உன் கண்ணில் என்னை கண்டேன் epi 15

Advertisement

Karthikpriya

Active Member
உன் கண்ணில் என்னை கண்டேன் 15 மாலை வகுப்பு முடிந்ததும் ராஜேஷை பார்க்க வர்ணா நேராக அவன் வகுப்பின் முன் சென்று காத்திருக்கிறாள். வகுப்பு முடித்து வெளியே வந்த ராஜேஷ் வர்ணாவை பார்த்து, “ஹாய் ஸ்வீட்டி என்ன என்னை பார்க்காமல் இருக்க முடியலையா? என்று ஹஸ்கி வாய்ஸில் கேட்கிறான். இதை கேட்ட வர்ணா, “வேண்டாம் சீனியர் நான் ஏற்கனவே உங்ககிட்ட சொல்லிவிட்டேன், நான் ஒருத்தரை லவ் பண்றேன் என்று. அது புரியாமல் இப்படி சீப்பா ஓல்ட் ஸ்டைல்ல ப்ரொபோஸ் பண்ணி கடுப்பேத்திட்டிருக்கீங்க.” என்று வெறுப்பாக முகத்தை சுளித்தாள். ராஜேஷ், “அப்போ உண்மையாகவே நீ வேறு ஒருத்தரை லவ் பன்றியா? என்னை ஏமாற்ற ட்ரிக்ஸ் பண்ண வில்லையா?” என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டான். வர்ணா, “சத்தியமா நான் ஒருத்தன லவ் பண்றேன் அது கண்டிப்பா நீங்க இல்லை.” என்று தன் தலை மீது கை வைத்து சொல்கிறாள். ராஜேஷ், “ஓகே ஓகே நம்புகிறேன். ஆனால் அது யார்னு மட்டும் சொல்லிடு. நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.” வர்ணா, “சொன்னால் புரிந்துகொள்ளுங்கள் சீனியர். நான் முதலில் அவனிடம் தான் என்னுடைய லவ்வை சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.” ராஜேஷ், “என்னது இது ஒன் சைடு லவ்வா? அப்போ எனக்கு இன்னும் சான்ஸ் இருக்கா?” என்று ஆர்வமாக கேட்கிறான். வர்ணா, “சீனியர் வேண்டாம் என்னை வெறுப்பேத்தாதீங்க நான் அவனை தவிர யாரையும் மனசால கூட நினைக்க மாட்டேன். அவன் என்னை ஏற்றுக்கொண்டாலும் சரி இல்லை என்றாலும் சரி.” என்று திட்டவட்டமாக கூறினாள். ராஜேஷ், “ஓகே ஓகே. நானும் தான் உன்னை லவ் பண்றேன். அதுவும் பிரஸ்ட் டைம் ஒரு பொண்ண எனக்கு பிடிச்சது. அதுக்காக உன்னை விட்டா யாரையும் நேசிக்கமாட்டேன்னு சொல்ல மாட்டேன் பா. மை பஸ்ட் லவ் தோற்றுவிட்டது. ஆனா நான் எனக்கு செட் ஆகுற பொண்ணா பார்த்து கரெக்ட் பண்ணிக்குவேன். ஸோ குட் லக் போர் யுவர் லவ். உனக்கு ஏதாவது உதவி தேவை என்றால் தயங்காமல் கேளு. நான் எப்போதும் உன் பிரண்ட் தான் மறந்துடாத.” என்று கூறி அவளிடம் இருந்து விடைபெற்று செல்கிறான். அடுத்த நாள் காலை வகுப்பில் அனைவரும் அமர்ந்திருக்க ஆசிரியர் உள்ளே வருகிறார். சார், “இன்னைக்கு அனாடமி கிளாஸ் இருக்கு. அதனால் எல்லோரும் லேப் வாங்க” என்று கூறிவிட்டு முன்னே