உன் கண்ணில் என்னை கண்டேன் epi 6

Advertisement

Karthikpriya

Active Member
உன் கண்ணில் என்னை கண்டேன்
6
மருத்துவமனையில் வர்ணாவை அட்மிட் செய்துவிட்டு அனைவரும் பயத்தோடு வெளியில் காத்திருந்தனர். சிறிது நேரம் கழித்து டாக்டர் வெளியில் வந்தார்.
டாக்டர், “வர்ணாவுக்கு பிளட் போபியா(இரத்த பயம்) என்கின்ற நோய் இருக்கு. அவ இதுவரை இரத்தத்தை பார்க்காம திடீர்னு பார்த்ததும் பயந்து மயங்கிட்டா. இப்போ ரெஸ்ட் எடுத்திட்டு இருக்கா. கொஞ்ச நேரத்தில் முழித்ததும் நர்ஸ் வந்து கூப்பிடுவாங்க ஒவ்வொருதரா போய் பாருங்க. வர்ணாவோட அப்பா, அம்மா மட்டும் என் ரூம்க்கு வாங்க எப்படி பாத்துக்கணும்னு டீடெயில்ஸ் தரேன் நோட் பணிக்குவீங்க.” என்று கூறி டாக்டர் நகர்கிறார்.
வர்ணா முழித்ததும் அவளை பார்த்துவிட்டு வர்ணாவின் குடும்பமும் சித்துவின் குடும்பமும் டாக்டர் முன் வந்து நிற்கின்றனர், அவர்களை அமர சொன்ன டாக்டர், “பிளட் போபியான்றது இப்போ சின்ன பசங்க நிறைய பேருக்கு வர ஆரம்பித்துவிட்டது இதற்காக பயப்பட தேவை இல்ல கொஞ்சம் முன் எச்சரிக்கையோடு இருந்தாலே போதும். இந்த போபியா வரும்போது இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம் குறைய ஆரம்பித்து விடும். இதனால் மூளைக்கு போகும் இரத்த ஓட்டம் குறைந்து கண்கள் சொருகி மயக்கமடைந்து விடுகிறார்கள். இப்படி திடீரென இரத்த அழுத்தம் குறைவதற்கு வாசோவாகல் ரெஸ்பான்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
மூச்சு விட முடியாது, நெஞ்சில் லேசாக வலி தென்படும், லேசான தலைவலி, உடம்பு சில்லென்று ஆகி விடும், வேகமாக இதயத் துடிப்பு இருக்கும்.
சிலருக்கு இந்த போபியா பரம்பரை ரீதியாக முன்னோர்களிடமிருந்து கூட வரும். மரபணு இணைப்பு இருந்தாலோ அல்லது இயற்கையாக மிகுந்த உணர்ச்சி பூர்வமாக இருக்கும் நபர்களுக்கு இந்த போபியா இருக்க வாய்ப்புள்ளது. இது ஒரு சாதாரண பிரச்சினை தான். இதை நினைத்து கவலைப்பட வேண்டாம். அவளுக்கு நாள்பட்ட குறைவான இரத்த அழுத்தம் இருந்து கொண்டே இருந்தால் மட்டுமே நீங்கள் மருத்துவரை அணுக வேண்டியது வரும். மற்றபடி இது குறித்து பயப்பட வேண்டாம்.
அவளுக்க மயக்கம் வர்ற மாதிரி இருந்தால் அருகில் ஒரு இடத்தை பார்த்து முதலில் உட்கார்ந்து கொள்ள சொல்லுங்கள். அப்படியே படுத்துக் கொண்டு கால்களை உயர்த்த சொல்லுங்கள். இப்படி செய்யும் போது இரத்த ஓட்டம் மூளைக்கு போய் கொஞ்சம் மயக்கம் தெளிந்து விட வாய்ப்புள்ளது. அதே மாதிரி ஊசி போடும் போது இரத்தத்தை கண்டாலோ, இரத்த பரிசோதனைக்கு சென்றாலோ நிதானமாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். வேண்டும் என்றால் கண்ணை மூடிக் கொள்ளலாம். இரத்தத்தை பார்க்காத வரை அவள் பதட்டமடையமாட்டாள். அவளுக்கு இந்த பிரச்சினை மிகுந்த தொந்தரவாக இருந்தால் மருத்துவரை அணுகி விடுவது நல்லது. டெய்லி யோகா தியானம் செய்ய சொல்லுங்க போதும்.” என்று தன் அறிவுரைகளை முடிக்கிறார்.
மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்த அனைவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர். சிறிது நேரம் பொறுத்து பார்த்த சித்தார்த், “எல்லாரும் ஏன் இப்படி அமைதியா இருக்கீங்க? அவளுக்கு ஒன்னும் இல்ல, இப்படி சோகமா இருந்து அவளை பயபடுத்தாதீங்க. நான் அவ கூடவே இருந்து அவளை பார்த்துக்கொள்கிறேன்.” என அவர்களுக்கு வாக்குறுதி கொடுக்கிறான்.
இதை கேட்ட பெரியவர்கள் அனைவரும் தங்கள் தவறை உணர்ந்து வர்ணாவிடம் பேசி அவளை கலகலப்பாக்க முயன்றார்கள்.
வர்ணாவின் பிரச்சனை தெரிந்ததில் இருந்து வர்ணாவும் சித்துவும் இன்னும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். வர்ணா எங்கு சென்றாலும் சித்தார்த்தின் துணையுடன் தான் செல்ல வேண்டும் என்று எழுதாத சட்டம் ஒன்று உருவானது. இதனால் அவர்களின் நட்பும் வளர்ந்தது. இதை அனைத்தையும் வர்ணா தன் அப்பா கொடுத்த புது டைரியில் எழுத ஆரம்பித்தாள். சில நிகழ்வுகளை வரைந்தும் வைத்தால். இதனால் வர்ணாவிற்கு தினமும் டைரி எழுதும் பழக்கம் உருவானது. அதே நேரம் சித்தார்த் மனதில் எப்படியாவது டாக்டர் ஆகி இவளின் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற முதல் வித்து விழுகிறது.
இப்படியே பல வருடங்கள் உருண்டோட தற்போது வர்ணாவும் சித்துவும் பனிரெண்டாம் வகுப்பில் இருந்தனர். இதற்குள் குறைத்தது எட்டு முறையாவது ரத்தத்தை பார்த்து வர்ணா மயங்கி இருப்பாள். சில முறை சின்ன சின்ன அக்சிடேன்ட்டால் ஏற்படும் ரத்தத்தை பார்த்தும் சில முறை சிறுவர்கள் அடித்துக்கொள்ளும் போது சிறு காயங்களில் இருந்து வரும் ரத்தத்தை பார்த்தும் மயங்கி இருக்கிறாள். (மாதவிடாய் சமயத்தில் இருக்கும் ரத்தபோக்கு, பிளட் போபியா இருக்கும் பல பெண்களுக்கு பாதிப்பை தருவதில்லை என்று கூற படுகிறது) ஒவ்வொரு முறை வர்ணா மயங்கிவிழும் போதெல்லாம் சித்தார்த் தான் முதலுதவி கொடுத்து பெற்றோர்களை அழைத்து டாக்டரிடம் கூட்டி செல்ல உதவுவான்.
சுபத்ரா தன் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு திருமணமும் முடிந்து பெங்களூருவில் தங்கியிருக்கிறாள். பிரேம் இப்போது ஆறாம் வகுப்பு படிக்கிறான். தற்போது நன்றாக உடம்பு வைத்து கொழுக் மொழுக் என்று அமுல் பேபி போல் குண்டாக இருக்கிறான்.


