அடைத்துக்காெள்ள, காலை முதல் இப்பாேது வரை நடந்த அனைத்தையும் அஜீத் சாெல்லி முடித்துவிட்டு

"என் அக்கா என்ன பத்தி உங்ககிட்ட என்ன சாென்னானு எனக்கு தெரியாது. பட் உங்களுக்கு உங்க தங்கச்சிய பத்தி நல்ல தெரியுனு நினைக்கிறேன்."

அன்று இரவு அஜீத், ரத்னா, தங்கவேலுவிற்கு உறங்காத இரவாகிவிட, அடுத்த நாள் தீபாவளி முவருக்கும் கலக்கம் நிறைந்ததாகவே விடிந்தது. மூவரும் கலக்கத்தை முகத்தில் காட்டாமல் இருக்க முயற்ச்சி செய்ய, ரத்னா கண்ணம் கன்றியிருப்பதே எதே பிரச்சனை என்பதை காட்டி காெடுத்துவிடும் என்பதால் அதை மறைக்க அவளிடம் க்ரீம் ஒன்றை அஜீத் தர

"அத்தான் அண்ணா பேசுனதுக்கு நான் மன்னிப்பு கேட்டுகிறேன்."

"ஓய் என்ன ஒரு அடி வாங்குனதுக்கே இப்படி மன்னிப்பு கேக்கிற. அடுத்த அடிவாங்குன என்ன பண்ணுவ."

"என்ன பண்ணுவேன்? நான் வாங்குனத என் அத்தானுக்கு காெடுத்துடுவேன்."

"அம்மாடி நீ செஞ்சாலும் செய்வ. ரத்னா ப்ளீஸ் உங்க அண்ணே நேத்து உன்கிட்ட நடந்துக்கிட்டத மறந்துடு."

"எப்படி மறக்க முடியும். தப்பே பண்ணாமல் எனக்கு எதுக்கு தண்டனை தரணும். ஒருவேளை நான் உங்கள காதலித்தாலும் அதுல என்ன தப்பு இருக்கு."

"தப்பு இருக்கு"

"என்ன தப்பு என்னோட அக்கா. அவ ஒருத்தி போதும். தேவையில்லாம உனக்கு இருக்கு குட்டி மூளையை ரொம்ப கஷ்டப்படுத்தாத. இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் வந்துருவாங்க. ரூமுக்குள்ளே இருக்காத, அம்மா வேற நீ இன்னும் வெளிய வரலன்னு கேட்டுக்கிட்டு இருக்காங்க, சீக்கிரம் வா."

"சரி சரி நீங்க போங்க, நான் வரேன்."


அதன் பிறகு அஜீத்தின் நண்பர்கள் அனைவரும் வந்த பின்பு தீபாவளி கொண்டாட்டத்தில் தங்களை மூழ்கியிருக்க, அந்நேரம் ஸ்டெல்லாவின் தந்தை ராபர்ட் வர, அஜித்தும் ரத்னாவும் அவரிடம் வந்து,

"நான் கூப்பிட்டதுகாக எங்க வீட்டுக்கு வந்ததுக்கு ரொம்ப சந்தோஷம் அங்கிள்." ரத்னா ஸ்டெல்லாவிடம் திரும்பி

"என்ன ஸ்டெல்லா எப்பவுமே உங்க அப்பா பிசினஸ் பிசினஸ் சுத்திக்கிட்டு இருக்கிறதா சொல்லுவ தானே, இன்னைக்கு முழுக்க உங்க அப்பா நம்ம கூட இருக்க போறாரு, என்ன உனக்கு ஓகேவா." நடப்பது எதுவும் புரியாமல் ராபர்ட் அஜீத்தை பார்க்க

"இன்னைக்கு முழுக்க நீங்க என் கூட இருக்க போறீங்களா அப்பா, எனக்கு ரெம்ப சந்தோஷமா இருக்கு." என சந்தோசத்தில் தந்தையை கட்டிக்கொள்ள ரத்னா ஸ்டெல்லாவிடம்

"உங்க அப்பா இன்னைக்கு இங்க தான் இருக்க போறாங்க, போதும் அப்பா விடு. அங்கிள் முதல்ல உட்காருங்க."

