உன் கண்ணில் என்னை கண்டேன் prefinal epi (25)

Advertisement

Karthikpriya

Active Member
உன் கண்ணில் என்னை கண்டேன்
25

அடுத்த அனாடமி வகுப்பில் அவளை பார்த்த ஆசிரியர், “இது தான் இந்த மாதத்தோட கடைசி வகுப்பு. உனக்கும் இது தான் கடைசி வாய்ப்பு கவனமாக பயன்படுத்திக்கொள்” என்று கூறி விட்டு நகர்ந்தார்.

வர்ணா ஒரு வித உறுதியான நம்பிக்கையுடன் அவர் நடத்தும் வகுப்பை கவனிக்க தொடங்கினாள்.

சார் நடத்தும் அனைத்து பாடத்தையும் முழுதாக கவனித்தவள் செய்முறை என்று வரும்போது திணறத் தொடங்கினாள். கை நடுக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் செய்முறையை பாதியில் நிறுத்திவிட்டு சித்தார்த்தின் கையை இரு கைகளாலும் கெட்டியாக பிடித்துக்கொண்டாள்.

சித்தார்த்தும் அவளால் முடியும் என்று அவளின் காதருகே விடாமல் மெதுவாக கூறிக்கொண்டே இருந்தான். சிறிது நேரம் கழித்து கொஞ்சம் ஆசுவாசபட்டபின் தனது செய்முறையை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தாள்.

பத்து நிமிடம் கூட தாண்டியிராத நிலையில் திரும்பவும் மயக்கம் வரும் போல் தோன்றவே அருகில் இருந்த இருக்கையில் சிறிது நேரம் அமர்ந்து விட்டாள். பின் திரும்பவும் வேலையை தொடர்ந்தாள்.

இப்படியே சிறிது நேரம் ஆசுவாசம் சிறிது நேரம் வேலை என்று மற்றவர்கள் முடித்து வெளியில் சென்ற பின்னும் தன் செய்முறையை தொடர்ந்துக் கொண்டிருந்தாள் வர்ணா.

அனைத்து மாணவர்களும் சென்ற பின்னும் அவளின் ஆசிரியர் அவளிடம் சிறிதும் தன் கோபத்தை காட்டாது அவள் அருகில் வந்து, “அவ்வளவு தான் நன்றாக செய்கிறாய். அப்படி தான், சரியாக செய்கிறாய்” என்று ஊக்க படுத்தியவாறு சிறிதும் அவசரம் காட்டாது பொறுமையாக அவளுடன் நின்றிருந்தார்.

அனைத்தும் சிறு பிழை இல்லாது செய்து முடித்தவள் ஆசிரியரிடம் காட்டி அவரின் பாராட்டை பெற்ற பின்னும் அவளின் முகம் சுணக்கமாகவே இருந்தது.

பின் ஆசிரியர் வெளியேறியதும் அதற்காகவே காத்திருந்தது போல் வேகமாக வெளியில் வந்தவள் அவளுக்காக காத்திருந்த சித்தார்த்தை இடித்து தள்ளிவிட்டு வேகமாக எங்கோ ஓடினாள்.

என்ன ஆனது என்று புரியாமல் ஒரு நிமிடம் அதிர்ந்தவன் அவள் பின்னே ஓட தொடங்கினான். அவனின் அருகில் இருந்த ரம்யாவும் நிலாவும் அவனை தொடர்ந்தனர்.

அவள் பின்னே ஓடி வந்தவன் அவள் ரெஸ்ட் ரூம் செல்வதை கவனித்து பாதியில் நின்றுவிட்டான். அவனை தொடர்ந்து வந்த இருவரும் அவன் அவ்வாறு நிற்பான் என்று தோன்றாததால் அவன் மீது மோதியவாறு சமாளித்து நின்றனர். பின் வர்ணா ரெஸ்ட் ரூமில் நுழைவதை கண்டு அவர்களும் அவளை பின் தொடர்ந்து உள்ளே வந்தனர்.

உள்ளே வந்தவர்கள், வர்ணா குடலே வெளியில் வரும் அளவுக்கு வாந்தி எடுப்பதை கண்டு அதிர்ந்து நின்றனர். பின் சுதாரித்து அவளின் அருகில் வந்தவர்கள் அவளின் முகத்தை தன் கர்சீப்பால் துடைத்து விட்டு கைதாங்களாக வெளியில் அழைத்து வந்தார்கள்.


அனைவரும் வகுப்பு முடிந்து சென்றிருக்கவே இவர்களும் சிறிது நேரத்தில் கிளம்ப தயாராகினர்.