செல்கிறார். மாணவர்கள் அனைவரும் ஒன்றன்பின் ஒருவராக லேபிற்கு செல்ல தொடங்கினர். ரம்யா சித்தார்த்தை அழைக்க அவனும் அவளுடன் சென்றுவிட்டான். நிலாவும் மற்ற தோழிகளுடன் சென்றுகொண்டிருந்தவள் சிறிது தூரம் சென்றதும் வர்ணாவின் நியாபகம் வந்து அவளை தேட அவள் வெளியில் இல்லாததை கண்டு வகுப்பிற்குள் வந்து தேடுகிறாள். அங்கு வர்ணா தனியாக கண்மூடி அமர்ந்திருந்தாள். அவளின் அருகில் சென்ற நிலா அவளின் தோளை அசைக்கிறாள். வர்ணா மெதுவாக கண் திறந்து நிலாவை கண் கலங்க பார்க்கிறாள். நிலா, “என்ன ஆச்சு வர்ணா?”என்று கேட்க. வர்ணா, “பயமா இருக்கு நிலா. அங்க வந்து நான் மயங்கிடா என்ன செய்யறது? ” என்று கண் கலங்க கேட்கிறாள். “என்ன செய்யலாம்” என்று சிறிது நேரம் யோசித்த நிலா திடீரென்று, “ஐடியா” என்று கத்துகிறாள். வர்ணா, “என்ன? என்ன அது? ” என்று ஆர்வமாக கேட்கிறாள். தன் பாகில் இருந்து ஒரு தைலம் பாட்டில் எடுத்து அவளிடம் நீடிக்கிறாள். “இந்தா இதை உன் மாஸ்க்கில் ஸ்ப்ரே பண்ணிக்கோ. இது உன்னோட மூளையை தூண்டிட்டே இருக்கும். அதனால மயக்கம் வராது. ஸோ எந்த பிரச்னையும் இருக்காது.” என்று கூறி அவளை சமாதானம் செய்கிறாள். வர்ணா, “கண்டிப்பா மயக்கம் வராதில்ல” என்று உறுதி படுத்த கேட்கிறாள். நிலா, “வராது பா நம்பு. நான் 12th எக்ஸாம்க்கு படிக்கும் போது எப்போ தூக்கம் வந்தாலும் இந்த ஸ்ப்ரே தான் கேர்சீப்ல ஸ்ப்ரே பண்ணிட்டு வாசம் பிடிச்சிட்டே படிப்பேன். இது வரை தூக்கம் வந்ததே இல்லை. அதனால் கண்டிப்பா உனக்கும் தூக்கம் வராது கவலை படாம வா லேப் போகலாம் என்று அவளின் கையை இழுத்துக்கொண்டு செல்கிறாள். வர்ணாவும் வேகமாக அவள் கொடுத்த தைலத்தை தன்னுடைய மாஸ்க்கில் ஸ்ப்ரே செய்து கொண்டு வாசம் பிடித்து பார்க்கிறாள். “இது அடிச்சதும் தான் மயக்கம் வர மாதிரி இருக்கு நிலா” என்று அவளை நிறுத்துகிறாள். நிலா, “அச்சச்சோ இப்போ என்ன பண்றது” என்று பதட்டத்துடன் கேட்கிறாள். வர்ணா, “வா எது வந்தாலும் சமாளிச்சு தான் ஆகணும்” என்று பேசியவாறே அவளுடன் மெதுவாக வகுப்பில் இருந்து வெளியே வருகிறாள். இவ்வளவு நேரமாகியும் வர்ணா வராததால் அவளை தேடிவந்த சித்து, “என்ன இன்னும் லேபிற்கு வரலையா” என்று கேட்க, வர்ணா, “இதோ அங்கு வர தான் கிளம்பினோம், நீயும் வந்துட்ட. சரி வாங்க போகலாம்” என்று கூறி அனைவரையும் அழைத்துக்கொண்டு லேபிற்கு செல்கிறாள். எல்லோரும் லேபிற்குள் நுழைந்ததும் காலியாக இருந்த இடங்களில் சென்று நின்று