உன் கண்ணில் என்னை கண்டேன் epi 2

Advertisement

Karthikpriya

Active Member
2nd episode கொடுத்திருக்கேன் பிரண்ட்ஸ் படித்துவிட்டு கமெண்ட் குடுங்க thanks

உன் கண்ணில் என்னை கண்டேன்

2

சமத்து செல்லக்குட்டி சித்தார்த், தற்போது 4ஆம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கிறான். அப்பா ஞானசேகர், பெரிய தொழிலதிபர். தன் மகளின் படிப்பிற்காக தற்போது திருச்சியில் இருந்து சென்னைக்கு குடிபெயர்த்துள்ளார். இங்கே புதியதாக ஒரு பிரென்ச் ஓபன் பண்ணி வெற்றிகரமாக நடத்தணும்னு வெறியோட களம் இறங்கியுள்ளார். அம்மா அமுதா, இல்லத்தரசி மற்றும் இல்லத்தின் அச்சாணியாக இருப்பவர். அக்கா சுபத்ரா, 10ஆம் வகுப்பில் காலடி எடுத்து வைக்கும் அழகிய பதுமை.
டெடிபெயரையே தோற்கடிக்கும் அழகு softy குட்டி angel வர்ணா. சிறிதும் கலப்படம் இல்லா பால் வண்ண பூ மொட்டு. அழகு குட்டி தங்க சிலை இவள். அப்பா வெங்கட், திறமையான பேங்க் மேனேஜர்.அம்மா விஜயா, பிஸியான ஆர்கிடெக்ட். மாதத்தில் பாதி நாள் வெளியூர் வாசம் தான்.தம்பி பிரேம், UKG படிக்கும் சுட்டி குட்டி. சமையல் வேலை மட்டும் வெங்கட் பார்த்துக்கொள்வார், விஜயா வீட்டில் இருக்கும்போது சமையல் அவர் பொறுப்பு. மற்ற வீட்டு வேலைக்கு பூர்ணிமா என்பவர் கவனித்து கொள்வார்.
விளையாட்டு மைதானத்தில் இருந்து வீடு திரும்பிய வர்ணா, “அப்பா” என கத்தி கொண்டே வருகிறாள். அவளின் அப்பா வெங்கட்டும், சொல்லு பாப்பா என கூறிக்கொண்டே ஹாலுக்கு வருகிறார். வர்ணா, “அப்பா உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? இன்னைக்கு எனக்கு ஒரு பிரண்ட் கிடைச்சான். அவன் ரொம்ப நல்ல பையனா இருக்கான் பா.” என சொல்லிக்கொண்டே குதிக்கிறாள். அதை பார்த்த வெங்கட்டும், “சரி டா பட்டு இன்னைக்கு நல்லா விளையாடினீங்களா?” என்று பாசமாக அவளின் தலையை தடவிக்கொண்டே கேட்கிறார். அவளும் இன்று நடந்த அனைத்தையும் தன் அப்பாவிடம் பகிர்ந்துகொள்கிறாள்.

“ அவன் நம்ப பிளாட்டுக்கு எதிர் பிளாட்ல தான் பா இருக்கான். அவனும் நாளைல இருந்து என் ஸ்கூல் தான் வர போறான் பா. அவனும் 4th தானாம் பா. இனிமேல் எல்லா இடத்துக்கும் நாங்க ஒண்ணாவே போய் விளையாடுவோம் ஒண்ணாவே படிப்போமே” என சொந்தோஷிக்கிறாள் வர்ணா.
வெங்கட், “ ஹ்ம்ம் நானும் காலைல அவனோட அப்பாவை பார்த்தேன் டா குட்டி அவரும் என்னோட பேங்க் பக்கத்துல புதுசா ஒரு கம்பெனி ஸ்டார்ட் பண்ணிருக்காராம். அவனை பற்றியும் பேசினார் ரொம்ப அமைதியான பையன்னு சொன்னார். அந்த வீட்ல உனக்கு ஒரு அக்காவும் இருக்காங்க டா. ஆனால் 10th படிக்கிறாங்க அதனால அதிகமா விளையாடலாம் வர மாட்டாங்க செல்லம். பார்க்கும் போது பேசி பழகு. ஓகே வா? “. என கூறுகிறார். வர்ணாவும், “சரி பா. அம்மா இந்த வீகென்ட் வருவாங்க தானே பா?” என கேட்கிறாள். அப்பாவும், “ஆமாம் டா வருவாங்க வந்து ஒன் வீக் உன்கூட தான் இருப்பாங்க. ஓகே?” என கேட்கிறார். வர்ணா, “ஹ்ம்ம் ஹ்ம்ம் சரி பா. நான் போய் ஹோம் ஒர்க் பண்றேன் பாய்.” என கூறிக்கொண்டே தன் ரூமுக்கு செல்கிறாள். வெங்கட்டும் தன் மகனை பார்க்க உள்ளே செல்கிறார்.