காலையில் எழுந்த அனைவரும் தங்களின் அன்றாட அலுவல்களுக்காக தயாராகிக் கொண்டிருந்தனர்.
வெங்கட், “வர்ணா இன்னைக்கு அம்மாவும் நானும் ஒரு பங்க்ஷன் போறோம் டா, உன் ஸ்கூல் போற வழி தான் அதனால அப்பாவே இன்னைக்கு உன்னையும் தம்பியையும் ட்ரோப் பண்ணிடறேன் டா குட்டி.”
வர்ணா, “அப்பா சித்து எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பான்னு தெரியாதா உங்களுக்கு?”
வெங்கட், “அவனையும் தான் டா பாப்பா கூப்பிட்டேன், அவன் அவனோட பிரண்ட் கூட போறேன்னு சொல்லிட்டான். நீ கொஞ்சம் சீக்கிரம் ரெடி ஆகு டா.” என கூறிக்கொண்டே தன் மகனை பள்ளிக்கு தயாராக்கி கொண்டிருந்தார்.
வர்ணா, “அப்போ ஓகே பா ரெண்டு நிமிஷத்துல வந்துடறேன் பா.” என தயாராக கிளம்பினாள்.
அதற்குள் விஜயா தன்னுடைய சேலையின் மடிப்பை சரி செய்துகொண்டே, “ஏங்க எல்லாரும் ரெடியா, கிபிட் பாக்ஸ் எங்க இருக்கு” என்ற கேள்வியுடன் கார் சாவியை கையில் எடுத்துக்கொண்டு அவரின் முன் வந்து நின்றார்.
வெங்கட், “எல்லாரும் ரெடி மா நீ போய் கார் எடு.” என கூறி அவரை கிளப்புகிறார்.
விஜயா, “பூர்ணிமா அக்கா நாங்க கிளம்பறோம், நீங்க வேலை முடிஞ்சதும் பாத்து கதவை பூட்டிட்டு போங்க.” என்று வழியில் வந்த பூர்ணிமாவிடம் கூறிக்கொண்டே கார் எடுக்க வேகமாக செல்கிறார்.
சொன்னது போலவே இரண்டு நிமித்தில் வெளியில் வந்த வர்ணாவை பார்த்து வெங்கட், “வர்ணா நீ உன் ஸ்கூல் பாக் கூட கிபிட் பாக்ஸையும் எடுத்துட்டு வாடா, நான் தம்பிய கூட்டிட்டு முன்னாடி போறேன்.”
வர்ணா, “ஓகே பா இதோ.”
அனைவரும் காரில் ஏறியதும் காரை கிளப்பிய விஜயாவை பார்த்த வர்ணா, “அம்மா இன்னைக்கு பிங்க்ஷன் முடுஞ்சதும் காஞ்சிபுரம் கிளம்பறீங்களா?” என கேட்டாள்.
விஜயா, “ஆமாம் டா குட்டி கொட்டேஷன் ஓகே பண்ணதும் இரண்டு நாள்ல அம்மா ஓடி வந்துடுவேன்.”என கூறி கொண்டே காரை வர்ணா, பிரேமின் ஸ்கூலின் முன் நிறுத்துகிறார். இருவரும் இறங்கி “பாய்” சொல்லி உள்ளே செல்கிறார்கள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top