கொண்டனர். வர்ணாவும் நிலாவும் ஒரு குழுவிலும், சித்தார்த்தும் ரம்யாவும் ஒரு குழுவிலும் சென்று சேர்ந்தனர். சார், “அனாடமி தான் மாடர்ன் மெடிக்கல் சயின்ஸ் எல்லாவற்றிற்கும் அடித்தளம். இந்த அனாடமி வகுப்பிற்காக தங்களுடைய உடலை அர்ப்பணித்த டோனர்ஸ் எல்லோருக்கும் ஒரு நிமிடம் கண்ணை மூடி நாம் நம் நன்றியை தெரிவித்து கொள்ளலாம்.” என்று கூறி தன் கண்ணை மூடிக்கொண்டார். அவரை தொடர்ந்து அனைவரும் தங்களின் நன்றியை ஒரு நிமிடம் கண் மூடி தெரிவித்துவிட்டு கண் திறந்து சார் சொல்லித்தர போகும் புதிய பாடத்தை கவனிக்க ஆர்வமாக அவரை நோக்கினார்கள். சார், “ஓகே ஆரம்பிக்கலாம்” என்று கூறி தன் முன் இருந்த பெரிய கவரின் ஜிப்பை திறக்கிறார். எல்லோரையும் தங்கள் முன் உள்ள ஜிப்பை திறக்க சொல்லுகிறார். வர்ணா இறுக்கமாக தன் கண்ணை மூடிக்கொள்கிறாள். சார், “திறந்தாச்சா எல்லோரும் இந்த கத்தியை இப்படி பிடித்து இப்படி இந்த தோலில் வெட்ட வேண்டும்” என்று கூறி கத்தியை பிடித்து வெட்ட ஆரம்பிக்கிறார். இதை பார்த்த வர்ணா அதற்குள் மயங்கி சரிகிறாள். இதை கவனித்த சித்தார்த் வேகமாக தன் குழுவில் இருந்து வந்து அவளை எழுப்ப முயல்கிறான். அதற்குள் அவர்களின் சார் பக்கத்தில் வந்து அவளை பரிசோதித்துவிட்டு அவள் மெடிக்கல் ஆயில் ஸ்மெல் பண்ணதால மயங்கி இருப்பதாக கூறி அடுத்த அறைக்கு கொண்டு செல்ல சொல்கிறார். சித்தார்த்தும் நிலாவும் சேர்ந்து கைத்தாங்கலாக மற்றொரு அறைக்கு அழைத்து செல்கின்றனர். அதற்குள் தண்ணீருடன் வந்த ரம்யா அவளின் முகத்தில் தண்ணீரை தெளிக்கிறாள். வர்ணாவும் மயக்கம் தெளிந்து எழுந்து பார்க்கிறாள். சரியாக அந்த நேரம் அங்கு வந்த அவர்களின் சார் வர்ணாவை பார்த்து, “என் இத்தனை வருஷ கிளாஸ்ல இதுவரை யாரும் மெடிக்கல் ஆயில் ஸ்மெல் பண்ணி மயங்கி விழுந்து நான் பார்த்ததே இல்ல. உன் ஒருத்தியால அதனை பேர் கிளாஸ் டிஸ்டர்ப் ஆகிடுச்சு.” என்று கோவமாக கத்துகிறார். நிலா, “இல்ல சார் அவ இன்னைக்கு சாப்பிடல அதான் மெடிக்கல் ஆயில் ஸ்மெல் பண்ணதும் மயங்கிட்டா இனி இப்படி நடக்காம பார்த்துக்கறோம் சார்.” என்று கூறி அவரை சமாதானம் செய்கிறாள். சார், “ஓகே ஓகே அடுத்த கிளாஸ்காவது சாப்டுட்டு வா. இப்போ ரெஸ்ட் எடு. மத்தவங்க எல்லோரும் கிளாஸ் போங்க” என்று கூறி அனைவரையும் அழைத்து செல்கிறாள். வர்ணாவும் எதுவும் கூறாமல் அமைதியாக அங்கேயே படுத்துக்கொள்கிறாள். அடுத்த ஒரு வாரம் முழுவதும் அனாடமி