சித்தார்த் நிலாவிடம், “வர்ணா ரொம்ப டயர்டா தெரியிறா அதனால் ஜூஸ் குடித்துவிட்டு போகலாம்” என்று அழைத்தான். ஆனால் ஏற்கனவே தாமதமானதால் ரம்யாவும் நிலாவும் தாங்கள் வீட்டிற்கு செல்வதாக கூறி வர்ணாவிடமும் பத்திரமாக செல்லும்படி கூறிவிட்டு கிளம்பினார்கள்.

வர்ணாவை பொறுமையாக அழைத்து வந்தான். ஜூஸ் கடை அருகில் வந்ததும் வர்ணா உள்ளே வர மறுத்தாள். ஏன் என்று கேட்டதற்கும் மௌனமாகவே இருந்தாள்.

அப்போதுதான் அவள் சோர்வையும் மீறி அவளின் முகத்தில் இருந்த வெறுப்பை கவனித்த சித்தார்த் கடையின் உள்ளே செல்லாது வெளியில் போடபட்டிருந்த இருக்கையில் அவளை அமர வைத்து அவனும் அருகில் அமர்ந்தான்.

“என்ன ஆச்சு வரு? இவ்வளவு நேரம் டயர்டா இருக்கனு மட்டும் தான் நினைத்தேன். இப்போது பார்த்தால் உன் மனதில் விரும்பத்தகாத ஏதோ என்று ஓடுவது போல் இருக்கே. என்ன டா?” என்று பொறுமையாக கேட்டான்.

இப்போதும் அவள் தலை குனிந்தவாறு அமைதியாக அமர்ந்திருந்தாள்.

“என்ன ஆச்சு டா? ஏதாவது சொன்னால் தானே புரியும்” என்று இப்போதும் பொறுமையாகவே கேட்டான்.

தலை குனிந்தவாறே அமர்ந்திருந்தவள் மெதுவாக, “நான் இந்த கோர்ஸ் டிஸ்கண்டின்யு பண்ணலாம்னு நினைக்கிறேன். எனக்கு எல்லாம் டாக்டர் படிப்பு ஒத்து வராது. நான் எவ்வளவு கட்டுப்படுத்தியும் என்னால அங்க ஒழுங்கா செய்முறை செய்யவே முடியல டா. இப்படியே இருந்தால் பியூச்சர்ல யாருக்காவது தப்பாக ஏதாவது கொடுத்து விடுவேனோனு பயமாக இருக்கு டா” என்று கண் கலங்க கூறினாள்.

“இல்லை வரு. நீ அந்த மாதிரி எந்த தீங்கும் யாருக்கும் பண்ண மாட்ட டா. நானும் முதலில் உன்னால முடியாது விட்டுட்டு வேற கோர்ஸ் எடு என்று தான் சொன்னேன். ஆனால் எல்லோரும் ஆச்சிரிய படும் அளவுக்கு நீ இதிலிருந்து படி படியா வெளிய வந்துட்டிருக்க. இன்னும் கொஞ்ச நாளில் மொத்தமா சரி ஆகிடுவ பயப்படாத. தொடர்ந்து இதே போல் வேலை செய்வதால் அப்படி இருக்கு. இப்போ கொஞ்சம் ரிலாஸ்டா உட்காரு. நான் போய் உனக்கு லெமன் ஜூஸ் வாங்கிட்டு வரேன். வாமிட் பண்ண வாய்க்கு கொஞ்சம் நல்லா இருக்கும்” என்று கூறிவிட்டு எழுந்தான்.

அதே நேரம் சாலையில் “டொம்” என்ற சத்தத்தோடு ஒரு பைக்கும் காரும் மோதி கொண்டதை பார்த்து ஒரு நிமிடம் பயந்தவர்கள் அவர்களுக்கு தங்களின் உதவி தேவை படும் என்று வேகமாக அவர்களின் அருகில் சென்றனர்.


காரில் இருந்தவர் ஆர் பாக்(air bag) திறந்ததால் சிறு கீறல்களை தவிர வேறெந்த அடியும் இல்லாமல் தப்பினார். ஆனால் பைக்கில் வந்தவருக்கு பலமாக அடி பட்டதால் ரத்தம் அதிகமாக வெளியேறி மயங்கி இருந்தார்.

இதை பார்த்ததும் வர்ணா அருகில் வராமல் நின்று விட்டாள். சித்தார்த் அருகில் இருந்தவரிடம் ஆம்புலன்ஸுக்கு அழைக்க சொல்லிவிட்டு அடிபட்டவரின் அருகில் சென்று அவரின் கழுத்தில் கை வைத்து நாடி பார்த்தான்.

பின் உதவிக்கு வர்ணாவை தேட அவள் அருகில் இல்லாததால் சீக்கிரம் வருமாறு பதட்டத்தில் இரைந்தான். வர்ணா மெதுவாக அவனின் அருகில் வந்து நிற்கிறாள்.