பரபரப்பான காலை பொழுது, “வர்ணா எழுந்து வா ஸ்கூல்க்கு டைம் ஆகுது பாரு” என்று வர்ணாவின் போர்வையை எடுக்கிறார் வெங்கட்.வர்ணா தூக்க கலக்கத்தில் எழுந்து அமர்வதை பார்த்துவிட்டு அவரும் பேங்க் செல்ல தயாராகுகிறார்.
தன் குடும்ப புகைப்படத்தை பார்த்துவிட்டு எழுந்து சென்று காலைகடன்களை முடித்துவிட்டு குளித்து முடித்து வெளியில் வருகிறாள் வர்ணா. வெங்கட் தயாராகி அனைவருக்கும் லஞ்ச் பாக்ஸ் சகிதம் வெளியில் வருகிறார். அதற்குள் பிரேமை தயார் படுத்தி பூர்ணிமா வெங்கடிடம் தருகிறார். அனைவரும் காலை உணவை முடித்து விட்டு கிளம்புகிறார்கள். வர்ணா லஞ்ச் பாக்ஸ் எடுத்து தன் ஸ்கூல் பாக்கில் வைத்துக்கொண்டு தன் சைக்கிளுடன் வெளியில் வருகிறாள்.

வீட்டில் இருந்து வெளியில் வந்த வர்ணா சித்துவின் வீட்டின் முன் நிற்கிறாள். அங்கு, சித்துவின் அம்மா அமுதா, “சித்து ரெடி ஆகிட்டீயா அப்பா வெயிட் பண்றார் பாரு சீக்கிரம் வா.” என்று குரல் கொடுக்கிறார். நம் சித்துவும், “இதோ அம்மா.” என கூறிக்கொண்டே தயாராகி கொண்டிருக்கிறான். அவனுடைய அப்பாவை பார்த்த வர்ணா, “ஹாய் அங்கிள் நீங்க தான் சித்துவோட அப்பாவா?” என்று ஆர்வமாக கேட்கிறாள்.
சேகர், “இல்ல மா அவன் தான் என்னோட பையன்.” என்று பெரிய ஹாஸ்யம் சொன்னது போல் சிரிக்கிறார்.
வர்ணா, “boring old joke uncle.”என்று கூறி முகத்தை சுளிக்கிறாள்.
இதை கெட்ட சித்தார்த்தின் அம்மா, “தேவையா உங்களுக்கு? காலைலயே சின்ன பொண்ணுகிட்ட பல்பு வாங்கறீங்களே.”என்று சிரிக்கிறார்.
அதற்கு வர்ணாவும், “கரெக்ட் ஆண்ட்டி.”என்று சிரிக்கிறாள்.
சேகர், “இல்லமா நான் சின்ன புள்ள கிட்ட சொல்ற ஜோக் தான் சொன்னேன். இவள் பெரிய வாயாடியா இருப்பா போல இருக்கு.” என கூறி சிரித்துக்கொண்டே அவள் தலையில் செல்லமாக தட்டுகிறார்.
வர்ணாவும் சிரித்துவிட்டு, “எங்க அங்கிள் சித்தார்த்?” என்று கேட்கிறாள்.
சேகர், “நானும் அவனுக்காக தான் டா வெயிட் பண்றேன். முதல் நாளே தாமதமாக போக போறான் போல இருக்கு.”
வர்ணா, “ஏன் அங்கிள் அவன்ட சைக்கிள் இல்லையா?”
சேகர், “இருக்கு மா ஆனா அவனுக்கு வழி தெரியாதே. அதான் அவனுக்கு வழி எல்லாம் பழகிகற வரை நான் வந்து விடலாம்னு இருக்கேன் மா.”
வர்ணா, “அதுக்கென்ன அங்கிள் நானும் அவனும் ஒரே ஸ்கூல் தான். நாங்க ரெண்டு பேரும் ஒன்றாக சைக்கிள்ல ஸ்கூல் போறோம் அங்கிள். நான் அவனை பத்திரமா கூட்டிட்டு போறேன் நீங்க கவலை படமா கிளம்புங்க அங்கிள்.” என்று கூறுகிறாள்.
இவள் பேசுவதை கெட்டவாறே வெளியில் வந்த வெங்கட், “ஆமாம் சேகர் வர்ணா தினமும் சைக்கிள்ல தான் ஸ்கூல் போவா சித்துவை நம்பி அனுப்பு, அவ பார்த்துப்பா.”என கூறுகிறார்.
சேகர், “ ஓ அப்போ சரி, அம்மு அவனை பார்த்து அனுப்பு நான் வெங்கட் கூட கிளம்பறேன்.” என அமுதாவிடம் கூறி கிளம்புகிறார்.