கிளாஸ் இல்லாததால் வர்ணாவின் கல்லூரி நாள்கள் எந்த பயமும் இல்லாமல் அமைதியாக கழிகிறது. இரவு கும்மிருட்டில் நிலவின் வெளிச்சத்தை தவிர யாரின் துணையும் இல்லாத வராண்டாவை வர்ணா மெதுவாக தன் வீட்டில் இருந்து தலையை மட்டும் வெளியில் நீட்டி பார்க்கிறாள். யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு சிறிது தூரம் நடந்ததும் வந்த படிகளில் ஏறி மொட்டை மாடிக்கு சென்று சுத்தி முத்தி பார்க்கிறாள். வர்ணா, “ஹப்பா யாரும் இல்லை. நாளைக்கு என்னை யாரும் அம்மாகிட்ட போட்டு கொடுக்க மாட்டாங்க” என்று திருப்தியாக கூறிவிட்டு திரும்பி பார்க்க, அவளின் அப்பா மார்பின் குறுக்காக கையைக்கட்டிக் கொண்டு அவளை முறைத்து கொண்டு நிற்கிறார். வர்ணா ஒரு நிமிடம் பயத்தில் கத்த போக பின் சுதாரித்து, “நீங்க தானா அப்பா. வர ஏன் இவ்வளவு நேரம்? பொம்பள புள்ள வரதுக்கு முன்னாடி நீங்க தான காவலுக்கு வந்து நின்னிருக்கணும். இவ்ளோ வயசாகியும் இன்னும் பொறுப்பு வரல உங்களுக்கு.” என்று மிரட்டலாக கூறிய படி அவரின் பதிலுக்காக அவரை பார்க்க. வெங்கட், “சாரி பாப்பா. அம்மா பக்கத்துல தூங்கிட்டு இருந்ததால அவ எழாம பொறுமையா வெளிய வரதுக்கு கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. சரி வா கீழ இறங்கு அப்பா கயிறு பிடிக்கிறேன்.” என்று கூறி அவளை சமாதானம் செய்து வந்த வேலையின் புறம் அவளின் கவனத்தை திசை திருப்புகிறார். வர்ணாவும் நேரம் செல்வதால் அவரை பிறகு திட்டிக்கொள்ளலாம் என்று பெரிய மனது பண்ணி விட்டுவிட்டு, அந்த மாடியின் தடுப்பு சுவரில் அமர்ந்து வெளிப்புறமாக இறங்க திரும்புகிறாள். அதற்குள் வெங்கட் அவளின் அருகில் வேகமாக வந்து அவளின் கையில் கயிறை கொடுத்து மீதி கயிறை தான் பிடித்துக்கொண்டு அவள் சித்தார்த்தின் வீட்டு பால்கனியில் இறங்க உதவுகிறார். அவள் பொறுமையாக இறங்கி தன் தந்தையை பார்க்கிறாள். வெங்கட், “பாத்து பத்திரம் கண்ணம்மா” என்று யாருக்கும் கேட்டுவிடாதவாறு மெதுவாக கூறுகிறார். வர்ணா, “சரி பா நீங்க போங்க. நான் வரும் போது சித்து ஹெல்ப் பண்ணுவான். நீங்க விஜி முழிக்கறதுக்குள்ள சத்தம் வராம போய் படுத்துடுங்க. விஜிக்கு சந்தேகம் வராம போங்க” என்று சத்தம் வராமல் மிரட்டிவிட்டு தன் தந்தை சென்றதும் சித்தார்த்தின் அப்பா அம்மா படுத்துள்ள அறையின் அருகில் சென்று ஜன்னலின் கண்ணாடியை தட்டுகிறாள். எவ்வளவு தட்டியும் அவர்கள் எழாததால் வெங்கட்டுக்கு அழைப்பு விடுக்கிறாள். வெங்கட், “யார்டா