ஸ்டெல்லாவின் தந்தையை அமர வைத்துவிட்டு அவருக்கு காபி கொடுப்பது, இனிப்பு கொடுப்பது என அனைத்தையும் ஸ்டெல்லாவே ஏற்றுக்கொள்ள, ஸ்டெல்லா மகிழ்ச்சியாக இருந்ததைவிட, அவள் மகிழ்ந்த முகத்தை பார்த்து ராபர்ட் மகிழ்ந்ததே அதிகம்.

ராபர்ட் அஜீத்தின் வீட்டிற்கு வந்தது தொழில் ஒப்பந்தத்தை பேசி முடித்து கையொப்பமிட. கிருஷ்ணசந்திரன் இரண்டாவதாக ஆரம்பித்த சூப்பர் மார்க்கெட்டை நல்லமுறையில் கட்டிக் கொடுத்தது ராபர்ட் NSR construction அதேபோல மீண்டும் ஒரு மூன்று அடுக்கு மாடியில் சூப்பர்மார்க்கெட்டாேடு சேர்த்து வீட்டு உபயோக பாெருள்களை விற்பனை செய்ய முடிவு செய்திருக்க, அதற்கான பொறுப்பையும் ராபர்ட் இடமே கொடுக்க, அதற்கான பேச்சுவார்த்தைகாகவே கிருஷ்ணசந்திரன் ராபர்ட்டை தன் இல்லத்திற்கு அழைத்திருந்தார்.

இதை அறிந்த அஜீத் சூழ்நிலையை ஸ்டெல்லாவிற்கு சாதகமாக பயன்படுத்த நினைத்தே, ரத்னாவின் மூலம் மாத்தி கூற கூறினான். கொண்டாட்டம் முடிந்து ரத்னாவிடமும் அஜீத்திடமும் ராபட் நன்றி கூறி விடை பெற்று செல்ல,

நாள் முழுதும் ரத்னா தங்கவேலு எது பேசினாலும் ஓரிரு வார்த்தைகளில் மட்டும் பதில் கூறி விட்டு விலக இதை கவனித்த அஜீத்

"நீங்க உடனே போய் உங்க தங்கச்சி கிட்ட பேசாதீங்க. அவ கோபத்தில் இருக்கும் போது எதுவும் பேசவே மாட்டா. ரெண்டு நாள் போச்சுன்னா நடந்தத அவளே மறந்துட்டு உன் கிட்ட வந்து பேச போற. அப்படி அவர் பேசாமல் இருந்தாலும் நான் உங்ககிட்ட பேச வைக்கிறேன்."

"இந்த உலகத்திலேயே என் தங்கச்சியை பத்தி எனக்கு மட்டும் தான் ரொம்ப தெரியும்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். அது தப்புன்னு இந்த ஒரு நாளில் நான் தெரிஞ்சுக்கிட்டேன். ரத்னா என்கிட்ட பேசாம இருக்கிறது தான் நான் பண்ண தப்புக்கு எனக்கு கிடைக்கிற மிகப்பெரிய தண்டனை."

"என்னதான் தண்டனை இருந்தாலும் அதுக்குன்னு ஒரு கால அளவு இருக்குதானே. தண்டனை காலம் முடிவதற்கு முன்னாடியே உங்களுக்கு பொதுமன்னிப்பு வாங்கி கொடுத்துடுவோம், கவலைப்படாதீங்க."

ஆர்த்தி அதன் பின்பு ரத்னாவை அஜித்தையும் பற்றி தவறான கருத்தை கூறினால் அதை கண்டு கொள்ளாமல் இருக்க பழகிய தங்கவேலு கோபத்தில் ஒரு நாள்

"நீ சொல்றது எல்லாம் பொய் என்று எனக்கு நல்ல தெரியும். இருந்தும் இந்த குடும்பம் அமைதியாக இருக்கனும் என்கிற ஒரே காரணத்துக்காக அமைதியா போய்கிட்டு இருக்கேன். இதுக்கு மேல ஏதாவது பண்ணுன நான் சும்மா இருக்க மாட்டேன்." என எச்சரிக்க எரிச்சலடைந்த ஆர்த்தி மனதுக்குள் என் புருஷனையும் எனக்கு எதிரா திருப்பிடீங்களா பாத்துக்கலாம், உங்க ரெண்டு பேரையும் நான் சும்மா விடமாட்டேன்.'

