உன் கண்ணில் என்னை கண்டேன் epi 4

Advertisement

Karthikpriya

Active Member
4th epi கொடுத்திருக்கேன் பிரண்ட்ஸ் கொஞ்சம் பாத்துட்டு 2 வரி கமெண்ட் கொடுங்க பிரண்ட்ஸ்

உன் கண்ணில் என்னை கண்டேன்
4

அன்று தீபாவளி விஜயாவும் லீவில் வீடு திரும்பி இருந்தார். அதனால் வர்ணாவை எழுப்பும் வேலை விஜயாவிடம் சேர்ந்தது. அப்பாவை தொல்லை செய்யாமல் எழும் வர்ணா, அம்மா என்று வந்தால் கொஞ்சம் கடுப்பேற்றிவிட்டு தான் எழுவாள். அன்றும் அப்படியே விஜயா எழுப்ப வந்தபோது அவரின் சேலை தலைப்பை இழுத்து தன் கழுத்துக்கு அடியில் வைத்து தூங்குவது, அவர் எழுப்ப எழுப்ப காதே கேட்காதது போல் உருண்டு படுப்பது என்று அரைமணி நேரத்திற்க்கு குறையாமல் படுத்திவிட்டே எழுந்தாள்.
வர்ணா, சித்தார்த், மற்றும் சுபத்ராவும் ஒன்றாக சேர்ந்து பட்டாசு வெடிக்க, பிரேம் தன் அப்பா மற்றும் சேகர் மாமா கைகளில் மாரி மாரி தாவி கொண்டு, ஒவ்வொரு பட்டாசின் சத்ததிற்கும் குதித்துக்கொண்டு இருந்தான்.
சிறிது நேரத்தில் பெட்டியில் இருந்த அனைத்து வெடி பட்டாசுகளும் தீர்ந்துவிட்டது. இரவு வான வேடிக்கை பட்டாசுகள் மட்டுமே மீதம் இருந்தது. இன்னும் வேண்டும் என வர்ணா அடம் பிடித்தாள். உடனே சித்தார்த், “அப்பா இன்னொரு பாக்ஸ் வாங்கி வந்திருக்காங்க கொஞ்ச நேரம் பொறு எடுத்து வரேன்.” என்று கூறி உள்ளே சென்றான்.
சித்தார்த் உள்ளே சென்ற சிறிது நேரத்தில் டொம் என்ற பட்டாசு வெடியும் அதை தொடர்ந்து வர்ணாவின் அழுகை குரலும் கேட்டு அடித்து பிடித்து வெளியில் ஓடி வந்தான் சித்தார்த்.
அனைவரும் சேர்ந்து வர்ணாவை சமாதான படுத்திக்கொண்டு இருந்தனர். வேகமாக வர்ணாவின் அருகில் வந்த சித்தார்த், “ நான் உள்ளே போய்ட்டு வர கொஞ்ச நேரம் கூட வர்ணாவை பாத்தரமா பாத்துக்க மாடீங்களா” என கத்திவிட்டு அவளிடம் சென்று சமாதான படுத்த முயன்றான். அவனை அனைவரும் ஒரு மாதிரியாக பார்ப்பதை பொருட்படுத்தாமல், “வர்ணாமா என்ன டா ஆச்சு? எங்க அடிபட்டிச்சு காமி” என்று கொஞ்சி கொண்டே அவள் முகத்தை நிமிர்த்துகிறான். அவனை நிமிர்ந்து பார்த்த வர்ணா, “எனக்கு எதுவும் அடி படலை சித்து அப்பாக்கு தான் கால்ல அடி பட்டிருக்கு. அவர் எப்படி நடப்பாரு? எப்படி கார் ஓட்டுவாரு? எப்படி வேலைக்கு போவாரு? “என்று அழுதுகொண்டே திக்கி திக்கி கூறுகிறாள்.
இதை கேட்ட சித்தார்த் உடனே வெங்கட்டின் காலடியில் அமர்ந்து அவரின் காலை ஆராய்ச்சி செய்கிறான். என்ன ஆராய்ச்சி செய்தும் எந்த அடியையும் அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை, அவர் காலின் ஓரத்தில் இருந்த ஒரே ஒரு கருப்பு தடத்தை தவிர.