சித்தார்த் வேகமாக அவரின் சட்டையை கிழித்து அவரின் நெஞ்சை அழுத்தியவாறு வர்ணாவையும் உதவிக்கு அழைத்தான். வர்ணா அவரின் ரத்தத்தை பார்த்ததும் மயங்க தொடங்கினாள். இதை பார்த்த சித்து அவளை உதவி செய்யச் சொல்லி கத்தினான்.

“தலையில் இருந்து ரத்தம் அதிகமா வருது. ப்ளஸ் அதை தடுக்க முயற்சி செய்” என்று கூறியவாறே அவருக்கு தன் வாய் மூலமாக சுவாசம் கொடுக்க முயன்றான்.

வர்ணா மெதுவாக அவரின் தலை அருகே கையை கொண்டு சென்றவள் வேகமாக நகர்ந்து அங்கிருந்து ஓட பார்த்தாள். இவளின் மீது ஒரு கண் வைத்திருந்த சித்தார்த் உடனே அவளின் கையை பிடித்து அவளை தடுத்தான்.

“வர்ணா எனக்கு தெரியும், உனக்கு எவ்வளவு பயமாகவும் கஷ்டமாகவும் இருக்கும் என்று. ஆனால் நம் கஷ்டத்தை விட இவரின் நிலை மோசமாக உள்ளது. ஆம்புலன்ஸ் வரும் வரை நாம் தான் இவரின் உயிரை பிடித்து வைக்க வேண்டும். உதவி செய் ப்ளீஸ். மத்தவங்க யாரும் கண்டிப்பா வர மாட்டாங்க எல்லாருக்கும் போலீஸ் பயம் அதுவும் இல்லாம எப்படி உதவி பண்ணனும்னும் தெரியாது. அதனால் நீ தான் உன் பயத்தை சிறிது நேரம் ஒதுக்கி விட்டு மனித நேயத்தோடு உதவி செய்யணும்.” என்று வேகமாக விளக்கினான்

“அவரோட தலையை அழுத்தமா பிடி. ரத்தம் வெளியேறாமல் பார்த்துக்கோ நான் பஸ்ட் எயிட் கொடுக்கணும்” என்று கூறிக்கொண்டே அவருக்கு முதலுதவி கொடுக்க தொடங்கினான்.

சித்தார்த் சொல்வது புரிந்து வர்ணா அவரின் தலையை தன் மடியில் தூக்கிப்பிடித்தவாறு வைத்து வேகமாக ரத்தம் வெளியேறுவதை கட்டுப்படுத்தினாள். பின் கண்ணை மூடி கத்திகொண்டே அவரின் தலையை அழுத்தமாக பிடித்து கொண்டாள்.

சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வரவே அவர்கள் இருவரும் சேர்த்து அவரை ஆம்புலன்ஸில் ஏற்ற உதவினார்கள். பின் இவர்களும் அடிபட்டவருக்கு உதவியாக ஆம்புலன்ஸில் ஏறிகொண்டார்கள்.

மருத்துவமனை வந்ததும் வர்ணா ஒரு இருக்கையில் அமர்ந்து வேறு எந்த நினைவும் இல்லாது அவர் பிழைக்க வேண்டும் என்று விடாமல் ஜபித்தவாறே கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்தாள். சித்தார்த் அழைத்தும் காதில் வாங்காது வேண்டிக்கொண்டிருந்தாள்.

அடிபட்டவரின் உடமைகளை செவிலியர் கொண்டுவந்து தரவே வேகமாக அவரின் தொலைபேசியை தேடி எடுத்தான்.

அது விபத்தில் சுக்கு சுக்காக உடைந்து கையில் தொட்டால் கூட கிழித்துவிடும் நிலையில் இருந்தது. பின் அதில் இருந்த சிம்மை கழட்டி தன் போனில் போட்டு அவரின் வீட்டு தொலைபேசி எண்னை தேடி அவர்களுக்கு தகவல் தந்தான். வீட்டில் பேசும்போது அவரின் பெயர் சுரேஷ் என்பதை தெரிந்துகொண்டான்.

சிறிது நேரத்தில் ஒரு பெண்மணியும் அவரின் இரு கைகளையும் பிடித்தவாறு ஒரு பையனும் ஒரு சிறு பெண் பிள்ளையும் உள்ளே நுழைந்தனர்.

அவரின் அழுத முகத்தை பார்த்து அவரின் அருகில் சென்றவன் நீங்க சுரேஷ் அவர்களின் மனைவியா என்று கேட்டு தெளிவு செய்ததும். விபத்து பற்றிய விபரங்களை கூறி இப்போது சிகிச்சையில் இருப்பதையும் தெரிய படித்தினான்.

அவரும் இவனுக்கு நன்றி கூறிவிட்டு அழுதவாறே வந்து இருக்கையில் அமர்ந்து மருத்துவரின் வருகைக்காக காத்திருக்க தொங்கினார்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top