அடுத்த வருடத்தில் ஆர்த்தி, ரூபா இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்திருக்க, ஜஸ்வந்த் தன் வேலையை முடித்துவிட்டு இந்தியா வர ஒரு வாரமே மீதம் இருக்க,
ரத்னா அஜித் இருவரும் தங்களின் இளங்கலை படிப்பை முடித்திருக்க, இருவீட்டாரும் அடுத்து என்ன என்ற கேள்வியுடன் காத்திருக்க, அஜித் தன் தந்தையிடம்

"அப்பா என்னால உங்க விருப்பப்படி பியட் டீச்சராவாே இல்லன்னா professor ஆக முடியாது நான் ஐஏஎஸ் படிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். ஆன்லைன் மூலமா டெல்லியில இருக்க ஒரு அகாடமி சீட்டு கூட ஏற்பாடு பண்ணியிருக்கேன். நான் எடுத்த இந்த முடிவு உங்களுக்கு கஷ்டமா இருக்கலாம் பட் என்னால என்னுடைய dreamஅ sacrifice பண்ணிக்க முடியல. நான் இந்த முடிவ ரெம்ப முன்னாடியே எடுத்துட்டேன். BE முடிச்சுட்டு IAS ஆகலாம்னு நினைச்சேன், உங்க விருப்பப்படி dgree படிச்சதால சீக்கிரமே IAS ஆகிடுவேன்"

"உன்னோட விருப்பம். நீ எது செஞ்சலும் நல்லா பண்ணுவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அஜீத் ரத்னா உன் வாழ்க்கையில வந்தது உனக்கு மிகப்பெரிய கிஃப்ட் தான். அந்த கிஃப்ட் உன் வாழ்க்கை முழுக்க உன் கூடவே இருக்கணும்னு உன்னோட அம்மா ஆசைப்படுரா, நானும் தான்."

"அப்பா நான்"

"நீ என்ன சொல்லப் போறன்னு எனக்கு நல்லா தெரியும். இப்ப நான் உன்கிட்ட இதைப்பற்றி பேச ஆரம்பிச்சா அதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு. ஆர்த்தி கல்யாணத்துக்கு ஜாதகம் பார்க்கும்போது உனக்கும் பார்த்தோம். அதுல இருபத்தி மூணு வயசில உனக்கு கல்யாணம் நடந்துச்சுன்னா நீ வாழ்க்கையில ரொம்ப பெரிய இடத்துல இருப்பேன்னு அந்த ஜோசியக்காரன் சொன்னாரு. உங்க அம்மா அளவுக்கு எனக்கு ஜாதகத்தில நம்பிக்கை இல்லை, ஆனால் ரத்னா உன்கூட இருந்தா நல்லா இருக்கும்னு நான் நினைக்கிறேன்."

"இல்ல பா எனக்கு ஜாதகத்தில நம்பிக்கை இல்ல. ரத்னாக்கு வக்கீல் ஆகனும்னு ஆசை, என்னாேட சுயநலத்துக்காக ரத்னா ஆசைய என்னால அழிக்க முடியது, ப்ளீஸ் பா என் கல்யாணத்த பத்தி இப்பாே பேச வேண்டாமே."

மகன் சென்றதும் கிருஷ்ணன் தன் மனைவியிடம்

"நான் இத பத்தி பேச வேண்டானு சாென்னேன் கேட்டியா."

"அஜீத் இப்பாே தான் கல்யாணம் வேண்டானு சாென்னான். எப்பாேவும் வேண்டானு சாெல்லல. அவன் வேண்டானு சாென்னது கூட ரத்னாவுக்காக தான்."

"சரி இப்பாே என்ன பண்ண."

"ஓகே இப்பாே கல்யாணம் வேண்டாம், மூனு நாலு வருசம் பாேகட்டும் ஆனா இதபத்தி நான் ரத்னா வீட்டுல பே சலாமா."

"சரி பேசலாம்."