கோபமாக திரும்பி வர்ணாவை பார்த்தால் இன்னும் அழுதுகொண்டு இருக்கும் வர்ணாவை மற்றவர்கள் சமாதானம் செய்துகொண்டு இருந்தனர். இதில் கடுப்பான சித்தார்த் வர்ணாவின் அருகில் சென்று, “இதுக்காடி இவ்ளோ அலப்பறை” என்று மனதில் புலம்பிக்கொண்டே, “அப்பாக்கு ஒன்னும் இல்ல டா, அப்பாக்கு பசிக்குதாம் வேற எந்த வலியும் இல்லையாம், வேண்டும் என்றால் நீயே கேட்டு பாரு” என கூற, வர்ணா உடனே நிமிர்ந்து தந்தையை பார்க்கிறாள். சூழ்நிலையை உடனே புரிந்து கொண்ட வெங்கட்டும், “ஆமாம் டா பட்டு அப்பாக்கு எங்கயும் வலிக்கவில்லை பசி தான் எடுக்குது சாப்ட போலாமா டா” என வயிற்றில் கை வைத்து கொண்டு பாவமாக கேட்கிறார். இதை பார்த்தவுடன் சமாதானமாகி அனைவரையும் அழைத்துக்கொண்டு உணவருந்த செல்கிறாள்.
மாலை ஓய்வாக அனைவரும் மாடியில் ஒன்று கூடினர். பெரியவர்கள் அனைவரும் பொதுவான விஷயங்களை பகிர்ந்துகொண்டிருக்க, சிறியவர்கள் சங்கு சக்கரம், கம்பி மத்தாப்பு, புஷ்வாணம் என்று வித விதமான இரவு பட்டாசுகளுடன் ஐக்கியமாகிவிட்டனர்.

விஜயா, “ஏங்க பிரேமுக்கு இன்னும் காது குத்தவே இல்லையே, இப்போ கார்த்திகை மாதம் தான் தொடங்க போகுது, எனக்கும் பத்து நாள் லீவு இருக்கு அவனுக்கு காது குத்திடலாமா?”என கேட்டார். விஜயாவுக்கு விடுமுறை அவ்வளவாக கிடைக்காததால் காதுகுத்து வைபவம் தள்ளிக்கொண்டே போனது, அதுதான் ஐந்தாம் வயதை எட்ட போகும் பிரேமுக்கு இன்னும் காது குத்தாததின் இரகசியம்.
வெங்கட், “சரி மா. நானும் கொஞ்ச நாளாவே யோசிச்சிட்டு தான் மா இருந்தேன். அடுத்த வாரம் ஞியாயிற்று கிழமை நல்ல நாள் தான் அன்னைக்கே பிரேமுக்கு காது குத்தி கெடா வெட்டி சாமி கூப்பிட்டு வந்துடலாம்.”என்று விஜயாவிடம் கூறியவர், சேகரின் புறம் திரும்பி, “உங்களுக்கும் ஓகே தான பா? சண்டே லீவு தான? போய்ட்டு வந்துடுவோமா?” என கேட்கிறார்.
சேகர் அமுதாவை திரும்பி பார்க்க, அவர் கண்களாலே சம்மதம் கூறியதும் வெங்கட்டிடம் திரும்பி, “அதுக்கென்ன பா போய்ட்டு வந்துடுவோம்.”என்று கூறி அந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
 

Attachments

  • Screenshot_20201007-132201_01.png
    Screenshot_20201007-132201_01.png
    1.2 MB · Views: 2

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top