வெங்கட், “சரி பாப்பா நானும் கிளம்புகிறேன் பார்த்து பத்திரமா சிந்துவையும் கூட்டிட்டு போய்ட்டு வா.bye.”என கூறி சேகருடன் கிளம்புகிறார்.
சித்துவும் வெளியில் வர அமுதா அவனை வர்ணாவுடன் சைக்கிள் எடுத்து போக சொல்லி கூறுகிறார்.சித்தார்த்தும் சரிம்மா என கூறி சைக்கிள் எடுத்து வருகிறான்.
சித்துவும் வர்ணாவும் பேசிக்கொண்டே சைக்கிளில் செல்கிறார்கள்.
வர்ணா, “நீ உங்க ஸ்கூலில் என்ன ரேங்க் வருவ?”
சித்தார்த், “1st இல்லனா 2nd. நீ?”
வர்ணா, “நான் எப்போவும் first 5 ரேங்க்குள்ள வருவேன்.” என கூறி பள்ளி மற்றும் படிப்பை பற்றி பேசிக்கொண்டே சைக்கிளை மிதிக்கிறார்கள்.
சிறிது தூரம் சென்றதும் சைக்கிளில் ஒரு குண்டு பையன் வர்ணாவின் பக்கம் வருகிறான்
குண்டு பையன், “வர்ணா உனக்கு கூட ஒரு பிரண்ட் இருக்கானா?” என ஆச்சிரியமாக கேட்கிறான்.
வர்ணா, “ஆமாம். நீ போடா குண்டா.” என கோபமாக முறைக்கிறாள்.
அதற்குள் அவன் சித்துவை பார்த்து, “ஹாய் ஐயம் அருள். வாட்ஸ் யுவர் நேம்?”
சித்து, “ ஐயம் சித்து.”
அருள், “நைஸ் நேம். அவளிடம் ஜாக்கிரதையாக இரு. Bye.” என கூறி அவள் அடிக்க வருவதற்குள் வேகமாக சைக்கிளில் சென்றுவிடுகிறான்.
சித்தார்த், “ஏன் அவன் அவ்ளோ பாஸ்டா(fast) போறான்.”
வர்ணா, “இல்லனா நான் அவனோட மண்டைய ஒடச்சிடுவேனே அதான் பயந்து ஓடுறான்.”
சித்து, “என்ன வர்ணா சொல்ற அடிப்பியா? ஜாக்கிரதையா வேற இருக்க சொல்றான்?”.
வர்ணா, “நான் கோபம் வந்தா கொஞ்சம் அடிப்பேன் அதான்.”என மெதுவாக கூறுகிறாள்.
சித்து பயந்து போய், “ஏன்” என கேட்கிறான்.
வர்ணா, “நான் எப்போவும் தனியா தான் எல்லா இடத்திற்கும் போவேன் வருவேன் அதனால அம்மா தான் சொல்லி இருகாங்க யார்ட்டயும் ஈஸியா பேச கூடாது அதும் பாய்ஸ் கிட்ட பயப்படாம கொஞ்சம் போல்டா நடந்து கொள்ளவேண்டும் என்று சொல்லி இருக்காங்க. அம்மா எப்போவும் பிஸி.அடிக்கடி வெளியூர் போவாங்க கொஞ்ச நாள் தான் வீட்ல என் கூடாது இருப்பாங்க. அப்பா, வேலைக்கும் போகணும் தம்பிய வேற பாத்துக்கணும். அதனால நான் என்னோட வேலைய நானே செய்துகொள்வேன். அப்பாவை அதிகம் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். நானே தனியா தான் எங்கயும் போவேன். அதான்.” என கூறி அழகாக சிரிக்கிறாள்.
இதை கேட்ட சித்து, “இனி நாம் ரெண்டு பேரும் குட் பிரண்ட்ஸ். உன்ன கோவ படுத்தமாட்டேன். எப்போவும் நீ எங்க போனாலும் உனக்கு துணைக்கு வரேன். டீல்?” என கூறி ஒரு கையை நீட்டுகிறான்.
வர்ணாவும் சிரித்துக்கொண்டே ஒரு கையால் சைக்கிள் ஹாண்டிலையும் ஒரு கையை இவனிடமும் நீட்டி, “டீல்.”என சிரிக்கிறாள். இருவரும் சிரித்துக்கொண்டே ஸ்கூல் வந்து சேர்கிறார்கள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top