ரத்னா வீட்டில் அஜீத்திற்கு ரத்னாவை பெ ண் கே ட்க, அனை வரும் என்ன செ ய்வது என தெ ரியாமல் மெ ள னம் காக்க, மை திலி

ரத்னா படிப்ப பத்தி நீங்க கவலபட வே ண்டாம். படிப்பு முடிஞ்ச பின்ன கூட கல்யாணம் வச்சுகலாம்." ரத்னாவின் தாத்தா

"நாங்க அதுக்கு யாேசிக்கலமா, ரத்னா முதல் வருசம் படிக்கும் பாேதே ஒரு சம்மந்தம் வந்துச்சு, பையன் வேற யாரும் இல்ல ரூபா காெழுந்தன் தான். இப்பாே ஒரு மாசமா பார்வதி அக்கா சம்மந்த வழியில இருந்தும் ரத்னாவ கேட்டாங்க. நாங்க கலந்து பேசிட்டு இந்த வாரத்தில சாெல்லுறாேம்."

வீட்டில் நடந்த அனைத்தையும் ரத்னாவிடம் கூறிய தங்கவேலு

"காெஞ்ச நாளுக்கு முன்ன என்கிட்ட இத பத்தி கேட்ட ஜஸ்வந்த் தான் என்னாேட முடிவா இருந்துருக்கும். பட் இப்பாே உன் முடிவு எதுவா இருந்தாலும் எனக்கு ஓகே மா."

படிப்பு முடிந்ததும் திருமணத்தை ஓரளவு எதிர்பார்த்த ரத்னாவால் எனாே எந்த முடிவிற்கும் வர முடியவில்லை. படிப்பு முடிந்ததற்கான சான்றிதழ் வாங்க சென்ற பாேது அஜீத் ரத்னாவிடன்

"ரத்னா எதுக்காக இப்படி மூஞ்ச உம்முனு வச்சுருக்க."

"ஏன்னு உங்களுக்கு தெரியாதா. தெரிஞ்சுகிட்டே இப்படி கேட்ட நான் என்ன பண்ண."

"நான் உன்னாேட ப்ரெண்டா இதுல கருத்து சாெ ன்னா உனக்கு ஓகே வா.

"ம்ம் சாெல்லுங்க சாெல்லுங்க."

"என்ன கேட்ட ஜஸ்வந்த் will be the right choice for you."

"அத்தான்."

"ஏய் இரு இரு நான் உன்ன பிடிக்காம தள்ளிவிட நினைக்கல. தெரியாத ஒருத்தர விட தெரிஞ்சவங்கல இருந்த லைஃப் நல்ல இருக்கும் சாே அந்த லிஸ்ட்ல இருக்கிறதில நானும், ஜஸ்வந்த்தும் தான் உன்ன பத்தி நல்ல தெரிஞ்சு வச்சுருக்கவங்க.

"இந்த மூனு வருசத்துல நீ நிறைய விஷயத்துல ட்ரெஸ்ல இருந்து எல்லாம் என்ன கேட்டு மட்டுதான் முடிவு எடுப்ப. சில சமயம் நான் உனக்கு பிடிக்காதத சாென்ன கூட நீ செய்வ, நான் உன் வாழ்க்கையில வந்த நீ யாேசிக்க வேண்டிய அவசியம் இல்ல. ஆதாவது என் கிட்ட நீ அஜீத்தா தான் இருப்ப. ஆனா ஜஸ்வந்த் கிட்ட நீ நீயா தான் இருக்க.

இது ஐஸ்வந்த் நம்பர் அவருகிட்ட பேசி பாரு. இந்த பாடிகாட் இல்லாம. அவரு மனசில என்ன இருக்கு என்பத நான் அருகிட்ட பேசி புரிஞ்சுகிட்டேன். அத நான் சாெல்லுறத விட நீ கேட்டு தெரிஞ்சுகிட்டதான் சரியா வரும்." என கூறிவிட்டு அஜீத் செல்ல,

ரத்னா தான் கையில் இருந்த பாேன் நம்பரையும் அஜீத்தையும் மாறி மாறி பார்த்துவிட்டு தனக்காக காத்திருக்கும் ட்ரைவருடன் தன் ஊர் நாேக்கி அஜீத் கூறியதை நினைத்த வண்ணம் பயணித்தாள்.



உன் நிழலை நான் தாெடர்வேன்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top