உன் கண்ணில் என் விம்பம் teaser 24

mila

Writers Team
Tamil Novel Writer
#1
ரொம்ப போர் அடிக்குதுனு டீஸர் ஓட வந்தேன் செல்லம்ஸ் படிச்சிட்டு சொல்லுங்க.:geek::geek:

8 (8).jpg

அமுதனை விட பிரதீபன் ஒரு வருடம் பெரியவன் என்றதும் ப்ரதீபனுக்குத்தான் முதலில் கல்யாணம் பண்ணனும் என்று பெரியவர்கள் பேசிக் கொள்ள

"திலகா அத்த ஒரே பொண்ண பெத்தாங்க அவளை எங்கண்ணன் கரெக்ட் பண்ணிட்டான். மங்கா அத்த பொண்ண தனா கல்யாணம் பண்ண போறான் எனக்கே அத்த பொண்ணு இல்லாம நா திண்டாடுறேன். என்ன கவனிக்க யாருமில்ல" அமுதன் சோகமான குரலில் சொல்ல

"பிரதீபன் அண்ணாக்கு நா ஏற்கனவே பொண்ணு பார்த்துட்டேன். அமுதன் அத்தான் உங்களுக்கு பொண்ணு வேணா நா பார்க்கட்டுமா?" என்றவாறு குளிர் பண குவளைகளோடு வந்த யாழிசை அனைவருக்கும் கொடுக்க ரிஷி மனைவியை தான் பாத்திருந்தான்.

"அவன் அப்படித்தான் சைட் அடிப்பான் நாம கேட்டா எடக்கு மடக்கா ஏதாச்சும் சொல்லுவான்" ப்ரதீபனின் காதை கடித்த அமுதன் குளிர்பானத்தை அருந்த,


download (6).jpg


"யாரு பொண்ணு ஒரு வேல உன் அண்ணனுக்கு சொந்தத்துலையே பொண்ணு பார்த்து இருக்கியா?" இளவேந்தன் யோசனைக்குள்ளாக

"ஒருவேளை அகல்யாவை சொல்கிறாளா? அவளுக்கு இப்போ தானே இருப்பது வயது ஆரம்பிக்குது. ப்ரதீபனுக்கு முப்பது இது சரிப்பட்டு வருமா? " என்று அமுதன் ரிஷியை பார்க்க "உயிர் நண்பன்னு சொல்லுறேன் எனக்கு இது தோணலையே! இவ பேசினா யாரும் மறுக்க மாட்டாங்க" என்றவனின் பார்வை மனைவியின் மீதே இருந்தது."இந்த கல்யாணம் எல்லாம் எனக்கு செட் ஆகாது என்ன விடு தாயே" பிரதீபன் கையெடுத்துக் கும்பிட

"செட் ஆகாது எண்றவங்கதான் பொண்டாட்டி பின்னாடியே நூல் பிடிச்சி கிட்டு அலையிறாங்க" அமுதன் ரிஷியை கண்ணால் காட்டி சொல்ல யாழிசையின் முகத்தில் மெல்லிய புன்னகை மலர்ந்தது.


images (14).jpg


"மிங்கிள் ஆகணும் னு நினைக்கிற என்னையெல்லாம் விட்டுட்டு முரட்டு சிங்கள மிங்கிள் ஆக்க இவ்வளவு மெனக்கிடணுமா? என் கிட்ட கேட்டா உடனே சரி னு சொல்வேன். இந்த தனா பய என்ன விட சின்னவன் அவனுக்கெல்லாம் கல்யாணம் ஆகா போகுது எங்க இந்த சிவா... கொஞ்சம் பையன் கல்யாணத்த பத்தி யோசிக்க வேணாமா?" அமுதன் பெருமூச்சு விடஅவன் சொல்வதை கேட்டுக் கொண்டே வந்த சிவரஞ்சனி "நா இல்லாத இடத்துல இப்படித்தான் என் பேர ஏலம் போடுவியா" என்றவர் அமுதனின் காதை திருகி விட்டு செல்ல

"கரெக்டா என்ட்ரி கொடுக்குறதுல எங்கம்மாவை மிஞ்சவே முடியாது" என்றவன் காதை தடவிக் கொண்டான்.

"அண்ணா என் மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்கு தானே! நா சொல்லுற பொண்ண கட்டிப்பீங்க தானே" கயல்விழி ப்ரதீபனின் கண் பார்த்து கேக்க அவள் வார்த்தையில் கட்டுண்டவனின் தலை தானாக ஆடியது.

"சிக்கிட்டாண்டா. எவ வந்து இவன் லைஃப்புல கும்மி அடிக்க போறாளோ" அமுதன் சிரிக்க

"அம்மு இவ்வளவு உறுதியா சொல்லுறான்னா கண்டிப்பா அவ எண்ணத்துல ஒரு பொண்ணு இருக்கா. யாரா இருக்கும் யோசனையில் விழுந்தான் பிரதீபன்.
 
Advertisement

Sponsored