அது இந்த நேரத்துல?” என்று தூக்கக்கலக்கத்தில் புலம்பிக்கொண்டே கண் திறக்காமல் போன் அட்டென்ட் செய்து, “ஹலோ யாரு” என்று கேட்கிறார். வர்ணா தொலைபேசியில் பதில் ஒன்றும் கூறாமல் திரும்பவும் ஜன்னல் கண்ணாடியை தட்டுகிறாள். வெங்கட், “இப்போ போன் தான அடிச்சது திடீர்னு ஜன்னல் பக்கம் இருந்து சத்தம் வருதே” என்று தூக்க கலக்கத்தில் இருந்து பயத்துடன் முழித்து பார்த்து ஜன்னலை மெதுவாக திறக்கிறார். ஜன்னலின் வெளியே வர்ணா நிற்பதை பார்த்து, “நீதானாம்மா ” என்று கூறிக்கொண்டே காலெண்டரை பார்த்துவிட்டு, “எப்போதும் போல வந்துட்டயா. நானே மறந்துட்டேன். வா வா” என்று கூறிக்கொண்டே போய் கதவை திறக்கிறார். சிரித்தவாறே உள்ளே வந்த வர்ணா, “ஐஸ் வாட்டர் ரெடியா அங்கிள்?” என்று கேட்க “ஹ்ம்ம் இந்தா.” என்று கூறி ஒரு பக்கெட் நிறைய ஐஸ் வாட்டர் நிரப்பி தருகிறார். இன்னொரு ஜக்லயும் கொடுங்க அங்கிள் என்று கேட்டு வாங்கிக்கொண்டு சித்தார்த் உறங்கி கொண்டிருக்கும் அறைக்கு அருகில் சென்று மெதுவாக கதவை திறந்து உள்ளே செல்கிறாள். அங்கே தலை வரை பெட்ஷீட்டை மூடிக்கொண்டு உறங்கும் சித்தார்த்தை பார்த்ததும் மெதுவாக அருகில் சென்று தான் கொண்டு வந்த ஜக்கை பக்கத்தில் உள்ள டேபிள் மேல் வைத்துவிட்டு பக்கெட்டை தூக்கி அதில் உள்ள மொத்த தண்ணீரையும் அவன் மேல் அபிஷேகம் செய்கிறாள். மொத்த தண்ணீரை ஊற்றியும் எந்த அசைவும் இல்லாமல் இருக்கவே பெட்ஷீட்டை நகர்த்தி பார்க்கிறாள். தலையணையை தன்னை போல் செட் செய்து அதை பெட்ஷீட்டால் மூடிவிட்டு கதவின் பின் சென்று என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்த சித்தார்த், வெளியில் வந்து “என்ன பேபிமா சித்தார்த் அங்க இல்லையா? ஸோ சாட். பயங்கர பிளான் போட்டு வந்த வர்ணா குட்டி இப்படி பல்பு வாங்கி நிக்கறாங்களே!” என்று கூறியவாறே அருகில் வந்து அவளின் முன் உச்சி முடியை கையால் நகர்த்திவிட்டு அவளை பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டிருந்தான். அவன் பெட்டில் இல்லாத போதே சுதாரித்துவிட்ட வர்ணா, அவன் குரல் பின் இருந்து வரவே மெதுவாக ஜக்கை தன் பின்னால் மறைத்தவாறே எடுத்து அவன் அருகில் வந்ததும் அவன் மீது மொத்த தண்ணீரையும் கொட்டிவிட்டாள். அவனை பார்த்து நக்கலாக சிரித்தவாறே, “தெரியும் டா, ஒரு பட்சி மனசுக்குள்ள சொல்லுச்சு இன்னைக்கு பக்கெட் தண்ணில இருந்து சித்தார்த் தப்பிச்சிடுவான்னு. அதான் பிளான் பி க்கு ஜக்னு பிக்ஸ் பண்ணி வெச்சிருந்தேன். யாருகிட்ட?” என்று கூறி தன் பாக்கெட்டில் இருந்து இங்க் பாட்டில் எடுத்து அதில் ஏற்கனவே கலந்து வைத்திருந்த சிகப்பு நீளம் மற்றும் கருப்பு கலவையை அவன் மீது அபிஷேகம் செய்தாள். பின் இன்னொரு பாக்கெட்டில் இருந்த கலர் பொடியை அவன்மேல் தூவிவிட்டு, “பிறந்தநாள் வாழ்த்துக்கள் மை ஸ்வீட் சித்து” என்று அவன் காதுக்குள் கத்தி விட்டு, “இப்போ தான் டா அழகா இருக்க” என்று கூறி திருஷ்ட்டி கழித்தாள். இவ்வளவு நேரம் அமைதியாக இவை அனைத்தையும் பெற்றுக்கொண்ட சித்து, “ஏன்டி வருஷா வருஷம் டிசைன் டிசைனா யோசிச்சுட்டு வந்து பிறந்தநாள் அதுவுமா என்னை இப்படி சாக்கடையில் முக்கி எடுத்தவன் மாதிரி மாத்தி வெக்கிற? நானும் எவ்வளவு முயற்சி செய்தாலும் தப்பிக்க முடியல” என்று கூறி தலையில் கை வைத்துக்கொண்டே அருகில் உள்ள நாற்காலியில் அமர்கிறான். வர்ணா, “சாரி டா கண்ணா கோச்சிக்காத, பிடிப்பில் இருக்கும் திறமையை எல்லா இடத்திலும் உபயோகிக்கனும் டா செல்லம். புத்தக புழு மாதிரி ஒரே கண்ணோட்டத்துலயே இருக்க கூடாது. அதான் உன்னால என் தாக்குதல்ல இருந்து தப்பிக்க முடியல. பிறந்தநாள் அன்னைக்கு ஒரு சர்ப்ரைஸ் கூட இல்லைனா எப்படி. அடுத்த வருஷம் வரைக்கும் உனக்கு என்னோட நியாபகம் இருக்கணும் இல்லை அதான் கொஞ்சம் ஸ்ட்ராங்கா ஒரு சர்ப்ரைஸ் கொடுத்தேன். சரி நீ ரொம்ப அழுக்காகிட்ட போய் குளிச்சிட்டு நல்லா ரெஸ்ட் எடு.” என்று கூறி ஒரு ஷர்ட்டை அவனிடம் நீட்டி, “இந்த ஷர்ட் தான் நாளைக்கு போட்டுட்டு வரணும். பாய்” என்று கூறி அவனிடம் ஷிர்ட்டை கொடுத்துவிட்டு, தான் வந்த வழியே திரும்பி செல்ல பால்கனி நோக்கி நடந்தாள். சித்தார்த், “ஹே வா மெயின் டோர் வழியாவே போ. எல்லோரும் தூங்கிட்டு தான் இருப்பாங்க.” என்று கூறி மெதுவாக கதவருகில் சென்று சத்தம் வராமல் தாழ்ப்பாளை திறந்து அவளை அனுப்பிவிட்டு திரும்பி பொறுமையாக கதவை சாற்றிவிட்டு பூனை பாதம் வைத்து நடந்து உள்ளே வந்தான். திடீரென்று லைட் ஆன் ஆனதும் முன்னால் பார்த்தால் தன் தாயும் தந்தையும் வந்த சிரிப்பை பெரும்பாடுபட்டு அடிக்கிக்கொண்டு நின்றுகொண்டிருந்தனர். சித்தார்த் அவர்களை பார்த்து பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு, “நீங்களும் என்னை கேலி பண்றீங்க இல்ல போங்க” என்று கூறி காலை உதைத்தவாறே தன் அறைக்கு சென்று கதவை அறைந்து சாத்தினான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top